Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

mmmm.jpg

நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

naamal.PNG

http://www.virakesari.lk/article/46405

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு கிழமைக்கு முன்... ஒரு கலியாண  வீட்டில், ஜாலியாக.. "தண்ணி"  அடித்துக் கொண்டிருந்த மகிந்தவை....
மைத்திரி தொலைபேசியில் அழைத்து...  
"உடனே... ஜனாதிபதி மாளிகைக்கு வா... உனக்கு, பிரதமர் பதவி கொடுக்கப் போகின்றேன்"  என்றவுடன்....

இந்த... முன்னாள் ஜனாதிபதியாகிய,  மகிந்தவும்.. நாக்கை தொங்கப்  போட்டுக் கொண்டு,
அங்கு போய்...  அந்தக் "கறுமம்"  பிடிச்ச பதவியை ஏற்று, 
நாட்டில்  சும்மா கிடந்த  எம்.பி. மாரையும், கட்சி  மாற வைத்து... அமைச்சராக்கி,
அவர்களின்.. எதிர்காலத்தையும்...  அஸ்தமனம் பண்ணியதோடு... மட்டுமல்லாது...

உலக அரங்கில்... நகைச் சுவை மன்னனாக  பார்க்கப் பட்ட  மகிந்தவின்.. 
பேராசைக்கு கிடைத்த பெறுமதி தான்... இத்தனை அவமானங்கள்.

நீதி:  நீ... என்ன விதைத்தாயோ... அதனைத்தான்.. அறுவடை செய்ய வேண்டி வரும்.

இப்ப... நீங்கள், தமிழ் மக்களுக்கு, உங்கள் ஆட்சியில்  செய்த அநியாயங்களை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.
அதனுடன் ஒப்பிடும்  அளவிற்கு.. இது, அவ்வளவு கொடுமை  இது இல்லையென்றாலும்..
இவ்வளவும்  எங்கள் கண் முன்னே.. நடந்ததையிட்டு...   மகிழ்ச்சி  கொள்கின்றோம்.

பதவி இருக்கும் போது... தலை விரித்து ஆடப் படாது  என்ற படிப்பினையை...
கடந்த ஏழு கிழமைகள்.. உங்களுக்கு நல்ல படிப்பினையை... தந்திருக்கும். அது, போதும் எமக்கு.  😎 :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்!

நாட்டு மக்களுக்காக நாளை விசேட உரையை ஆற்றிய பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து, ஜனாதிபதி சிறிசேனவுடன் பரந்த அரசியல் கூட்டணியை அரசாங்கத்தை அமைக்க அவர் ஆதரவு வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டீ சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது குறித்து தகவல்களை வெளியிடாத நிலையில், மைத்திரிபால சிறிசேன அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஸ-பதவி-விலக/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்! 

maxresdefault.jpg

கேட்பவர்கள் நிலைமை செந்தில் போலதான் .. 😝

வழமையா சுய சரிதை எழுதுவினம்  .. ஒரு குயர் பேப்பர் கொடுத்து விடுங்கப்பா .. 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

MR1.jpg

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hhh.PNG

naamal.PNG

 

http://www.virakesari.lk/article/46404

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியன் சுவாமிக்கு விழுந்த முதலாவது அடி இதுவென நினைக்கின்றேன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

Dubww-qUYAAgBq3.jpg

Dub1ybSVAAAY2JC.jpg

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார்.

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக, இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

http://athavannews.com/புதிய-பிரதமர்-நியமனத்திற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.