Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம்: சீ.வி

Featured Replies

2-3-1-720x450.jpg

 

 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார்.

அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.

இது தான் ஜனாதிபதியின் வாதம். ‘எமது படையினர்’ இவ்வாறான மனோநிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக்கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் புரியும் காலத்தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதேனும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.

ஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அரசியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதியரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும் போது அல்லது ‘எமது படையினர்’ பற்றி எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அவர்களின் பின்னணி அதற்கு இடங் கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியமே” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/போர்க்குற்ற-விசாரணைகளுக/

8 hours ago, போல் said:

அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.

மிகத் தெளிவாக சொறிலங்கா அரசின் போக்கை கூறியுள்ளார்.

மைத்திரி நேற்று விட்ட அறிக்கை இதுக்கு நல்ல சான்று.

அப்பாவி பொதுமக்களை கொன்ற ராணுவக் கொலைகாரர்களை விட்டால் தானாம் எந்த ஆதரமுமின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவாராம்.

எனவே படுகொலைகளுக்கு உடந்தையான மைத்திரியும் சிறைகளில் வேண்டியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ஒருபோதும் தனது ராணுவத்தைக் காட்டிக் கொடுக்காது.  ஏனென்றால், ராணுவ இயந்திரத்தைப் பாவித்து இனக்கொலையை அரங்கேற்றியதே சிங்களப் பேரினவாதம் தான் என்றாகிறபோது, தனது ராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதென்பது, தன்னைக் காட்டிக்கொடுப்பது போலாகிவிடும்.

சேர்பியாவிலும், தென் சூடானிலும் நடந்தது போன்று, வெளித்தலையீட்டுடனான அரசியல் மற்றும் ராணுவத் தலைமகள் மீதான வழக்கொன்றே இப்போர்க்குற்றவாளிகளை நீதிமன்றம் முன் கொண்டுவரச் செய்ய முடியும். 

இதற்கு உள்நாட்டில் தமது காணாமல்ப் போன சொந்தங்களை இன்றுவரை தேடும் உறவுகளும், போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் உறவுகளும் ஒன்றிணைந்து வழக்கொன்றை சர்வதேச நீதிமன்று ஒன்றினூடாக சமர்ப்பித்து சர்வதேச பிடியாணையொன்றை ஏதேனும் ஒரு குற்றவாளிக்கெதிராகப் பிறப்பிக்கப் பண்ணினால், இது சாத்தியம்.

இறுதிக் கட்டப் போரில் பெருமளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை சிங்களப் பேரினவாதம் இன்று ராணுவ மனிதவுரிமைகள் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளது. இது ஒரு மிகவும் வெட்கக் கேடான சம்பவம் மற்றுமன்றி, அவனின் இரத்தம் தோய்ந்த கரங்களை மறைக்கச் சாதுரியமாகப் பாவிக்கப்பட்டிருக்கும் ஒரு கைங்கரியமும் ஆகும். இவன் போன்றே முன்னாள் தளபதி ஜகத் டயஸும் பிறேசில் நாட்டு தூதுவராக இருந்தபொழுது தன்மீது அந்நாட்டில் போடப்பட்ட போர்க்குற்ற வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மத்திய கிழக்கினூடாக தலைமறைவாகி இலங்கையில் வந்திறங்கினான். இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவேண்டும்.

இவர்களைப் போன்றே, ராணுவத் துணைக்குழுவான கருணா குழுவின் பல உறுப்பினர்கள் இறுதிக்கட்டப் போரில் பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். புலிகளின் கிழக்குத் தளபதியான கேணல் ரமேஷ் மற்றும் சில முக்கிய தளபதிகளை மற்றைய கைதிகளிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று கொன்றவர்கள் இவர்கள் தான் என்று கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. மே 15 இலிருந்து 18 வரையான நாட்களில் கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ முன்னரங்க சரணடையும் நிலையங்களில் மக்களை சல்லடை போட்டுத் தேடி, புலிகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டதையும், பலரை அவர்களே இழுத்துச் சென்றதையும் கண்ட சாட்சிகள் இருக்கிறார்கள்.

தேசியத்தின்பால் அக்கறையுள்ளவர்களும், தேசியத்தின் வளங்களை இன்றுவரை காத்துவருபவர்களும் தமது நேரத்தையும், வளங்களையும் இவற்றிற்காகச் செலவு செய்வது காலத்தின் தேவை.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.