Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நà¯à®°à¯à®¯à¯à®°à®²à¯ தà¯à®±à¯à®±à¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®µà®¤à¯..?

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?

இந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு உயிருக்கே உலையாக வந்து விடும். நுரையீரலில் ஏற்பட கூடிய தொற்றுக்களை தடுத்து விட்டாலே நெஞ்சு வலி, நெஞ்சில் ஏற்பட கூடிய தொற்றுகள் போன்ற அனைத்திலும் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.

நà¯à®à¯à®à¯ தà¯à®±à¯à®±à¯à®à¯à®à®³à¯ விரà®à¯à®...

இந்த தொற்றுக்களை உருவாக்க மூல காரணமே சளி தான். இதனால் பலருக்கு மூச்சு திணறல், தொண்டையில் தொற்றுகள் பரவுதல், நெஞ்சு இறுகுதல் போன்ற பலவித அபாயங்கள் உண்டாகும். இவற்றை ஒரே ராத்திரியில் குணப்படுத்த நம்ம பாட்டி வைத்தியமே போதும்ங்க. வாங்க, ஒவ்வொரு எளிய முறையையும் தெளிவாக தெரிஞ்சிப்போம்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

நெஞ்சு தொற்றுக்களை விரட்ட... உங்களின் நெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க இந்த 3 கலவையே போதும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் சட்டென வெளியேறி விடும்.

1)  தேவையானவை... தேன் 1 ஸ்பூன்.  பூண்டு 2 பல்.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

முதலில் பூண்டை நசுக்கி பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் விலகி, சுகமாக சுவாசிக்கலாம். 

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯...

2)  4 கலவை தெரியுமா..? பலவித பயன்களை இந்த வீட்டு வைத்தியம் தரவல்லது. இதற்கு தேவையானவை... கருப்பு மிளகு பொடி சிறிது.  தேன் 1 ஸ்பூன்.  பால் 1 கிளாஸ்.  மஞ்சள் பொடி அரை ஸ்பூன்.

முதலில் கொதிக்க வாய்த்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். இந்த கலவையை சூடாக தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் நெஞ்சில் ஏற்பட்ட தொற்றுகள் அனைத்துமே பறந்துவிடும்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

3)  மூலிகை டீ பலவித மருத்துவ குணங்கள் இந்த மூலிகை டீயில் நிறைந்துள்ளதாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வெளியேறி விடும். தேவையானவை :- வெந்தயம் 1 ஸ்பூன்.  தேன் 1 ஸ்பூன்.  தண்ணீர் 1 கப்.

வெந்தயத்தை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

à®à®±à¯à®±à®²à¯ மிà®à¯à® வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯...

4) ஆற்றல் மிக்க வைத்தியம்...  இந்த மூன்று பொருளும் ஒவ்வொவரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. இதனை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் ஆற்றல் உடல் முழுக்க செயல்படும். தேவையானவை... வெங்காயம் சின்னது 1.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். தேன் அரை ஸ்பூன்.

வெங்காயத்தை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

Read more at: https://tamil.boldsky.com/health/how-to/2018/home-remedies-for-chest-infection-overnight/articlecontent-pf172301-023937.html

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி வைத்தியம் சாதாரண சளியைக் குணமாக்கக் கூடும். ஆனால் வரண்ட இருமல் அல்லது தொடர்ச்சியான இருமல் வாரக்கணக்கில் இருந்தால் அது டி.பி போன்ற சீரியசான தொற்றாக இருக்கலாம். ஆங்கில மருத்துவம் தான் கண்டு பிடிக்கவும் குணப்படுத்தவும் உதவும்! பாட்டி வைத்தியத்தை வாரக்கணக்கில் பலனின்றி எடுத்துக் கொண்டிருந்தால் ஆள் போய்ச் சேரலாம்!அதுவும் குணமாக ஒரு வழி தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/24/2018 at 6:56 AM, தமிழ் சிறி said:

நà¯à®°à¯à®¯à¯à®°à®²à¯ தà¯à®±à¯à®±à¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®µà®¤à¯..?

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?

இந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு உயிருக்கே உலையாக வந்து விடும். நுரையீரலில் ஏற்பட கூடிய தொற்றுக்களை தடுத்து விட்டாலே நெஞ்சு வலி, நெஞ்சில் ஏற்பட கூடிய தொற்றுகள் போன்ற அனைத்திலும் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.

நà¯à®à¯à®à¯ தà¯à®±à¯à®±à¯à®à¯à®à®³à¯ விரà®à¯à®...

இந்த தொற்றுக்களை உருவாக்க மூல காரணமே சளி தான். இதனால் பலருக்கு மூச்சு திணறல், தொண்டையில் தொற்றுகள் பரவுதல், நெஞ்சு இறுகுதல் போன்ற பலவித அபாயங்கள் உண்டாகும். இவற்றை ஒரே ராத்திரியில் குணப்படுத்த நம்ம பாட்டி வைத்தியமே போதும்ங்க. வாங்க, ஒவ்வொரு எளிய முறையையும் தெளிவாக தெரிஞ்சிப்போம்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

நெஞ்சு தொற்றுக்களை விரட்ட... உங்களின் நெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க இந்த 3 கலவையே போதும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் சட்டென வெளியேறி விடும்.

1)  தேவையானவை... தேன் 1 ஸ்பூன்.  பூண்டு 2 பல்.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

முதலில் பூண்டை நசுக்கி பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் விலகி, சுகமாக சுவாசிக்கலாம். 

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯...

2)  4 கலவை தெரியுமா..? பலவித பயன்களை இந்த வீட்டு வைத்தியம் தரவல்லது. இதற்கு தேவையானவை... கருப்பு மிளகு பொடி சிறிது.  தேன் 1 ஸ்பூன்.  பால் 1 கிளாஸ்.  மஞ்சள் பொடி அரை ஸ்பூன்.

முதலில் கொதிக்க வாய்த்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். இந்த கலவையை சூடாக தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் நெஞ்சில் ஏற்பட்ட தொற்றுகள் அனைத்துமே பறந்துவிடும்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

3)  மூலிகை டீ பலவித மருத்துவ குணங்கள் இந்த மூலிகை டீயில் நிறைந்துள்ளதாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வெளியேறி விடும். தேவையானவை :- வெந்தயம் 1 ஸ்பூன்.  தேன் 1 ஸ்பூன்.  தண்ணீர் 1 கப்.

வெந்தயத்தை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

à®à®±à¯à®±à®²à¯ மிà®à¯à® வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯...

4) ஆற்றல் மிக்க வைத்தியம்...  இந்த மூன்று பொருளும் ஒவ்வொவரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. இதனை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் ஆற்றல் உடல் முழுக்க செயல்படும். தேவையானவை... வெங்காயம் சின்னது 1.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். தேன் அரை ஸ்பூன்.

வெங்காயத்தை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

Read more at: https://tamil.boldsky.com/health/how-to/2018/home-remedies-for-chest-infection-overnight/articlecontent-pf172301-023937.html

பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பிற்கு நன்றி சிறித்தம்பி! :91_thumbsup:

நமது முன்னோர்கள் எவ்வித ஆங்கில மருத்துவங்கள் இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில்  உணவே மருந்தாக இருந்தது. இன்றைய நவ நாகரீக உலகிலே மருந்தே உணவாக இருக்கின்றது. tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பிற்கு நன்றி சிறித்தம்பி! :91_thumbsup:

நமது முன்னோர்கள் எவ்வித ஆங்கில மருத்துவங்கள் இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில்  உணவே மருந்தாக இருந்தது. இன்றைய நவ நாகரீக உலகிலே மருந்தே உணவாக இருக்கின்றது. tw_lol:

அப்பிடியா? 1920 இல் இலங்கையர் ஒருவரின் சராசரி வாழ்வுகாலம் எததனை வருடங்கள் டொக்டர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/30/2018 at 3:17 AM, Justin said:

அப்பிடியா? 1920 இல் இலங்கையர் ஒருவரின் சராசரி வாழ்வுகாலம் எததனை வருடங்கள் டொக்டர்?

உங்களின் சராசரி கணிப்பை விட கிராம புறங்களில் இயற்கையான உணவுகளை உண்டு 100 வயது வரைக்கும்  எதுவித மருந்து மாத்திரைகளின்றி வாழ்ந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உங்களின் சராசரி கணிப்பை விட கிராம புறங்களில் இயற்கையான உணவுகளை உண்டு 100 வயது வரைக்கும்  எதுவித மருந்து மாத்திரைகளின்றி வாழ்ந்தார்கள். 

சராசரி என்பதன் அர்த்தமே அது அந்த சனக்தொகைக்கு ஒட்டு மொத்தமாக நன்மை தருகிற ஒன்றா என்று பார்க்கத் தான்! மேலும், எழுந்தமானமாக நூறு இருநூறு என்று யாரும் சொல்லி விட்டும் போகலாம், கணக்கில்லாமல். உங்களுக்கு 1920 இல் இலங்கையில் சராசரி வாழ்வு காலம் 34 என்று தெரியாமல் சும்மா அடித்து விட்டதால் தான் அந்தக் கேள்வி! இப்படிப் பல புலுடாக்கள் முன்னோரைப் பற்றி உங்கள் போன்ற ஆட்கள் அடித்து விடுவதுண்டு: முன்னோர்களுக்கு புற்று நோய் இருக்கவில்லை, நீரிழிவு இல்லை, ஏன் இதய நோய் கூட இருக்கவில்லை! எல்லாம் இருந்தது! கண்டு பிடித்து முன்னோருக்குச் சொல்ல மருத்துவ சோதனையும் தொழில் நுட்பமும் இருக்கவில்லை, அதனால் அவை இருப்பது தெரியாமலே அவர்கள் இறந்து போனார்கள்! இதைப் புரிய நீங்கள் புள்ளி விபரங்களைப் பார்க்க வேண்டும்! செவி வழி கேள் கதைகளையும், சுபவீ போன்ற அரைவேக்காட்டுகளின் யூடியூப் வீடியோக்களையும் அல்ல! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடன் மருத்துவம் சம்பந்தமாக வாதிடும் அளவிற்கு நானில்லை. இருந்தும் பல ஆயுர்வேத அனுபவங்கள் இருக்கின்றது. மேலைத்தேய மருத்துவம் மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.பக்க விளைவுகளுக்கு இன்னொரு வைத்தியரை நாட வேண்டியுள்ளது....எல்லாம் வியாபார நோக்குகள்.
ஆனால் இயற்கை மருத்துவம் அப்படியல்ல. உணவே மருந்து. மருந்தே உணவல்ல.

 இன்றிருப்பது போல் முன்னோர்களுக்கு எல்லா நோயும் இருந்தது என்று அறுதிட்டு கூற முடியாது. இன்று இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று சொல்லும் நோய் நொடிகளுடன் மக்கள் வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

உங்களுடன் மருத்துவம் சம்பந்தமாக வாதிடும் அளவிற்கு நானில்லை. இருந்தும் பல ஆயுர்வேத அனுபவங்கள் இருக்கின்றது. மேலைத்தேய மருத்துவம் மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.பக்க விளைவுகளுக்கு இன்னொரு வைத்தியரை நாட வேண்டியுள்ளது....எல்லாம் வியாபார நோக்குகள்.
ஆனால் இயற்கை மருத்துவம் அப்படியல்ல. உணவே மருந்து. மருந்தே உணவல்ல.

 இன்றிருப்பது போல் முன்னோர்களுக்கு எல்லா நோயும் இருந்தது என்று அறுதிட்டு கூற முடியாது. இன்று இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று சொல்லும் நோய் நொடிகளுடன் மக்கள் வாழ்கின்றார்கள்.

எல்லா மருந்துகளும் இலாப நோக்கம் கொண்டவை என்ற உங்கள் வாதம் உண்மையானதல்ல! ஒரு மருந்தை உருவாக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் காலமும், பல பில்லியன் டொலர் பணமும் செலவாகிறது! அந்தப் பணத்தை ஒரு நியாயமான இலாபத்துடன் மீள எடுக்க மருந்துக் கொம்பனிகள் ஒரு உயர் விலையில் முதல் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு மருந்தை விற்பது ஒன்றும் தவறான செயல் அல்ல! அப்படி அவர்கள் ஈட்டும் இலாபத்தில் ஒரு பங்கு அடுத்த மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சிக்குச் செலவாகும். 

பக்க விளைவுகள் ஒரு உடலியல் தொழிற்பாட்டைக் குறிவைக்கும் போது வரும் தவிர்க்க இயலாத விளைவு! புற்று நோயுடன் சாவதா அல்லது புற்று நோயில் இருந்து தப்பி தலைமயிர் இழந்து வாழ்வதா என்ற முடிவை எடுக்க வேண்டியது நோயாளி! இதற்கு மருந்துக் கொம்பனிகளோ வைத்தியரோ பொறுப்பல்ல!

முன்னோரில் இப்போதிருக்கிற பிரதான நோய்கள் இருந்தன என்று அறுதியிட்டுக் கூற முடியும்! எப்படி? பல புற்று நோய்களை உருவாக்கும் வைரசுகள், புகையிலை (வாயில் அதக்கிய புகையிலை, கெட்ட சாமான்!) என்பன பல நூறு ஆண்டுகளாக எம்முடன் இருக்கின்றன! மாப்பொருள், கொழுப்பு எல்லாம் இருந்தது எங்கள் உணவில். சில சமயங்களில் இன்று இருப்பது போன்ற சுத்தமான நீர் அப்போது இல்லை! வயித்தால போனாலும் அன்டிபையோடிக் இல்லாமல் செத்தோரே எங்கள் நாட்டில் ஏராளம் பேர்! 

உங்கள் இயற்கை வைத்தியம் வேலை செய்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் , ஆய்வு முடிவுகள் இன்னும் இல்லை! இருக்கும் சில ஆய்வுகளும் peer review என்ற தரக் கட்டுப் பாட்டில் தோல்வி கண்டவை! நிறைய இருக்கிறது சொல்ல, இதை பற்றி ஒரு பதிவு தனியாக எழுதுவேன்! 

நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.