Jump to content

புட்டுக்குழல்


Recommended Posts

பதியப்பட்டது

புட்டுக்குழல்

“மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு”

“ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே  சென்று வாய் பிளந்து கிடந்தவனின் காலில் ஒரு தட்டு தட்டி எழுப்பினார்.சுற்றிலும் சாராய நெடி.

“டா எனிக்கி”

பட்டென்று விழித்த பதற்றம் உடலெங்கும் தொற்றிக்கொள்ள வழிந்த கோளையை சீசன் துண்டால் துடைத்துக்கொண்டு,அவிழ்ந்து கிடந்த சாரத்தைக் கட்டிக்கொண்டான்.

“இப்பந்தான் கண்ணு மூடுனமாதி இருந்துது அதுக்குள்ள கொண்டாந்துட்டாரய்யா சேட்டா,” சொல்லிக்கொண்டே பாத்திர மூட்டையை நடைபாதைக்கு நகர்த்தினான்.

”டோ.வண்டி பிரேக் ஜாமாயி ரெண்டு மணிக்கொரு லேட்டு. வேகம் வா,”என்ற நடத்துனரின் அதட்டல் இன்னும் பரபரப்பாக்கியது.

“லேட்டா…”எண்ணிக்கொண்டே, பாத்திர மூட்டையை தூக்க முடியாமல் மெல்ல நகர்த்திக்கொண்டு வந்தான்.பாதி தூரம் கடக்கையில் ஒரு காலை நடைபாதையில் நீட்டியவாறு உறங்கிக் கொண்டிருந்த தடித்த யுவதியின் காலில் இடித்து கண்டுகொள்ளாமல் முன் நகர்ந்தான்.

“எண்டம்மே ஏது பிராந்தம்மாரா,”என்று அபலக்குரல் கொடுத்த அந்தப் பெண்மணி கண் திறக்காமலே காலை உள்ளே இழுத்துக்கொண்டார்.திரும்பிப் பார்க்காமலே ஓட்டுநர் இருக்கை அருகேயிருந்த வாயிலை அடைந்தான்.

“என்ன டிராபிக் ஜாம் சேட்டா?”

“எறங்குடா.சமயம் ஆவுன்னு,” வெடித்து விட்டார் ஓட்டுநர்.

இறங்கும் இடத்தில் சிறிய பள்ளத்தில் நீர் தேங்கியிருந்தது.”நல்ல மள போலுக்க”சாக்குப் பையை கீழே வைக்க வழியில்லாமல் அப்படியே தூக்கி வைத்துக்கொண்டு பள்ளத்தில் கால் வைக்கவும் வண்டி நகர்ந்தது.எதிர்பார்த்ததைவிட அரையடி ஆழம் கூட இருந்திருக்கும்.நிலைகொள்ளாமல் கால் பிசகி விழுந்தான்.பாத்திர மூட்டை பொத்தென்று தூரத்தில் போய் விழுந்தது.பாதி நனைந்த சாரத்தைத் தூக்கிக் கட்டிக்கொண்டு பதறியவனாய் மூட்டையை உற்று நோக்கினான்.

“பாத்திரத்துக்கு ஒன்றும் ஆகவில்லை.அதுவும் புட்டுக்குழலுக்கு ஒன்றுமில்லை”மனதிற்குள் ஆசுவாசம். அப்படியே அருகில் கிடந்த கல்லில் அமர்ந்து பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான்.குளிர்ந்த காற்றில் நீர்த்துளிகள் விரவியிருந்தன.கண்மூடி வான் நோக்கினான்.இரண்டு நிமிடத்தில் பத்துப் பதினைந்து துளிகள் விழுந்திருக்கும்.தூரத்தில் சுந்தரேட்டன் கடை மட்டும் விழித்திருந்தது.துண்டால் முகத்தைத் துடைத்துத் தலையில் கட்டிக்கொண்டு,பாத்திரச் சாக்கை மேலேற்றி சுந்தரேட்டன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“சுந்தரேட்டன் என்ன இன்னும் கட அடைக்காம இருக்காவ. ஒரு கடுங்காப்பி குடிக்கலாம்.இல்லனா மீந்துன புரோட்டா கெடந்தாலும் திங்கலாம்,”சப்புக் கொட்டிக்கொண்டு வேகமான நடை.

சாலையின் இருபக்கமும் மொத்தம் இருபது கடைகள் இருக்கலாம்.எதிர்த்த வரிசையின் கடைசிக் கடையான சுந்தரேட்டன் ஹோட்டலின் அழுக்கேறிய குண்டு பல்பின் வெளிச்சம் தவிர்த்து மூன்று தெரு விளக்குகளின் மினுக்கம்.அடைத்த கடைகளின் முன்னால் அழுக்குத் துணியால் மூடப்பட்ட சடலங்களாய் மனிதர்கள்.மூன்றாவது விளக்கடியில் ஒரு மெலிந்த நாய் வால் சுருட்டி குரைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றது.தடித்த மரக்கட்டைகள் ஏற்றிய சரக்கு லாரியொன்று நிதானமான உறுமலுடன் திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.உள்ளுக்குள் சட்டை களைந்த கருத்த இரு உருவங்கள்.

மூட்டையைக் கைப்பற்றியிருந்த இடத்தில் ஏதோ விசித்திரமாகத் தெரிய தடவிப் பார்த்தான்.பாத்திரத்தில் நெளிசல்.அய்யய்யோ புட்டுக் குழலாக இருக்குமோ”பதற்றம் தொற்றிக் கொண்டது.ஆயிஸா கருத்த முறுவிய இதழோடு ஒரு கணம் தோன்றி”சேட்டா எனிக்கொரு புட்டுக்கொழல் வாங்கித் தராமோ”என்று கூறி மறைந்தாள்.உடலெங்கும் சிலிர்த்தது.புட்டுக் குழலாக இருக்கக் கூடாது- வேண்டிக்கொண்டே கடையில் மூட்டையை இறக்கினான்.

தூரத்தில் வரும்போது தெளிவில்லாமல் கேட்ட சுந்தரேட்டன் மனைவியின் முனங்கல் அடங்கியிருந்தது.

“ஆரு? முத்தானு.வா வா வா எந்து இத்தர லேட்டாயி”சுந்தரேட்டன் புன் முறுவினார்.

“எதோ டிராபிக் ஜாம்ன்னாங்க.என்னனு தெரியல சேட்டா. நா நல்லா ஒறங்கிட்டேன் பாத்துக்கிடுங்க.கட்டென் எதும் கெடக்கா”துண்டை உதறி பெஞ்சில் போட்டு அமர்ந்தான்.

“இப்பதா களுகி எடுத்து.வேணும்னா வச்சு தரான்”பீடி இழுத்துக்கொண்டே கூறியதால் கன்னம் இரண்டும் உட்புறம் ஒட்டி சேட்டனின் குரல் வித்தியாசமாயிருந்தது.

“இல்லனா வுடுங்க.சவத்தப்போட்டு இப்பம் குடிச்சிக்கிட்டு.போயி ஒறங்க வேண்டியதான்.என்ன சேச்சி ஒண்ணும் பேச மிண்டுக்காவ”

“எந்த பறயாம் முத்தே.ஒறக்கம் வருந்நு”என்றவளை நோக்கிய சேட்டனின் பார்வை விசித்திரமாய்த் தெரிய ஏதோ காரசாரமான விவாதம் நடந்திருக்க வேண்டும் என்று யூகித்தவனாய் கிளம்ப எத்தனித்தான்.சட்டென பேச்சை மாற்ற எண்ணிய சேட்டன் “எந்தா பாத்திரம் கொறவாணல்லோ” என்றார்.

“ஆமா சேட்டா.ஊருக்கு கொண்டு போன துட்டு ரெண்டே நாள்ல காலி.வரும்போது சேத்துப் போட்டிருந்த பழய பித்தளைய போட்டுதான் சரக்கெடுத்தேன்.தெங்காசில திரவியம் அண்ணாச்சி அந்த பித்தள போவ ஆயிரம் ரூவாக்கி சரக்கு தந்தாவ.இல்லனா இதும் கெடச்சிருக்காது.இதவச்சிதான் இந்த வாரத்த ஓட்டனும்”

“அப்பிடி எந்தா செலவு”

“நல்லா கேட்டிய.நா வாரேன்னு தெரிஞ்சாலே என் வீட்டுக்காரிக்கு மொதல்ல தெங்காசிக்கு போயி சாப்புடணும்.படம் பாக்கணும்.பெறவு பஜார்ல போயி சப்பு சவர்னு அள்ளிக் கெட்டிக்கிடுவா.வீட்டுக்கு வந்ததும் சீட்டு,வாரவட்டி,மஞ்ச மசால் எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கத சரக்கெடுக்க கொண்டு வரலாம்னு பாத்தா ஊர்ல கெடக்க அவ்ள படுக்காளிப்பயலுவளும் குடிக்கணும்பானுவ.வேங்கி குடுக்காம இருக்க முடியுமா? பெறவு சரக்கெடுக்க எவன்ட்டயாது கடந்தான் வாங்கணும்.நல்ல வேளக்கி இந்ததடவ கொஞ்சம் பழய பித்தள கெடந்துது”

இதைக் கூறி முடிப்பதற்குள் சேட்டன் மூன்றுமுறை கொட்டாவி விட்டிருந்தார்.சேட்டனின் மனைவி வேறெங்கோ முகம் திருப்பி அமர்ந்திருந்தார்.

“செரி சேட்டா போயி ஒறங்குதேன்.காலைல காணூரு போணும் கச்சோடத்துக்கு”என்றவன் சாக்கு மூட்டையைத் தலையில் தூக்கிக்கொண்டு தூரத்தில் தெரிந்த கடைசி தெருவிளக்கு கடந்து இருட்டிற்குள் நுழைந்தான்.சற்று தூரம் சென்றதும் முஸ்லீம் ஜமாத் மஸ்ஜீத்தின் சிறிய விளக்கொளி.அது கடந்து தலை குப்புற இறங்கும் பள்ளத்தில் அரை கிலோமீட்டர் நடை.முதலாளி வீட்டின் துறுவேறிய கருத்த அகலமான கம்பி கேட்டின் மேல் சிறிய மஞ்சள் விளக்கொளி.உள் தாட்பாள் விலக்கி நுழைந்து மீண்டும்  தாட்பாளிட்டான்.ஈரக்காற்றில் பறந்தது விசித்திரமான துருவேறிய கதவொலி.விறுவிறுவென முதலாளி வீட்டையொட்டிய இடுக்குவழி புறவாசலடைந்தான்.புற வாசலுக்கு எதிரே அவன் தங்கும் தேங்காய் அடைத்து வைக்கும் அறை.அதையொட்டி செம்புரைக்கல்லால் கட்டப்பட்ட மேற்கூரையற்ற கழிப்பறை.பூசாத சுவரெங்கும் பாசி பற்றியிருந்தது.அறைக்குள் நுழைந்ததும் கடந்த வாரம் பறித்துப் போட்ட தேங்காய் குவியல் பரப்பிய மணம் விகாரமாயிருந்தது.சுவரெங்கும் பாத பித்த வெடிப்புகளாய் பரவியிருந்த வெடிப்புகளில் பூஞ்சை பிடித்திருந்தது.மூட்டையை மெல்ல இறக்கி திண்டு போலிருந்த கல்லில் வைத்தான்.

புற வாசல் கதவு விளக்கு மினுக்கத்துடன் திறந்தது.முதலாளி மனைவி.

“எந்தா முத்தே.இத்திர லேட்டாயி”கண் கசக்கினாள்.

“ஈ பஸ்ஸு கேடாயி.அதான் லேட்டு.நீங்க போயி ஒறங்குங்க”

“நல்ல சமயத்து வந்நு.சேட்டன் திருவனந்தபுரத்து போயி.ஞான் தன்னயா”

“செரி அப்பம் நான் வாசலுல படுத்துக்கிடுதேன்”

“ம்ம்ம்”புறவாசல் கதவடைந்தது.

ஆயிஸாக் குட்டிக்காக மெனக்கெட்டு புட்டுகுழல் வாங்கிக் கொண்டுவந்தது திடீரென நினைவில் வந்ததும் வெட்கத்துடன் உடல் சிலிர்த்தது.சாக்குப்பையைத் திறந்து புட்டுக்குழலை எடுத்தான்.குடம் பளபளவென மின்னியது ஆயிஸாக் குட்டியின் கன்னமென.ஆனால் புட்டுக்குழலின் உச்சியிலிருந்த சிறிய நெளிசல் கண்டு மனம் சுருங்கியது.”ஆயிஸாக் குட்டி கொஞ்சம் பொறுத்துக்கிடணும்”அடுத்த கணமே புன்சிரி.

பரணில் கிடந்த போர்வையை எடுத்துக்கொண்டு வந்து முன்வாசல் வந்து திண்டில் விரித்தான்.திண்டுக்கடியில் கிடந்த பலாப்பழ வாசம் மழை நீர் வாசத்தோடு கலந்து சுகந்தமாய் பரவியிருந்தது.இழுத்துமூடி படுத்ததும் கருத்த மை பூசிய கண் தாழ்த்தி சிரித்தாள் ஆயிஸா.”வா சக்கக்கறியுண்டு.கயிச்சுட்டுப்போ”என்கிறாள்.முத்தையாவிற்கு மூச்சு முட்டியது.சுருண்டு படுத்துக்கொண்டான்.அவளிடம் சந்தித்த பொழுதுகள் ஒவ்வொன்றாக மனதை ஆக்கிரமித்தன.

வெயில் வெடித்து மஞ்சள் நிற ஒளி பரப்பியிருந்த நண்பகல் வேளையில் பச்சை மரங்களினூடே தெரிந்தது அந்தச் சிறிய ஓட்டுவீடு.சுற்றிலும் மூங்கில் வேய்ந்த வேலி.வீட்டின் பின்னால் சிறிய கிணறு.அதையொட்டி அடுக்களை.தூரத்தில் விலக்கி வைத்ததுபோல் பூசாத சுவருடைய கழிப்பறை.

”எதெடுத்தாலும் இருவது.எதெடுத்தாலும் இருவது”தூரத்தில் குரல் கேட்கவும் கழுவிக்கொண்டிருந்த மீனைப் பாதியிலேயே போட்டுவிட்டு வாசலில் வந்து நின்றுகொண்டாள் ஆயிஸா.சந்தன நிறத்தில் பூப்பூவாய் நைட்டி.தலையில் சிறிய துண்டு.முட்டுவரை நைட்டியை தூக்கிப்பிடித்து நின்றிருந்தாள்.முட்டிவரை மீன் செதில்கள் ஒட்டியிருந்த கையில் முறிந்துபோன மீன் பொறிக்கும் கரண்டி.தூரத்தில் முத்தையா இரண்டு பெண்களுக்கு பாத்திரம் கொடுத்துக்கொண்டிருந்தான்.இன்னொரு வாடிக்கையாளர் கிடைத்ததில் தூரத்தில் நிற்கையிலேயே முத்தையாவுக்கு மகிழ்ச்சி.

”எப்படியும் இந்த ஊர்லேயே இன்னக்கி மொதல எடுத்துறலாம் போலுக்க”எண்ணிக்கொண்டே அவசர அவசரமாக ஆயிஸாவை நோக்கி நடந்தான்.வியாபாரக் கூடை குலுங்கியது.ஆயிஸா கண் விலக்காமல் நின்றிருந்தாள்.சிறிய நாய்க்குட்டியொன்று ஆர்வமாய் வந்து அவனுடைய காலை நுகர்ந்து பின் விலகிச் சென்றது.

“சேச்சிக்கு என்ன வேணும்”கூடையை இறக்கி மேல் முடிப்பை அகற்றி காண்பித்தான்.

“இதப்போலொரு செறிய கரண்டி வேணும்”முற்றத்தில் காய்ந்து கிடக்கும் முற்றிய தேங்காயின் மினுக்கம் கன்னத்தில் குழைந்து சிரித்தது.தடித்த குருதிச்செம்மை உதடுகளில் சொற்கள் கொஞ்சிக் குலாவின.

“ஓ.இருக்கே.எடுத்துக் காட்டினான்”

“கொறச்சி வலிதானல்லோ” முகத்தை வளைத்தொரு ஏளனச்சிரி.

“அவ்ள பெருசுலாம் இல்ல.அருமையா இருக்கும் பொறிக்க வைக்க.கைப்பிடிய நோக்கு எவ்ள வளவளனு இருக்கு”

கரண்டியைவிட அந்த பேச்சு பிடித்துவிட்டதா? முறிந்த கரண்டி கொடுத்தது போக எவ்வளவு தரவேண்டும் என்றவள் குனிந்து நின்று வேறு பாத்திரங்களை ஆவலுடன் நோக்கினாள்.

சந்தன நிற உள்ளாடைக்குள் திமிறிக் கிடந்த பெண்மை அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தியது.பேச்சை நீட்டிக்க வேண்டும் அல்லது அங்கேயே ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உந்தல் காசு கேட்கவில்லை.மாறாக வீட்டில் வேறு ஏதும் பழைய பாத்திரம் உள்ளதா என்று கேட்டது.

“இவிட கொறச்சி பிளாஸ்டிக் உண்டு.நோக்கு”கூறிக்கொண்டே வீட்டு வாசலையொட்டி அடுக்களைக்குச் செல்லும் சிறிய சந்திற்குள் சென்றாள்.பின் பக்கம் மூட்டுவரை திரண்டிருந்த சதைத் திரள்ச்சியில் மென்மயிர் பூத்துக்கிடந்தது.பின் தொடர்ந்தான்.உடைந்த சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை குனிந்து பொறுக்கி எடுத்தாள்.வாங்கிக்கொண்டு சும்மா ஒரு சிரிப்பு.

“மதியோ”

“ம்ம் போதும் போதும்.குடிக்க ஏதாது இருக்கா”

“தராம்”வீட்டிற்குள் துள்ளலான நடை.

குடம்புளி போட்டு விளக்கிய பித்தளைச் செம்பில் கொண்டுவந்த தெளிந்த நீர் தேவாமிர்தமாய் தொண்டைக் குழிக்குள் கிணுக் கிணுகென இறங்கியது.

“நீங்க தனியாதான் இருக்கிய.வீட்டுல சேட்டன் இல்லியா”

“புள்ளி சவுதிலா.ரெண்டு மக்களுண்டு.மக்களு அம்ம வீட்டுக்குப்போயி”ஏகாந்தமான ராகத்தில் வார்த்தைகள் குழைந்தன.

“வேற எதுவும் வேணுமா”

“ எண்ட புட்டுக்குழல் லூசாயி.துணி கட்டியானு புட்டு அவிக்கின்னது.அடுத்த பிராசியம் புட்டுக்குழல் கொண்டுவராமோ”

“கண்டிப்பா அடுத்த தடவ வாங்கிட்டு வாரேன் கவலைப்படாதீங்க”

“அப்பம் சரி”

கூடையைக் கட்டி எடுத்துக்கொண்டு கிளம்புகையில்,”சேச்சிட பேரு எந்தா?”

“ஆயிஸா பேஹம்”மௌனச்சிரியில் வார்த்தைகள் மயங்கி நின்றன.

“அப்பம் வரேன்”வீட்டைக்கடந்து சிறிய பள்ளத்திற்குள் பாயும் ஒத்தையடிப்பாதை தூரத்தில் தெரிந்த சிறிய கிராமத்திற்குச் சென்றது.பாதைத் தவிர எங்கும் பச்சை.மரவள்ளிக்கிழங்குச் செடி காற்றிலாடியது.பாதையைப் பார்க்காமல் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தவனின் கால் பெருவிரலில் ஆங்காரமாய் மோதியது பாதையில் குத்தி நின்ற கருத்தக் கல்.

“ஆஆஆ….”சாரத்தை உதறி உற்க்கத்திலிருந்து எழுந்தமர்ந்து புகைத்தான்.அந்தக் குளிரிலும் வியர்த்திருந்தது.பலாப்பழ வாசம் சுகந்தமாய் பரவி நிற்க அப்படியே உறங்கிப்போனான்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் மஸ்ஜித்தில் பாங்கு ஒலித்தது.குளிர்ந்த காற்றில் அடர்த்தியாக எழுந்து பரவிய அந்தக் கரகர குரலொலியின் ராகம் இதயத்தைக் குழைத்தது.எழும்பி கழிப்பறை சென்று வந்து விறுவிறுவென சுந்தரேட்டன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். முஸ்லீம் ஜமாத் மஸ்ஜீத்தில் தொழுகை முடிந்து வெளிவந்தது வெள்ளை முண்டுடுத்திய சிறு கூட்டம்.டீக்கடையில் காலை நேர சங்கீத ராகம் ரேடியோவில் மெல்லிய குரலில் ஒலிக்க பாய்லரின் முன்னால் நின்று புகைத்துக் கொண்டிருந்தார் சேட்டன்.”சேட்டா ஒரு சாயா”

ஐந்து நிமிடத்தில் சாயா குடித்து இறங்கி நடந்தான்.வீட்டில் விளக்கு எரிந்தது.அறையில் நுழைகையில் முதலாளியின் மனைவி பேச்சுக் கொடுத்தார்.

” கச்சோடம் கழிஞ்சு இன்னு உச்சைக்கு வரணும் கேட்டோ முத்தே.கொறச்சி தேங்ங பறிக்கணும்”

“அதுக்கென்ன சேச்சி.இன்னைக்கு காணுர்தான் போறேன்.ரெண்டு மணிக்குலாம் வந்து பறிச்சிபுடுவேன்”

முதன்முதலில் தோட்ட வேலைக்குத்தான் முதலாளியிடம் சேர்ந்திருந்தான்.நாளடைவில் ஊர்க்காரர்கள் சிலர் பாத்திர வியாபாரத்தின் சூட்சமங்களைக் கூற முத்தையாவிற்கும் ஆசை துளிர்த்தது.முதலாளியிடம் மதியம் வரை வியாபாரத்திற்குச் செல்வதாகவும்,அதன்பின் வந்து தோட்ட வேலை செய்வதாகவும் கூறினான். மூன்று வேளை சாப்பாடு,தங்க இடம் போக ஐந்தாயிரம் ரூபாய் என்று இருந்த சம்பளத்தை இரவு சாப்பாடு,தங்க இடம் போக இரண்டாயிரமாக சுருக்கி முதலாளியும் ஒத்துக் கொண்டார்.முதலாளியின் ஒரே செல்ல மகள் பெங்களுரில் படிப்பிலிருந்தாள்.

“பின்ன.ஆ புட்டுக்குடம் கொள்ளால்லோ”

“காணுர்ல ஒரு ஆளு கேட்டிச்சினு வாங்கியாந்தன் பாத்துக்கிடுங்க.நல்லாருக்கோ”

“ம்ம்ம்.எனிக்கொண்ணு வேணும்”அதன் அர்த்தம் அதை என்னிடம் கொடுத்துவிடு என்பதை அறியாதவனல்ல முத்தையா.என்றாலும் அடுத்தமுறை வாங்கி வருவதாகக் கூறி சமாளித்தான்.மூங்கில் கூடைகளில் பாத்திரத்தைக் கட்டி தலையில் தூக்கிக்கொண்டு வாசல் கடக்கையில் துருவேறிய இரும்பு கேட்டில் ரப்பர் மரங்களினூடே பாய்ந்து வந்து வெப்பத்தை உமிழ்ந்தது காலைச் சூரியன்.

பிரதான சாலையிலிருந்து பிரிந்து காணுர் செல்லும் சிறிய கிளைச்சாலையில் நடக்க ஆரம்பித்தான்.இரு புறமும் விண்ணை முட்டி நிற்கும் ரப்பர் மரங்களில் கட்டப் பட்டிருந்த கருப்பு நிற ரப்பர் குவளைகளில் பால் பெருகி நின்றது.தலையில் சிறிய முண்டு கட்டிய பெண்கள் இடுப்பில் குடத்தை இடுக்கிக்கொண்டு நிரம்பிய பாலை சேகரித்துக்கொண்டிருந்தனர்.சாலையின் இருபுறமும் தெளிந்த நீர் எந்த இலக்குமில்லாமல் சென்றுகொண்டிருந்தது.

நான்கு மைல் நடந்தாயிற்று.சிறிது நேரம் நின்று அந்த வெள்ளோட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே ரப்பர் பாலை திடமாக்கும் சிறிய இயந்திரங்களுடைய தொழிற்சாலை மட்டும்.ஒரு சிறிய திருப்பத்தில் நான்கு வீடுகள் தள்ளித் தள்ளி இருந்தன.

அடித்தொண்டையிலிருந்து உறுமினான்.”எதெடுத்தாலும் இருவதே”

எந்த சலனமும் இல்லாமல் அப்படியே இருந்தது அந்தப் பகுதி.பாதி ஓடு உடைந்த இடத்தில் கருத்த பிளாஸ்டிக் சாக்கு கட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து,முண்டு கட்டிய வயதான பெண்மணி தலைய நீட்டி கை காண்பித்தாள்.நெருங்கிச் சென்றான்.தென்னை மட்டைகள் அடைந்து கிடந்த தொழுவத்தில் பழைய பாத்திரங்கள் மண்ணிற்குள் புதைந்தும் புதையாமலும் கிடந்தன.”நல்ல சரக்கு கெடக்கு.எப்பிடியும் ரேட் கம்மியா பேசி வேங்கிரணும்”.நொடியில் முடிவெடுத்திருந்தான்.

“புட்டுக் கொழலுண்டோ”

திடுக்கிட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கையில்,

“மோனே.புட்டுக்கொழலுண்டோ”என்று மீண்டும் அந்த அபலைக்குரல்.

ஆயிஸாக் குட்டியின் கள்ளமில்லா சிரிப்பும் வார்த்தைக் குழைவும் அவனை வேரோடு பிடுங்கி எடுத்தது.

“அடுத்த வாரம் கொண்டாரேன் சேச்சி.இப்பம் இல்ல.வேற ஏதாது வேணுமா”

“வேற ஒண்ணும் வேண்டாம்”என்று பாத்திரக் கூடையை நோக்கியவளின் கண்ணில் புட்டுக்குழல் மின்னியது.

”தோ புட்டுக்குழல் உண்டல்லோ”

“அது வேற ஆளுக்கு கொண்டு போறேன்.அடுத்த வாரம் கண்டிப்பா கொண்டாரென்.ஈ பழய பாத்திரங்கள தருமோ?”

“இன்னல நிங்கட நாட்டாரனும் இதயே சோதிக்கின்னு.ஞான் கொடுக்குல்ல”

“வேற எவன் வந்துருப்பான் இங்க.ஒருவேள முருகன் வந்துருப்பானோ.அந்தப் பய்யட்ட இந்த ஊரப்பத்தி சொன்னது தப்பா போச்சே”எண்ணிக்கொண்டே விடைபெற்றான்.வாசலில் நின்று அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எதெடுத்தாலும் இருவதே” உற்சாகமான குரல்.

மீண்டும் அதே சாலையில் ஒரு கிலோமீட்டர் நடை.காணூர் என்று மலையாளத்தில் எழுதியிருந்த சிவப்புப் பலகை சிதிலமடைந்து காட்டுக்கொடி படர்ந்து நின்றிருந்தது.ஊரின் துவக்கத்தில் ஒரு சிறிய பெட்டிக்கடை.கடைக்குள் அரை கண் மூடிய நிலையில் வானொலியில் ஒலிக்கும் ஏதோ ஒரு பழைய பாட்டில் சொக்கியிருந்தார் வயதான சேட்டன்.வெளியில் கருத்த பழக்கொலையொன்று பாதி காலியாகிய நிலையில் கொசு மொய்த்துக் கிடந்தது.சர்பத் போடுவதற்கான பிளாஸ்டிக் பாத்திரத்தில் காய்ந்துபோன இரண்டு எலுமிச்சைகள் வாழ்வைத் தொலைத்துக் கிடந்தன.

“சேட்டா சாப்பிட எதுனா இருக்கா”குரல் கேட்டு சேட்டனின் இமைகள் விலகிய பதட்டமில்லாத பார்வை முத்தையாமேல் கவிந்தது.என்ன வேண்டும் என்பதுபோன்ற ஒரு பாவனை.

“சாப்பிட ஏதாது இருக்கா”செய்கையில் கூறினான்.

“பழமுண்டு.சர்பத்துண்டு.பொறிச்ச பத்திரியுண்டு.எந்தா வேண்டே”வார்த்தைகள் பாதி காற்றாகவும் பாதி இறுகிய குரலாகவும் வந்து விழுந்தன.

“பழம் காஞ்சி போயில்லா கெடக்கு.ஒரு பத்திரி தாங்க பாப்போம்”

சிறிய கண்ணாடி பீரோவிற்குள்ளிருந்து வெளிச்சுற்று இறுகிய பத்திரி வந்தது.ஒரு கடி.”சேட்டா ஒரு சர்பத்”

காய்ந்த எலுமிச்சை உயிர் பெற்று நீராகி,சுருண்டு கிடந்த முத்தையாவின் குடலின் தளர்ச்சியைக் களைந்தது.சிறிய மஞ்சள் புள்ளி தெரிந்த ஒரு பழம் அத்துடன்.முடிந்ததும் துட்டு கொடுத்துவிட்டு கிளம்பினான்.

சிறிய தென்ன ஓலை வேய்ந்த குடிலில் மூன்று சேட்டன்கள் புகைத்துக் கொண்டிருந்தனர்.முன்னால் சிவப்பு நிற கொடிக்கம்பம்.சற்று முன் நகர்ந்தால் அடர் பச்சை நிற மிகச் சிறிய பள்ளிவாசல்.அதைத்தாண்டி ஆங்காங்கே வீடுகள்.நகர்கையில் தூரத்தில் தெரிந்தது ஆயிஸாக் குட்டியின் மூங்கில் வேய்ந்த வேலியுடைய ஓட்டு வீடு.கடந்த முறை பாத்திரம் வாங்கிய வீட்டை உற்று நோக்கி,”எதெடுத்தாலும் இருவதே”என்று நீட்டி முழக்கினான்.

சலனமில்லை.மூன்று நான்கு முறை தெருவில் நின்று கூவினான்.ஆங்காங்கே நின்ற பெண்கள்,புகைத்து நின்ற சேட்டன்மார்,முன்னால் மீன் விற்றுச் சென்ற கூடைக்காரி என எல்லோரும் ஒருமுறை அவனைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டனர்.

வேகமாக நடந்து ஆயிஸாக் குட்டி வீட்டையடைந்தான்.வாசலில் நின்று “எதெடுத்தாலும் இருவதே”குரலில் ஆனந்தப் பரவசம்.இடுப்பில் குழந்தையை இடுக்கிக்கொண்டு ஒரு முதிய பெண்மணி வெளிவந்தாள்.முற்றத்தில் கட்டியிருந்த கொடியில் அன்று ஆயிஸா உடுத்தியிருந்த நைட்டியும் உள்ளாடையும் காற்றிலாடியது.நீரை சுவற்றில் அடிப்பது போன்ற சத்தம் தூரத்தில் கேட்டது.

“புட்டுக்குழல் கேட்டாவ போன வாரம்.அதான் கொண்டு வந்து”

“அய்யோ.மோனே இன்னல நிங்கட நாட்டாரன் புட்டுக்கொழல் கொண்டு வந்து கொடுத்தல்லோ.எந்தா செய்யான்”

இதயச் சுவர்களில் படிந்திருந்து கிளர்த்திய ஆயிஸாக் குட்டியின் புன் முறுவலும்,ராகம் குழைத்து உதிர்த்த சொற்களும் முட்டி மோதி வெடித்தன.இதயமே சுக்கு நூறாய் நொறுங்குவது போலிருந்தது.மனக் குமுறலை அடக்கிக்கொண்டு ”நீங்க”  என்றான்.

“எண்ட மோளானு ஆயிஸா.பொறகில் குளிக்கின்னு”

அடுத்த கணமே சலசல என்று ஆயிஸாக் குட்டி குளிக்கும் சத்தம் ஏகாந்தமாய் மனதிற்குள் பரவி அவனை அங்கிருந்து நகர விடாமல் செய்தது.

” வேற ஏதாது வேணுமான்னு உங்க மகள்ட்ட கேளுங்க”

“ஒன்னும் வேண்டாம்”என்ற முதியவளின் கடுத்த குரல் கதவு பட்டென்று அடைபடும் சத்தத்திற்கு பின்னால் ஒலிக்கையில் பள்ளத்திற்குள் குப்புற பாயும் ஒத்தையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான்.

https://solvanam.blog/2015/05/31/புட்டுக்குழல்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனவுகள் கானல் நீராக மூட்டைக்குள் முடங்கி விட்டது புட்டுக்குழல். ராசா காதல் வியாதி பொல்லாதது.....!   😊

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.