Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் நாளை முதல், பிளாஸ்டிக் தடை: வருது… மஞ்சள் பைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®®à®à¯à®à®ªà¯à®ªà¯ தயாரிபà¯à®ªà¯

தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை எதிரொலி.. வருது… வருது… மஞ்சள் பைகள்.

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வர உள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இதையடுத்து, 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஜனவரி 1 முதல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், சீல் வைக்கப்படும்.

வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். நாளை முதல் அமுலுக்கு வரும் தடை உத்தரவு, பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்துள்ளது.

தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படும் என்ற நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தையல் கலைஞர்களிடம் இருந்து துணிப்பைகளை மொத்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்று வருகின்றனர். மக்களால் மறந்தேவிட்ட மஞ்சப்பை தற்போது மீண்டும் வர தொடங்க உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/due-stop-using-plastic-from-tomorrow-yellow-bags-production-is-high-in-tamilnadu-337761.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

திரும்ப... வந்துட்டேன்னு.... சொல்லு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Here are the list of plastics which are banned

தமிழகத்தில் இன்று முதல் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு இனி நோ.. மாற்று பொருட்களின் பட்டியல்

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Here are the list of plastics which are banned

அந்த வகையில் ஜனவரி 1 முதல் இந்த 14 பொருட்களுக்கும் தடை.

  •  உணவுப் பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்
  • டைனிங் டேபிள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்
  • பிளாஸ்டிக் தெர்மகோல் தட்டுகள்
  • பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பிளேட்டுகள்
  • பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட குவளைகள் கப்
  • பிளாஸ்டிக் டீ கப்
  • பிளாஸ்டிக் கேரி பேகுகள்
  • பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கேரி பேகுகள்
  • நெய்யப்படாத பேக்குகள்
  • வாட்டர் பாக்கெட்டுகள்
  • பிளாஸ்டிக் ஸ்டிரா
  • பிளாஸ்டிக் கொடிகள்
  • பிளாஸ்டிக் பைகள்


Here are the list of plastics which are banned

மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள்.

  • வாழை இலை
  • பாக்கு மட்டை தட்டு
  • அலுமினியம் பேப்பர்கள்
  • பேப்பர் ரோல்கள்
  • தாமரை இலை
  • கண்ணாடி, உலோக டம்பளர்கள்
  • மூங்கில், மர பொருட்கள்
  • பேப்பர் ஸ்டிரா
  • துணி, காகித, சணல் பைகள்
  • காகித, துணி கொடிகள்
  • செராமிக் பாத்திரங்கள்
  • மண் பானைகள் 


Read more at: https://tamil.oneindia.com/news/chennai/here-are-the-list-plastics-which-are-banned-337856.html

  • கருத்துக்கள உறவுகள்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடை

January 1, 2019

plastic.jpg?resize=518%2C388

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையும பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக்கிலான பைகள், தட்டுகள், குவளைகள், ஸ்ட்ரோக்கள் போல ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான தடை அமுலுக்கு வருகின்றது.

இந்தத் தடைக்கெதிராக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தியிருந்த போதிலும் நீதிமன்றம் தடைக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்திருந்தது.

மேலும் இத்தடையிலிருந்து பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள், துணிப் பைகளைப் பயன்படுத்துமாறு வர்த்தகர்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகின்றது.

http://globaltamilnews.net/2019/108536/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமல்: விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் எவை?

 
பிளாஸ்டிக் தடை

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 1) முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருகிறது.

 

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்

  • வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.
  • ஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
  • பால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்
  • இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள்
  • உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்படத்தின் காப்புரிமை OLIVIER MORIN/GETTY IMAGES

தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையின் அவசியம்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படாத கழிவுகள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.

தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

அதன்படி, வாழையிலை, பாக்குமட்டை, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-46726730

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

மஞ்சள்  பையின் வாழ்வுதனை பிளாஸ்டிக் பை   கவ்வும்,  இறுதியில் மஞ்சள்  பையே... வெல்லும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி - டாஸ்மாக் ‘பார்’களில் நுழைவு கட்டணம் ..

201812310837348197_entrance-fees-collect

சென்னை :

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’கள் இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்.

அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

https://www.maalaimalar.com/News/District/2018/12/31083735/1220511/entrance-fees-collect-in-Tasmac-shop-glass-tumbler.vpf

டிஸ்கி :

No-plasticts-in-tasmac_710x400xt.jpg

இனி 'டங்கன்ற' ஓசையுடன் ஒலிக்குமே 'சீயர்ஸ்'...என்ற இசையும் .. 😍

 ஆனாலும்  பாரின் ஸ்ரைல் எல்லாம் நம்ம ஆட்களுக்கு கொஞ்சம் ஓவர்தான் ..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 8 people, people smiling, text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.