Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஆளுநர் முன் பாரிய பொறுப்பு

Featured Replies

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்திலும் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.
 
ஆனால் இம்முறை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
 
இந்நியமனம் ஜனாதிபதி மைத்திரிக்கு சர்வதேசத்தின் பார்வையில் நன்மதிப்பைக் கொடுக்கக்கூடியதாகும்.
 
அதேநேரம் ஆளுநர் தொடர்பில், தமிழர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்ற கருத்து நிலையும் ஏற்படவே செய்யும்.
 
இவை ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனின் முன் பாரிய பொறுப்புக்களும் சவால்களும் உள்ளன என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
 
அதாவது சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருக்கின்றபோது அவர் அரசிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்கும்,
 
தமிழர் ஒருவர் ஆளுநராக இருந்து கொண்டு அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்குமிடையில் நிறையவே வித்தியாசம் இருக்கும்.
அதேநேரம் தமிழர் ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் ஒரு சம்பிரதாயத்துக்குக் கேட்க; அது நிஜமாகிப் போன நிலையில்,
புதிய ஆளுநர் ஜனாதிபதியின் பக்கமா? அல்லது குறித்த தமிழ் அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறாரா? என்ற கோணங்களில் தமிழ் அரசியல் தரப்புகளின் விழிகள் படம் பிடிக்கவே செய்யும்.
 
இதற்கு மேலாக, வடக்கின் ஆளுநராகத் தமிழர் ஒருவர் பதவியேற்றிருக்கும் இவ்வேளையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசின் ஆட்சிக்காலமும் முடிவுற்ற நிலையில் உள்ளது.
 
எனவே வடக்கு மாகாணத்தின் அத்தனை செயற்பாடுகளிலும் இயங்கு நிலைகளிலும் புதிய ஆளுநர் நேரடிப் பொறுப்பை உடையவராக இருப்பார்.
 
இது ஆளுநரின் சுமுகமான பணி நிலைக்குப் பாரிய சுமையாக இருக்கும் என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.
 
தவிர, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியை பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன்; வடபுலத்து மக்களின் கஷ்ரங்களை நேரில் சென்று அறிந்து அந்த மக்களின் விமோசனத்துக்கு தன்னால் முடிந்தளவு உதவியும் ஒத்தாசையும் நல்கவேண்டும்.
 
அதேநேரம் ஆளுநராக வந்திருப்பவர் ஒரு தமிழர் என்பதால்; விழுந்த பாட்டில் குறி சுடலாம் என்று நினையாமல், அனைத்துத் தரப்பினரும் அவருக்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, வடக்கின் ஆளுநர் ஒரு தமிழராக இருப்பதுதான் பொருத்தம் என்பதை தென் பகுதிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.
 
இந்தத் தார்மீகப் பொறுப்பை அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் நிர்வாகக் கட்டமைப்புகளும் செய்தாக வேண்டும்
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த சுரேன் ராகவன்?

01.jpg?resize=800%2C481

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக இவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சுரேன் ராகவன்?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர், 2008ஆம் ஆண்டு PhD முடித்தார். பின்னர் 2008 – 2011களில் பிரிட்டன் அரசின் புலமைப்பரிசிலும் இவருக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதை வென்ற இவர், நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

அத்தோடு இவர் ஓர் தீவிர பௌத்த சிந்தனைவாதியாவார். பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://puthusudar.lk

தலைப்பை எழுதிய மகானுக்கு புண்ணாக்கு மூட்டை பரிசளிக்க வேண்டும்! 

... அன்று எதிர்கட்சி தலைவர் அப்பா அமிர்! .. பின் வெளிவிவகார அமைச்சர் கதிர்! இன்று வட ஆளுனர் இராகவா!

... தைப்பொங்கலுக்கு முன், வட மாகாண ஆளுனரால்  ...  காணி எல்லாம் விடுவிக்கப்படப் போகுதாம்? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லோரும் வீடுகளுக்கு வந்து விடுவார்களாம்?  சிறையில் உள்ளவர்களும் வந்து விடுவார்களாம்?  ... மேலும் ... தீர்வும் வரப்போகுதாம்!

ஆ... ஓ...ஆ...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இந்திய வம்சாவளியாமே உண்மையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.