Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு நடையுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 15, 2019

Vavuni-pro1.jpg?zoom=1.2100000262260437&

வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று (15.01.19) கவனயீர்ப்பு நடையை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக நடையை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை சென்றடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

http://globaltamilnews.net/2019/110051/

  • கருத்துக்கள உறவுகள்

“அமெரிக்கா வரவேண்டும் !” ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG_0435.JPG

வவுனியா, ஏ- 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_0444.JPG

முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு பசார் வீதி வழியாக  ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_0448.JPG

இதன்போது “எமது பிள்ளைகள் வராது எமக்கு பொங்கல் இல்லை”, “ மாறி மாறி வந்த அரசாங்கங்களில் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம்”, “ கூட்டமைப்பும் எம்மைப் பற்றி பேசாது சிங்கள மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பது போன்று செயற்படுகின்றது”, “ சுமந்திரன் பௌத்ததிற்கு முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சியான ஏக்கிய ராச்சிய என்பவற்றை ஏற்றுக் கொண்டுள்ளார்”, “ இனி நாம் அமெரிக்காவையையும் , ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நம்புகின்றோம்” ,“ அமெரிக்கா வந்து விரைவாக எமக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்” என இதன்போது அவர்கள் கோசங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

IMG_0461.JPG

 

http://www.virakesari.lk/article/48113

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.