Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம்:பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

daklas.jpg

பாராளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

கடந்த சில தினங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் மற்றும் தகவல்கள் என்பவற்றின் பிரகாரம் அமெரிக்க தூதரகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றினை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயம் பற்றி இந்நாட்டு மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக அதனை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை பிரதேசத்தில் அமைப்பதற்கு இதன் பிரகாரம் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளமையால் அவ்விடயம் தொடர்பாக எனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அத்தகவல்கள் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் சில தினங்களுக்கு முன்னர் “டேலி மிரர்” பத்திரிகைக்கு செவ்வியொன்று வழங்கியுள்ளமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இது பற்றி டேலி மிரர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

அதனால் இத்தகவல் பற்றிய நம்பகத்தன்மை பற்றி எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக கௌரவ அத்துரலியே ரத்தன தேரர் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ள இவ்விடயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பற்றியும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

இதில் யாதேனுமொரு உண்மைத் தன்மை இருப்பின் அது எமது நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.எனவே இவ்விடயம் பற்றிய பூரண அறிக்கை ஒன்றினை வழங்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

http://www.virakesari.lk/article/48728

  • கருத்துக்கள உறவுகள்

படைத்தளங்கள் அமைப்பதற்கு ஏற்றவாறு அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை - நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

முன்னைய அரசாங்கங்களும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்ததாகக் கூறுகின்றார் அமைச்சர் லக்ஸ்மன்
 
 
இலங்கையும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்வது வழமையானது என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இலங்கையில் பதவியில் இந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் அமெரிக்காவோடு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்ததாகவும் அமைச்சர் லஸ்மன் கிரியெல்ல கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடியதும் ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரட்நாயக்கா அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். அமெரிக்காவின் விமானப்படை, கடற்படைக்கு இலங்கையில் தளம் அமைப்பதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடமளித்துள்ளதாக பிமல் ரட்நாயக்கா அந்த ஒழுங்குப் பிரச்சினையில் கேள்வி தொடுத்தார். 
 
அதற்கு, நாடாளுமன்ற சபை முதல்வர் என்ற அடிப்படையில் பதிலளித்தபோதே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணம் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் படையினர் தமக்குரியவாறு தளம் அமைத்து வருகின்றனர். இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பிமல் ரட்நாயக்கா தெரிவித்தார்.

அத்துடன் அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்தும் சந்தேகம் வெளியிட்டார்.

அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக விளக்கமளிக்குமாறும் பிமல் ரட்நாயக்கா அந்த ஒழுங்குப் பிரச்சினையில் வலியுறுத்தினார்.

ஆனால் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்காவுடன் இலங்கை குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு காலங்களின் அடிப்படையில் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமையானது என்றார்.

ஆனால் அந்தப் பதிலை ஏற்க மறுத்த பிமல் ரட்நாயக்கா, ரணில் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து மேலும் சந்தேகம் வெளியிட்டார்.

ஈழத் தமிழா்களின் கடற்பரப்புக்கள் அமைந்துள்ள முல்லைத்தீவு பகுதியில் இருந்து திருகோணமலை வரையான பகுதிகளில் அமெரிக்கா எண்ணெய்வள ஆய்வு நடவடிக்கைளை கடந்த செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்துள்ளது.

இந்த எண்ணெய்வள ஆய்வுக்காக சீன அரசுக்குச் சொந்தமான நவீன ஆய்வுக் கப்பல் ஒன்று பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.