Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது - பொன்­சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது

அடித்­துக் கூறு­கின்­றார் பொன்­சேகா

பதிவேற்றிய காலம்: Feb 9, 2019

தமிழ் மக்­க­ளு­டன் நேர­டி­யா­கப் பேசி அர­சி­யல் தீர்­வுத் திட்­டத்தை வழங்­கு­வேன் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கூறி­யி­ருப்­பதை நினைக்­கும்­போது சிரிப்­புத்­தான் வரு­கின்­றது. கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது. கடந்­த­கால அனு­ப­வங்­க­ளில் இருந்து தமிழ் மக்­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் இதை உணர்ந்­து விட்­டார்­கள்.

இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

முன்­னாள் அரச தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தார். இதன்­போது, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களை கூட்­ட­மைப்பே குழப்­பி­யது என்­றும், எதிர்­கா­லத்­தில் ஆட்­சிக்கு வந்­தால் தமிழ் மக்­க­ளு­டன் பேச்சு நடத்தி தீர்வை வழங்­கு­வேன் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் கேட்­ட­போதே சரத் பொன்­சேகா மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மீண்­டும் ஆட்­சி­யைப் பிடித்து தலைமை அமைச்­சர் கதி­ரை­யில் அமர்ந்­தி­ருக்­க­வும் தனது சகோ­த­ரர்­க­ளில் ஒரு­வரை அரச தலை­வ­ராக்­க­வுமே மகிந்த ராஜ­பக்ச விரும்­பு­கின்­றார். இதற்கு தமி­ழர் தரப்­பின் பேரா­த­ரவு அவ­ருக்­குத் தேவைப்­ப­டு­கின்­றது. இதற்­கா­கவே தமி­ழர் மனதை வெல்­லும் வகை­யி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீது வீண்­ப­ழி­யைச் சுமத்­தும் வகை­யி­லும் அவர் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்.

சுமார் பத்து வரு­டங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­வர் மகிந்த ராஜ­பக்ச. அவ­ருக்கு தமி­ழர் மீது உண்­மை­யான அக்­கறை இருந்­தி­ருந்­தால் அப்­போதே தீர்வை வழங்­கி­யி­ருக்­க­லாம்.
நான் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­கள் எனக்கு அமோக வாக்­கு­களை அளித்­த­னர். ஆனால், அந்த வாக்கு வீதத்­தில் இரு­பது வீத வாக்­கு­க­ளைக்­கூட வடக்கு, கிழக்­கில் அன்று மகிந்த பெற­வில்லை.

2010ஆம் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­தல் 2015ஆம் ஆண்டு தேர்­தல் மாதிரி நீதி­யாக நடந்­தி­ருந்­தால் நான் அரச தலை­வ­ரா­கி­யி­ருப்­பேன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க என்னை நம்பி வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளி­டம் நான் தீர்­வுத் திட்­டத்தை முன்­வைத்து உரிய தீர்வை வழங்­கி­யி­ருப்­பேன் – என்­றார்.

 

https://newuthayan.com/story/11/கொலைகார-ராஜபக்ச-கும்பல்-தமிழருக்குத்-தீர்வைத்-தராது.html

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்களின் கூச்சல்களே இன்று இலங்கையில் வேதம். 😲

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­கள் எனக்கு அமோக வாக்­கு­களை அளித்­த­னர்.

இதே நீங்கள்தான் தமிழரை வந்தேறு குடிகள் என்று பேட்டியளித்தீர்கள். அதையும் மன்னித்து, மறந்து அமாேக வாக்களித்தார்கள். குற்ற உணர்வு வரவில்லை உங்களுக்கு, வராது. காலங்காலமாய் ஏமாற்றியே வடை பறித்தவர்களாயிற்றே.

 

2 hours ago, கிருபன் said:

2010ஆம் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­தல் 2015ஆம் ஆண்டு தேர்­தல் மாதிரி நீதி­யாக நடந்­தி­ருந்­தால் நான் அரச தலை­வ­ரா­கி­யி­ருப்­பேன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க என்னை நம்பி வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளி­டம் நான் தீர்­வுத் திட்­டத்தை முன்­வைத்து உரிய தீர்வை வழங்­கி­யி­ருப்­பேன் – என்­றார்.

 

நீங்கள் சாெல்வது சத்தியம், நம்பிற்றாேம்.

 

2 hours ago, கிருபன் said:

கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது

  1. நாங்கள் யாரும் கணக்கே எடுக்கவில்லை அவர் கதையை, சுமந்திரன்தான் நடக்கும் என்கிறார். அவருக்கு அந்த எண்ணம் இருந்திருந்தால் சாெந்த நாட்டுக்குள் பாேர் செய்திருப்பாரா? நாமல் அரச தலைவராகுமட்டும் இப்பிடித்தான் எதையாவது பிணாத்துவார்.
16 hours ago, கிருபன் said:

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது 

அடித்­துக் கூறு­கின்­றார் பொன்­சேகா

கொலைக்கள மார்ஷல் பொன்சேகாவுக்கு தன்னுடன் இயங்கிய, தன்னை இயக்கிய கொலைகாரர்களை நன்றாக தெரிந்திருக்கத் தானே வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.