Jump to content

உயிர் தந்த சங்கீதத்துக்கு ஓர் நன்றி மொழி


Recommended Posts

பதியப்பட்டது

தெய்வீக இசை என உனை உணர்ந்தோர் போற்றுவார்;
'சலிப்பான சங்கீதம்' எனப் புரியாதோர் தூற்றுவார்.
மும்மூர்த்திகள் பரப்பிய கர்நாடக சங்கீதம் - இது
நூற்றாண்டுகள் தாண்டி நாம் பெற்ற பொக்கிஷம்!

"ராகத்தில் சிறந்த ராகம் எது?" என நானறியேன்;
"அடியார் எப்படிப் பாடினாரோ!" என வியந்தேன். 
இசைப்பாமரன் எனை உன் சுரங்கள் எனும் கரங்களால் 
ரகசியமாய் வருடி உன்னுள் ஈர்த்த அன்பை என் சொல்ல?!

ஆண்டவன் படைத்த பொம்மை தான் நான்; 
புலம்பெயர் தேசத்து யந்திர வாழ்வில் - எந்தன்
மனிதம் கெடாமல் காத்தது உன் இனிய அதிர்வலைகள்;
என் ஆவி குளிர மண்ணுலகிலும் சொர்கம் தந்தாய்!

மனப்பசியால் நலிந்திருக்க பெருவிருந்து தந்தாய், 
தனித்துத் திக்கற்று நிற்க புகலிடமாய்  நீ ஆனாய்.
சங்கீதமே! நீ ஆனந்தம் நிறைந்த தனி உலகம்;
வார்த்தைகளுக்குள் அடக்க முடியா அன்பு மொழி;
வார்த்தைகளும் தேவையில்லை உன் உணர்வே போதும்! 

மதுவும், மாதுவும், பிற மருந்தும் போதை தரும்; 
இவை என்னை நெருங்காமல் காத்தாய் இன்னிசையே! 
நீ தந்த போதையில் மயங்கி தெளிந்தேன் என் வாழ்விலே!
என் உணர்வில் நீ கலந்திருக்க தனிமையுணர்வு வீணே!

(நான் நேசிக்கும் கர்நாடக சங்கீதத்துக்கு என் மனம் நிறைய ஓர் நன்றிக்கவிதை) 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான சங்கீதம்,அதற்கு உங்களின் அறிமுகம் அசத்தல்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கீதத்தைப் பற்றி ஏதுமறியாவிட்டாலும் நித்யசிறி பாடிய அருமையான பாடல் மிகவும் விரும்பி கேட்பேன்.என்ன ஒரு கணீரென்ற குரல்.அவவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்தது
https://youtu.be/id7wgh9MUKg

Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

சங்கீதத்தைப் பற்றி ஏதுமறியாவிட்டாலும் நித்யசிறி பாடிய அருமையான பாடல் மிகவும் விரும்பி கேட்பேன்.என்ன ஒரு கணீரென்ற குரல்.அவவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்தது
https://youtu.be/id7wgh9MUKg

நித்யஶ்ரீயினதும், உன்னி கிருஷ்ணனினதும் பாடல்கள் தான் சங்கீதம் பற்றி எதுவுமே தெரியாத என்னை அதன் பால் ஈர்த்தது. 2001 அல்லது 2002ல் நல்லை ஆதீனத்தில் முதன் முறையாக நித்யஶ்ரீயின் கச்சேரி பார்த்ததில் இருந்து தொடங்கிய ஈடுபாடு இன்னும் தொடர்கிறது. இன்றளவும் எனக்கு சங்கீதத்தின் உள்ளார்ந்த அம்சங்கள் எதுவுமே தெரியாது. ஆனாலும் அனுபவ / உணர்வு ரீதியாக அதன் மீதான எனது மதிப்புக் கூடியிருக்கிறது. உலகத்தில் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்று எமக்குக் கிடைத்திருப்பது நமது பாக்கியம் தான்.

இந்த 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாடல் தான் கர்நாடக சங்கீதத்தைத் தாண்டி அனைத்து தரப்பு இசை ரசிகர்களுக்கும் நித்யஶ்ரீயை அறிமுகப்படுத்தியது. இன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அண்ணா. 👍 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.