"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 108 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 108 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் தேவநம்பியதீசனின் இளைய சகோதரர்கள் சூரதிச்சன் அல்லது சூரதிஸ்ஸன் [Suratissa] மற்றும் உபதிச்சன் அல்லது உபதிஸ்ஸன் [Upatissa] அனுராதபுரத்தில் தலா பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தனர். களனி மற்றும் மகமாவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் [Rulers at Kelaniya and Magama] அனுராதபுரத்து மன்னருக்கு காணிக்கை செலுத்தினர். உத்திய அல்லது உத்தியன் மன்னரின் [king Uttiya] ஆட்சிக் காலத்தில், இரண்டு குதிரை சவாரி செய்பவர்கள் / வணிகர்கள் [horse riders / traders] உத்திய மன்னரைக் கொன்று இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதன் பின் அசேல அல்லது அசேலன் [Asela] அவர்களைக் கொன்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஒரு சோழ இளவரசர் எல்லாளன் [Ellalan or Elara] மகாவலி முகத்துவாரத்தில் [mouth of Mahaveli] தரையிறங்கி அசேலாவைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் கொடுமையாக ஆட்சி செய்தார். எல்லாளன் பல புத்த கட்டிடங்களை இடித்ததாக இராசவலிய [Rajavaliya] கூறுகிறது. இது மற்ற இரண்டு முன்னைய நாளாகமங்களில் எல்லாளனைப் பற்றி கொடுக்கப்பட்ட விபரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. அரச வம்சத்தின் விதை களனி மற்றும் மகமாவில் தொடர்ந்ததாக [seed of the Royal dynasty continued in Kelaniya and Magama] இராசவலிய கூறுகிறது. இதன் மொழிபெயர்ப்பாளர் 'சிங்களவர்கள்' என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் சேர்த்தார்; இருப்பினும், அது மூல உரையில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி, காக்கவன்னதிஸ்ஸனின் அல்லது கவந்திஸ்ஸனின் (Kakkavannatissa or Kavantissa) உயிரியல் மகன் அல்ல. மேலும் மகாவம்சத்தின்படி அரச வம்சத்தின் தொடர்ச்சி இங்கே முடிவடைகிறது. இராசவலியத்தில் ஒரு ரொட்டி அல்லது ரொட்டியா [Rodi or Rodiya / என்பது இலங்கையின் சிங்கள மக்களிடையே உள்ள ஒரு தீண்டத்தகாத சமூகக் குழு அல்லது சாதி ஆகும்.] பற்றிய ஒரு கதை உள்ளது, இது மற்ற இரண்டு நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. தேவநம்பிய தீசனின் தம்பிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளின் வரிசை மற்ற இரண்டு நாளாகமங்களுடன் பொருந்தவில்லை. கெளனிதீசனின் அல்லது களனி தீசனின் [Kelanitissa] தம்பி ராணியுடன் உறவு வைத்திருந்ததும், ஒரு தேரர் சந்தேகிக்கப்பட்டதும் மற்ற இரண்டு நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களுடன் பொருந்தவில்லை. "பாத்திரத்தை எண்ணெயால் நிரப்பி, நெருப்பினால் சூடாக்க முடியவில்லை , அதாவது, தீயில் வைத்தாலும் எண்ணெய் காயவில்லை அல்லது சூடாகவில்லை என்றும் கூறுகிறது. இவை உண்மையான நிகழ்ச்சி அல்ல, அது அதிகமாக அளவு கடந்த கற்பனை, கதையை வியப்பாகக் காட்ட உருவாக்கப்பட்ட embellishment (அழகாக்கம்) தான் என்று நினைக்கிறேன்! மேலும் மன்னார் மற்றும் தூத்துக்குடிக்கு [Mannar and Tuttukudiya] இடையே இராவணனுக்கு இருபத்தைந்து அரண்மனைகளும் நான்கு இலட்சம் தெருக்களும் இருந்ததாக இராசாவலிய கூறுகிறது. அவை இராவணனின் துன்மார்க்கத்தால் [கெட்ட நடத்தையால்] கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்று இராசாவலிய கூறுகிறது. எனவே இராசாவலிய இராவணனை ஒரு துன்மார்க்கனாகக் இங்கு கூறுகிறது. மன்னார் மற்றும் தூத்துக்குடிக்கு இடையே இருபத்தைந்து அரண்மனைகளும் நான்கு லட்சம் தெருக்களும் இருந்தது என்றால், குரங்கு படை மற்றும் அணிலின் உதவியுடன் இராமர் ஏன் இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என்ற ஒரு பாலத்தைக் கட்டினார் என்று எவரும் யோசிக்கலாம் என்று எண்ணுகிறேன்? கதை என்னவென்றால், களனி தீசன் ஒரு பிக்குவை சூடான எண்ணெய் குளியலில் உயிருடன் எரிக்க முயன்றதால், இலங்கையின் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான பகுதி, இலங்கைக்கும் இன்றைய இந்தியாவின் தெற்கு முனைக்கும் இடையில் உள்ள நிலம், கடலுக்குள் மூழ்கியது என்கிறது. அது மட்டும் அல்ல, களனி தீசன் நரகத்தின் தீப்பிழம்புகளில் மூழ்கடிக்கப்பட்டார். இதன் செய்தி என்னவென்றால், பிக்குகள் உயர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யக் கூடாது என்பதுதான்!. மேலும் களனி தீசன் தனது மகளை ஒரு மூடப்பட்ட படகில் ஏற்றி, களனி தீசன் என்ற மன்னனின் மகள், கடலுக்கு பலியாகக் கொடுக்கப்பட்டார் என்ற செய்தியுடன், தனது துரதிர்ஷ்டத்தை சந்திப்பதற்கு முன்பு அதை மிதக்கச் செய்தார்; கடல் தெய்வமான மணிமேகலை [Mani-Mekhala] படகை தெற்கே உருகுணைவில் [Ruhuna] உள்ள மகமாவுக்கு [Magama] எடுத்துச் சென்றது. இறுதியில் மகமாவின் மன்னர் காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் [காகத்தை போல் நிறம் உள்ளவன் / Kavan Tissa, also known as Kaha Wan Thissa (Golden-coloured Tissa) and Kaka Wanna Tissa (Crow-coloured Tissa)] அவளை தனது ராணி மனைவியாக [queen consort] ஆக்கினார். இந்த விவரம் மகாவம்சத்தில் உள்ளவற்றுடன் ஒத்துப்போகவில்லை. தமிழ் மொழியில் இரண்டாவது மிகவும் பிரபலமான காவியமான மணிமேகலையின் (மணி-மேகலா) கதாநாயகியும் மணிமேகலை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தக் காவியத்தின்படி மணிமேகலை என்பது கடல் தெய்வத்தின் பெயர் ஆகும். இராசாவலியவும் மணிமேகலை ஒரு கடல் தெய்வம் என்றே கூறுகிறது. நாயகி மணிமேகலை, தேரி சங்கமித்தாவைப் போலவே ஒரு பௌத்த கன்னியாஸ்திரியும் ஆவார். மேலும் மிகவும் பிரபலமான தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகியின் மகளும் ஆவார். மணிமேகலை காவியம் தமிழில் உள்ள ஒரு பௌத்த காவியமாகும். எனினும் சிலர் இது சமண காவியம் என்றும் கூறுகின்றனர். இங்கு மணிமேகலை, சவன்ன மலைக்கு (சமன்ன மலை - சமன்ன குட்டா / Savanna Malai (Samanna hill- Samanna Kutta)) விஜயம் செய்தார். இந்த இரண்டு காவியங்களான மணிமேகலை மற்றும் இராசாவலிய இலங்கையுடனும் பௌத்தத்துவத்துடனும் உள்ள தொடர்புகள், அவை இலங்கையின் வரலாற்று நூல்களுடன் மறைமுகமாக தொடர்புடையவை என்பதைக் காட்டுகிறது எனலாம். இராணியை கண்டு எடுத்த இடத்தில் ஒரு விகாரை கட்ட மன்னன் ஏற்பாடு செய்தார், இதன் காரணமாக அவள் பின்னாளில் விகார மகா தேவி என்று அழைக்கப்பட்டாள். பின், இராணி ஒரு குழந்தையை கருத்தரித்தாள், கர்ப்பத்தின் காரணமாக அவளுக்கு மூன்று ஆசைகள் இருந்தன. இராணியின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியை மன்னன் வேலுசுமணனிடம் [Velusumana] ஒப்படைத்தார். வேலுசுமணன் எல்லாளனின் தொழுவத்திற்குள் [குதிரைகள் வைக்கப்படும் ஒரு கட்டிடம்] சென்று, தான் தான் வீரன் வேலுசுமணன் என்று சத்தமாக அறிவித்து, முடிந்தால் என்னைப் பிடிக்குமாறு அவர்களை கேலி செய்து, மிக வேகமாக ஒரு குதிரையின் மீது சவாரி செய்தான். ஒரு தமிழ் வீரன் அவனைப் பின்தொடர்ந்தான். வேலுசுமணன் குதிரையிலிருந்து கீழே குதித்து, சரியான நேரத்தில் தனது வாளை அவனது தலைக்கு நேராக நீட்டினான். அப்பொழுது, தமிழ் வீரனின் தலை அவனது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டது. பின்னர் வேலுசுமணன் விகாரமாகாதேவியிடம் அந்த தலையை வழங்கினான். எனினும் இந்தக் கதை தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. என்றாலும், இந்தக் கதை மகாவம்சத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல கொடூரமானது அல்ல. அதாவது, மகாவம்சத்தில் ஒரு தமிழ் வீரனின் தலையை வெட்டப் பயன் படுத்தப்பட்ட வாளிலிருந்து கழுவப்பட்ட இரத்தக் கறை படிந்த தண்ணீரைக் குடித்த இராணியை விட, இங்கு விகார மகா தேவியை சிறந்த வெளிச்சத்தில் சித்தரிக்க இராசாவலிய முயன்று உள்ளது புலனாகிறது. மற்ற இரண்டு ஆசைகள் எந்த முக்கியத்துவமும் இல்லாதவை, மேலும் அவை இங்கே விரிவாகக் கூறப்படவில்லை. Part: 108 / APPENDIX – "Summary of Rajavaliya" Devenipetissa’s younger brothers Suratissa and Upatissa ruled for ten years each at Anuradhapura. Rulers at Kelaniya and Magama paid tributes to the king at Anuradhapura. During the reign of king Uttiya, two horse riders/traders killed the king Uttiya and ruled for twenty-two years. Asela killed them and ruled for ten years. A Soli prince Elala landed at the mouth of Mahaveli, killed Asela, and ruled wickedly for forty-four years. Rajavaliya claims that Elala demolished many Buddhist buildings. This is in sharp contrast with the accounts given about Elara in the other two chronicles. Rajavaliya claim that the seed of the Royal dynasty continued in Kelaniya and Magama. The translator added the word Sinhalese within the brackets; however, it is not in the text. Dutthagamani was not a biological son of Kakkavannatissa (Kavantissa), and the continuation of royal line is ended here as per the Mahavamsa. There is a tale about a Rodiya in the Rajavaliya which is quite different from the tales given in the other two chronicles. The order of the reigns given about the Devenipetissa’s younger brothers does not tally with the other two chronicles. The story of Kelanitissa’s younger brother having affairs with the queen, and a Thera being suspected also does not tally with the accounts given in the other two chronicles. The fire could not make the cauldron full of oil to heat up is another tale of embellishments. Rajavaliya says that Ravana had twenty-five palaces and four hundred thousand streets between Mannar and Tuttukudiya, and these were submerged by sea because of the wickedness of Ravana. Rajavaliya, therefore, considers Ravana a wicked fellow. One may wonder why Rama built the bridge, Adams Bridge with the help of the monkey brigade and a squirrel if there were twenty-five palaces and four hundred thousand streets between Mannar and Tuttukudiya! The story is that there was a submergence of land between Lanka and the southern tip of the present day India. More than ninety percentage of Lanka was submerged under sea because Kelanitissa tried to burn the Bhikkhu alive in a hot oil bath. Kelanitissa was engulfed in flames of hell. The message is that the Bhikkhus are supreme and do not do any harm to them. Kelanitissa set his daughter in a covered boat and set it drift before he met with his ill fate with the message on the boat; the daughter of the king Kelanitissa offered as a victim to the sea. The Sea Goddess Mani-Mekhala carried the boat down south to Magama in Ruhuna. Eventually the king of Magama, Kavantissa, made her his queen consort. The detail is not corroborating with those from the Mahavamsa. It is interesting to note that the heroine of the second most popular epic in Tamil language, Mannimegalai (Mani-Mekhala), is also Mannimegalai. Mannimegala is also a name of the sea goddess as per this epic. Rajavaliya too says Mannimeghalai is a sea goddess. The heroine Mannimeghalai is also a Buddhist nun, same as Theri Samghamitta, and the daughter of Kannaki, the heroine of the most popular Tamil Epic Silappathikaram which some claim a Jain epic. The Epic Mannimeghalai is a Buddhist epic in Tamil. Mannimeghalai visited Savanna Malai (Samanna hill- Samanna Kutta). The connection of these two epics with Lanka and the Buddhism is dealt with elsewhere, with the indirect connection to the chronicles of Ceylon. The king caused a Vihara to be constructed at the place where the queen was found, and she is called Vihara Maha Devi because of this. The queen conceived a child and in the cause of the pregnancy she had three desires. The king assigned the task of fulfilling the desire of the queen to the champion Velusumana. Velusumana went into the Elala’s stable and loudly proclaimed that he was the champion Velusumana and taunted them to catch him if they could, and rode on a horse very fast. He was pursued by a Tamil champion. Velusumana jumped down from the horse and stretched his sword at the correct time that the head of the Tamil champion was severed from his body. Then he presented the object to Viharadevi. This story is not narrated in the Dipavamsa. This story is not as gory as the one that is narrated in the Mahavamsa. Rajavaliya tried to portray Vihara Maha Devi in a better light than the woman who drank the blood stained water washed off the sword which was used to behead a Tamil champion in the Mahavamsa. The other two desires are of no significance and not detailed here. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 109 தொடரும் / Will follow துளி/DROP: 2044 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 108 https://www.facebook.com/groups/978753388866632/posts/33877924931856053/?
By
kandiah Thillaivinayagalingam · 10 minutes ago 10 min