Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

Featured Replies

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/54345

  • தொடங்கியவர்

"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்"

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் அறிவித்திருந்தது.

இந் நிலையிலேயே தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/54376

  • தொடங்கியவர்

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 218 பேர் உயிரிழந்துள்ளதுடன் 452 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54380

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9601-720x450.jpg

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும்  பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது.

இந்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

http://athavannews.com/மீண்டும்-ஊரடங்கு-சட்டம்/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவில் மீண்டும் ஆரம்பித்து நாளை காலை வரை நீடிக்கும் ஊரடங்கு சட்டம்

  • தொடங்கியவர்

அவசரகாலச் சட்டம் அமுலில்! – ஊரடங்குச் சட்டம் நீக்கம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தளர்த்திக்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 290இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். தொடர்ச்சியாக நேற்றும் பல இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அவசரகாலச்-சட்டம்-அமுலில்/

  • தொடங்கியவர்

மீண்டும்  ஊரடங்கு அமுல்

நாட்டில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இரவு வேளைகளில் அமுல் படுத்தப்பட்டு காலைவேளைகளில் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் 321 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/54515

 

  • தொடங்கியவர்

இன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று இரவு 10.00 மணி தொடக்கம், நாளை காலை 4.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த ஊரடங்குச் சட்டம் அமுலுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/54598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.