Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலருகில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலருகில் இன்றும் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. 

வாகனத் தரிப்பிடத்தருகில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிஎஉந்த சிறிய வெண்ணிற வான் ஒன்று வெடித்துச் சிதறும் ஒளிநாடா வெளிவந்திருக்கிறது. தற்கொலைத் தாக்குதலாகவோ அல்லது இராணுவத்தால் வெடிக்கவைக்கப்பட்ட வானாகவோபிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே வெடிப்பு

colombo-blast-2-720x450.jpg

கொச்சிக்கடையில் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க முயன்றபோது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டாஞ்சேனை ஜம்பெட்டா வீதியில் உள்ள மூன்று குண்டுகளை பாதுகாப்பாக வெடிக்க வைக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இதனால் குறித்த பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை அவசரமாக வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் இருந்த வெடி பொருட்களை செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற வேளையில் வானில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.


கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே (ஜம்பெட்டா வீதியில்) மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

 

http://athavannews.com/மீண்டும்-பதட்டம்-கொச்சி/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து நண்பன் ஒருவன் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

வத்தளைப் பகுதியில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும், மக்களை அவதானமாக இருக்கும்படியும் கேட்கப்பட்டிருந்தது. 

மேலும், கொழும்பில் தாக்குதல் நடத்தவென சுமார் 180 பேர் கொண்ட குழுவொன்று வந்திருந்ததாகவும், பொலிஸார் மற்றும் ராணுவத்தினரின் துரித நடவடிக்கையினால், தமது திட்டங்கள் குழம்பிப் போயுள்ளதால், இக்குழுவில் மீதமுள்ள பலர் கொழும்பைவிட்டு தப்பியோட முயன்று வருவதாகவும், இப்படியானவர்கள் உங்கள் வீடுகளை தட்டி, தூர இடத்திலிருந்து வருகிறோம், ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் இன்றிரவு மட்டும் தங்க இடம் கொடுங்கள் என்று கேட்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவை முற்றான வதந்திகளாகக் கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

‘தண்ணீர் வதந்தி பொய்யானது’

Editorial / 2019 ஏப்ரல் 22 திங்கட்கிழமை, பி.ப. 12:55

தண்ணீர் ஏதோவொன்று கலந்துவிடப்பட்டுள்ளதாக, சில பிரதேசங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம். அந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தண்ணீர்-வதந்தி-பொய்யானது/150-232210

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடையில் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் இருந்த வெடி பொருட்களை செயலிழக்க முயன்றபோது வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

http://athavannews.com/மீண்டும்-பதட்டம்-கொச்சி/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுக்கருகில் 1000 ரூபாய் நாணயத்தாள்கள்

Editorial / 2019 ஏப்ரல் 22 திங்கட்கிழமை, பி.ப. 05:52 Comments - 0

image_940c903398.jpg

கொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து குண்டானது பாதுகாப்பு தரப்பினரால் செயழிலக்கப்பட்டுள்ளது.

குறித்த வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டு பொலிஸ் விசேடப் படையணியின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கப்பட்டதாக, பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த குண்டு நூல் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் அருகில் 1000 ரூபாய் நாணயத்தாள்கள் கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாணயத்தாள்களை காண்பவர்கள் அதனை எடுக்க முற்படும் போது குண்டை வெடிக்க வைப்பதற்கான அமைப்பிலேயே குறித்த குண்டில் நூல் இணைக்கப்பட்டிருந்ததாகவும் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/குண்டுக்கருகில்-1000-ரூபாய்-நாணயத்தாள்கள்/175-232246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.