Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பயங்கரவாதியை தப்பவிட்டால் கூட பாரிய ஆபத்து - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயங்கரவாதியை தப்பவிட்டால் கூட பாரிய ஆபத்து - ரணில்

இலங்கையில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அதிகாரிகள் தற்போது பதுங்கியிருக்க கூடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க  இவ்வாறு பதுங்கியுள்ளவர்கள் மற்றுமொரு சுற்று தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார்

பொலிஸார் அனைவரையும் தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆபத்து பெருமளவிற்கு குறைவடைந்துள்ளது,ஆனால் பதுங்கியுள்ள சிலரை  அடுத்த சில நாட்களில் கைதுசெய்யவேண்டும் இதனை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஒரு பயங்கரவாதியை  கூட தப்பவிட்டால் பாரிய சேதமேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்

இதன்காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றோம் அனைவரும் கைதுசெய்யப்படுவதை உறுதி செய்யவிரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ranil.jpg

ஒருவர் இருவர் தேவாலயங்களை மீண்டும் இலக்குவைக்கலாம் என்ற கவலை காணப்படுகின்றது ஒருவரே பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

http://www.virakesari.lk/article/54713

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஒரு பயங்கரவாதியை  கூட தப்பவிட்டால் பாரிய சேதமேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றழித்த படையினரைப் பாதுகாத்து உயர் பதவிகள் அளித்ததுபோல்.... இந்தப் பயங்கரவாதிகளுக்கும் ஏதாவது செய்துவிட்டால் ஆபத்துக்கள் அற்றுவிடலாம்.    

4 hours ago, கிருபன் said:

பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஒரு பயங்கரவாதியை  கூட தப்பவிட்டால் பாரிய சேதமேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்

அப்படினா சொறிலங்காவின் சிங்கள, முஸ்லீம் அரசியல்வாதிகள் பலரும், முப்படை போலீஸ் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட வேண்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Rajesh said:

அப்படினா சொறிலங்காவின் சிங்கள, முஸ்லீம் அரசியல்வாதிகள் பலரும், முப்படை போலீஸ் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட வேண்டுமே!

தப்ப விட்டால் தங்களுடைய பதவிகளுக்கு ஆபத்து என்று நினைக்கினம்...தப்பினவர், அந்த அமைச்சர்தான் குண்டு வைக்க சொன்னவர் என்று சொல்லுவார் என்ற பயத்தில தப்பவிடாமல் போட்டு தள்ள வேனும் என்று சொல்லுறார்... போலும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.