Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?

Featured Replies

குரான் வன்முறையை தூண்டுகிறதா? உண்மையுல் முஸ்லீம் மத்ததிற்கும் பயங்கரவாதிகளுக்கும்  ஒரு தொடர்பும்  இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இஸ்லாம் ஒரு அமைதி மார்ககம். இனிய மார்ககம் என்றெல்லாம் மத முட்டாள்த்தனங்களை  பரப்பவிழையும்  மதவாதிகள் தம்மால் இயன்ற அளவுக்கு பரப்பிவருகிறார்கள். அதனால்  முகநூலில் வந்த குரான் மொழி பெயர்பை இங்கு இணைக்கின்றேன். அரபு மொழிபெயர்ப்பை என்னால் சரிபார்கக முடியாவிட்டாலும் உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். அப்படி மொழி பெயர்ப்பில்  தவறுகள் இருந்தால் யாராவது அரபு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம்.

(அரேபிய அடிமைகளே இதை பலவீனமான  ஹதீஸ் என்று சொல்லி தப்பிக்க முடியாது, இது அனைத்தும் குர்ஹான் வசனங்கள்...).

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ‌ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ‏ 
(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
(அல்குர்ஆன் : 61:11)

يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ‏ 
(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 61:12)

وَاُخْرٰى تُحِبُّوْنَهَا‌  نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ‌  وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 
நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே!  இதனைக் கொண்டு) நம்பிக்கை யாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 61:13)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ  فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ‏ 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன்னுடைய தோழர்களை நோக்கி "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" என்று கேட்ட சமயத்தில், "நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்" என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர் தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர் களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றிபெற்றவர்களாகி விட்டார்கள்.
(அல்குர்ஆன் : 61:14)

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தமது மதத்தைப் பின்பற்றுபவர்கள் நபியவர்களுக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கொல்லப்படுவார்கள். இதுதான் நபியவர்கள் போர் முறை. 
மேலும் இவை தற்காப்பு போர்கள் அல்ல.வணிக கூட்டங்ஙளை வழிமறித்து கொள்ளையடிப்பது, முற்றுகையிட்டு பணிய வைப்பது இதுதான் போர் என்று சொல்கிறார்கள்..

முஹம்மது மதீனாவில் தனக்கென்று ஒரு ஜிஹாதி கூட்டத்தை சேர்த்தார்; போரில் கிடைத்த பெண்களையும், வியாபார கூட்டங்களிடம் வழிப்பறி செய்து அபகரித்த பொருட்களையும் மக்களுக்கு வாரி இறைத்து குறுகிய காலத்தில் மதத்திற்கு ஆள் சேர்த்தார். படிப்படியாக முஸ்லிமல்லாத மக்கள் மீது வண்முறையை கட்டவிழ்த்து விட்டார்; யூத, கிறிஸ்தவ இனவெறியை முஸ்லிம்களிடம் விதைத்தார். அண்டை நாடுகளுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பினார்; அரேபியாவின் பல பிரதேசங்கள் முஹம்மதுவின் ஆளுகையின் கீழ் வந்தன; இறுதியாக தன் மரண தருவாயில் இருக்கும்போது அரபு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் மற்ற அனைத்து மதத்தவர்களையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுகிறார்; அரேபியா முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றார்; இவற்றை [Muwatta Malik 1618, Abu Dawud 3029, Tirmidhi 1607, முஸ்லிம் 3364, 3626, புகாரி 4431] போன்ற ஹதீஸ்களில் காணலாம்

அந்த ஹத்தீஸ்கள்

யூத, கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஹம்மதிய பயங்கரவாதத்தின் ஒரு சாம்பிள்.!

Abu Dawud 3030  In-book reference: Book 20, Hadith 103
English translation : Book 19, Hadith 3024  Grade: Sahih (Al-Albani)

Jabir bin ‘Abd Allah said that he was told by ‘Umar bin Al Khattab that he heard the Apostle of Allaah(ﷺ) say “I will certainly expel the Jews and the Christians from Arabia and I shall leave only Muslims in it.”

தமிழாக்கம்:-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அரேபியாவிலிருந்து யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நிச்சயம் வெளியேற்றியே தீருவேன். முஸ்லிம்களைத் தவிர வேறெவரையும் (அங்கு) நான் விட்டு வைக்கமாட்டேன்.

Edited by tulpen

பகவத் கீதையிலும் பைபிலும் இப்படியான அர்த்தம் கொண்ட வசனங்களை கண்டு பிடிப்பது கடினமாக இருக்கப் போவதில்லை. 

ஆயிரம் வருடங்களுக்கு முன்  எழுதப்பட்டவை எப்படியான சூழ்நிலையில் உருவாக்கப்பட்டவை அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதற்கு நாம் தற்போது கொடுக்கும் வியாக்கியாணங்களே வில்லங்கத்தை தோற்றுவிப்பனவாயுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ  فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ‏ 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன்னுடைய தோழர்களை நோக்கி "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" என்று கேட்ட சமயத்தில், "நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்" என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.)

இந்த ஒரு வசனம் போதாதா உண்மை அறிய?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.