Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் - கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் - கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

 

- எம்.டி.லூசியஸ்

''அப்பா எங்­களை செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவே வளர்த்து வந்தார். அவ­ரு­டைய உழைப்­பி­லேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்­பட்டார். "நீங்கள் ஒரு­போதும் தொழில் செய்யத் தேவை­யில்லை. குடும்­பத்­துக்கு எனது உழைப்பு மாத்­திரம் போதும். நீங்கள் புதிய விட­யங்­களைக் கற்று உங்­களை வளர்த்துக் கொள்­ளுங்கள்" என அடிக்­கடி கூறுவார். ஆனால் இன்று ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யில்­லாமல் இருக்­கின்றோம். எங்­களை காத்­து­வந்த தெய்வம் எங்­களை விட்டுப் பிரிந்து விட்­டது என பெற்­றோரை இழந்த ரொசிக்கா கண்ணீர் விட்டுக் கதறி அழு­கின்றார்.

negambo-kattuwapitiya-boomb-attack.jpg

ஆம். ரொசிக்­காவைப் போன்று எண்­ணி­ல­டங்­காத பலர் இன்று நமது தேசத்தில் வீட்­டுக்­குள்­ளேயே புலம்பி அழுது கொண்­டி­ருக்­கின்­றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் சோக விளை­வு­களே இவை.

9 தற்­கொலைத் தாக்­கு­தல்கள்

 

வழமை போன்று சந்­தோ­ஷ­மா­கவும் ஆர்­ப்ப­ரிப்­பு­டனும் இயங்­கிய இலங்கைத் தீவு அன்று 21ஆம் திகதி காலை 8.45 மணிக்குப் பின்னர் ஆட்டம் கண்டு போனது. 

  உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொழும்பு, நீர்­கொ­ழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் ஆல­யங்கள் மற்றும் நட்­­சத்­திர ஹோட்­டல்­களை இலக்கு வைத்து தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்தச் சம்­பவம் அனைத்து இன மக்­க­ளையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருந்­தது.

உயி­ரி­ழந்­த­வர்­களின்  எண்­ணிக்­கையில் குள­று­படி

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 359  என  பொலிஸ் மற்றும் வைத்­தி­ய­சாலைத் தக­வல்கள் தெரி­வித்­தி­ருந்­தன.  ஆனால் அந்தத் தக­வல்கள் தவ­றா­னவை எனவும் 253 பேரே இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் 400க்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் ---விசேட வைத்­திய அதி­காரி அனில் ஜய­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.

அதிக உயிர்கள் காவுகொள்­ளப்­பட்ட கட்­டு­வ­பிட்டி

நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்டி ஆல­யத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லிலேயே நூற்­றுக்கும் மேற்­பட்ட மக்கள் பலி­யா­கினர். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள இன்னும் பலர் உயி­ருக்குப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றனர். பலர் ஊன­ம­டைந்­துள்­ளனர்.

 

கேசரி குழு­வினர் விஜயம்

நீர்­கொ­ழும்பு, கட்­டு­வபிட்டி பகு­திக்கு கேசரிக் குழு­வினரான நாம் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தோம்.   தாக்­கு­தலின் பின்னர் அங்­குள்ள தற்­போ­தைய கள நிலை­மை­களை  ஆராய்ந்­த­தோடு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் சந்­தித்­தி­ருந்தோம்.

Negombo_Katuwapitiya_Attack8.jpg

முழத்­துக்கு முழம் மரண வீடுகள்

கட்­டு­வ­பிட்டி பகு­திக்கு வாக­னத்தில் சென்று வீதியில் இறங்­கினோம். பிர­தேசம் எங்கும் இனம்­ பு­ரி­யாத ஓர் அமைதி. வீதியில் மக்­களின் நட­மாட்டம் இருக்­க­வில்லை. வீதி­கள்­தோறும் வெள்ளைக் கொடிகள் பறக்­க­ வி­டப்­பட்­டிருந்­தன.

வீதியில் நடந்து செலும் போது வீடுகள் தனித்தே காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு முழத்­துக்கு முழம் மரண வீடுகள். ஒவ்­வொரு வீட்­டிலும் இருவர் அல்­லது மூவர் அல்லது அதற்கு மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் என  வீட்டின் சுவர் மதில்­களில் கண்ணீர் அஞ்­சலி சுவ­ரொட்­டிகள் காட்சிப்­படுத்தப்பட்­டுள்­ளன.

மரண வீடு என்­பது எப்­போ­­தா­வது ஒரு வீட்டில் பதி­வாகும் சம்­பவம். ஆனால் ஒரு கிரா­மத்திலுள்ள அனைத்து வீடு­க­ளிலும் மரண வீடுகள் இருந்­ததை சிறிதும் நினைத்து பார்க்க முடி­ய­வில்லை. அதுவும் ஒரு வீட்டில் பலர் பலி­யான சோகம்.

இவற்றைப் பார்த்­துக்­கொண்டே அங்­கி­ருந்த ஒரு வீட்­டுக்குள் நுழைந்தோம்.  

Negombo_Katuwapitiya_Attack3.jpg

 வீட்டின் முற்­றத்தில் ஆழ்ந்த யோச­னை­யுடன் பெண்­ணொ­ருவர் அமர்ந்­தி­ருந்தார். இடது காலில் பாரிய கட்டு ஒன்று போடப்­பட்­டி­ருந்­தது. வலது கால் மற்றும் கைக­ளிலும் சிறு கட்­டுகள் போடப்­பட்டி­ருந்­தன. நாம் அவரை அணு­கிய போதும் நாம் வந்­ததை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை. அருகில் சென்று "அக்கா..!" என அழைத்த பின்னர் தன்னை சுதா­க­ரித்துக் கொண்டு எம்மைப் பார்த்தார்.

அவ­ருடைய முகத்தில் பாரிய சோகங்­கள் பிர­தி­ப­லித்­தன.

Negombo_Katuwapitiya_Attack1.jpg

 

ஒரு­வேளை உண­வுக்கே கையேந்தும் நிலைமை

எம்மை அறி­முகம் செய்த பின்னர் எம்­மோடு கதைக்க ஆரம்­பித்தார் 44 வய­து­டைய தினிசா,

கட்­டு­வ­பிட்­டி தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் எனது 70 வய­து­ தாயும்  8 மாத மகளும் உயி­ரி­ழந்து விட்­டார்கள். எனது ஒரு கால் முற்­றாகப் பதிக்­கப்­பட்­டுள்­ளது. எனது 7 மற்றும் 5 வய­து­டைய இரு மகள்­மார் காய­ம­டைந்துள்ள நிலையில் 5 வய­தான மகள் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்­று வ­ரு­கிறார்.

Negombo_Katuwapitiya_Attack4.jpg

ஆல­யத்தில் தற்­கொலைத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட போது நாம் ஆல­யத்தின் நடுப்­ப­கு­தி­யி­லேயே அமர்ந்­தி­ருந்தோம். தாக்­கு­தலில் எனது மக­ளுக்கு நெஞ்­சுப் ப­கு­தியில் குண்டின் சன்­னம்­ பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை பெற்று வரு­கின்றார்.

தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டு இரு வா­ரங்கள் கடந்­துள்­ளன. எமது வீட்டின் பொரு­ளா­தாரம் முற்­றாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 

அர­சாங்கம் உத­வி­ செய்­வ­தாகக் கூறி­னா­லும்­கூட உயிரி­ழந்­த­வர்­களின் சட­லங்­க­ளை யும் 65 ஆயிரம் ரூபா பணம் கொடுத்தே பெற்­றுக்­கொண்டோம்.  இதனால் நாம் பெரும் கலக்­க­ம­டைந்தோம். இதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபா வழங்­கப்­பட்­டது. இந்தப் பணம் அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்­டதா அல்­லது ஆலயக் குரு­வா­ன­வரால் வழங்­கப்­பட்­டதா என்று தெரி­ய­வில்லை.

உயி­ரி­ழந்­த­வர்­களைப் புதைக்கும் நேரமே குறித்த ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்­கப்­பட்­டது.  எனது கணவர் வெளிநாட்­டுக்குச் சென்று இரு மாதங்­களே ஆன நிலையில் இந்தத் துய­ரச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­பவம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிலையில் எனது கணவர் மறுநாள் திங்­கட்­கி­ழமை நாடு­ தி­ரும்பி விட்டார். இதனால் எனது குடும்­பத்­துக்­கான வரு­மானம் அனைத் தும் முற்­றாகத் தடைப்­பட்­டுள்­ளது. 

நாம் உரையாடிக்கொண்டிருந்போது தினிசாவுக்கு கிராம சேவ­க­ரி­ட­மி­ருந்து அவ­ருக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. 

Negombo_Katuwapitiya_Attack2.jpg

"அப்­பாவின் மரணச் சான்­றி­தழா......? ஐயோ அம்மா தான் அதனை வைத்­தி­ருந்தார். அவ­ருக்குத் தான் தெரியும். அது எங்­கி­ருக்­கின்­ற­தென்று தெரி­ய­வில்­லையே. 36 வரு­டங்கள் கடந்­து­விட்­டதே.... அப்­பாவின் மர­ணச்­சான்­றி­தழை எடுத்­துக்­கொண்டு அம்மா கச்­சே­ரிக்கும் சென்று வந்தார். எப்­ப­டி­யா­வது நான் அப்­பாவின் மர­ணச் சான்­றி­தழைத் தேடித்­த­ரு­கின்றேன்" என தொலை­பேசி அழைப்பைத் துண்­டித்தார்.

இதன்­போது அவரின் கண்­­களிலிருந்து கண்­ணீர்த்­து­ளிகள் கீழே விழுந்­தன. குடும்­பத்­ த­லை­வி­யா­கவும் ஓர் அன்­னை­யா­கவும் இருந்த பெண்ணின் வெற்­றி­டத்தை அந்த இடத்தில் எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.  மீண்டும் அவர் எம்­முடன் உரை­யாடத் தொடங்­கினார்.

"பாருங்கள் ஒரு தாயின் மகிமை எவ்­வ­ளவு அளப்­ப­ரி­யது. வீட்­டி­லுள்ள பொருட்கள் எல்லாம் அம்­மா­வி­டமே கேட்­டுப் பெற்­றுக் கொள்வோம். ஆனால் இன்று...?" தேம்பி அழு­கின்றார்.

''இந்தத் துக்­கத்­தி­லி­ருந்து மீள முடியுமா எனத் தெரி­ய­வில்லை.

8 மாதக்­கு­ழந்­தையைப் பிரிந்­தமை பெரும் மன உளைச்­ச­லையும் வேத­னை­யையும் இனம்­புரி­யாத கோபத்­தையும் ஏற்படுத்தியுள்­ளது.

தொழில் துறை, உற­வு­களை இழந்து தற்­போது நிர்க்­க­தி­யா­கி­யுள்ளோம் ஒருவேளை உண­வுக்குக்­கூட பிற­ரிடம் கையேந்தும் நிலை­யேற்­பட்­டுள்­ளது.

இதற்கு யார் பொறுப்பு...-? நாங்கள் செய்த தவறா...? இந்த நிலைக்­கு நாம் தள்­ளப்­பட்­டுள்ளோம்... ஒன்று விட்ட ஒரு நாள் மருந்து கட்­டவென வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­ல வேண்­டி­யுள்­ளது. அது மாத்­தி­ரமின்றி எமது உற­வி­னர்­களும் இங்கு தான் உள்­ளனர். அவர்­களோ தங்களது தொழில் துறை­களை விட்டுவிட்டு எமக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக எம்­முடன் இருக்­கின்­றனர். அனை­வரின் வரு­மா­னங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த ஒரு­ வா­ர­மாக ஆல­யங்­களில் இருந்தும் விகா­ரை­க­ளி­லி­ருந்தும் உண­வுகள் வழங்­கப்­பட்­டன. எமக்கு அய­ல­வர்கள் உணவு தரு­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. அவர்­க­ளும் இதே நிலையில் தான் உள்­ளனர். அவர்­களின் உற­வு­களும் பறி­போ­யுள்­ளன.

எதிர்­காலம் என்ற ஒன்றில் நம்­பிக்­கை­யில்­லாது போய்­விட்­டது. ஆல­யத்தில் இடம்­பெற்ற கொடூரச் சம்­பவம் தான் என் கண்­ முன்னே வந்து செல்­கின்­றது. உணவு உண்­ப­தற்கே மன­மில்­லாது போயுள்­ளது.

அர­சாங்கம் நஷ்ட ஈடு த­ரு­வ­தாகக் கூறி­யுள்­ளது. 5 மாதங்கள் அல்­லது ஒரு­ வ­ருடம் கடந்து தரு­வதால் பய­னில்லை. எமது பொரு­ளா­தாரம் தடைப்­பட்­டுள்ள இந்த நேரத்தில் அது கிடைத்தால் பெரும் உத­வி­யாக இருக்கும். 

பிள்­ளை­களின் கல்­விச்­செ­ல­வுக்கு யார் பொ­றுப்­பேற்­பார்கள்? அழு­கிறது அந்­தத் தாயுள்ளம்....!

பின்னர் அவரை ஆறு­தல்­ப­டுத்தி விட்டு அங்­கி­ருந்து அருகில் இருந்த அடுத்த வீட்­டுக்குள் சென்றோம்.

அங்கு வீட்டு முற்­றத்தில் ஆங்காங்கே பல வெற்றுக் கதி­ரைகள் காணப்­பட்­டன. கூடா­ரங்­களும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அங்­கி­ருந்த ஒருவர் "இந்த வீட்டில் நேற்­றுத்தான் இறுதி மரணச் சடங்கு இடம்­பெற்­றது" என்றார்.

வீட்­டுக்குள் நுழைந்த போது அங்­கி­ருந்த 44 வய­து­டைய துலானி என்ற பெண் எம்­மோடு உரை­யாடத் தொடங்கினார்.

 

மரண ஓலங்கள் காதில் ஒலித்­து­க் கொண்­டி­ருக்­கின்­றன

''அம்மா எங்­க­ளை­விட்டுப் பிரிந்து விட்டார். ஐயோ இந்த அர­சாங்கம் ஏன் இப்­ப­டிச் செய்­து­விட்­டது'' இரு கண்­க­ளி­லி­ருந்தும் கண்ணீர் வழிந்­தோட அவரின் முகத்தில் கடும் கோபம் வெளிப்பட்டது. 

"எனது அம்மா இறப்­ப­தற்கு முன் 3 செபங்கள் அடங்­கிய புனித செபஸ்­தி­யாரின் படங்­களை அச்­சிட்டு அவரின் பிள்­ளை­க­ளா­கிய எம் மூவ­ரி­டமும் வழங்­கினார். அவரே உரு­வாக்­கிய செபம் அது.

Negombo_Katuwapitiya_Attack5.jpg

அதா­வது எனது பிள்­ளை­களும் அய­ல­வர்­ சமூ­கமும் எவ்­வித துன்­பங்­க­ளு­மின்றி வாழ­வேண்டும் என அந்தச் செபத்தில் எழு­தப்­பட்­டுள்­ளது.

ஒரு­வேளை அம்­மாவை மரணம் நெருங்­கி­விட்­டதோ என்று எண்­ணத் தோன்­று­கின்­றது. அம்­மாவை இந்த அர­சாங்கம் கொலை செய்­து­ விட்­டது...." கதறி அழு­கின்றார்.... சகோ­த­ரிகள் இரு­வரும் ஒரு­வ­ரை­ ஒ­ருவர் அணைத்­துக் கொள்­கின்­றனர்.

''எம்மைச் சுற்­றி­யி­ருந்த அய­ல­வர்­களில் அரை­வா­சிப் பேர் பலி­யா­கி­ விட்­டனர். இதற்கு அர­சாங்­கமே முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­க­வேண்­டும்'' கடும் கோபத்­துடன் தெரி­வித்தார். "இந்தக் கிரா­மத்துக்கே அர­சாங்கம் பாவம் செய்­து­விட்­டது. இந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தெரிந்­தி­ருந்தும் ஏன் எம்மைப் பாது­காக்­க­வில்லை? நாம் யாருக்கு எந்­தத்­ தீங்­கி­ழைத்தோம்-? நாங்கள் கஷ்­டப்­ ப­ட்டு உழைத்து சந்­தோ­ஷ­மாக வாழ்ந்­து­வந்தோம். 

இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து கிர­ாமத்­த­வர்­களில் பலர் தொழில் செய்­ய மு­டி­யாதுள்ளனர். உடலில் ஒவ்­வொரு அங்­க­வீ­னத்­துடன் காயப்­பட்­டுள்­ளனர். ஐயோ..... ஏன் இந்த நிலை­மை­" எனக் கதறி அழுதது எமது இதயத்தைக் கனக்கச் செய்தது.

ssssssss.jpg

"எனக்கு சகோ­த­ரியும் சகோ­த­ரனும் இருக்­கின்­றார்கள். எனது கணவர் சுற்­று­லாத்­து­றை­யுடன் இணைந்த தொழி­லொன்­றையே புரிந்து வந்தார். சுற்­று­லாத்­துறை தற்­போது வீழ்ச்­சி­கண்­டுள்­ளது.

இதனால் எமது குடும்­பமும் வரு­மா­னமின்றிப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் எனது கண­வ­ருக்கு குண்டின் சன்­னங்கள் உடலில் துளைத்­துள்­ளதால் இரத்த ஓட்டச் செயற்­பாட்டில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதை­ய­கற்­றினால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து நேரு­மென வைத்­தி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வாறு பல­ருக்கும் நேர்ந்­துள்­ளது.

பக்­கத்து வீட்டில் இருக்கும் தொழில்­ பு­ரியும் பெண்­ணொ­ரு­வரின் கையும் உடைந்­துள்­ளது. தலையில் குண்டுச் சன்­னங்கள் பாய்ந்­துள்­ளன. அவரது தொழில் செய்த மகளும் உயி­ரி­ழந்­துள்ளார். அவர் எவ்­வாறு வாழ்க்­கையைக் கொண்டு நடத்­தப்­போ­கின்றார்-?

மற்­று­மொரு வீட்டில் கண­வனும் மனை­வியும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளனர். மனைவி கோமா­ நி­லைக்­குச் சென்­றுள்ளார். கணவன் படு­கா­ய­ம­டைந்­துள்ளார். குண்டுச் சன்­னங்­களை உடலிலிருந்து அகற்­ற­ மு­டி­யாது. பல துகள்கள் உள்­ளன. இவர்கள் ஒவ்­வொ­ரு­வருக்கும் அர­சி­யல்­வா­தி­களே பொறுப்புக் கூற வேண்டும். ஒரு­ வேளை உணவே கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

சுய­மாக தொழில் செய்து சந்­தோ­ஷ­மாக வாழந்து வந்­த­வர்கள் நாங்கள்.  இன்று மற்­ற­வர்­க­ளிடம் கையேந்தும் நிலை­யேற்­பட்­டுள்­ளது. சமைத்து உண்­ப­தற்­குக்­கூட வழி­யில்லை. மனமும் இடம் கொ­டுக்க மறுக்­கின்­றது.

எனது கணவர் படுக்­கை­யி­லேயே இருக்­கின்றார். அவரால் எழுந்து நடந்­து செல்­லக்­கூட முடி­ய­வில்லை.

மனி­தர்­க­ளி­டையே காணப்­படும் இரக்கம், ஒற்­றுமை இந்த அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மில்லை. அசம்­பா­விதம் இடம்­பெ­றப்­ போ­கின்­ற­து­ என அர­சாங்கம் அறிந்தும் பாது­காக்­க­வில்லை. சம்­ப­வத்தில் உயிர் பிழைத்­த­வர்­களும் வாழ­ வ­ழி­யின்றி இருக்­கின்றோம்.

தொழில் செய்து கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று நோயா­ளர் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். நாளை, நாளை மறு­தினம், அடுத்­த­ வாரம் என ஐந்து நாட்­க­ளென மர­ணத்­த­று­வாயில் இருக்­கின்­றனர்.

தற்­கொ­லைத் தாக்­குதல் இடம்­பெற்­ற­போது நான் ஆல­யத்­துக்கு வெளிப்­ப­கு­தி­யி­லேயே இருந்தேன். அம்மா உள்ளே அமர்ந்­தி­ருந்தார். அன்று ஆல­யத்தில் பக்­தர்கள் அதி­க­மாக இருந்­த­மையால் அம்­மா­வுக்கு மாத்­தி­ரமே இருக்கை கிடைத்­தது.

யுத்­த­த்தின் கொடூ­ரத்தை நாம் தொலைக்­காட்­சி­களில் தான் பார்த்­துள்ளோம். ஆனால் அன்று நாம் யுத்­தத்தை நேரில் பார்த்த போது சொல்ல வார்த்­தைகள் இல்லை. அன்­றைய தினம் ஆல­யத்தில் ஒலித்த ஐயோ..ஐயோ என்ற அவ­லக்­கு­ரல்­களும் அல­றல்­களும் என்­காதில் ஒலித்­துக்­கொண்டே இருக்­கின்­றன. சிலர் என்னைக் காப்­பாற்­றுங்கள் என கையை நீட்டி இரத்த வெள்ளத்தில் உயி­ருக்­காகப் போரா­டி­யதை விப­ரிக்க வார்த்­த­தைகள் இல்­லலை... ஒரு கணம் மூச்சை உள்­வாங்­கு­கின்றார்.

''இரத்­தத்தைப் பார்த்­தாலே எனக்கு பயம் பற்­றிக்­கொள்ளும். அங்­கி­ருந்­த­வர்கள் கூறு­கின்­றனர் ''உங்கள் அம்மா இறந்து கிடக்­கின்றார் தூக்­குங்கள் என்று, அம்மா மர­ணித்து சுவ­ருடன் சாய்து'' கிடக்­கின்றார். 

கதறி அழு­கின்றார் "அம்மா எங்­க­ளை­விட்டுப் பிரிந்து விட்­டீர்­களே....  இனி நாங்கள் எப்­படி அம்­மா­வின்றி வாழப்­போ­கின்றோம்....?" நாம் அவர்­களை ஆறு­தல்­ ப­டுத்­தினோம்.

மீண்டும் விம்­மி­ய­படி தளர்ந்த குரலில் பேசத் தொ­டங்­கினார்.

"நித்­தி­ரைக்குப் போகும் போதும் காய­ம­டைந்­த­வர்­களும் இறந்­த­வர்­க­ளுமே கண்­க­ளுக்குள் வரு­கின்­றனர்" என்றார்.

அவ­ருக்கு ஆறுதல் கூறி விட்டு அடுத்­தி­ருந்த வீட்­டுக்குச் சென்றோம். 

அநா­தை­யா­கி­யுள்ள 3 சிறு­வர்கள்

 

அங்கு தாயையும் தந்­தையைம் இழந்து ஓர் இருட்­டான அறையில் 3 சகோ­த­ரர்கள் அமர்ந்­தி­ருந்­தனர்.

வீட்டின் முகப்­பி­லேயே தாய், தந்­தை­யரின் கண்ணீர் அஞ்­சலி பதாகை தொங்க விடப்­பட்­டி­ருந்­தது.

வீட்­டிற்குள் நாம் நுழைந்தோம்...... அங்கு அவர்­க­ளுடன் கதைப்­ப­தற்கே மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை. ஏனெனில் அந்த வீட்டில் பெரியோர் யாரும் இல்லை. பெற்­றோர்­ இன்றி பிள்­ளைகள் அநா­தை­க­ளாக இருந்த நிலையை எம்மால் ஜீரணிக்க முடி­ய­வில்லை.

Negombo_Katuwapitiya_Attack8.jpg

3 பிள்­ளை­க­ளுடன் 5 பேர­டங்­கிய அழ­கிய குடும்பம். தந்­தையார் ஆயுள்­வேத வைத்­தியர் மற்றும் கட்­டான நகர சபை உறுப்­பினர். பிள்­ளை­களில் மூத்­தவர் பெண். அவர் சீனாவில் மருத்­து­வத்­து­றையில் கல்­வி­ ப­யில்­கின்றார். மற்றைய இரு ஆண் பிள்­ளை­களில் ஒருவர் கல்­விப் பொ­துத்­த­ரா­தர சாதா­ர­ண த­ரத்திலும் மற்­றை­யவர் தரம் 7இலும் கல்வி பயில்­கின்றனர்.

அன்று ஆல­யத்தில் தந்­தையும் தாயும் திருப்­ப­லியில் கலந்­து­கொள்ள, இரு­வரும் ஓர் இருக்­கை­யிலும் பிள்­ளைகள் ஆல­யத்தின் மறு பு­றத்­திலும் அமர்ந்­தி­ருந்­துள்­ளனர். தாக்­கு­தலில் சம்­பவ இடத்­தி­லேயே பெற்­றோர் மர­ணித்­துள்­ளனர். இதை­ய­டுத்து பிள்­ளைகள் அநா­தை­க­ளாக்­கப்­பட்­டனர். பாடசாலை செல்லும் 3 பிள்­ளை­களின் கல்­விச்­செ­ல­வையும் பிள்­ளை­களின் எதிர்­கால வாழ்க்­கைச்­ செ­ல­வையும் யார் ஏற்­கப்­போ­கின்­றார்­க­ள்? என அங்­கி­ருந்த அய­லவர் ஒருவர் கேட்­ட­ கேள்வி மனதை நெகிழ வைத்து விட்­டது. வீடு சோபையிழந்து வெறிச்­சோ­டிக் கா­ணப்­பட்­டது.

இவர்­க­ளு­டைய தந்­தையார் தான் உழைத்து குடும்­பத்தைக் காத்­து­ வந்தார். இந்த இளம்­பிஞ்­சு­க­ளுக்கு வாழ்க்­கை­யைப்­பற்றி என்­னதான் தெரி­யப்­போ­கின்­றது... ஐயோ...கட­வுளே....ஏன் இந்த நிலைமை....." என கண்ணீர் வடித்தார்.

இதே­போன்று பெற்­றோரை இழந்த மற்­று­மொரு உற­வு­களை சந்­தித்தோம்

ரொசிக்கா விமான  வயது 36 வது­டைய பெண் 58 வய­து­டைய ரொகான் என்ற தந்­தையும் 58 வய­து­டைய சாந்தி என்ற அன்­னை­யையும் கடந்த தாக்­கு­தலில் பலி­கொ­டுத்­தி­ருந்தார்.

 

செல்­லப்­பிள்­ளை­க­ளாக வளர்த்­து­விட்டார்

எம்­மோடு உரை­யாட ஆரம்­பித்த 36 வய­து­டைய ரொசிக்கா,

அம்­மாவும் அப்­பாவும் பலி­யா­கி­விட்­டார்கள். எனக்கு சகோ­த­ரனும் சகோ­தரி ஒரு­வரும் உள்­ளனர். அப்­பாவின் கால்­க­ளுக்கு முன்­பா­கவே தற்­கொ­லைக்­குண்­டு­தாரி குண்­டினை வெடிக்­கச்­செய்தார். அம்­மாவும் அப்­பாவும் இணைந்தே மர­ணித்­துக்­கி­டந்­தார்கள். 

Negombo_Katuwapitiya_Attack7.jpg

ஒரு­வ­ருக்கும் தீங்கும் நினைக்­காத இவர்­க­ளுக்கே இந்த நிலைமை... வழ­மை­யாக உயிர்த்த ஞாயி­றுக்கு முன்­தினம் இரவு திருப்­பலி நடை­பெறும். அன்­றைய தினம் சி கார­ணங்­களால் அன்­றைய தினம் திருப்­பலி இடம்­பெ­ற­வில்லை. ஒரு­வேளை திருப்­பலி இடம்­பெற்­றி­ருந்தால் பல உயிர்கள் பாது­காக்­கப்­பட்­டி­ருக்கும்.

நான் அம்­மா­விடம் சொல்­லி­கொண்டே இருந்தேன் இரவு புசைக்கு செல்வோம் என்று...இயற்கை அம்­மா­வையும் அப்­ப­வையும் எடுத்­துக்­கொண்­டது.

அப்பா தனியார் நிறு­வ­னத்தில் நீர்­வி­நி­யோக சபை­யுடன் இணைந்து தொழில் செய்து வந்தார். அவரின் வரு­மா­னத்­தி­லேயே நாம் வாழ்ந்­து­வந்தோம். நீங்கள் தொழில் செய்­ய­வேண்டாம் புதிய புதிய விட­யங்­களை மாத்­திரம் படி­யுங்கள் என்றே கூறிக்­கொண்­டி­ருப்பார். கண்ணீர் சிந்தி அழு­கின்றார்.....

தம்பி மாத்­திரம் தனது சொந்த தேவை­க­ளுக்­காக சிறிய வியா­பா­ர­மொன்றை செய்து வந்தார். அது அவ­ரது தேவைக்கு மாத்­தி­ரமே போது­மா­ன­தாக இருந்­தது. நான் பட்­டப்­ப­டிப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்தேன். அம்மா சுக­யீ­ன­முற்­றதால் நான் படிப்பை இடை­நி­றுத்­தினேன். மீண்டும் கல்­வியைத் தொட­ரு­மாறு அப்பா வற்­பு­றுத்தி வந்தார். இப்போ அம்­மாவும் இல்லை. அப்­பாவும் இல்லை. கல்­வி­யு­மில்லை. உண்­ப­தற்கு உண­வு­மில்லை.

Negombo_Katuwapitiya_Attack6.jpg

எம­து­பெற்­றோர்கள் சுக­யீ­ன­ம­டைந்து மர­ணித்­தி­ருந்­தால்­கூட இந்­நி­லைக்கு பாதிக்­கப்­பட்­டி­ருக்க மாட்டோம். திடீ­ரென அம்மா, அப்பா பிரிந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள வில்லை. அர­சாங்கம் சரி­யான நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் எனது அம்­மாவும் அப்­பாவும் உயி­ருடன் இருந்­தி­ருப்­பார்கள். இந்த அர­சி­யல்­வா­திகள் பாது­காப்­புடன் செல்­கின்­றனர். அப்­பாவி மக்­களை இவர்கள் ஒரு எள்­ள­ளவும் கருத்­தில்­கொள்­ள­வில்லை.

நாங்கள் தொழில்­செய்­வது அப்­பா­வுக்கு பிடிக்­காது அவ­ரது ஊதி­யத்­தி­லேயே நாங்கள் சாப்­பி­ட­வேண்­டு­மென ஆசைப்­பட்டார். எதிர்­கா­லத்தில் நாம் என்ன செய்­யப்­ப­போ­கின்றோம். இப்­போது நான் உங்­க­ளுடன் நன்­றாக கதைத்­தாலும் இரவில் பைத்­தியம் பிடித்­த­து­போ­லவே இருக்­கின்­றது. 

டிசம்பர் மாத­ம­ளவில் அடித்த பலத்த காற்­றினால் வீடும் பலத்த சேத­ம­டைந்­துள்­ளது. வீட்டில் தனி­யாக அச்­சத்­துடன் வாழ்­கின்றோம். பாது­காப்­புக்கு யாஐம் இல்லை. பெற்­றோர்­களின் பாது­காப்புப் போன்று எமக்கு யார் பாது­காப்பு வழங்­கு­வார்கள். தீடீ­ரென நாம் எவ்­வாறு தொழில் தேட முடியும். அர­சாங்கம் நஸ்­ட­ஈடு வழங்­கி­னாலும் அதைக்­கொண்டு எவ்­வ­ளவு காலம் வாழ்க்­கையை கொண்டு செல்­வது. இந்த அர­சாங்கம்  கொடுக்கும் பணத்தால் அம்மா, அப்­பவை திருப்­பித்­தர முடி­யாது. எமது வாழ்­வா­தா­ரத்­திற்கும் பொரு­ளா­தா­ரத்­திற்கும் இந்த துய­ர­மான சம்­ப­வத்­திற்கு?ம் அர­சாங்கம் பொறுப்­பு­கூ­றியே ஆக வேண்டும். இது வரை எந்­த­வொரு அர­சியல் வாதி­களோ வந்து பார்க்­க­வு­மில்லை துக்கம் விசா­ரிக்­க­வு­மில்லை.

அப்­பாவின் ஒரு­மாத சம்­பளம் நேற்­றுத்தான் கிடைத்த்து....கதறி அழு­கின்றார். மர­ணச்­ச­டங்­கு­களைச் செய்­வ­தற்­குக்­கூட எம்­மிடம் பண­மி­ருக்­க­வில்லை.

இவர்­களின் ஒவ்­வொரு வார்த்­தை­களும் சோகக் கதைகள் எமது கண்­களில் கண்­ணீரை வர­வ­ழைத்து விட்­டன.

மேலும் அடுத்­த­டுத்த வீடுகளுக்கு செல்ல எமது மனம் இடமளிக்கவில்லை. ஏனைய வீடுகளிலும் இந்த சோகமே காணப்படும் என எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

இதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் அலுவலகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். ஒருவர் ஒருவருடன் யாரும் கதைக்கவில்லை. எம்மையும் சோகம் ஆழ்கொண்டது. 

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல உயிர்கள் மர தருவாயில் இருக்கின்றன. பல ஊனமடைந்துள்ளனர். ஒரு குடும்பத்தில் பலரை இழந்து உறவுகள் அந்த அதிர்ச்சியில் இருந்து எவ்வாறு மீளப்போகின்றார்கள் என தெரியவில்லை.

அதேபோன்று உயிர் பிழைத்தவர்களும் தாக்குதலின் வடுக்களை உடலில் சுமந்துகொண்டிருகின்றனர். அவர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குடும்பத்தை வழிநடத்தி வந்தவர்களும் உயிரை விட்டுள்ளனர். இதனால் பலர் ஒருவேளை உணவுக்கு கூட திக்குமுக்காடி நிற்கின்றனர்.

இந்த நிலைமைக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் கூற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட போகின்றது என அரசாங்கம் அறிந்தும் அசட்டையாக இருந்துவிட்டது. இதனால் எம் மக்களுக்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேச மக்கள் இந்நிலைமையே ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நஸ்ட ஈடுகளையும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும். மேலும் தொழில்துறை இல்லாதவர்களுக்கு தொழில்களை வழங்க  அரசாங்கம் முன்வர வேண்டும்.

மருத்துவ செலவீனங்களுக்கு தேவையான பண உதவிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அநாதையாக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் இனி ஒரு அசம்பாவிதம் இருப்பதற்கு அரசாங்கம் உறுதிப்புன வேண்டும் என்பதோடு இந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் கேவலமான அரசியரை செய்யக் கூடாது.

படப்பிடிப்பு ; ஜே.சுஜீவகுமார்

 

http://www.virakesari.lk/article/55281

  • கருத்துக்கள உறவுகள்

 

எந்த ஒரு இயற்கை அழிவினாலோ,போரினாலோ பாதிக்கப்படாத சனம் இப்படி சாக வேண்டும் என்பது விதி...ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.