Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-uni-students-1.jpg

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை  மனு குறித்து இன்று (புதன்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களை விடுவிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் கைது செய்திருந்தனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோது இருவரையும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.

மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என்ற விதி தேவையற்றது என பொலிஸார் மறுத்துரைத்தனர்.

இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்திலெடுத்த நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா என்ற தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவர்களின்/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை மாணவர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

‘இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது’ என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.
யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் , காவல்துறை அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர்; இணைந்து நடாத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவ படம் , மாவீரர்களின் உருவப்படம் என்பன மீட்கப்பட்டன.

அது தொடர்பில் , மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு , பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோப்பாய் காவல்துறையினர் முற்படுத்தினார்கள்.

அதன் போது மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தனர். காவல்துறையினர் அதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான் மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாணவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர். அதன் போது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபப்ட்ட போது மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பினை விண்ணப்பம் செய்திருந்தனர்.

அது தொடர்பிலான கட்டளை இன்றைய தினம் புதன்கிழமை வழங்கப்படும் என நீதிவான் திகதியிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கட்டளைக்காக எடுத்துக்கொள்ள பட்ட போது ‘இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது’ என கூறிய நீதிவான் பிணை விண்ணப்பத்தினை நிராகரித்தார்.

http://globaltamilnews.net/2019/121100/

10 hours ago, பிழம்பு said:

இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது’ என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் ஒருபகுதியான சட்ட மா அதிபர் திணைக்களம் தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் கட்டுப்பாடில் உள்ளது. இந்த அடிப்படியில் இயங்கும் நீதித்துறையும் தமிழர்களுக்கு எந்தவித நீதி-நியாயத்தைப் பெற்றுத் தராது என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

மாணவர்களின் கைதும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி நீக்கமும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் உலகார்ந்த நியதிகள் அடிப்படையில் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.