Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு!

army-720x450.jpg

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்தோடு நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை சேர்ந்தோருக்கு அஞ்சலி செத்துவதற்காக, இரவு 7 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதேவேளை தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு, இராணுவ சிரேஷ்ட நிலை அதிகாரிகள் 38 பேருக்கு நேற்று ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பாதுகாப்பு-தரப்பினரை-கௌர/

 

``இறுதிக்கட்டப் போரில் கைது செய்யப்பட்ட ஒரு போராளி. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்புகிறான். அவனுடைய பார்வையில், `போராட்டம் மவுனிக்கப்பட்ட 2009-க்குப் பிறகு ஈழத்தினுடைய நிலை என்ன?!’ என்ற கேள்வியுடன் கதையில் இரண்டு  விதமான கருத்துகளை முன்வைக்கிறேன்.

ஒன்று, `எந்நேரத்திலும் சுடப்படுவாய். செத்துப்போகத் தயாராகவே இரு’ என்று மக்களைப் பய உணர்வோடே வைத்திருப்பது. ஆமாம், ஒட்டுமொத்த தமிழர்களின் நிலப்பரப்புமே திறந்தவெளி சிறைச்சாலையாகக் காட்சி தருகிறது.

இரண்டு கிலோ மீட்டருக்கு ஒன்றாக இராணுவ முகாம்கள் இருக்கின்றன. வீதியில் 50 வாகனங்கள் சென்றால், அவற்றில் ஐந்து, ராணுவ வாகனங்கள். புலிகள் இல்லை, பிரபாகரனைக் கொன்றுவிட்டீர்கள். பிறகு எதற்கு உங்களின் கைகளில் ஆயுதம்?! ‘நீ எனக்கு அடிமை’ என்பதை உணர்த்தத்தான் இந்த ஆயுத அச்சுறுத்தல்.

"2005-ல் வன்னியில் போய் இறங்கும்போது, `தமிழீழம் உங்களை வரவேற்கிறது’ என்ற சொல், கூடவே துவிச்சக்கரவண்டி, மிதிவண்டி, வெதுப்பகம், தறிப்பிடம், வைப்பகம் என்று தூய தமிழ்ப் பெயர்கள். அழகு நிறைந்த அந்தப் பகுதிகளில் அப்போது ஒரு பிச்சைக்காரரைக்கூடக் காணமுடியாது. எங்களுக்கென ஓர் அரசாங்கம் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டம். தமிழர்கள் எவ்விதத் தங்குதடையும் இன்றி வேறுமொழிக் கலப்பின்றி அழகாகப் பேசிக்கொண்டனர். இன்று தமிழ் இரண்டாம் நிலைக்குப்போய், எங்கும் சிங்களம். கிளிநொச்சி பிரதேசங்களில் சில கடைகளில் சிங்களப் பெயர்கள் மட்டுமே. எங்கு பார்த்தாலும் ராணுவம். விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ராணுவமயமாக்கம். சுதந்திரமாக இருக்கிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. யாரோ ஒருவர் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் வரும். "

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தலைமையில் படைவீரர்களுக்கான 10 ஆவது தேசிய நிகழ்வு!

(நா.தினுஷா) 

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த படைவீர்களை கௌரவிக்கும் படைவீரர்களுக்கான 10 ஆவது தேசிய நிகழ்வு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இன்று இடம்பெற்றது. 

DSC_0263.jpg

பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களுக்கான நினைவுத் தூபியில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ படைவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஜனாதிபதி வருகையுடன் மாலை  4.30 மணியளவில் ஆரம்பமாகியது. 

army4.jpg

ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சன்மிக லியனகேவின் வரவேற்புரையை அடுத்து சர்வமத வழிப்பாடுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உரையும் இடம்பெற்றது. 

அதன் பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பேராசிரியர் கருணாரத்ன பண்டாரவின் வடிவமைப்பு மற்றும் பயிற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைவாத்திய நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தத்தில் உயிர் நீத்த படைவீரர்களின் உறவினர்ககளும்  இந்த தேசிய படைவீரர் கௌரவிப்பு  தின நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்ததோடு, யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்திருப்பினும் தமது இறந்த வீரர்களை நினைவுப்படுத்தும் வகையில் தமது கவலையை வெளியிட்டனர்.  

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்  விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க போன்றோரும் பங்குப்பற்றியிருந்தனர். 

army1.jpg

army3.jpg

army2.jpg

மேலும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி , கடற்ப்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சில்வா , இராணுவ தளபதி லுதினல்  ஜனரால் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரால் சாந்த கோட்டே கொட , ஜனாதிபதி செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்ன, மேல் முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட மற்றும் நீதிபதி தப்புல த லிவேரா உள்ளிட்டொரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.

army6.jpg

army5.jpg

 

http://www.virakesari.lk/article/56294

 

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0263.jpg

தமிழனை அழித்த வெற்றிக் கொண்டாட்டத்தில் எல்லாக் கட்சி சார்ந்தும்.. சிங்களவன் எல்லாம் ஒரே மேடையில் நிற்கிறான்.

ஆனால்.. அழிக்கப்பட்ட தமிழர்கள்.. சார்பில் அஞ்சலி செய்ய எந்தக் கட்சி சார்ந்து எவனும் (ஒரு சில தனித்தனி செயற்பாடுகள் தவிர) இல்லை. மக்களே தான் மக்களின் பக்கம். 

4 hours ago, nedukkalapoovan said:

DSC_0263.jpg

தமிழனை அழித்த வெற்றிக் கொண்டாட்டத்தில் எல்லாக் கட்சி சார்ந்தும்.. சிங்களவன் எல்லாம் ஒரே மேடையில் நிற்கிறான்.

சிங்கள-பௌத்த படுகொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், கப்பக்காரார்கள், ..... என வரிசைப்படுத்தக் கூடிய மிக மோசமான பயங்கரவாதிகளை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் ஒன்று கூடி கவுரவிக்கிறது!  

இது உலகில் நீதி, நியாயம், தர்மம் உயிர்ப்பு நிலையில் இல்லை என்பதை பறைசாற்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.