Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடியில் முகாம் அமைக்க இராணுவம் திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kattankudy-slider-1.jpg

காத்தான்குடியில் முகாம் அமைக்க இராணுவம் திட்டம்!

தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபட்டு வந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைப்போம் என இராணுவத் தளபதி லெப்.மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு காத்தான்குடியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதெனக் கூறப்படும் முகாமில் மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “காத்தான்குடியில் பல ஏக்கர் காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன். இங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது. இது இராணுவத்தினரினதோ அல்லது விடுதலைப் புலிகளுடையதைப் போன்றதொரு பயிற்சி முகாம்கள் அல்ல.

ஊடகங்களில் அவற்றின் ஒளிப்படங்களைப் பார்த்தேன். அது ஒரு சிறிய காணி. அங்கு யுத்தப் பயிற்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்களிலேயே இடம்பெற்றுள்ளன. அப்பிரதேசங்களில் தற்போது இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை.

கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர். எனினும் சில அடிப்படைவாதிகள் அவர்கள் கண்களைக்கட்டிவிட்டு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலை மீண்டும் உருவாகாதிருக்க அங்கும் இராணுவ முகாம்களை அமைப்போம். அதற்காக தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளில் முகாம்களை அமைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/காத்தான்குடியில்-முகாம்/

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முகாம் மட்டும் அமைத்தால் போதாது. சொறீலங்கா ஒரு பெளத்த சிங்கள நாடு என்பதை நிரூபிக்க.. 78 பள்ளிவாசல்களில் குறைந்தது 8 யாவது இடிச்சுட்டு விகாரை கட்டனும். அப்ப தான் அரபுநாடுகளுக்கு குறிப்பாக சவுதிக்கு காத்தான்குடி தனது குற்றரசு இல்லை.. ஹிஸ்புல்லா தன் குற்றரசின் இளவரசில்லை என்ற செய்தி போய்ச் சேரும்..! 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

இராணுவ முகாம் மட்டும் அமைத்தால் போதாது. சொறீலங்கா ஒரு பெளத்த சிங்கள நாடு என்பதை நிரூபிக்க.. 78 பள்ளிவாசல்களில் குறைந்தது 8 யாவது இடிச்சுட்டு விகாரை கட்டனும். அப்ப தான் அரபுநாடுகளுக்கு குறிப்பாக சவுதிக்கு காத்தான்குடி தனது குற்றரசு இல்லை.. ஹிஸ்புல்லா தன் குற்றரசின் இளவரசில்லை என்ற செய்தி போய்ச் சேரும்..! 

ஏன் இந்தக் கஞ்சத்தனம்.... 78 பள்ளிவாசல்களில் குறைந்தது 70 தையாவது இடிச்சுட்டு விகாரை கட்டனும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

ஏன் இந்தக் கஞ்சத்தனம்.... 78 பள்ளிவாசல்களில் குறைந்தது 70 தையாவது இடிச்சுட்டு விகாரை கட்டனும்.

8 ஐயே உடைப்பாங்களோ தெரியல்ல.. அவ்வளவு பயபீதில இருக்காங்களாம்... சிங்களவர்கள்.. என்பது களத்தகவல். 😂

- ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள செய்தி என்பதால் நீக்கியுள்ளேன் -

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.