Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவுடன் உறவுகளை பலப்படுத்த தயார்- இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ‘டுவிட்’

Featured Replies

ஸ்ரீலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மங்களசமரவீர அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு அனுப்பிய டுவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்கள் உறவுகளை பலப்படுத்த எனக்கு ஆதரவைத் தாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார செயலராக பதவிவகித்து ஓய்வுபெற்று 16 மாதங்கள் கடந்த நிலையில் ஜெய்சங்கர் பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனா ,அமெரிக்காவுடனான உறவுகள் அதேபோன்று பாகிஸ்தானுடனான உறவுகளில் மாற்றம் தொடர்பில் ஜெய்சங்கர் மீதான பாரிய எதிர்பார்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/121224

சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில் இன்று முற்பகல் நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போ தே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிராந்தியத்தின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்காக, இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சிறிலங்கா அதிபருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இந்தியப் பிரதமர், சிறிலங்கா அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகளை, மேலும் வளர்ப்பதில் தமது அரசாங்கம் உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பன மனித குலத்துக்கு தொடர்ந்தும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, அமைதிக்காக இரண்டு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பை பேணவும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் சிறிலங்காவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

modi-ms-1.jpg

modi-ms-2.jpg

http://www.puthinappalakai.net/2019/05/31/news/38268

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடித்ததும் இதனால்த்தானோ?

அயலகத்திற்கு முதலிடம் கொள்கையைப் பிரதிபலிக்கும் மோடியின் மாலைதீவு, இலங்கை விஜயங்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் மேற்கொள்ளவிருக்கும் விஜயங்கள் 'அயலகத்திற்கு முதலிடம்" என்ற கொள்கைக்கும், 'பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும்" என்ற கோட்பாட்டிற்கும் இந்தியா வழங்கும் முன்னுரிமையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் மோடி விஜயம் செய்யவிருக்கிறார்.

http://www.virakesari.lk/article/57490

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பலப்படுத்திவிட்டு போய்விட்டார், நீங்கள் இனி நீங்கள் இறுக்கிபிடிச்சுக்கொள்ளுங்கோ...

On 6/2/2019 at 9:09 PM, போல் said:

ஸ்ரீலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உந்த பதவிக்கு வாராக்கள் எல்லாரும் வந்த உடன உப்பிடி தான் வீராப்பு பேசுறாவை!
ஆனா இன்னும் பலப்படுத்தி முடியலை போல.
எப்படியும் மாட்டுபொங்கலுக்கு கூப்பிடுவீனம். தவறாமல் வந்து அள்ளிக்கொண்டு போங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.