Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஏற்றுமதியாகும் இந்தியாவின் நீர்வளம்!' மலைக்கவைக்கும் மறைநீர்ப் பொருளாதாரம் #WhereIsMyWater

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி, உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைக்கலாம். தற்போதைய நிலையில் நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது.

`ஏற்றுமதியாகும் இந்தியாவின் நீர்வளம்!' மலைக்கவைக்கும் மறைநீர்ப் பொருளாதாரம் #WhereIsMyWater

``கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,82,700 லிட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,82,700 லிட்டர் நீருக்குச் சமம்" என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம். இதைத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன், மறை நீர்ப் பொருளாதாரம் வாயிலாக உலகுக்கு எடுத்துச் சொன்னார். ``கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்க பயன்பட்ட நீர் அதில் இருப்பது இல்லை. அதேசமயம் அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது அதனுள் மறைந்திருக்கிறது. அதுதான் மறை நீர் (Virtual Water)" என்கிறார் அவர்.

தமிழகமே தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் எல்லோருமே மறைநீர்ப் பொருளாதாரத்தின் மீது கவனத்தைச் செலுத்தியே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீடு மிகவும் முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பொருள்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் நீரின் அளவை, அதற்காகும் செலவை இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மறை நீர்

 

 

சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன. அந்த வகையில், வளர்ந்த நாடுகள் அதிக தண்ணீர் தேவை உள்ள பொருள்களை, தங்களுடைய நாடுகளில் உற்பத்தி செய்வதில்லை. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர் என்பதால், சீனாவில் பன்றி உற்பத்திக்குக் கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக அதை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சு பழத்திற்கான நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர்ப் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குக் கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. ஏராளமான பொருள்கள் ஏற்றுமதிக்காகவே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்குச் செலவே இல்லை. ஒரு டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை 4,00,000 லிட்டர்கள் என்று சொன்னால் அதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். அதனால்தான், 'மேக் இன் இந்தியா' என்றில்லாமல், `மேக் ஃபார் இந்தியா' என்றிருக்க வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதே போல, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்களில் 72% வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஓர் எருமை அல்லது மாட்டின் ஆயுட்கால மறை நீர் தேவை கணக்கிடும்போது 18,90,000 லிட்டராக அது இருக்கிறது. சுமார் 250 கிலோ கொண்ட அக்கால்நடையிலிருந்து கிடைக்கக் கூடிய தோல் ஆறு கிலோ மட்டுமே. ஒரு கிலோ தோலைப் பதனிட்டு அதைச் செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. 

உள்ளாடை உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு உள்ளாடைகளைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால் ஓர் உள்ளாடை தயாரிப்புக்கான மறை நீர் தேவை 2,495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவைப்படுகிறது. இப்படி அரிசி, பால், முட்டை, காபி, டீ என அனைத்துப் பொருள்களின் உற்பத்திக்கும் மறை நீர் தேவையின் அளவு அதிகமாக இருக்கிறது.

மறைநீர்

சரி உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு மறை நீர் வர்த்தகத்தைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைக்கலாம். தற்போதைய நிலையில் நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருக்கிறது. இது 1962-ம் ஆண்டில் 4,083 கியூபிக் மீட்டலிருந்து 2002-ம் ஆண்டில் - 1753 கியூபிக் மீட்டராகக் குறைந்து, தற்போது 2014-ம் ஆண்டில் 1,458 கியூபிக் மீட்டர் என ஆகிவிட்டது. இதே வேகத்தில் செல்லுமேயானால் 2025-ம் ஆண்டில் 1200 கியூபிக் மீட்டராகக் குறைந்து 2050-ம் ஆண்டில் 1000 கியூபிக் மீட்டரை விடக் குறைய வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள் . 

எல்லா நாடுகளுக்கும் வராத பிரச்னை, நமக்கும் மட்டும் எப்படி வந்தது என்றால், அதற்கு மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலை முன்னேற்றத்தினால் ஏற்படும் தண்ணீர்த் தேவை, மக்களின் சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டினால் உருவாகும் நீர்மாசு, உயர் தர நவீன சொகுசு வாழ்க்கையின் மேல் உள்ள மோகம் எனப்  பல காரணங்கள் உண்டு. மக்கள் தொகை பெருகும் போது அதற்கான நீர் தேவைகளும் அதிகரிக்கும், பல நாடுகளில் மக்கள் தொகை இந்தியாவைப் போல் இல்லாத போதிலும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் மறை நீர் அளவுக்கு, அவர்கள் இறக்குமதி செய்து விடுகிறார்கள். ஆனால், இந்தியா தொடர்ந்து மறை நீரை ஏற்றுமதி செய்துகொண்டே இருக்கிறது. 

 மறைநீர் வர்த்தகத்தைப் பொருத்தமட்டும் நாம் நமக்கு இணையாக நினைக்கக்கூடிய மக்கள் தொகை கொண்ட ஒரே நாடு சீனா மட்டுமே. அதனுடன் ஒப்பிடும்போது சீனாவின் மறைநீர் ஏற்றுமதி, இறக்குமதியை விட மிகக் குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவின் மறைநீர் ஏற்றுமதி, இறக்குமதியை விட மிக மிக அதிகமாக இருக்கிறது. அதே போல, தற்போதைய நிலையில் இந்தியாவின் நீர்த் தேவை சீனாவை விட அதிகரித்துக் காணப்படுகிறது. ஆக, இப்போதிருக்கும் நீர் நெருக்கடிக்கு, மறை நீர் வர்த்தகம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதுவரை நடந்த மறை நீர் ஏற்றுமதி நன்றாகவே நடந்தது, இனி நடக்கப்போவதை குறைக்காமல் இருந்தால், மறை நீர் ஏற்றுமதி இன்னும் அதிகமாகவே நடக்கும். ஆனால், இன்று நம்மிடம் இருக்கும் நீர், நாளை மற்றவர்களிடம் மட்டுமே இருக்கும்!.

https://www.vikatan.com/news/tamilnadu/159071-virtual-water-tracking-the-unseen-water-in-goods-and-resources.html?fbclid=IwAR0dmPyQ86svJX1mnXkRyprPiOGaDn06Hm0DGiRANV9TYKdR70b0DQMEdSg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி பகிர்விற்கு.
அதிகளவில் நீரை உறிஞ்சும் ஒன்று பாதாம் பருப்பு (?) Almonds கலிபோர்னியாவில் வரட்சி வந்த பொழுது பலரும் இந்த உற்பத்தியை கைவிட்டுவிடடார்கள்

California supplies about 80% of the United States almonds, and dedicates 10%, or 80 million gallons, of its state's water to grow the nut. To grow one almond requires 1.1 gallons of water, and to grow a pound takes 1,900 gal/ lb

Image result for crops that take a lot of water

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய.... நல்லதொரு பதிவு.
இணைப்பிற்கு நன்றி... பெருமாள் &  அம்பனை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.