Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை பொருத்தமற்றது - மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை  பொருத்தமற்றது - மஹிந்த

 

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள்  கூட்டாக பதவி விலக  பல்வேறு  ஏதுவான காரணிகள் காணப்பட்டாலும் நெருக்கடி நிலையில் பதவி விலகியமை  பொருத்தமற்ற  செயற்பாடாகும். இச்செயற்பாடு  முஸ்லிம்  அல்லாத சமூகத்தின்  மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்களை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mhainda_rajabksah.jpg

 ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து  நாட்டில் ஏற்பட்ட அரசியல்  நெருக்கடியினால்  பல காரணங்களை முன்னிலைப்படுத்தி தமது அமைச்சு பதவிகளை துறந்த  அமைச்சர்களான  ரவூப் ஹக்கீம், ரிஷhத் பதியுதீன், மற்றும் எ. எச்.எம். பவ்சீக் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி தலைவர்   மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்கள்.

பல்வேறு  கட்சியினை  பிரதிநிதித்துவப்படுததும்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இந்த தீர்மானத்தை  எடுப்பதற்கு   முஸ்லிம்  மத தலைவர்களின் அறிவுறுத்தல்களும்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலிய  ரத்ன  தேரர் முன்னெடுத்த  உண்ணாவிரத போராட்டத்தினால் எவ்வித  அசம்பாவதங்களும் ஏற்பட்டு விட கூடாது  என்பவை  பிரதான காரணியாக அமைந்தன. என  பதவி   விலகிய  முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

 முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் சமூகமும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு துணைபோகவில்லை.இதன் காரணமாகவே  30 வருடகால பயங்கரவாத யுத்தத்தில்  பெருமளவு  முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் .

முதலில் முஸ்லிம் அரசியல் தலைவர்களை முஸ்லிம் சமூகம் முழுமையாக  நம்ப வேண்டும் அதன் பின்னர்  ஏனைய  இனத்தவர்கள்  மத பேதமின்றி  முஸ்லிம் அரசியல் தலைவர்கள்  மீது   சுயமாகவே   நம்பிக்கை கொள்வார்கள். என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான  கெஹேலிய ரம்புக்வெல,  பந்துல குணவர்தன  மற்றும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர்  ஜி. எல். பீறிஸ் ஆகியோர்  கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/57805

 

இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் நிலமை பரிதாபத்துக்குரியது......!!!!!  இனிமேல் இவர்களுடன் கூட்டு  வைத்தால் சிங்கள மக்கள் இவர்களுடன்  வாக்களிக்க மாட்டார்கள்; அப்ப இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்...!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

விகிதார தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரியான தேர்தல் முறைக்கு மீண்டும் செல்ல வாய்ப்புண்டு.....இதனால் சிறுபான்மைகட்சிகளின் பங்களிப்பின்றி சிங்களவர்களுக்கு ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Dash said:

இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் நிலமை பரிதாபத்துக்குரியது......!!!!!  இனிமேல் இவர்களுடன் கூட்டு  வைத்தால் சிங்கள மக்கள் இவர்களுடன்  வாக்களிக்க மாட்டார்கள்; அப்ப இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்...!!!!!!!!!

இதெல்லாம் ஒரு நாடகம். 
அடுத்த வருடம் வரைக்கும் அல்லது இந்த வருட இறுதி வரைக்கும் காத்திருங்கள். அவர்களின் அரசியல் சுமூகமாக முடியும்.
வழமை போல எங்கடை சம்சும் சேடம் இழுத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.