Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது

ஏப்ரல் 26, 2007

நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி.

நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி, ஆயுதங்கள் திரட்டிக் கொடுத்ததாக கந்தசாமி மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கந்தசாமி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

அமெரிக்கா உள்பட 12 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கிளைகள் உள்ளன. இதன் மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன

கடந்த 2004ம் ஆண்டு கந்தசாமி, நியூயார்க் நகரில் நிதி சேகரிப்பு கூட்டங்களை நடத்தினார். இதன் மூலம் வசூலான பணத்தை அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபிகளையும், புலிகள் இயக்கத் தலைவர்களையும் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்தார் கந்தசாமி.

அமெரிக்காவைப் பல காலமாக தளமாக பயன்படுத்த்திக் கொண்டு தனது தீவிரவாத செயல்களுக்கு பணம் திரட்டி வந்துள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பு. இதை தொடர அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கந்தசாமியைக் கைது செய்ய நீதிபதி கியோ மட்சுமோடா உத்தரவிட்டார். இதையடுத்து கந்தசாமி கைது செய்யப்பட்டார். வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கந்தசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/26/ltte.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி கைது

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007, 14:49 ஈழம்] [சி.கனகரத்தினம்]

நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமெரிக்க பிரதிநிதியான கந்தசாமி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் கருணாகரன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையிக் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்க்கும் அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான சந்திப்புக்கு கருணாகரன் காரணம் என்றும் கருணாவும் அவரது உதவியாளர்களும் இராணுவத் தொழில்நுட்பம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு உதவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

மனித இனத்துக்கு துரோகம் இழைக்கும் தன் நாட்டு பிரஜையான கோத்தபாயவை கைது செய்யுமா அமெரிக்கா

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனத்துக்கு துரோகம் இழைக்கும் தன் நாட்டு பிரஜையான கோத்தபாயவை கைது செய்யுமா அமெரிக்கா

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவிடம் போய் நீங்கள் கேள்வி கேட்பது தகுமா அப்பு..!

அவர்கள் நினைக்கிறதுதான் சட்டம்.. அவர்கள் நினைப்பை மாத்த வைக்கிற மாதிரி செயற்படுவதுதான் இப்ப தேவை. இரந்து கெஞ்சி.. இவர்களிடம் எதையும் சாதிக்க முடியாது. அமெரிக்கத் துப்பாக்கிக் குண்டுகள் மனிதனைக் கொல்லுதல் மனிதாபிமானம்.. மாற்றார் குண்டுகள் அமெரிக்க மனிதர்களை மேற்குலக மனிதர்களை அவர்களின் உலக ஆதரவாளிகளைக் கொன்றால் அது பயங்கரவாதம்..! <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

Officials: American Tamil Tigers Leader Arrested In Queens

NEW YORK -- The director of the American branch of the Tamil Tigers, a Sri Lanka-based terrorist group, was arrested late Tuesday in Jamaica, Queens, on federal charges of providing material support to a foreign terrorist organization, prosecutors said.

Karunakaran Kandasamy, 50, was arrested by the FBI's Joint Terrorist Task Force.

Brooklyn U.S. Attorney Roslynn R. Mauskopf said that as head of the American branch of the Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers), Kandasamy allegedly oversees and directs the group's activities in the United States, including fundraising.

NEW YORK -- The director of the American branch of the Tamil Tigers, a Sri Lanka-based terrorist group, was arrested late Tuesday in Jamaica, Queens, on federal charges of providing material support to a foreign terrorist organization, prosecutors said.

Karunakaran Kandasamy, 50, was arrested by the FBI's Joint Terrorist Task Force.

Brooklyn U.S. Attorney Roslynn R. Mauskopf said that as head of the American branch of the Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers), Kandasamy allegedly oversees and directs the group's activities in the United States, including fundraising.

http://www.wnbc.com/news/13097978/detail.html

இது தொடர்பாக தழிழ் நெற் வெளியிட்டுள்ள செய்தி:-

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21987

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக தழிழ் நெற் வெளியிட்டுள்ள செய்தி:-

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21987

******************************

அமெரிக்காவின் இந்த கைது பற்றி நாம் விமர்சிப்பதைவிட திரு.கருணாகரன் பற்றி தமிழீழ நலன் விரும்பிகள் அறிந்துகொள்வது தான் சிறந்தது. கருணாகரன் அவர்கள் ஒரு சிறந்த தமிழ்த்தேசியவாதி இவருக்கும் இன்று அமெரிக்காவினால் முன்வைத்திருக்கும் இந்த விடுதலைப்புலிகள் ராணுவ சம்பந்தப்பட்ட விடயதிற்கும் எந்த விதமான தொடர்புகளும் கிடையாது. ஆனால் தமிழீழ சம்பந்தப்பட்ட விடயங்களில் தீவிரமாக அதாவது அமெரிக்கச் சட்ட சீர் திருத்தங்களிற்கு உட்பட்டு பல வருடங்களாக செயல்பட்டு வரும் ஒரு தூய்மையான செயல்வீரன். அமெரிக்காவைத் தவிர கனடியத் தமிழ்ச் சமூகத்திலும் இவர் ஒரு பிரபலமானவர். இதைவிட தமிழ் நாட்டிலிருந்து வட அமெரிக்காவிற்கு வரும் அரசியல் பிரமுகர்கள் உட்பட தமிழ்த்தேசியவாதிகள் எவருமே இவரைச் சந்திக்கத் தவறுவதில்லை. இதைவிட அமெரிக்கா மற்றும் கனடிய நாடுகளில் தமிழ்தேசியத்திற்கு எதிராக ஏற்படும் சட்ட நெருக்கடிகளின்போதும் முன்னின்று பாடுபடும் நபர்களில் இவரும் ஒரு முக்கியமானவராகும். இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தான் கைது செய்யப்படுவேன் என்று தெரிந்திருந்தும் தனது செயல்பாட்டின் வேகத்திலிருந்து தளரவேயில்லை என்பது தான் தமிழ்த்தேசியத்திற்காக வேலை செய்யும் ஒவ்வொருவரும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அமெரிக்க அரசாங்கத்திற்கும் தெரியும் இவருக்கும் இவர்களினால் சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்திற்கும் எந்தவிதமான தொடர்புமில்லையென்பது. அப்படியென்றால் இந்தக் கைதின் நோக்கம் தான் என்ன? அதாவது இவர்கள் சாதிக்க விரும்புவது என்னவென்றால் இவரின் கைதின்மூலம் தமிழ்த் தேசியத்திற்காக செயல்படுபவர்கள் மனதில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி ஒரு பின்னடைவை கொடுப்பது தான் இவர்களின் திட்டம், ஆகவே சகோதரர்களே இது ஒரு கண்துடைப்புக் கைது என்பதை உங்கள் மனதில் நிறுத்தி மனம் தளராமல் தொடருங்கள் உங்கள் பணியை. நாம் எங்கள் மொழி, எங்கள் மக்கள், எங்கள் மண்ணுக்காகத் தான் பாடுபடுகிறோமே ஒழிய யாரின் மண்ணையும் சூறையாடுவதிற்காகவோ அல்லது யாரின் எண்ணையை சுவீகரித்துக் கொள்வதிற்காகவும் செயல்படவில்லை அப்படியென்றால் ஏன் பயப்பிடவேண்டும்? ஒன்று மட்டும் உங்களால் முடியும் அதாவது நாடு கடத்துதல், ஜயா அதொன்றும் எங்களுக்கு புதியதல்ல சொந்த நாட்டையே விட்டோடி வந்தவங்கள் நாங்கள் எதையும் எதிர்பார்த்த வண்ணம் தான் இருக்கின்றோம். என்றோ ஒரு நாளில்லை விரைவில் தெரியும் நாங்கள் எப்படிப்பட்ட இனம் என்பது. ஆகவே இந்த கைதுகள் பூச்சாண்டிகள் எல்லாவற்றையும் சந்தித்த இனம் தான் எங்கள் இனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது கைது எப்போதோநடக்கும் என்றுதெரிந்திருந்தும் எங்கும் போகாமல் அஞ்சா நெஞ்சுடன் எதிர்கொண்ட மாவீரன்.

  • 3 years later...

- விடுதலைப் புலிகள் அமெரிக்காவுக்கு ஆபத்தனவர்களா? - நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Was the rebel group a terrorist threat to Americans?

"Do we simply wave the red flag of terrorism and impose the maximum sentence?"

- தன் மேல் கருணை கட்டுமாறு மூன்று வருடமாக சிறை பட்டு இருக்கும் திரு கந்தசாமி கருணாகரன்

"I love this country and its soil," the 54-year-old former cab driver said through an interpreter.

"I'm sick and I'm afraid I'll never live to be free with my family again."

http://www.google.com/hostednews/canadianpress/article/ALeqM5iZI88UKc2OzHIaUyaJnPY_wOugKw?docId=4850104

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.