Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நடு வீதியில் இளம் பெண்ணிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! கொலையாளியான பெரிய தந்தையே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார்.

காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது.

அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.

அதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அந்தப் பெண் பெரிய தந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அந்தப் பெண்ணை பெரியதந்தையார் துரத்திச் சென்றுள்ளார். ஓடிச் சென்ற அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார். அதன்போது அவரை கழுத்து அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.tamilwin.com/srilanka/01/217850?ref=imp-news

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கொலை: பரிதா கழுத்தை ஏன் அறுத்தேன்?; பெரிய தந்தையின் பதறவைக்கும் வாக்குமூலம்!

யாழில் இன்று காலை இளம்பெண்ணொருவர் துடிக்க துடிக்க கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அவரது சகோதரனிற்கும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருபாலையை கந்தவேள் பாடசாலைக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவத்தில், அதேயிடத்தை சேர்ந்த பாலசிங்கம் பரிதா (30) என்ற பெண் உயிரிழந்தார். பாலசிங்கம் ஜெயபாலன் (35) படுகாயமடைந்துள்ளார்.

இந்த கொலையை செய்தது, பரிதாவின் பெரிய தந்தை வேலன் கிருஸ்ணன்(60) என்பதே அதிர்ச்சியளிக்கும் செய்தி.

கொலையை செய்துவிட்டு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார்.

தனக்கு சொந்தமான காணியை அவர்கள் அபகரித்த மனவிரக்தியில் இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில்-

எனக்கு சொந்தமான காணியை தம்பி குடும்பம் ஏமாற்றி தமக்கு சொந்தமாக்கி விட்டார்கள். இதனால் என் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை. பிரச்சனை பெரிதாகி, மனைவி, பிள்ளைகள் பிரிந்து போய் விட்டார்கள். இரவல் காணிக்குள் சிறிய குடிசையமைத்துத்தான் குடியிருக்கிறேன். இதனால் நான் மிகுந்த மனவிரக்தியுடன் வாழ்ந்து வருகிறேன்.

எனது காணியை அபகரித்ததுமல்லாமல், தம்பியின் பிள்ளைகள் என்னை கேலி செய்வது வழக்கம். நானும் பொறுத்துப்பொறுத்து பார்த்தேன். அவர்களின் கேலி எல்லைமீறி சென்றதால், கடைசியில் பொறுமையிழந்து கொலையை செய்தேன்“ என பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

http://www.pagetamil.com/60377/?fbclid=IwAR2WiY1LJOyb6PWvo7GkaQKTvxRBUJMhJvs4H1LqoIbN_cvGETyr54K5bPM

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

கூடு விட்டு உங்காவிதான் போனபின், யாருக்கு அந்த காணி?

தனக்கும் இல்லை. தம்பி பிள்ளையளுக்கும் இல்லை.

சில நேரங்களில் சிந்திக்கும் போது, இலங்கை போலீஸ் நண்பர் ஒருவர் சொன்னது நினைவில் வருகிறது.

lonely wolf எனப்படும், தனி மனிதன், தனக்கென ஒருவரும் இல்லாவிடில், பென்சனும் இல்லாவிடில், உள்ளுக்கு போயிருந்தால், மூன்று நேர சாப்பாடு விழும் என்பதால், இத்தகைய செயல்களை செய்ய மன ரீதியில் தயாராகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சட்டப் படிப்பில் caselaw எனப்படும் வழக்குகளால் நிர்மாணிக்கப்பட்ட சட்டத்தை, காணி சட்டத்தில் படிப்பிக்கும் பெரும்பாலான வழக்குகள் இரு யாழ்பாணத் தமிழ் அயலவர்கள்/உறவினர்களுக்கு இடையிலானதாயே இருக்கிறதாம்.

முன்பும் இந்த சண்டைகள் கொலையில் முடிந்துள்ளன.

ஒரு அடி, அரையடி வேலியை தள்ளிப் போடுவதற்கெல்லாம் வழக்கு. 

இப்படி வேலிச்சண்டை போடும் பழக்கம், வன்னி, மன்னார், திருமலை, மட்டு தமிழ் மக்களிடம் இந்தளவுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

இலங்கையில் சட்டப் படிப்பில் caselaw எனப்படும் வழக்குகளால் நிர்மாணிக்கப்பட்ட சட்டத்தை, காணி சட்டத்தில் படிப்பிக்கும் பெரும்பாலான வழக்குகள் இரு யாழ்பாணத் தமிழ் அயலவர்கள்/உறவினர்களுக்கு இடையிலானதாயே இருக்கிறதாம்.

முன்பும் இந்த சண்டைகள் கொலையில் முடிந்துள்ளன.

ஒரு அடி, அரையடி வேலியை தள்ளிப் போடுவதற்கெல்லாம் வழக்கு. 

இப்படி வேலிச்சண்டை போடும் பழக்கம், வன்னி, மன்னார், திருமலை, மட்டு தமிழ் மக்களிடம் இந்தளவுக்கு இல்லை.

இதற்கு முக்கியமான காரணம்.....கதியால், கிழுவை, முள் முருங்கை , பூவரசு போன்ற மரங்களை வேலிக்கு உபயோகிப்பதாக இருக்கலாம்!

ஒவ்வொரு வேலியடைப்பின் போதும்,,,,இந்த  மரங்கள்...அரை அடியாவது நகர்த்த்ப் படுகின்றன...!

நெடுந்தீவு போன்ற பகுதிகளில்....கல் வேலிகள் இருப்பதானால்.....இந்தப் பிரச்சனை கொஞ்சம் குறைவு...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.