Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள்

Featured Replies

100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும்.

கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-48716596

கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்குப் பிறகும் விடவில்லை.

ஞானம்மாளின் கணவர் சித்த வைத்தியர் ஆவார். இவ்விணையருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் – பேத்திகள் உள்ளனர். ஏறத்தாழ 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் தற்போது யோகாசனத்தைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

On International Yoga Day, Some Exercise Their Funny Bone On Social Media

On International Yoga Day, Some Exercise Their Funny Bone On Social Media

 

யோகா கலையை மேம்படுத்த உதவும்  ஜனாதிபதிக்கு மோடி  நன்றி தெரிவிப்பு 

 

யோகா கலையை வளர்ப்பதற்கு உதவுகின்றமைக்காக  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நன்றி தெரிவித்துள்ளார்.

Sirisena-696x311.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் யோகாப்பயிற்சி  செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார். அதில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து அவரது உரை அதில் அடங்கியிருந்தது. 

யோகாவை  மேலும்  பிரபல்யபடுத்துவதற்காக  நீங்கள்  தரும்  ஆதரவுக்கு  நன்றி . உங்களது   இந்த  யோகாபயிற்சி  அனுபவத்தை பகிர்ந்து கொண்டதைக்காணும்  போது  மகிழ்ச்சியாக  இருக்கிறது என்று பிரதமர்  மோடி தனது டுவிட்டர்  சமூக ஊடகத்தில்  பதிவு செய்திருக்கிறார். 

https://www.virakesari.lk/article/58797

 

 
 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

On International Yoga Day, Some Exercise Their Funny Bone On Social Media

Ãhnliches Foto  Bildergebnis für peta for dog

மிருகத்தை... வதைக்கின்றார்கள் என்று...  "Blue Cross",  "பீற்றா"  அன்ரிமார் ...  
எல்லாரும் கிளம்பி வரப்போறாங்கள். :grin:

Edited by தமிழ் சிறி

  • 4 months later...
  • தொடங்கியவர்

மூத்த யோகா ஆசிரியர் நானம்மாள் காலமானார்..!

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த மூத்த யோகா ஆசிரியர் நானம்மாள் 99 ஆவது வயதில் காலமானார். 

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நானம்மாள். அவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் யோகாசன பயிற்சியை கற்றுக்கொண்டார். 

நானம்மாள், இறக்கும் வரை கடினமான  யோகாவையும் சர்வ சாதாரணமாக செய்து வந்ததுடன், மிகவும் வயதான யோகா ஆசிரியையாகவும் வலம் வந்தார்.

41.jpg

இவரிடம் யோகா கற்றுக்கொண்ட 600 பேர் இன்று உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். இதில் 36 பேர் நானம்மாளின் குடும்பத்தினரே ஆவர்.

இவரது யோகா மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

நானம்மாளுக்கு, கடந்த 2018ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ஏற்கெனவே நானம்மாள், ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.virakesari.lk/article/67632

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

  • தொடங்கியவர்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.