Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுடனான நல்லுறவிற்காக நாங்கள் மட்டும் விட்டுக்கொடுப்புக்களை செய்துகொண்டிருக்க முடியாது: த.சித்தார்த்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்.சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனைப் பிரச்சனை மிக நிண்டகாலமாக- குறிப்பாக பிரேமதாசா காலம் முதல் இருந்த வருகின்ற பிரச்சனை தான். ஆயினும் இதை எதிர்த்க்கும் முஸ்லிம் சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறானன பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.

இருந்தாலும் அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட்டு செயல்ப்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தான் நான் கருதுகின்றேன்.

உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு பார்த்தீர்களானால், கிழக்கில் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம்.

கிழக்கு மாகாண சபையில் எங்களிடம் 11 அங்கத்தவர்கள் இருந்த நிலையில் அவர்களிடம் 7 அங்கத்தவர்கள் இருந்த போதிலும் கூட நாங்கள் அந்த நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக கிழக்கு மாகாணத்தையே விட்டுக் கொடுத்தோம். ஆனால் ஒரு பிரதேச செயலக உருவாக்குவதற்கு அவர்கள் எவ்வளவோ தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

இது நல்ல விசயம் அல்ல. அவர்கள் தரக் கூடிய தடைகள் என்பது இன்றைக்கு பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இன்று பௌத்த துறவிகள் (அதிலும் ஞானசார தேரர் அவர் பௌத்த துறவியோ தெரியவில்லை) அதிலே தலையிட்டு இதை ஒரு பூதாகாரமான பிரச்சனையாக ஆக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது உண்மையில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஆகவே இதைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து எவ்வளவு விரைவாக இதனைத் தீர்க்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாகத் தீர்க்க வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஆகவே கல்முனை விவகாரம் மட்டுமல்லாது பல விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசினாலும் கடந்த அரசாங்கங்களினாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் என்னுடைய அறிவிற்கு அந்த வாக்குறுதிகளை முழுமையாக இவர்கள் நிறைவேற்றியதாக காணவில்லை. ஆனாலும் கல்முனை விடயத்தில் தற்போது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் எவ்வளவுதூரம் இதனை இழுத்தடிக்க முடியோ அவ்வளவு தூரம் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் இது நடைபெறுமா இல்லையா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும். அவ்வாறு நடைபெறாது விட்டால் ஒரு மிகப் பெரிய தேவையற்ற பிரச்சனை உருவாகுவதற்கு துணையாக நிற்கப் போகின்றார்கள் என்று தான் நினைக்கின்றேன் என்றார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது,

“ஐனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது அதில் போட்டியிடும் வேட்பாளர் மிக முக்கியம். அந்த வேட்பாளரின் தன்மை, அவர் சொன்ன விடயத்தைச் செய்யக் கூடியவராக இருப்பாரா, பலமானவராக இருப்பாரா, உண்மையான விசுவாசத்துடன் எங்களுடன் பேசுகின்றாரா, என்பதெல்லாம் பார்க்க வேண்டும். ஆகவே அத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படும் வரையும் நாங்கள் யாரை ஆதரிப்போம் அல்லது என்ன நிலைப்பாட்டை எடுப்போம் என்று சொல்ல முடியாது.

ஒரு வேட்பாளரை அறிவித்த பின்பு அவருடன் நாங்கள் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் பார்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறாக ஒருவருடன் எழுத்து மூலத்திலேனும் ஒப்பந்தகங்களைச் செய்தாலும் அந்த ஒப்பந்கனை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் பல ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதில் பண்டா-செல்வாஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தங்களை நாம் பார்த்திருக்கின்றோம். அவைகள் எல்லாம் கிழித்தெறியப்பட்டதைம் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் சரி பிழை என்பதற்கப்பால் பெரும்பான்மைக் கட்சியொன்றுடன் அல்லது ஆட்சிக்கு வருகின்ற கட்சியொன்றுடன் பேசித் தான் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

ஏனென்றால் கடந்த 70 வருடமாக பேராடியும் அடைய முடியாத நிலைமை உள்ளது. இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் நாங்கள் எங்களுடைய முயற்சியை எடுக்க வேண்டும். சர்வதேச ரீதியாக எங்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சென்று அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவைகள் மூலம் தான் ஒரு நியாயமான தீர்வை அடைய முடியும்.

அதற்காக சரியான ஒருவர் என்று கருதக்கூடியவர் யார் என்பதைப் பார்த்து, அவருடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள், அவர் எங்களுக்குத் தருகின்ற உறுதிமொழிகள் என எல்லாவற்றையும் வைத்து தான் இறுதி முடிவெடுக்க முடியும்“ என்றார்.

http://www.pagetamil.com/62129/

  • கருத்துக்கள உறவுகள்

இதை  இவர்  சொல்லக்கூடாது

ஆனால்  சொல்வது நிதர்சனம்

1 hour ago, விசுகு said:

இதை  இவர்  சொல்லக்கூடாது

ஆனால்  சொல்வது நிதர்சனம்

மன்னார் மாவட்டத்தை முழுமையாக இழந்த பின் தான் இந்த ஞானோதயம் ......!!!!!!!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Dash said:

மன்னார் மாவட்டத்தை முழுமையாக இழந்த பின் தான் இந்த ஞானோதயம் ......!!!!!!!!

 

அவர் தானும் இருக்கிறன் எண்டதை ஞாபகப்படுத்துறார்.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.