Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

Featured Replies

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
Hemasiri Fernandoபடத்தின் காப்புரிமை
 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால், தான் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதாக அறிவித்திருந்தார்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்ணான்டோவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட நிலையில் அவரை கைது செய்ததாக ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Pujith Jayasundaraபடத்தின் காப்புரிமை Pujith Jayasundara /facebook Image caption பூஜித் ஜயசுந்தர

அதனைத் தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உடல்நலக் குறைவு எனக் கூறி போலீஸ் மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் மருத்துவமனைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள, அதிகாரிகள், அவரை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே தகவல் அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைது செய்யுமாறு, சட்ட மாஅதிபர், பதில் போலீஸ்மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48841862

Former Defence Secretary Hemasiri Fernando, who was arrested by the CID at the Colombo National Hospital today, was remanded until tomorrow (3), Police Spokesman SP Ruwan Gunasekera said.

http://www.dailymirror.lk/top_story/Hemasiri-Fernando-remanded/155-170407

  • தொடங்கியவர்

இலங்கையின் இந்த செய்தி சகல முதன்மை ஊடகங்களிலும் வந்துள்ளது. இலங்கை அரசுக்கு இது ஒரு நற்பெயரை ஏற்படுத்தி உள்ளது என பார்க்கலாம். 

அடுத்து என்ன நடக்கும்?

இவர்களை மாட்டிவிட்டு வேறு பெரியவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனரா? இல்லையா? இதன் பின்னால் உள்ள அரசியல் முடிச்சுக்கள் அவிழுமா? இதற்கும் நடக்க இருக்கும் தேர்தல்களுக்கும் என்ன தொடர்பு? 

பார்க்கலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிய வெளியால வருவினம்!

18 hours ago, ampanai said:

இலங்கையின் இந்த செய்தி சகல முதன்மை ஊடகங்களிலும் வந்துள்ளது. இலங்கை அரசுக்கு இது ஒரு நற்பெயரை ஏற்படுத்தி உள்ளது என பார்க்கலாம். 

அடுத்து என்ன நடக்கும்?

இவர்களை மாட்டிவிட்டு வேறு பெரியவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனரா? இல்லையா? இதன் பின்னால் உள்ள அரசியல் முடிச்சுக்கள் அவிழுமா? இதற்கும் நடக்க இருக்கும் தேர்தல்களுக்கும் என்ன தொடர்பு? 

பார்க்கலாம்......

இவர்கள் இருவரும் மைத்திரிக்கு எதிராக சாட்சி வழங்கியவர்கள். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.