Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

உண்மை பரிசோதிக்கும் குழுபிபிசி
Woman looking at her smart phoneபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இங்கிலாந்தில் சில நகரங்களில் செல்போன்களுக்கான 5 ஜி அலைக்கற்றை நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் உடல் நலனுக்கு ஆபத்து எதையும் ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே கவலைப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன?

5 ஜி பற்றி வித்தியாசமான அம்சம் என்ன?

முந்தைய செல்போன் தொழில்நுட்பங்களைப் போல, 5 ஜி நெட்வொர்க் சேவை ரேடியோ அலைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சிக்னல்களைக் கொண்டு செயல்படுகிறது. இது மின்காந்த அலைக்கற்றையின் ஓர் அங்கமாக இருக்கிறது. உயர்கோபுரங்களுக்கும் உங்களுடைய செல்போனுக்கும் இடையில் அந்த அலைக்கற்றைப் பரிமாற்றம் நடைபெறுகிறது.

எல்லா நேரத்திலும் மின்காந்த கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன. தொலைக்காட்சி, வானொலி சிக்னல்கள், செல்போன்கள் உள்பட எல்லா வகையான தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகும் சிக்னல்கள், சூரிய ஒளி போன்ற இயற்கை ஆதாரங்கள் மூலமான கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன.

ஏற்கெனவே உள்ள செல்போன் உயர் கோபுரங்களைவிட அதிக அதிர்வெண் கொண்ட சிக்னல்களை 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. தற்போதுள்ளதைவிட இன்னும் அதிக எண்ணிக்கையிலான செல்போன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை ஒரே நேரத்தில், இன்னும் அதிகமான வேகத்தில் பயன்படுத்துவதற்கு இது வகை செய்கிறது.

இந்த அலைகள் தரைப்பகுதியில் குறுகிய தொலைவுக்கு தான் பயணிக்கும். எனவே 5 ஜி நெட்வொர்க் சேவைக்கு, முந்தைய தொழில்நுட்பங்களைவிட அதிக அளவிலான உயர்கோபுரங்கள், தரைப் பரப்புக்கு நெருக்கமாக அமைக்கப்பட வேண்டும்.

கவலைக்குரிய அம்சங்கள் என்ன?

எல்லா செல்போன் தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சில வகை புற்றுநோய் உள்பட உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டில், ``செல்போன் பயன்பாட்டால் உடல் நலனுக்கு கேடு ஏற்படுத்தும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை'' என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

இருந்தபோதிலும், ரேடியோ அலைவரிசைக் கதிர்வீச்சுகள் (செல்போன் சிக்னல்கள் இதில் அடங்கும்) `புற்றுநோயை உருவாக்கும் சாத்தியம்' கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையும் (IARC) வகைப்படுத்தியுள்ளன.

``இந்தக் கதிர்வீச்சுக்கு ஆளாகும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற முடிவுக்கு வருவதற்கு ஓரளவுக்கு ஆதாரம் இருப்பதால்'' இந்த வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது.

பதப்படுத்திய காய்கறிகளை சாப்பிடுவது, முகத்துக்கு பவுடர் பூசுவது ஆகியவையும் இதே அளவுக்கு உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை.

மது பானங்களும், பதப்படுத்திய மாமிசமும் அதிக ஆபத்துள்ளவையாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

5G equipment in Seoulபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க சுகாதாரத் துறை 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட நச்சியல் குறித்த அறிக்கையில், அதிக அளவில் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட ஆண் எலிகளுக்கு இருதயத்தில் புற்றுநோய் கட்டிகள் உருவாவது தெரிய வந்திருக்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு குறித்து கவலை தெரிவிக்கும் நிபுணர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக, எலிகளின் முழு உடலும் செல்போன்களின் கதிர்வீச்சுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் உட்படுத்தப்பட்டன. பிறப்பதற்கு முன்பிருந்து இரண்டு ஆண்டுகள் வரை இவ்வாறு செய்யப்பட்டது.

ஆய்வு மேற்கொண்டவற்றில் பெண் எலிகளுக்கு புற்றுநோய்க்கான தொடர்பு எதுவும் காணப்படவில்லை. கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட எலிகள், மற்ற கட்டுப்பாட்டில் கவனிக்கப்பட்ட எலிகளைவிட அதிக காலம் உயிர் வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

``எலிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சின் அளவை, செல்போன் பயன்படுத்தும் மனிதர்கள் மீது ஏற்படும் கதிர்வீச்சு அளவுடன் ஒப்பிட முடியாது'' என்று ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

``அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் தகவல்கள் தெரிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு இதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று செல்போன் பாதுகாப்பு குறித்து அரசுக்கு ஆலோசனைகள் அளிக்கும் பொறுப்பில் உள்ள டாக்டர் பிராங்க் டி வோச்சிட் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்குவதை நிறுத்தி வைக்குமாறு கோரி ஐரோப்பிய யூனியனுக்கு விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ரேடியோ அலைகள் அயனிகளை உருவாக்காது

செல்போன் சேவைகளில் பயன்படுத்தப்படும் - ரேடியோ அலைக்கற்றைகள் - அயனிகளை உருவாக்காது. ``அதாவது டி.என்.ஏ.க்களில் பாதிப்பை ஏற்படுத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அதற்கு இல்லை''

என்பது இதன் அர்த்தம் என்று மருத்துவரும், புற்றுநோய் ஆராய்ச்சியாளருமான டேவிட் ராபர்ட் கிரிம்ஸ் கூறியுள்ளார்.

செல்போன்களில் பயன்படுத்துவதைவிட அதிக அலைவரிசையில், மின்காந்த அலைக்கற்றைகளுக்கு அதிக காலம் ஆட்பட நேர்ந்தால், நிச்சயமாக ஆரோக்கியக் கேடுகள் வருவதற்கான ஆபத்துகள் உள்ளன.

5 ஜி அலைக்கற்றை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

சூரியனின் புறஊதாக் கதிர்கள், இந்தப் பாதிப்புக்கு உள்பட்ட பிரிவில் வருகின்றன. தோலில் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உண்டு.

மருத்துவ சிகிச்சையில் எக்ஸ்ரே மற்றும் காமா கதிர்வீச்சுகள் போன்ற அதிக சக்திமிக்க கதிர்வீச்சு அளவுகள் குறித்து கடுமையான ஆலோசனை வரம்புகள் இருக்கின்றன. இவை இரண்டுமே உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

``புற்றுநோய்க்கான ஆபத்தை நாம் அதிகரித்துக் கொள்கிறோமா என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் தினமும் நாம் பார்க்கும், ஒளியில் உள்ளதைவிட ரேடியோ அலைகளின் சக்தி குறைவானது தான்'' என்கிறார் டாக்டர் கிரிம்ஸ்.

``செல்போன்கள் அல்லது வயர்லெஸ் சேவைகள் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டும் வகையில், ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று அவர் கூறினார்.

5 ஜி சிக்னல் உயர்கோபுரங்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

5 ஜி தொழில்நுட்பத்துக்கு நிறைய உயர்கோபுரங்கள் தேவைப்படும். அதில் இருந்து தான் செல்போன் சிக்னல்கள் கொடுத்து வாங்கப் படுகின்றன.

ஆனால், உயர்கோபுரங்கள் அதிகமாக இருந்தால், முந்தைய 4 ஜி உயர்கோபுரங்களைவிட குறைவான சக்தியில் ரேடிலோ அலைகள் பரிமாற்றம் இருக்கும். எனவே கதிர்வீச்சு அளவும் குறைவாக இருக்கும்.

மக்கள் புழங்கும் இடங்களில் ரேடியோ அலைவரிசைக் களங்கள், வழிகாட்டுதல் அளவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக உள்ளன என்று செல்போன் உயர் கோபுரங்களுக்கான பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கிறது.

வெப்பமாதல் ஆபத்துகள் எப்படி?

அனுமதிக்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றைக்கான சர்வதேச வழிகாட்டுதல்கள், மைக்ரோ அலை அலைக்கற்றைக்கும் குறைவாகவே உள்ளன.

மைக்ரோ அலைகள் தாம் பாயும் பொருட்களில் வெப்பத்தை உருவாக்கும்.

இருந்தபோதிலும், 5 ஜி சேவைக்கு பயன்படுத்தும் அளவு (முன்பு செல்போன் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் அளவு), இதனால் ஏற்படும் வெப்பம் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது என்று அயன் உருவாக்காத கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் ரோட்னி கிராப்ட் தெரிவித்துள்ளார்.

``5 ஜி சேவை மூலம் (அல்லது பொதுவான பகுதிகளில் வேறு எந்த சிக்னல்கள் மூலம்) இருக்கும் அதிகபட்ச ரேடியோ அலைவரிசை அளவு, வெப்பத்தை அதிகரிக்கும் அளவுக்கு அதிகமாக இல்லை'' என்று அவர் கூறியுள்ளார். இதுவரை அப்படி கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கதிர்வீச்சுக்கு ஆளாவதன் வரையறை

``இப்போதைய சேவைகளுடன் 5 ஜி சேவை தொடங்கப்படும் போது, ரேடியோ அலைகளுக்கு ஆட்படும் அளவு சிறிதளவு அதிகரிக்கும் என்றாலும், அதிகமாக ஆட்படுதல் என்பது இருக்காது'' என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 ஜி சிக்னல்களுக்கான அலைவரிசை அளவு, மின்காந்த அலைக்கற்றையை அயனிமயமாக்கும் அளவுக்கும் கீழே தான் உள்ளது. ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆபத்து உருவாக்கும் அளவு என நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட இது குறைவாகவே உள்ளது.

``5 ஜி அலைக்கற்றையால் உருவாக்கப்படும் தாக்கம் குறித்து ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே இதற்கு அனுமிக்கப் பட்டுள்ளது'' என்று பேராசிரியர் கிராப்ட் கூறியுள்ளார்.

ஐ.சி.என்.ஐ.ஆர்.பி. வழிகாட்டுகல்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவான அலைவரிசையில் மின்காந்த அலைவரிசைக்கு ஆட்படுவதால், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Presentational grey line Reality Check branding Presentational grey line

https://www.bbc.com/tamil/india-48996940

இந்த 5ஜி தொழில்நுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்து இருந்தால் அது பாதுகாப்பானதாக இருக்கும் என கருதலாம். 

வட அமெரிக்காவிலும் சீனாவிலும் அரசுகள் பெரிய நிறுவனங்களின் இசைக்கு ஏற்பவே ஆடும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.