Jump to content

பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை


Recommended Posts

Posted

ஈ.வே.ராக் கன்னட நாட்டார்; தமிழகத்தை நாசப்படுத்துவதற்கென அங்கு வந்தேறி. எவரிடந் தவறிருந்தாலும் அவர் திருத்தப்பட வேண்டியவரே. பார்ப்பனரிடம் பல தவறுகளுளவென்பது எனக்குத் தெரியும். எல்லா மொழிகளிலும் போலத் தமிழிலும் ஆக்கங்கெட்ட சுவடிகள் பலவுள வென்பதை அவ்விராக் கூட்டத்தினருந் தெரியவேண்டும். போக்கவேண்டிய தவறுகளையும், ஏற்கவேண்டிய 'கற்பவை' யையும் சோரவிட்டுத் தமிழகத்துக்கு வந்தேறிகள் என்றொரு காரணத்தைக் காட்டிப் பார்ப்பனரையும், சம்ஸ்கிருதத்தையும் வைகிறார் அவ்விரா. பாலம் போட்டால் அது இரண்டு கரைக்குமே யுண்டு. தமிழகத்தில் வந்தேறிய சமூகங்கள் வேறுமுள. அம்மொழிகளும் பல; அவற்றையுந் தமிழகத்திலிருந்து துரத்த அவர் முற்பட வேண்டும். முதலில் அவரே இவ் வகத்தை விட்டு ஓடற்குரியார். மயிலைக் கழித்ததாம் மண் கூகை. அவர் பார்ப்பனரையும் சம்ஸ்கிருதத்தையும் மாத்திரம் கழித்துத் துரத்துக வென்கிறார். - என்ன புத்தி! கோவிலுக்குப் போய்ச் சாமியைக் கும்பிடுவவது மடமை, காட்டு மிராண்டித் தனம், மக்களைக் கெடுப்பது மானங்கெட்ட செயல் என்றெல்லாம் ஆலய வழிபாட்டுக்காரரை மானங்கெடப் பேசிவருகிறாரவர்.

'(நான்) கோவிலுக்கு சாமி கும்பிடப் போகமாட்டேன். (என் தமிழர்ச்சனைப் போராட்டத்தின்) நோக்கம் கிளர்ச்சி(யே)' (14-12-1956 தினமணி)

என்பதும் அவர் கூற்று; தமிழர்ச்சனைக் கொள்கையோ, அடாத வொன்று. அவருடைய நாஸ்திக புத்திக் கொள்வாதது ஆலய வழிபாடு. ஆகலின் அக்கொள்கையை அங்குப் புகுத்துவதற்காக அவர் போராடப் போவது சண்டித்தனம்.

'பலருக்கு நன்மையான ஒரு காரியம் சாதிக்கப் படுகையில், அதற்காகச் சாமியை) வழிபட்டு ஒரு கும்பிடு போடுவதால் தான் என்ன தவறாகிவிடப் போகிறது.......காரியம் நிறை வேற சில காரியங்கள் செய்வதால் தன் சொந்தக் கருத்து, நம்பிக்கை கொள்கை மாறிவிடாது.' (14-12-1956 தினமணி)

என்கிறாரவர். அப் 'பலர்' தான் யாரோ? அந் 'நன்மை' தான் யாதோ? அவர் பூணும் பொய்வேடத்தாலும், செய்யும் பொய் வழிபாட்டாலும் அவரது சொந்த யோக்கித்யதை மாறிவிடாதாம். அது கிடக்க, அவரால் தமிழர்ச்சனை புகுத்தப்பட்டு வழக்கத்திலும் வந்து விடட்டும். அப்புறம் கோயில்களில் நியமிக்கப்படும் தமிழ்ப் பூசகர் எப்படிப்பட்டவராயிருப்பர்? உள்ளத்தில் கரிச்சட்டைப் புத்தியும், வெளியில் சமய வேடமுங் கொண்டவராய்த்தான் அவர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய வயிறு வாடாது. அவர் உண்மையான சமயவுணர்ச்சி மிக்க அர்ச்சகராயிருந்தால், அவர் முகத்தில் எச்சலைக் காறித் துப்பியும், அவரை விளக்குமாற்றால் அடித்தும்விடுவர். அவ்விராவும், அவர் கூட்டனத்தினரும், இல்லாவிட்டால் அத்தனையையுங் கோயிற் சாமிகளுக்குச் செய்யப் போவதாகச் சொன்ன அவரெல்லாந் தமக்கே செய்துகொண்டு தம் கரிப்புத்தியைப் போக்கி நல்லறிவைப் பெற்று அச் சாமிகளின் காலில் விழுந்து வணங்க வேண்டும். அவற்றுள் அவர் செய்யப்போவது எதுவோ?

  • Replies 68
  • Created
  • Last Reply
Posted

கண்ணதாசன் எழுதிய "கழக மகாகாவியம்" என்று நூலையும் படித்துப் பாருங்கள்!

கண்ணதாசன் திராவிட கழகத் தலைவர்கள் மீது கொண்டிருந்த தன்னுடைய தனிப்பட்ட கோபத்தை தீர்ப்பதற்கு சுயசரிதை என்ற பெயரில் எழுதிய ஒரு நாவல்தான் "வனவாசம்". அதை ஒரு ஆதாராமாக நீங்கள் கொள்வது ஆச்சரியம்.

அப்படி கண்ணதாசன் சொல்வது உண்மையாக இருந்து, தந்தை பெரியார் ஒரு பார்ப்பனரை வழக்குரைஞராக கூலிக்க அமர்த்திக் கொண்டிருந்தாலும் கூட, அதில் என்ன தவறு?

அரச உத்தியோகங்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என்று அனைத்திலும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில், வேறு குலத்தை சேர்ந்த வழக்குரைஞரை தந்தை பெரியார் எங்கே தேடியிருக்க முடியும்?

இது போன்ற காரணங்கள் அவருடைய பார்ப்பனிய எதிர்ப்பை வலுப்படுத்தி இருக்கும்.

தந்தை பெரியார் பார்ப்பனர்களை "வந்தேறிகள்" என்பதற்காக ஒரு போதும் எதிர்த்ததில்லை. பார்ப்பனர்கள் மண்ணின் மைந்தர்களை ஏமாற்றிப் பிழைத்ததையும், சுரண்டியதையும், அடிமை செய்ததையும், உரிமைகளைப் பறித்தையும்தான் எதிர்த்தார்.

சமஸ்கிருதத்தை இந்தியாவின் தாய் மொழி என்று பெரிய மோசடியான பொய்யை பார்ப்பனர்கள் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, பார்ப்பனர்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை சொன்னார்.

எங்கோ இருந்து வந்து, மண்ணின் மைந்தர்களை அடக்கி ஆள்வதற்கு எதிராகத்தான் அவர் பேசினார்.

Posted

நமக்கு எல்லோருக்கும் தாய் மொழி தமிழ். ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் (சைவர்கள், வைணவர்கள்) எல்லோருக்கும் பொதுமொழி சம்ஸ்கிருதம். அதில் உள்ள அறிய விஷயங்கள் பல. அது தான் நம் எல்லோருக்கும் தந்தை மொழி.

பெரியாரே! ஒரு வந்தேறி தானே. மக்கள் பிளவு படுத்தி ஒரு நிலையான கொள்கை இல்லாது. தமிழன் மீதும் தமிழ் மீதும் சேறி வாறி பூசினார். அதைத் தெரியாத பாமர மக்கள் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு கெட்டு ஒழிந்தனர். இன்றும் அவருடைய நூல்கள் அனைத்தையும் நடுநிலையுடன் படித்தால் அவர் தெளிவான சிந்தனையில் இல்லை என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தை பெரியார் பற்றி நீங்கள்தான் எதுவும் தெரியாமால் பேசுகிறீர்கள்!

அவர் ஒரு தந்தை போன்று தமிழ் மக்களிடம் உள்ள குறைகளை கடுமையாக சாடியும் திட்டியும் திருத்துகின்ற பணியை மேற்கொண்டதால்தான் அவரை தந்தை பெரியார் என்கின்றோம்.தந்தை பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொன்னார் என்பதை அவர் வாயாலேயே விளக்கி உள்ளார்.

இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாக இருக்கக்கூடிய தகுதி படைத்தது தமிழ் என்று தந்தை பெரியார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?

உங்கள் அனைவருக்கும் ஒன்றைத் திரும்பச் சொல்லுகின்றோம். பெரியாரைப் பற்றி விமர்சிக்கின்ற நாங்கள் ஒருபோதும், அண்ணாத்துரையை விமர்சித்ததில்லை. அவர் கொள்கையில் வேறுபாட்டோடு இருந்தாலும், அவரைப் பற்றி ஏன் விமர்சிப்பதில்லை என்றால் ஒரு தமிழனுக்கு தமிழனைப் பற்றிச் சொல்ல உரிமை உண்டு. கன்னடன் யார் தமிழைப் பற்றிக் கதைப்பதற்கு? அல்லது, தமிழைக் காட்டுமிராண்டி என்று திட்டுவதற்கு?

சங்கராச்சாரியர் தமிழை நீசமொழி என்று சொன்னபோது, அனைவரும் கொதித்து எழுந்தோம். ஆனால், இந்த ஆள் சொன்னபோது, அடித்துத் துரத்தியிருக்க வேண்டும்.

தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் கொடுத்து, இன்றைக்கு இணையத்தில் நானும் நீங்களும் தமிழில் எழுதுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது தந்தை பெரியார் என்பது உங்களுக்கு தெரியாதா?

தமிழ் மொழிச் சீர்திருத்தம் என்பதே முழு முட்டாள்தனமானது. . சீன எழுத்துக்கள் 1000க்கு மேலே அவர்கள் கணனியில் எழுதாமலா போய் விட்டார்கள்?? ஏன் உந்த ஏமாற்றுக் கதைகள்??

ஏற்கனவே புராதன ஆக்கங்களை நம்மவர்களால் படிக்க முடியாத நிலைக்கு மொழி திரிபடைந்து போய் விட்டது. அதுக்குள்ள இவரின் அரியண்ணடம் வேறை.

தமிழுக்குப் பெரியார் ஒன்றுமே செய்யவில்லை. உந்த தட்டச்சு வடிவத்துக்கு இவர் பொறுப்பாளியுமல்ல. அதை வடிவமைத்தவர் இவருமல்ல. தமிழ் உலகம் வளர அவர் என்ன ஆக்கங்களை, வடிவமைத்தார்? மற்றவர்களை எப்படித் தரங் கெட்டு விமர்சிப்பது என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தார். ( அதை இப்போதும் அவர் பக்தர்கள் தொடருகின்றார்கள்)

உங்களுக்கு கொஞ்சமாவாது பகுத்தறிவு இருந்தால், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தந்தை பெரியாரின் தொண்டர்கள் எப்படி தமிழுணர்வோடு இன்றும் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி பதில் தேட முனைந்திருப்பீர்கள்

இவர் பார்ப்பாணி என்று பிராமணர்களை ஒதுக்கி வைக்காவிட்டால், அவர்களும் தமிழ் உணர்வோடு இருந்திருப்பார்கள். அதற்கு முந்திய காலத்தில் அவர்களும் தமிழுக்கு சேவை ஆற்றினார்கள் என்பது உண்மை. அவர்களைத் துரத்தி விட்டுத் தனிக்காட்டு ராசா ஆட்டம் எதற்கு??

இப்போது தமிழ் பற்று என்று நடிக்காதீர்கள். நீங்கள் எப்போது ஆட்சிக்கு வந்தீர்களோ, அப்போதிலிருந்து தான் தமிழ் இன்றைககு அழியுமா என்று அழ வேண்டிய நிலமைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது.

அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். உங்களால் இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். இது போன்ற தமிழைப் பார்த்துத்தான் தந்தை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். தமிழை முன்னேற்ற விடாது, தமிழ் புலவர்கள் மதத்தில் மூழ்கிப் போய் தமிழை வைத்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழுக்குள் வடமொழித் திணிப்பை செய்தார்கள். தமிழை மெதுமெதுவாக அழிக்க முயன்றர்கள்.

இந்தத் தமிழை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் பற்றிக் கதைக்க இவர் யார்? இவருக்கு யார் உந்த உரிமையைக் கொடுத்தது? மதம் மீது கொண்ட வெறி இந்த மனிதனைப் பினாத்த வைத்திருக்கின்றது.

அன்றைக்கு மதத்தை வைத்து, பிரச்சாரம், சொற்பொழிவு, பாடல்கள், கட்டுரைகள் எழுதி வளர்த்தார்கள். இந்த திராவிடக்கும்பல் என்ன சொல்லி வளர்த்தது??

ஒரு கவிஞன் என்றால் அவன் பாடல் மூலம் தான் கதைப்பான். சமூக நிலையை வைத்துத் தான் பாடல்கள் எழுதுவான். அது தான் கவிஞன். இன்றைக்கு இப்போதுள்ள கவிஞர்கள் என்ன செய்கின்றார்கள். சமூக நிலையை வைத்துத் தான் பாடல் புனைகின்றார்கள். அன்றைக்குப் பக்தி மேலோங்கியிருந்ததால் அவர்கள் பாடல்களை பக்தி சம்பந்தப்படுத்தி எழுதினார்கள். அது தான் அவர்களால் முடியும்.

சமூக வளர்ச்சி பற்றிச் சிந்திக்க வேண்டியது, அந்நாட்டு மன்னன். அவரோ, அமைச்சரோ அது பற்றிச் சிந்திக்காதபோது, கவிஞன் அது பற்றிய ஆக்கங்கள் எழுதுவான் என்பது சுத்த மூடத்தனமே. அதிலும், ஒட்டுமொத்த தமிழைப் பற்றி திட்ட இவர் யார்?

அன்று தமிழில் திறம்பட, செயற்பட்ட கவிஞர்களுக்கு பாராட்டுக்களும், பண உதவியும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். திராவிடக்கும்பல் எத்தனை பேரை இப்படி ஊக்குவித்தது? இன்றைக்கு பிறமொழிச் சொற்களுக்கு ஈடாக எத்தனை கலைச்சொற்களை உருவாக்க முடிந்தது? எல்லாம் பூச்சியமே. மஞ்சத்தில் பிரளவே நேரமில்லை. மொழிக்கு எங்கு உதவியிருப்பார்கள்??

அப்பொழுது தந்தை பெரியார் ஒரே ஒரு வசனம் சொன்னார்: "தமிழ் காட்டு மிராண்டி மொழி"

தமிழ் இன்றைக்கு முன்னோக்கி செல்வதற்கு இந்த வார்த்தை மிக முக்கிய காரணம்.

பகுத்தறிவோடு உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.

பெண்கள் கற்புப் பற்றி தந்தை பெரியார் சொன்னதை முழுவதுமாக படித்துப் பாருங்கள்.

"ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவையில்லை" இதைத்தான் அவர் சொன்னார். இதில் என்ன தவறு?

நானும் சொல்கிறேன்: "ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவை இல்லை.

தமிழ் மொழி முன்னோக்கி இப்போது எங்கே சென்றது? காலத்துக்குக் காலம் தானாவே வளர்ந்து வந்த மொழியைச் சின்னாபின்னப்படுத்தி உருத்தெரியாமல் செய்து விட்டு, முன்னேற்றப்பாதையாம். யாருக்குப் பூச்சுத்துகின்றார்கள்.

இன்றைக்குக் கூட, தமிழ் நாட்டில் தமிழ் பத்திரிகைகள் என்று பார்த்தால் கூட அது பிராமணியின் கையில் தான் இருக்கின்றன. ஏன் என்று பார்த்தால், அவனும் தமிழுக்குத் தொண்டாற்றுகின்றான்.

தமிழை ஓலையில் இருந்து அச்சேற்றிய ஆறுமுகநாவலர், செய்தது, சின்னதொரு வேலை என்று மட்டம் தட்டிக் கொண்டு, தமிழனை வெளிப்படையாக காட்டுமிராண்டி என்று திட்டியதை ஆராய்வு செய்து பகுத்தறிய வேண்டுமாம்.

தமிழை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வக்கிலாதவர்கள், தமிழைப் பற்றிக் கதைக்க என்ன தகுதியுண்டு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பெரியாரின் மறுபக்கம்" என்ற நூலை எழுதிய ஆர்எஸ்எஸ் மதவெறி இயக்கத்தின் வெங்கடேஸ்வரின் அந்த நூலில் பெரும் மோசடி செய்திருக்கிறார்.

நீங்கள் செய்தால் உண்மை. மற்றவர்கள் செய்தால் மோசடி என்பீர்கள். அல்லது நீ ஒரு பார்ப்பானி, அல்லது பார்ப்பானிக்குப் பிறந்தவன் என்று பட்டம் சூட்டுவீர்கள். இது எங்களுக்குப் புளித்துப் போன கதை.

அவர் செய்வதைத்தான் பெரியாருக்கு எதிரான பலரும் செய்கிறார்கள். ஒரு செய்தியை எப்படித் திரிக்க வேண்டும் என்று அவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெரியார் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர். அவருடைய சிந்தனைகள் காலத்திற்கு காலம் வளர்ந்து வந்தன. இது இயல்பான ஒன்று.

எந்த ஒரு தலைவரின் சிந்தனையும் ஆரம்பத்தில் இருந்தது போன்று அப்படியே தொடர்வதில்லை. அனுபவத்தில் பல உண்மைகளை உள்வாங்கி வளர்ச்சி அடையும்.

தமிழைக் காப்பாற்றியவர் பெரியார் என்று நீங்கள் திரித்தபோது அதை விட உங்களிடம் தான் திரிப்புப் பற்றி அதிகம் கற்றுக் கொள்ளலாம். தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யதா கன்னனைத் தலையில் கொண்டாட நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அப்படிப் பார்த்தால் எங்களிடம் தான் பகுத்தறிவு நிறைய உண்டு.

இதிலே ஒரு தலைவர் ஒரு காலகட்டத்தில் சொன்ன கருத்துக்களின் சில பகுதிகளை மட்டும் எடுத்து புத்தகம் வெளியிடுவது பெரும் மோசடி.

உதாரணமாக பெண்களின் கற்புப் பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை முழுமையாக சொல்லாமல் அரைகுறையாக வெளியிடுவது.

பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்று தந்தை பெரியார் சொன்னார் என்று புரளி கிளப்புவது எல்லாம் இந்த வகைக்குள் அடக்கம்.

ஆண்கள் கற்பில்லாவிட்டால், ஆண்களைத் திருத்தியிருக்க வேண்டும். அது தான் உண்மையான தலைவனுக்கு அடையாளம். அதில்லாமல், ஆண்கள் இல்லாவிட்டால், பெண்களும் அப்படியே திரி என்பது எல்லாம் என்ன நியாயம்??

வீதியில் தனியாகப் போகும்போது, ஒரு பெண்ணை யாரும் வல்லுறவு கொண்டு விடுவார்கள் என்பதற்காக, அவளை முதலே அனுமதி கொடுக்க வைப்பது போன்றல்லவா இது இருக்கின்றது.

தமிழ்நாட்டில் இப்போதும் திராவிட இயக்கங்களின் மாதர் சங்கங்கள் இருக்கின்றன. அவர்களின் தொழில் என்ன என்பது வேற விடயம். ஆனால் பெண்கள் எழுச்சி நாளில் அவர்களின் கூச்சல் இப்படித் தான் இருக்கும். " ஆண்களைப் போல, பொது இடங்களில் தண்ணியடிக்க அனுமதி கொடு", "தம்மடிக்க அனுமதி கொடு" என்ற வகையில் தான் அமைந்திருக்கும். அரசாங்கங்கள் பொருளதாரத்துக்கு போதையை ஊக்குவிக்கின்றன. ஆனால் பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இவர்கள் இருந்தால் இப்படிக் கதைப்பார்களா??

அவன் கெட்டுப் போனால், நீயும் கெட்டுப் போ என்று சொல்லுகின்றவர்கள் தலைவர் ஆனால் இப்படித் தான் தமிழ் உலகம் சீரழிந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரியம், திராவிடம் என்பது இனக்ககுழுமங்கள். சிங்களவன், தமிழன் மொழிக்குழுமங்கள், இது தனித்துவத்தை பேணுகிறது கலாசாரத்தை பேணுகிறது, இந்த இனம் இப்படித்தான் இருந்தது என்ற செய்தியை எமது பாரம்பரியத்தை சொல்லுகிறது, சாதி என்பது ஒருசாரார் உழைக்க ஒருசாரார் உக்கார்ந்து உண்டு தொந்திவளர்க்க திட்டமிட்டு உருவாகாப்பட்டது இதனால் நன்மை ஏது தீமைகள்தான் அதிகம். :rolleyes:

இன்றைக்கு தலித் தேசியம், வன்னிய, தேவர் தேசியம், என்று இன்றைக்கு வளர்ந்தமைக்குப் பெரியார் காரணமில்லை என்கின்றீர்களா? இவை எல்லாம் ஒரு சாதி ஊக்குவிப்பு இல்லை என்று நினைக்கின்றீர்களா?

சாதி மட்டும் ஒரு தரப்பு உழைக்க மற்றத் தரப்பு உண்கின்ற செயல் அல்ல. முதலாளித்துவக் கொள்கை, ஏழை - பணக்காரன், அரசன்- ஆண்டி, நாட்டுத்தலைவர் - மக்கள் என்பனவல்லாம், ஒருவன் உக்கார்ந்திருக்க மற்றவர்கள் கடினப்படுகின்ற செயற்திட்டம் தான்.

சாதிப்பிரிவினை வாதத்தால் பூசாரிகள் அனுபவித்ததை விட, நாட்டமைகளும், மன்னர்களும் தான் அனுபவித்தது அதிகம். ஆனால் இப்போதும் கிராமிய மட்டத்தில் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை விட்டு வைத்துக் கொண்டு தான் இருக்கின்றீர்கள்.

(அதற்காக நான் என்றைக்கும் சாதிப்பிரிவினையை ஆதரிப்பவனல்ல. உங்களின் கருத்துக்கான பதில்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணதாசன் என்ன செய்தார் எப்படி வாழ்ந்தார் என்று ஊருக்கே தெரிந்த விடயம், இப்படி இரு என்று சொல்பவன் அப்படி இருந்து காட்டவேண்டும், சாதிபாரதே என்றால் ஆருமுக நாவலர் சாதிபாராதவராக இருக்கவேண்டும். ஆறுமுக நாவலர் சாதிபார்தவரா? பராதவரா? உங்கள் நிலைப்பாடு என்ன? :rolleyes:

நல்லது பிருந்தன்.

ஆறுமுகநாவலர் சாதி பார்த்தவர். அதை என்றைக்குமே மறுக்கவில்லை. அதை அவர் கடடுரையில் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். அதை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது.

இங்கு திராவிடம் பற்றிக் கதைப்பவர்களும் கொள்கைக்கு ஒழுகித் தான் நடக்கின்றார்கள் என்று நம்பிக் கேள்வி கேட்கின்றேன். மனச்சாட்சிப்படி சொல்லுங்கள்.

1. நண்பர் சபேசன் சோதிடம் எப்படிப் பொய் என்றும், திருமணத்தில் பெண்ணைப் பலருக்கு வல்லுறவு செய்யச் சொல்லி மந்திரங்கள் இருப்பதாகவும் சொன்னார். அது தப்பான ஒன்று தானே? ஏற்க முடியாது. எனவே, இங்குள்ள நண்பர்களில் யார் வைதிக முறைப்படி திருமணம் செய்யாமல் நடந்து கொண்டீர்கள். அதாவது குறித்த ஆட்களுக்கு மந்திரம் மூலம் அந்தச் செய்கை செய்யாமல் நடந்து கொண்டீர்கள்??

2. சபேசன் ஒரு தலைப்பில் காதல் பற்றி வெறுப்பை காட்டியிருந்தார். எனவே அவர் பெற்றோர் பேசிச் செய்த திருமணம் தான் செய்திருக்கக் கூடும். எனவே அவரிடம் தான் முதல் பதிலறிய விரும்புகின்றேன்.

ஏனைய திராவிட வாதிகள் எத்தனை பேர்கள் நியாமாகக நடந்து கொண்டீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணதாசன் எழுதிய "கழக மகாகாவியம்" என்று நூலையும் படித்துப் பாருங்கள்!

கண்ணதாசன் திராவிட கழகத் தலைவர்கள் மீது கொண்டிருந்த தன்னுடைய தனிப்பட்ட கோபத்தை தீர்ப்பதற்கு சுயசரிதை என்ற பெயரில் எழுதிய ஒரு நாவல்தான் "வனவாசம்". அதை ஒரு ஆதாராமாக நீங்கள் கொள்வது ஆச்சரியம்.

தனிப்பட்ட பகையாகக் கண்ணதாசன் எழுதவில்லை. அவர் தன்னுடைய பாத்திரத்தையும் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். உண்மையில் தான் போன விபச்சாரிகளைப் பற்றியும் சொல்லியிருந்தார். அப்படிப் பட்டவர், மற்றவர்கள் மீதான தனிப்பட்ட கோபத்தைத் தீர்க்க வேண்டிய தேவை எழவில்லையே! மற்றவர்களை மட்டும் தாழ்த்தி தன்னை நியாயப்படுத்தியிருந்தால் தான் அது தனிப்பட்ட பகையாக இருக்குமே தவிர, தன்னையும் தாழ்த்திச் சொல்வதற்குப் பெயர் "உண்மை".

பகுத்தறிவு என்ற மூகமூடிக்குள் என்ன கூத்து நடத்துகின்றார்கள் என்பதை கிழித்தால், அது தனிப்பட்ட பகையா?

தந்தை பெரியார் பார்ப்பனர்களை "வந்தேறிகள்" என்பதற்காக ஒரு போதும் எதிர்த்ததில்லை. பார்ப்பனர்கள் மண்ணின் மைந்தர்களை ஏமாற்றிப் பிழைத்ததையும், சுரண்டியதையும், அடிமை செய்ததையும், உரிமைகளைப் பறித்தையும்தான் எதிர்த்தார்.

சமஸ்கிருதத்தை இந்தியாவின் தாய் மொழி என்று பெரிய மோசடியான பொய்யை பார்ப்பனர்கள் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, பார்ப்பனர்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை சொன்னார்.

எங்கோ இருந்து வந்து, மண்ணின் மைந்தர்களை அடக்கி ஆள்வதற்கு எதிராகத்தான் அவர் பேசினார்.

அவரே வந்தேறு குடி. மற்றவர்களைப் பார்த்து எப்படிச் சொல்ல முடியும் என்று சிந்தித்திருப்பாராக்கும்.

Posted

நான் காதல் பற்றி எங்கே தவறாக சொல்லி இருந்தேன்? காதல் என்கின்ற உணர்வு பற்றிய தேடல்கள் எனக்குள் உள்ளது. அது பற்றிய கேள்விகளை எழுப்பி இருப்பேன். நான் காதலித்துத்தான் திருமணம் செய்தேன்.

அன்றைய தமிழ் புலவர்களின் எழுத்துக்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள். அதுவும் மதம் சார்ந்ததாகத்தான் 99 விழுக்காடு இருக்கும். மூடநம்பிக்கைகள் விரவிக் கிடக்கும்.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலையே பெரியார் கண்டித்தார். தந்தை பெரியார் "தமிழ் இந்தியா முழுமைக்கும் பொது மொழியாக இருப்பதற்கு தகுதி வாய்ந்தது" என்று புகழ்ந்ததும் உண்மை.

தந்தை பெரியார் தமிழுக்கு எதிரானவர் என்ற விசமப் பிரச்சாரம் அர்த்தம் இல்லாதது. அது உண்மை என்றால், அவருடைய தொண்டர்கள் தமிழ் பற்றுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தமிழுணர்வாளர்கள் அனைவரும் பெரியார் மீது பற்றுள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு பார்ப்பன ஏடுகள் தமிழுக்கு எதிராகத்தான் இயங்கி வருகின்றன. "ஆனந்த விகடன்" என்று வடமொழியில் ஆரம்பித்தார்கள். இன்னொரு ஏட்டை ஆரம்பித்து ஜுனியர் விகடன் என்று ஆங்கிலத்தை கலந்தார்கள். குமுதம் என்று இன்னொரு பார்ப்பன ஏடு வந்தது. இன்றைக்கு ரிப்போர்டர் என்று ஆங்கிலப் பெயரோடு இன்னொரு ஏட்டை அவர்களே வெளியிடுகிறார்கள்.

தந்தை பெரியாரின் தொண்டர்கள் வெளியிடுகின்ற ஏடுகளைப் பாருங்கள்

விடுதலை, உண்மை, கீற்று, பெரியார் முழக்கம் இப்படித்தான் இருக்குமே தவிர, வடமொழியிலோ, ஆங்கிலத்திலோ இருக்காது.

அன்றைக்கு நாவலர் சாதியை கட்டிக்காத்த ஒருவர் என்று சொன்னோம். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றைக்கு "ஆறுமுகநாவலர்" என்ற பெயரில் இணைக்கப்படுகின்ற பதிவுகளை படித்தபின்பு அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற சுபவீ, பழநெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களோடு பேசினால் தந்தை பெரியார் பற்றியும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

கார்ல் மார்க்ஸை உலகின் பல இன மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உலகின் எத்தனையோ கட்சிகளுக்கு அவர்தான் மானசீகத் தலைவர். அவருடைய இனத்தை வைத்து அவரை யாரும் பார்த்ததில்லை. அவர் உலகிற்கு வழங்கிய சிந்தனைகள்தான் முக்கியம்.

அப்படித்தான் தந்தை பெரியாரும். அவருடைய சிந்தனைகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. தந்தை பெரியார் தமிழில் பேசி, தமிழில் சிந்தித்து வாழ்ந்த ஒரு மனிதர் என்பதில் எனக்கு பெருமை.

அதை விடுத்து அவர் தமிழராக இருந்தால்தான் நாம் அவரை ஏற்றுக்கொள்வோம் என்பது ஒரு வகையான இனவாதம்.

Posted

அன்றைக்கு நாவலர் சாதியை கட்டிக்காத்த ஒருவர் என்று சொன்னோம். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

சாதியைக் கட்டிக்காத்துக் கொண்டிருப்பது யார் ஈ.வே.ராவும் அவருடைய வழிதொண்டர்களுமே.

500 க்கும் மேற்பட்ட அருமையான கேள்வி பதில்கள் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடையில் இருந்து கொடுத்தேன். எத்தனையோ அருமையான செய்தி யிருக்க சபேசனுக்கும், நாரதருக்கும் சாதிப் பற்றிய கேள்வி தான் பெரிதாக பட்டது. அவர்கள் அதைத் தான் பிரபல படுத்தினார்கள். ஏன்?

பெரியாரின் அரசியல் வழித்தொண்டர்கள் இன்று நடுத்துவது சாதி சண்டை அரசியல் தான்.

வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தும் சாதி அடிப்படையில் தான்.

பெரும்பாண்மை ஜாதி இருக்கின்ற இடத்தில் அந்த சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் வேட்பாளாராக நிறுத்துகிறார்கள். ஏன் மற்ற சாதிகளை நிறுத்த வேண்டியது தானே!!!

பிறப்பு, இறப்பு, பள்ளி சேரும் போது எல்லாம் ஜாதி சான்றிதழ் கொடுப்பது யாரு உங்களது பெரியார் சார்பு அரசு தானே. பதவி யிருக்கிறது தானே! உடனே அதை எல்லாம் நீக்க வேண்டியது தானே!!!

எல்லாம் ஜாதியிலும் ஏழை பணக்காரன் உண்டு. ஏழைகளை உயர்த்த எல்லாம் சாதியினருக்கும் சலுகை கொடுக்க வேண்டும். உண்மை அது தான். ஆனால் இடஒதுக்கீடு என்று சாதி ரீதியாக பிரிப்பது ஏன்?

ஒவ்வொரு சாதி தலைவர் பெயரிலும் பேருந்து விட்டு, சாதி தலைவர் பெயரில் மாவட்ட பெயர் வைத்து இதெல்லாம் சாதி வேண்டாம் என்று சொல்பவர் செய்யும் செயலா???

ஒருவன் எந்த சாதியில் இருந்தாலும் சிவபெருமான் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தால் அவனை சைவ சமுகம் முழுதுமே அன்புடன் சிவனடியார் என்று தான் பார்க்கும். (ஆதாரம் 63 நாயன்மார்கள்)

எங்களுடைய சைவ மன்றங்களில் அனைத்து சாதியினரும் உண்டு. அனைவரும் சகோதர பாவத்துடன் பழகி வருகிறோம். ஆனால் எல்லோரும் தீட்சை எடுத்து சமயக் கட்டுப்பாடுகளுடன் நெறியில் நிற்கிறோம்

மேலும் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடையில் இருந்து சில குறிப்புக்கள்

344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?

அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும்.

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

ஆக சைவ சமயத்தில் சேர்ந்து தீட்சை முதலியவற்றை எடுத்து நெறியில் நின்றால் வாழ்க்கையில் தங்களை உயர்த்திக் கொள்ளலாம்.

சாதியை உருவாக்கியவர் பிராமணர்கள், ஆரியர்கள் என்று கலாய்த்துக்கொண்டிருப்பவர்க

Posted

தந்தை பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் செய்தது பொதுப்பணி. அரசியலில் ஈடுபட்டால், பொய் சொல்ல வேண்டி வரும் என்றும், மக்களை வழி நடத்துவது மாறி, மக்களின் வழியில் நடக்க வேண்டி வந்து விடும் என்று சொன்னவர். கொள்கைகளில் விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டி வரும் என்று சொன்னவர்.

அவர் சொன்னதை உண்மை என்பதை அவரிடம் இருந்து பிரிந்து போய் அரசியல் செய்பவர்களில் நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.

தந்தை பெரியாருக்கு "அரசியல் தொண்டர்கள்" என்பது கிடையாது. அரசியலில் இருப்பவர்கள் அவருடைய பெயரை சொல்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் செய்வதற்கும் பெரியாருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

அன்றைக்கு பெரியார் சொல்லை கேளாது போனவர்கள், இன்றைக்கும் பெரியாருக்கு முரண்பாடாக நடப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஆகவே அரசியல்வாதிகள் செய்கின்ற செயல்களுக்கு தந்தை பெரியாரை பொறுப்பாளி ஆக்குவது சரியல்ல.

நாயன்மார்கள் கதைகளை நாமும் அறிவோம். பெரும்பாலான நாயன்மார்களும் துன்பத்தில் வாழ்ந்து இறந்து போனார்கள். "சிவனடி சேர்ந்தார்கள்" ஒரு வசனத்தின் மூலம் அவர்களுடைய துன்பியிலான வாழ்வு மறைக்கப்பட்டது. சில நாயன்மார்கள் இந்து வெறியர்களால் கொலையும் செய்யப்பட்டார்கள். நந்தனார் ஒரு உதாரணம்.

நீங்கள் இப்பொழுது இணைத்த நாவலரின் கேள்விபதில்களும், அவர் வர்ணாச்சிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. "பிறப்பால் தாழ்ந்தவர்கள்" இருக்கிறார்கள் என்பதை அவருடைய பல கேள்விகள் பிரகடனப்படுத்துகின்றன. அவைகளில் இதுவும் ஒன்று.

அதே போன்று பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை மற்ற கேள்வி-பதில் சொல்கிறது. இவைகள் சாதியை வாழ வைக்கின்ற கேள்விகளே தவிர வேறில்லை.

Posted

கன்னட நாட்டார் ஈ.வே.ராவின் கொள்கைகளை அவருடைய வழித் தொண்டர்களே கைவிட்ட போது மற்றவர்களை அதைச் செய்ய சொல்வது எப்படி நண்பரே!

சில உண்மை தகவல்கள்

:unsure: கி.வீரமணி தற்போதைய தி.க. நடத்துனரின் மனைவி சுருளி சாமியார் என்றொரு சாமியாரின் தீவிர பக்தை.

சமீபத்தில் கி.வீரமணி வீட்டில் ஒரு சிவாசாரியார் கொண்டு கணபதி ஹோமம் செய்யப்பட்டது.

:( கி.வீரமணி சென்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்தார். அப்போது அம்மா ஜெயலித்தாவைப் புகழ்ந்து தள்ளினார். (அம்மா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்). அப்போது எங்கே போச்சோ பிராமண துவேசம். :D

Posted

நாயன்மார்கள் கதைகளை நாமும் அறிவோம். பெரும்பாலான நாயன்மார்களும் துன்பத்தில் வாழ்ந்து இறந்து போனார்கள். "சிவனடி சேர்ந்தார்கள்" ஒரு வசனத்தின் மூலம் அவர்களுடைய துன்பியிலான வாழ்வு மறைக்கப்பட்டது. சில நாயன்மார்கள் இந்து வெறியர்களால் கொலையும் செய்யப்பட்டார்கள். நந்தனார் ஒரு உதாரணம்.

என்ன வொரு அதீத மான கற்பனை வளம். ஐயா! அவ்வாறு செய்வதானால் ஏன் நந்தனாரை நாயன்மார்கள் வரிசையில் சேர்த்திருப்பார்களா? சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையில் அவர் இடம் பெற்று இருப்பாரா!!! (சுந்தரர் ஒரு அந்தணர். ). நண்பரே! தயவு செய்து இப்படி கேவலமான கற்பனை செய்யாதீர்கள்.

நாயன்மார்கள் சரித்திரம் முழுதும் படிக்க.

அப்பூதியடிகள் புராணம் படித்த துண்டோ? அவர் ஒரு அந்தணர் அவர் யாரை வழிப்பட்டு உய்வு அடைந்தார் தெரியுமா சூத்திரான திருநாவுக்கரசரை வழிபட்டுத் தான்.

சிவஞானிகளிடம் சாதி பார்க்கக் கூடாது.

மெய்கண்டார் அருள்நந்தி சிவாசாரியாருக்கு குரு. மெய்கண்டார் சைவ வேளாளர் மரபைச் சேர்ந்தவர்.

தமிழில் உள்ள ஒரே பாஷ்யம் எழுதியவர் மாதவச் சிவஞான சுவாமிகள். அவர் எழுதியது திராவிட மாபாஷ்யம். அவரும் சூத்திரரே.

ஆனால் இவர்கள் யாரையும் நாங்கள் சாதி கொண்டு பார்ப்பது கிடையாது. தங்களுடைய மனதில் தெளிவு ஏற்படுத்தவே இதைக் கூறுகிறேன்.

Posted

ஜெயலலிதா 69 வீத இடஒதுக்கீட்டு சட்ட அங்கீகாரம் கொடுத்ததால், வீரமணி ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

மற்றையபடி வீரமணி பற்றி நீங்கள் சொல்வது கட்டுக் கதை

ஆனால் நந்தனார் பற்றி நான் சொல்வது புதிய கதை அல்ல. நாயன்மார்களின் வரலாற்றில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.

அவர் சிதம்பரத்தில் கோயிலுக்குள் நுளைந்ததால், அங்குள்ள பிராமணர்களால் கடவுளின் பெயரில் எரித்துக் கொல்லப்பட்டார்.

அவரால் பூதவுடலை நீக்கி "புனித உடலை" பெற்ற பின்புதான் கோயிலுக்குள் நுளைய முடிந்ததாம்.

உங்களுடைய சைவ நூல்களில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.

நீங்கள் சொற்களுக்கு இடையிலும் வாசித்துப் பழக வேண்டும்.

Posted

பெண்கள் கற்புப் பற்றி தந்தை பெரியார் சொன்னதை முழுவதுமாக படித்துப் பாருங்கள்.

"ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவையில்லை" இதைத்தான் அவர் சொன்னார். இதில் என்ன தவறு?

நானும் சொல்கிறேன்: "ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவை இல்லை.

உங்கள் தந்தை பெரியார்(ஈ.வே.ரா.) சொன்னதை பகுத்தறிவோடு நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

பகுத்தறிவு பற்றி நண்பர் வானவில், ஜமுனா கூட அடியேனிடம் கேட்ட துண்டு அதற்கு ஒரு சிறு விளக்கம்.

நண்பரே! ஒரு கற்பனை

உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஒன்று ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை.

இருவரும் வளர்ந்து விட்டார்கள். மணப்பருவம் எய்தி விட்டார்கள்.

அப்போது உங்களுடைய மகன் தவறான வழியில் சென்று கற்பு இழ்ந்து விட்டு வந்துவிட்டார். அது உங்களுக்கு தெரிந்து விட்டது. உடனே அவரைக் கூப்பிட்டு அப்படி செய்வது தவறு என்று கூறி தண்டிக்காமல் உங்களுடைய பெண்ணைக் கூப்பிட்டு அம்மா என் தந்தை ஈ.வே.ரா கூறியிருக்கிறார்

"ஆணுக்கு கற்புத் தேவை இல்லை என்றால், பெண்ணுக்கும் கற்புத் தேவை இல்லை" என்று அதனால் நீயும் போய் கற்பு இழந்து வா என்றா கூறுவீர்கள்.?!!!?!!! :unsure:

சிந்திக்கவே அருவருக்கிறது. உங்களுடைய தந்தை பெரியார் கூறியிருப்பதுவும் இதுவே.

பகுத்தறியுங்கள்

கன்னட நாட்டான் இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க மாட்டக்கிறான்

அப்போது தமிழ் சமுதாயத்தை க் கேவலப்படுத்தி. தமிழ் மொழியை இழிவு படுத்திய ஒரு கன்னட காரனை தந்தை பெரியார் தந்தை பெரியார் என்று மார்போடு அனைக்கிறது தமிழ் சமுகம்.

பெரியோர் பெரியார் என்றால் ஆன்றோர்கள் என்று பொருள். தயவு செய்து ஈ.வே.ராமசாமி நாயக்கரை பெரியார் என்று கூப்பிட்டு தமிழில் அந்தச் சொல்லுக்கே இனியும் தமிழ் சமுகம் இழிவு படுத்த வேண்டாம்.

தமிழனே! விழித்து எழு!!

தன்னை காட்டுமிராண்டி என்று சொன்னவனையே தமிழ் உலகம் தலையில் வைத்துக் கொண்டு ஆடினால் நாளைய சரித்திரம் தமிழனைப் பற்றி என்ன பேசும்?

எழுமின்! விழுமின்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திருஞான சம்பந்தனார் எப்படி கொல்லப்பட்டார், குடும்பத்துடன் சோதியில் கலந்தாரா அல்லது கலக்கவைக்கப்பட்டாரா? திருமணப்பந்தல் எப்படி தீப்பற்றி எரிந்தது, அல்லது எரிக்கப்பட்டு சோதியில் கலக்கவைக்கப்பட்டாரா? அவர் செய்த தவறு என்ன தமிழில் தேவாரம் பாடியது குற்றமா? தமிழ் என்ன நீச மொழியா? தமிழனுக்கு தமிழில் தேவாரம் பாடினால் புரியுமா? அல்லது ஆடுமேய்க்கவந்த லம்பாடிகளின் சமஸ்கிருத மொழியில் பாடினால் புரியுமா? :angry: :angry: :angry:

Posted

நான் இப்பொழுது எழுதியதற்கு பதில் அளிக்கமால், முன்பு எழுதியதற்கு இப்பொழுது பதில் சொல்லி இருக்கிறீர்கள்

பறவாயில்லை.

உங்களுக்கு ஒன்றை விளங்கிக் கொள்ளும் தன்மை குறைவு என்று தெரிகிறது.

"ஆண்களுக்கு கற்பு தேவை இல்லை என்றால், பெண்களுக்கும் கற்பு தேவை இல்லை" என்பதும் நீங்கள் சொன்ன உதாரணமும் ஒன்று அல்ல.

தந்தை பெரியார் சொன்னதை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் யாருக்கு சொல்லப்படுகின்றது என்பதில்தான் உண்மையான அர்த்தம் தங்கி உள்ளது.

தந்தை பெரியார் சொன்னது பெண்களுக்கு அல்ல. அவர் ஆண்களை இலக்காக்கொண்டுதான் இதைச் சொன்னார்.

இது ஆண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையே தவிர, பெண்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரை அல்ல.

;ஆண்களும் பெண்களுக்கும் கற்பு பொதுவாக இருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல சிந்தனை.

இதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்

Posted

கண்ணா! சித்தன் வந்தாலும், நாரதர் வந்தாலும், சபேசன் வந்தாலும் யார் வந்தாலும் என்ன?

இனி தமிழர்கள் கன்னட ஈ.வே.ராவை தங்களது தலைவராக ஏற்றுக் கொள்ள போவதில்லை.

எங்களது சைவ சமயத்தின் நூல்கள் அனைத்தும் தமிழகம் முழுதும் பிரபலம் நீங்கள் கன்னட ஈ.வே.ராவின் கொள்கையை எந்த அவதாரத்தில் வந்தாலும் இனி ஏழு ஏழு உலகத்திலும் நிலை நிறுத்த முடியாது.

:unsure:

இது சத்தியம்.

கன்னடக்காரன் சாதி பிரிவினை வாதத்தைத் தூண்டி நம்முடைய தமிழனின் கலாச்சாரத்தையும் சமயத்தையும் அழிக்க முற்படுகிறான் ஜாக்கிரதை.................

Posted

இந்து மதம் பற்றி இந்தத் தளத்தில் பல முறை விவாதங்கள் நடந்தது உண்டு.

பல முறை இந்து மதம் குறித்து நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலாக, பெரியார் மீதான வசவுகளே பதிலாக வந்தன. ஏதோ கேட்டால், ஏதோ பதிலை சொல்லிவிட்டு போவார்கள். சம்பந்தமில்லாமல் தந்தை பெரியாரை தாக்குவார்கள்.

நீங்கள் வந்தீர்கள். ஆரம்பத்தில் மிகப் பொறுமையாக, பண்பாக "சிறிது பொறுங்கள், அனைத்துக்கும் பதில் சொல்கிறேன்" என்று சொன்னீர்கள். நாமும் சிறிது பொறுத்திருந்து கேள்விகளை கேட்டோம்.

கடைசியில் நீங்களும் மற்றவர்கள் மாதிரி பெரியாரை திட்டி விட்டு போகிறீhகள்

நீங்கள் எல்லோரும் எப்பொழுது நேரடியாக பதில் சொல்ல கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?????????????

Posted

சுயமரியாதையியக்க சூறாவளியில் கேட்கப்பட்ட நேரடி கேள்விகளுக்கான உங்கள் பதில் எங்கே?

கன்னட நாட்டு ஈ.வே.ரா பாதி நாள் குளிக்கவே மாட்டாராம். இதை அடியேன் சொல்ல வில்லை அவருடைய அடி பொடிக்களே சொல்லியுள்ளது.

எப்படி இருக்கிறது தமிழர் பண்பாடு.

தந்தை பெரியார் சொன்னது பெண்களுக்கு அல்ல. அவர் ஆண்களை இலக்காக்கொண்டுதான் இதைச் சொன்னார்.

இது ஆண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையே தவிர, பெண்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரை அல்ல.

கன்னட நாட்டார்கள் எதையும் நேராக சொல்லமாட்டார்கள் போல!!!!

எச்சரிக்கை என்றால் ஆண்களை கூப்பிட்டு அறிவுரை சொல்ல வேண்டுமே அன்றி பெண்களைக் கூப்பிட்டு கற்பு தேவையில்லை என்று கூறக் கூடாது.

சரி கன்னட நாட்டு வந்தேறி தான் கூறினார் என்றால் தமிழன் எல்லாம் வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா?

தமிழர்களில் சிலர் இன்னும் குஜா தூக்கிக் கொண்டு போகிறார்கள்!!!

தமிழர்களே!!!! நீங்கள் ஏன் பகுத்தறிய மாட்டக்கிறீர்கள்.

வயதான பிறகு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் கன்னட நாட்டார் ஈ.வே.ரா.

கோயிலுக்கு சென்ற மனைவியை ரவுடிகளை விட்டு இழிவாக பேச வைத்தார்.

எப்படி இருக்கிறது கலாசாரம் பாருங்கள்!!!

Posted

"எப்போதுமினியன்"

[சித்தாந்த சீலர் அ.ஞானசம்பந்தன், ஈரோடு]

"சைவத்தின் மேற்சம யம்வே றிலையதிற் சார்சிவமாந்

தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான் மறைச் செம்பொருள் வாய்

மைவைத்த சீர்திருத் தேவார முந்திரு வாசகமு

முய்வைத் தரச்செய்த நால்வர் பொற் றாளெம் முயிர்த்துணையே."

nalvar.jpg

இந்நிலவுலகத்திலே எண்ணிறந்தனவாகிய உயிர்கள் தம் கன்மத்துக் கீடாகச் சரீரம் பெற்றுப்பிறத்தற்கமைந்த தோற்றங்கள் முட்டையும், வேர்வையும், வித்தும், கருப்பையுமாக எண்ணப்படும் நால்வகைத்தோற்றங்களாம். இந் நால்வகைத் தோற்றத்தினின்று உண்டாம் பிறவிகள், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என எழுவகைப்படும். இவ்வெழுவகைப் பிறப்பினின்று உண்டாகும் உறுப்புப் பேதங்கள் எண்பத்து நான்கு நூறாயிரமாகும். இப்பேதங்களினின்றும் விரிந்த பேதங்கள் அளவின்றி உள்ளன. இவ்வகையமைந்த பிறவிகளிற்பட்டு உயிர்கள் பிறந்திறந்து துன்புறுந் தொழிலில் நிலைபெறுகின்றன. இப்பிறப்பிறப்புத் துன்பம், எண்ணிப்பார்க்கும் அறிவுடையார்க்குச் சகிக்கலாற்றாத தொன்றாகும். அங்ஙனம், எண்ணிப்பார்த்த தாயுமானச் செல்வனார்.

"இறப்பொடு பிறப்பையுள்ளே

எண்ணினா னெஞ்சது பகீரனுந் துயிலுறா

திருவிழியு மிரவு பகலாய்ச்

செந்தழலின் மெழுகான தங்கம்"

என்று தமதுநுபவத்தை யருளிச் செய்தார்கள்.

இங்ஙனம், பிறப்பிறப்புத் துன்பத்தை யெண்ணிப் பார்க்கும் அறிவாற்றலுடையவர்கள்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்" [திருக்குறள்]

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்

வேண்டின·தொன்றுமே வேண்டுவது - வேண்டினது

வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக

வேண்டாமை வேண்டுமவன் பால்" [திருக்களிற்றுப்படியார்]

"தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது

தூய பிறவாமை யொன்றே சோமேசா - வாயதனால்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்" [சோமேசர் முதுமொழி வெண்பா]

என்பனவாதிய உபதேச மொழிகளை உளத்திலே கொண்டு பிறப்பிறப்புத் துன்பம் தம்மைச்சாராதவண்ணங் காத்துக் கொள்ளுதற்குரிய உபாயத்தின்கண் நாட்டமுற்று. அ·தொன்றனையே வேண்டி நிற்பர்.

அல்லாதார்,

"பிறந்தன இறக்கும்

இறந்தன பிறக்கும்"

"தோன்றின மறையும்

மறைந்தன தோன்றும்"

என்ற நியதியின் வண்ணம்,

"இறப்பதற்கே தொழிலாகப் பிறந்தும்

பிறப்பதற்கே தொழிலாகி யிறந்தும்"

இங்ஙனம், ஒழிவின்றிப் பிறப்பிறப்புத் துன்பத்திற்பட்டு மீளாதுழல்பவராவர். இத்தன்மையரை நோக்கி, "பிறவி தீதெனாப் பேதையர்" என்றும்,

"அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருடெரிவ

தென்றளவொன் றில்லா விடர்" என்றும்

அருளாசிரியர்கள் இரங்கியருளினார்கள்.

இங்ஙனம், பிறப்பிறபிற்பட்டுழலுஞ் சுழற்சியை நீக்குதற்கு வாயிலாயமைந்தது மாநுடப்பிறவியொன்றேயாம். மேலே கூறப்பட்ட அளவிறந்த பிறவி பேதங்களில் மற்றைப்பிறவிகளெல்லாம் ஒழிந்து ஒரு உயிர் மாநுடப்பிறவியைப் பொருந்துதல் அவ்வுயிர்க்குப்பெரும் பேறாதலன்றி, அப்பேறு கடலைக்கையானீந்திக்கரையேறின

Posted

"சுயமரியாதையியக்க சூறாவளி" கடவுள் பற்றியும், ஆன்மா பற்றியும் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. அது பற்றிய விவாதம் இங்கே நடைபெறவில்லை.

அதிலே உள்ள கேள்விகளுக்கும் நான் கேட்கின்ற கேள்விகளுக்கும் எந்த சம்பந்தமும். என்னுடைய கேள்விகளுக்கு அதில் பதிலும் இல்லை.

ஆகவேதான் உங்களை நேரடியாக கேட்கிறேன். உங்களால் பதில் சொல்ல முடியாது விட்டால், அதை ஒத்துக் கொள்ளுங்கள்.

தந்தை பெரியார் "பெண்களுக்கு கற்புத் தேவையில்லை" என்று சொல்லவில்லை.

அத்துடன் "கற்பு" என்பது பற்றி பலவிதமாக சொல்லப்படுகிறது. "கற்பு" என்றால் என்ன என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதிலை யாரும் கொடுக்கவில்லை.

என்னுடைய கருத்து "கற்பு தேவையில்லை" என்பது அல்ல. "கற்பு என்கின்ற ஒன்று இல்லை" என்பது.

"கற்பு" பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு எழுமானால், தந்தை பெரியாரின் கூற்றை புரிந்து கொள்வீர்கள்.

கற்பு என்றால் என்ன என்பதற்கு தயவு செய்து உங்களுடைய கருத்தை கூறவும்!

முக்கிய வேண்டுகோள்: வட மொழியில் வெளியிட்டுள்ள சைவ வினா விடையை ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளீர்கள். தயவு செய்து தமிழிலும் தாருங்கள்!

Posted

சபேசன் !

கடவுள் இல்லை என்று கன்னட நாட்டார் ஈ.வே.ரா கூறினார்.

நீங்களும் ஆமாம் என்றீர்.

ஆன்மிக மனம் கமழும் தமிழ்நாட்டில் இன்று ஈ.வே.ரா வின் கூட்டம் அழிந்து விட்டது.

தமிழ் பெண்களுக்கு இலக்கணமாக கூறப்பட்ட கற்பை கன்னட நாட்டார் ஈ.வே.ரா இல்லை என்றார்

நீங்களும் ஆமாம் என்றீர்

எங்களுக்கு ஒரு சந்தேகம் நீங்கள் தமிழனா! கன்னடனா !! உண்மையை சொல்லுங்கள்.

கற்பு பற்றிய கேள்வியை சுயமரியாதை யியக்க சூறாவளியில் காண்க.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22797

Posted

அறிவும் திருவும்

(சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை)

உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும்.

மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம்.

உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். இவையிரண்டையும் தொடர்புப்படுத்திப் பொறி புலன்கள் என்று வழங்குவதுண்டு பொறிகளை வடமொழியில் இந்திரியங்கள் என்று சொல்லுவார்கள். புலங்களை விடயங்களென்றுரைப்பர். சித்தாந்த சைவ நூல்கள் ஆன்மதத்துவம் இருபத்துநான்கு எனக் கூறும். அவை பூதங்களைந்து, தன்மாத்திரைகளைந்து, கன்மேந்திரியங்களைந்து, ஞானேந்திரியங்களைந்து, மனம் அகங்காரம் புத்தி பிரகிருதி ஆகிய நான்கு என்பனவாம்.

இவற்றுள் ஞானேந்திரியங்களென்பன அறியும் பொறிகளும், கன்மேந்திரியங்களென்பன தொழில் செய்யும் பொறிகளுமாம். அறிவுப் பொறிகளான மெய், வாய், கண், மூக்கு செவிகளால் உற்றும், உண்டும், கண்டும், உயிர்த்தும், கேட்டும் அறிகிறோம். ஆகவே பொறிகளாகிய கருவிகள் கொண்டுதான் உயிர்கள் எவற்றையும் அறிகின்றனவென்பது விளங்குகின்றது. இப்பொறிகளில் ஏதேனும் ஒன்றோ, சிலவோ ஒரு சில உயிர்களுக்குக் குறையாக இருந்தால் அப்பொறி கருவியாக விளங்குகின்ற அறிவும் அவ்வுயிர்களுக்கு இல்லையாகிவிடும் என்பது உணரப்பெறும். அதனாலேயே மரம் முதல் விலங்கு வரையுள்ள உயிர்களைப் பொறியுண்மை அடிப்படையில் வைத்து ஐந்து வகையாகப் பிரித்துக் கண்டனர் நம் முன்னோர்.

புல்லும் மரமும் முதலியன உற்றறிவதாகிய ஓரறிவை மட்டும் உடையன. சிப்பியும், சங்கும் முதலியன உற்றும், உண்டும் அறியும் இரண்டறிவை உடையன, கறையானும் எறும்பும் முதலியன உற்றும், உண்டும், உயிர்த்தும் அறியும் முன்றறிவை உடையன. தும்பியும் வண்டும் முதலியன உற்றும், உண்டும், உயிர்த்தும், கண்டும் அறியும் நான்கறிவை உடையன. மக்களும், விலங்கு புள் முதலியனவும் உற்றும், உண்டும், உயிர்த்தும், கண்டும், கேட்டும் அறியும் ஐந்து அறிவை உடையன.

ஞானேந்திரியங்கள் கருவியாக அறியும் ஐவகை அறிவும் பறவை விலங்குகளோடொப்ப மனிதனுக்கும் இருப்பதனால், அவற்றை விட அவன் உயர்ந்தவன் ஆதலுக்கு அவனிடம் அமைந்திருக்கின்ற பகுத்தறிவே காரணமாயிருக்கின்றது. இதனாலேயே கம்பர் "தக்க வின்ன தகாதன வின்ன வென் றொக்க வுன்னல ராயினு யர்ந்துள மக்களும் விலங்கே" என்று கூறினார்.

மற்றை உயிரினங்களிலிருந்து பிரித்தெடுத்து மனிதனை உயர்ந்தவனாகச் செய்கின்ற பகுத்தறிவு மனம் கருவியாக நிகழுவதாகும். மனத்தால் நினைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருப்பதனாலேயே 'மன்' என்ற பகுதியினடியாகப் பிறந்த மனிதன் என்ற பெயர் அவனுக்கு உரியதாக ஆயிற்று. இதுகாறும் கூறியவற்றால் ஐம்பொறிகளின் வாயிலாக அறியும் அறிவைவிட மனதைக் கருவியாக வைத்து அறியும் பகுத்தறிவு சிறந்ததென்பது நன்கு பெறப்படும்.

இனி இவ்வறிவின் இன்றியமையாமையைப் பற்றிக் கல்வி கேள்வி முதலிய அதிகாரங்களில் காரணகாரியப் பொருள்படவும், அறிவுடைமை என்ற அதிகாரத்தில் தூலமாகவும், மெய்யுணர்தல் முதலிய அதிகாரங்களில் சூக்குமமாகவும் திருவள்ளுவர் வற்புறுத்தியிருப்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். 'சென்ற விடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.' எனவும் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' எனவும் "எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு, அவ்வது உறைவது அறிவு" எனவும் உள்ள திருக்குறள்கள் இடையீடின்றி நமது நினைவிலிருக்க வேண்டியனவாகும்.

எதிர்காலத்தைப் பற்றி யறிந்து நடக்கின்ற இயைபு அறிவுடையவர்களுக்கே அமையும். ஏனை எதுவுமில்லாதவராயினும் அறிவுடையார் எல்லாம் உடையவராவர். பிற அனைத்தும் உடையவரேனும் அறிவில்லாதார் எதுவும் இல்லாதவரேயாவர். அறிவு அனைத்தையும் படைத்துக் கொள்ளுதற்கும், காப்பாற்றுதற்கும் கருவியாயிருந்து பயன்படுதலின் அதிற் சிறந்தவொன்று பிறிதில்லையென்று ஆன்றோர் கூறினர்.

இனி அறிவைப் பாச அறிவென்றும், பசு அறிவென்றும் பதியறிவென்றும் மூவகைப் படுத்திச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும் உண்மையும் இங்கே சிந்திக்கத் தக்கது. உலக வாயிலாக வரும் அறிவு பாச அறிவாகும். சித்தும் சடமுமாகக் கூடியுள்ள இவ்வுலகத்தில் தாமே இயங்குவன. சித்துப் பொருள்கள். பிறர் இயக்க இயங்குவன சடப்பொருள்கள். புறக் காட்சியில் சடப்பொருள்களைத்தான் காண முடியும் சித்துப் பொருள்கள் புறக் காட்சிக்கு வரமாட்டா.

சித்துப் பொருள்கள் சடப்பொருள்களிற் கலந்து அவையேயாய் நிற்பது இயல்பு. 'ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும், வேற்றுமை நயத்தின் வேறே உடலுயிர்' என்றது நன்னூல். சடங்களாகிய புறக்காட்சிப் பொருள்கள் பற்றி அறிகின்றவரையே இக் காலத்துப் பெரும்பாலோர் அறிஞரென்று மதிக்கின்றார்கள். சித்துப் பொருளாகிய உயிரைப் பற்றி அறிந்தவர் சடப்பொருள் அறிஞர்களைவிட ஒருபடி உயர்ந்தவரென்பதும் சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய இறைவனைப் பற்றி அறிந்தவர் இவ்விருவரிலும் மேம்பட்டு விளங்குபவரென்பதும் உணர்த் தக்கனவாகும்.

அறிவே திருவுக்கு அடிப்படையாயிருந்து உதவும்.

திரு, என்பது உலகியலிற், பொருட்செல்வத்தையும், இறையியலில் முத்தியையும் குறிக்கும். உலகியலறிவு உலகியற்றிருவைப் பெருதற்குத் துணை செய்வதுபோல் இறையியலறிவு எனப்படுகின்ற சிவஞானம் இறையியற்றிருவாகிய முத்தியைப் பெறுதற்கு வழிசெய்து தரும். இந்தச் சிவஞானமே திருவள்ளுவரால 'மெய்யுணர்வு' என்று குறிக்கப் பெறுவதாகும். இதனை 'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்தலைப்படுவர். மற்றீண்டு வாராநெறி' என்ற திருக்குறளால் அறியலாம்.

திரு என்ற சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படுவது, என்று பொருளுரைத்தார் பேராசிரியர் உலகியலில் அந்தத் தகுதியையுடையது பொருட் செல்வமாதலின் அதனைத்திரு என அழைத்தார்கள். "பொன்னு மெய்ப்பொருளுந் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை" என்பது நம்பியாரூரர் திருவாக்கு. இங்கு பொன்னென்று உலகத்திருவும் மெய்ப் பொருளென்று அருட்டிருவும் குறிக்கப் பெற்றுள்ளன. அதனாலேயே உலகத் திருவின் பயனாகக் கிடைக்கின்ற போகம் முதலாவதாகவும் அருட்டிருவின் பயனாகக் கிடைக்கின்ற முத்தித்திரு இரண்டாவதாகவும் கூறப் பெற்றன.

அம் முத்தித்திருவைச் சென்றடையாத திருவென்று ஆளுடைய பிள்ளையாரருளுவார். எனவே சென்றடைகின்ற திரு உலகத்திரு என்பது புலப்படும். சென்றடையாத திரு என்பது உயிர்கள் தாமாகச் சென்றடைய முடியாத திரு என்னும் பொருளிலுள்ளது ஆண்டவனது திருவருள் கூட்டினாலன்றி அத்திருவை அடைய முடியாது என்பது கருத்து.

'அவனருளே கண்ணாகக் காணினல்லால்' என்ற தேவாரமும் 'காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டு பர, வீட்டின்பமெய்ப்பொருளை மேவுநாளெந் நாளோ' என்ற தாயுமான அடிகள் திருவாக்கும் இங்கே நினைவு கொள்ளற் பாலனவாம்,

thayumanavar.jpg

உலகத்திருவையும், முத்தித் திருவையும் பெறுவதற்கு அடிப்படையாயிருந்து உதவினாலன்றி அறிவினால் ஏதும் பயனில்லை.

அறிவு அதனளவில் நின்று அறிஞர் என்று பெயர் வாங்கித் தந்தால் மட்டும் போதாது என்பதை 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்ற குறளில் குறிப்பாலுணர்த்தி யருளினர் திருவள்ளுவர்.

Siva.jpg

உயிர்களுக்கு இயல்பாய் அமைந்த இயற்கையறிவும் கல்வியால் வருகின்ற செயற்கையறிவும் ஆண்டவனது திருவடியை அடைவதற்குத் துணை செய்யாத பொழுது அவற்றால் பயனில்லை என்பதை இதனாலறிகின்றோம். பிறவிப் பெருங்கடலில் நீந்திப் பேரின்பக் கரையை அடைதற்கு இறைவனடி சேர்தலே ஏற்றதெனக் கடவுள் வாழ்த்தின் இறுதிக் குறள் அறிவிக்கின்றதாதலின் தாள் தொழுதலால் வரும் பயன் முத்தித் திருவே என்பது பெறப்படுகின்றது. மக்களுக்கு வாய்த்துள்ள அறிவு அதன் பயனாகிய இருவகைத் திருவையும் அடைதற்குத் துணையாயிருந்து உதவுதல் வேண்டும்.

நலம் பெருகுக.

Posted

70. ஆடவர்க்குங் கற்பொழுக்கம் ஏன் வேண்டாமெனவாதிப்பீராயின் பிள்ளைப் பேற்றுக்கு மூலமாய அவரும் அவ்வீதியிற் கட்டுண்டாராயின் ஜன சங்கியா விருத்தியில் மண்விழாதா?

71. பிள்ளை பிறந்த பிறகு தாய்க்கு உளதாகும் புத்ர வாத்ஸல்யமும், பிள்ளைக்கு உளதாகும் மாத்ரு பக்தியும், அவ்விருவர்க்கும் உளதாகும் மாதா புத்ரவுறவும் தந்தையின் கற்புச் சிதைவதாற் கெடுமா?

72. தன் மூலம் பிள்ளை யுதியாதபடி தடை செய்துகொண்டு சாத்தன் இன்பத்தின் பொருட்டுக் கொற்றன் மனைவியைப் புணரலாமென்பீராயின் அவ்வின்பத்தை விரும்புபவர் கொற்றன் மனைவியா? சாத்தனா?

A..

73. கொற்றன் மனைவியெனின் ஆண் தயவை யெதிர்பார்த்துப் புணரும் எளிமையிலுள்ள பெண்ணாகிய அவள் 'உன் மூலம் என் வயிற்றிற் பிள்ளை யுதியாதப்டி ஏதேனுந் தடை செய்து கொண்டு என்னைப் புணர்' என்று அச்சாத்தனுக்கு நிபந்தனையை விதிக்க முடியுமா?

74. அவள் கற்பரசியயின் தன் கணவன் பிள்ளைப் பேற்றோடு புணர்ச்சி யின்பத்தையுங் கொடுத்துவரும்போது அயலாரின் நாடமாட்டாளென்பதை யறிவீரா?

75. மேலும் அவளுக்குப் பிள்ளைப் பேற்றினும் புணர்ச்சியின்பம் ப்ரிதெனவே தோன்றாதென்பதும் உமக்குத் தெரியுமா?

B.

76. சாத்களெனின் 'என் மூலம் பிள்ளை யுதியாவண்ணந் தடை செய்துகொண்டு நான் உன் மனைவியை புணர்வேன்' என்று கொற்றனுக்கே நேரில் அவன் தடையுறுதியைச் செய்து கொடுக்க வேண்டுமன்றா?

77. கொற்றன் மனைவியும் சாத்தனும் புணரும் போதெல்லாம் பேற்றுத் தடையோடு புணர்கின்றனராவென்று காணக் கொற்றன் கண்விழித்துக்கொண்டே யிருக்க வேண்டாமா?

X.

78. சாத்தன் தன் மனைவியையும் அவ்வாறே பிறனுக்குக் கொடுக்க இசைவானென்பது பெறப்படவில்லையா?

இவைகள் எனக்கு உண்மையாகவே விளங்கவில்ல. சற்று விளங்கப்படுத்துவீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.