Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:51 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன்,

சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. நிச்சயமாக மேலும் பல தாக்குதல்கள் நடைபெறும் என்றார்.

இதனிடையே கொழும்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பகுதியில் உள்ள தனது பிரதான எண்ணெய்க் களஞ்சியத்தை தாற்காலிகமாக மூடுவதாக றோயல் டச்சு செல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சிறிலங்காவின் பங்கு வர்த்தகமானது இன்று திங்கட்கிழமை படுவீழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையானது ஒரே மாதத்தில் கொழும்பில் மூன்று வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka Tiger rebels warn more air attacks to come

Mon Apr 30, 2007 3:33AM EDT

COLOMBO, April 30 (Reuters) - Sri Lanka's Tamil Tigers warned on Monday their nascent air wing would launch more aerial attacks after a weekend raid on oil facilities near the capital, as the military claimed it killed 14 insurgents overnight.

Royal Dutch Shell's local arm said it had temporarily closed its main storage facility 12 miles (20 km) north of Colombo after Sunday's pre-dawn raid damaged its fire fighting system. But the British-Dutch oil major said its storage tanks were intact and that supplies had not been disrupted.

Sri Lankan shares fell in early trade on Monday while the local rupee hit a new intraday low against the dollar as Sunday's raid, the rebels' third in a month, sent jitters through the markets.

"The Sri Lankan military, especially the air force, are adamantly trying to prove they will always seek a military solution," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from the northern rebel stronghold of Kilinochchi.

"So we have no other way than to take our own measures," he added. "There will definitely be more. We have no choice other than striking back."

Sunday's pre-dawn air raid triggered panic in the capital as air defences plunged Colombo into darkness and tracers and rockets streaked through the night sky, forcing bars cram-packed with fans watching their side battling in the cricket World Cup cricket final to close abruptly.

Ilanthiraiyan said the timing was a coincidence. Sri Lanka's military, which is pushing on with a declared plan to destroy the Tigers' military assets in a bid to end a two-decade civil war that has killed around 68,000 people since 1983, vowed to wipe out the fledgling rebel air wing.

"This is a new dimension," said military spokesman Brigadier Prasad Samarasinghe. "We are trying to get some more advanced systems."

"To neutralise them either in the air or on the ground ... is a requirement."

Samarasinghe said troops killed 14 Tiger fighters in a series of clashes on Sunday in the northern districts of Mullaithivu, Jaffna and Mannar, where fighting is now focused after the capture of the rebels' eastern stronghold.

The Tigers, who want to carve out an independent state for minority Tamils in the north and east, said they had no details of any such clashes. The foes often contradict each other's accounts of incidents in a parallel propaganda war.

Analysts say the Tigers' home-grown air wing, made up of small acrobatic propeller planes adapted to carry bombs, while tiny poses a threat that should not be taken lightly. Some experts are dumbfounded at how the rebels have managed to fly away safely after each sortie.

International airlines Cathay Pacific and Emirates both suspended flights in and out of Colombo on Sunday at a time when many flights are already half full because tourists are wary to visit during a conflict that is escalating and spreading.

"Although the LTTE's acquisitions appear primitive, they have clearly demonstrated through their last four sorties the helplessness of the government to protect its own airspace," said Iqbal Athas, an analyst with Jane's Defence Weekly.

"The air force still doesn't appear prepared to meet with the air threat from the LTTE." (Additional reporting by Ranga Sirilal)

http://www.reuters.com/article/homepageCri...54205._CH_.2400

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்போடு அரிவாளை

நீ போட்டா நானும் போடுவன்

நிற்பாட்டு நிற்பாட்டுறன்

வாழு வாழவிடு

இல்லையானால் நீயும் வாழமுடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான் தாக்குதல் தொடரும்: புலிகள் எச்சரிக்கை

ஏப்ரல் 30, 2007

கொழும்பு: வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று விடுதலைப் புலிகள் இலங்கையை எச்சரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் தங்களது வான்வழித் தாக்குதல்களை அடிக்கடி நடத்த ஆரம்பித்துள்ளனர். இதுவரை மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், விமானத் தாக்குதல் தொடரும் என புலிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புலிகள் அமைப்பின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இனப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என இலங்கை ராணுவம், குறிப்பாக விமானப்படை பிடிவாதமாக உள்ளது.

எனவேதான் எங்களுக்கு விமானத் தாக்குதலை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது. இத்தோடு நிற்க மாட்டோம். இன்னும் நிறையை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். எங்களுக்குத் திருப்பி அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது தாக்குதல் நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று என்றார் இளந்திரையன்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை சமாளிக்க மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார். இனப் போரில் இது புதிய பரிமாணமாக உருவெடுத்துள்ளது.

இதை சமாளிக்க சில நவீன ஏற்பாடுகளை இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. அவர்களின் வான் பலத்தைக் குறைப்பதே இப்போதைய முக்கிய வேலையாகும் என்றார்.

இதற்கிடையே, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராயல் டச் ஷெல் நிறுவனம் கொழும்பு அருகே உள்ள தனது எண்ணைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது. புலிகளின் 3வது விமானத் தாக்குதலில் இந்த நிறுவனத்தின் எண்ணை கிட்டங்கி சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தொடர் தாக்குதல் காரணமாக இலங்கையில் பங்குகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்துள்ளது.

இந்த நிலையில், புலிகளிடம் தற்போது சாதாரண இலகு ரக விமானங்களே உள்ளன என்றாலும் கூட அவற்றை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என ஜேன்ஸ் வீக்லி நிறுவனத்தின் ஆயுத ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், புலிகளிடம் இருப்பது மிகவும் சிறிதான விமானம்தான். ஆனால் அதற்காக அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறிய விமானமாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதைக் கொண்டு அழிவை நாம் தீர்மானிக்க முடியும்.

புலிகள் மிகவும் திறமையாக அவற்றை இயக்குகிறார்கள். வந்த வேகத்தில் தாக்குதலை நடத்தி விட்டு மின்னலென போய் விடுகிறார்கள். அவர்களை இலங்கை படையினரால் சமாளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் விமானத் தாக்குதலை இலங்கை பாதுகாப்புப் படையினரால் சமாளிக்க முடியவில்லை, அதற்கு அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே கடந்த 3 தாக்குதல்களும் நிரூபித்துள்ளன என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/30/ltte.html

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகளின் வருகை புலிகளுக்கு கிடைத்த வார்த்தையில் வர்ணிக்கமுடியாத மிகப்பெரிய பொக்கிசமெ, கட்டுநாயக்கா, பலாலி, கொலன்னாவ போன்ற இடங்களில் தாக்குதல்களை ஒரு மாதத்திற்குள் நடாத்தி முடித்திருக்கிறார்கள் எண்டால் வான்புலிகளின் வருகையே காரணம், இதனால் தமிழீழத்தின் விடிவெள்ளிகளான, கரும்புலிகளை இழப்பதை தவிர்த்து இருக்கின்றார்கள்.

தூர நோக்கு கொண்ட தேசிய தலைவரின் சிந்தனையில் உள்ளவை இப்பொழுதும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தமிழன் அனுபவிச்ச கொடுமையில் 30% சிங்கள தேசமும் அனுபவிக்க தொடங்கிவிட்டது. :blink:

அது இருக்க!!

எனி நம்ம (அதுதான், ஈபிடிபி, கறுனா, மதிவத*** அடச்சா பழக்கதோசத்தில இந்த ஜென்மத்தையும் ஒரு மனிசனா கனக்கு பன்னிவிட்டன் சாறி, புளெட் சித்தார்த்தன் கும்பல்) முகாம்களை, தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லனும் போல இருக்கு, பின்ன அதி உயர் பாதுகாப்பு வலையத்துக்குள்ளேயே பல மணித்தியாலங்கள் துணிவாக நின்று குறி தவறாமல் குண்டுகளை போட்ட வான்புலிகளுக்கு நெடுந்தீவில உள்ள நம்ம முகாமும், சிறிதர் தியெட்டர், கரவெட்டி ஜனநாயக மாட்டுறைச்சிகடை, அப்புறம் மட்டக்களப்பில உள்ள முகாம்கள் மீது ஒரு கிறினைட்டை போட்டாலே போதும், நம்ம பெடியளுக்கு (ஈபிடிபி,) காட் அட்டாக் வந்து மண்டையை போட்டுடுவாங்க, அம்மா ஜெயலலிதாவே நமக்கும் (ஈபிடிபி, புளெட் சித்தார்த்தன் கும்பல்) திரும்பவும் பாதுகாப்பு தாருமம்மா...:lol:

மக்கள் மீதான வான் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எமது வான் தாக்குதல்களும் தொடரும் - இளந்திரையன்

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் சிறீலங்காப் பகுதிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நிர்வாகம் இராணுவத் தீர்வில் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடும் போது விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழிகளை சிறீலங்கா அரசாங்கம் விட்டுவைக்கவில்லை.

குறிப்பாக சிறீலங்கா வான்படைகளின் யுத்த விமானங்கள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடாத்தி பொதுமக்கள் மீது பெரும் அவலநிலையை உருவாக்கியுள்ளது.

சிறீலங்கா வான்படைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை எமது வான் தாக்குதல்களும் தொடரும் என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

தயவு செய்து யாராவது மகிந்த எண்ட மந்தியிட்ட சொல்லுங்கோ.

படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனும்,அரசியதுறைப் பேச்சாளர் தமிழ்ச்செல்வனும் விடுகிற அறிக்கைகளைச் இனியாவது செவிமடுக்கச்சொல்லி... :lol:

தயவு செய்து யாராவது மகிந்த எண்ட மந்தியிட்ட சொல்லுங்கோ.

படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனும்,அரசியதுறைப் பேச்சாளர் தமிழ்ச்செல்வனும் விடுகிற அறிக்கைகளைச் இனியாவது செவிமடுக்கச்சொல்லி... :lol:

என்ன சொல்லுறீங்கள் ஒன்றும் புரியலை வாய அசைக்காம விஷயத்த சொல்லுங்கோ :D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து யாராவது மகிந்த எண்ட மந்தியிட்ட சொல்லுங்கோ.

படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனும்,அரசியதுறைப் பேச்சாளர் தமிழ்ச்செல்வனும் விடுகிற அறிக்கைகளைச் இனியாவது செவிமடுக்கச்சொல்லி... :D

நான் தமிழ்ச்செல்வன் அண்ணை அரசியல் துறைப்பொறுப்பாளர் என்றெல்லே நினைச்சுக்கொண்டு இருக்கிறேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.