Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

480 மில்லியன் டொலர்களை அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்

Featured Replies

சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்

இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து  இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் குறிப்பிட்ட உடன்படிக்கை வெளிப்படையானது  இலங்கை மக்களிற்கு ஜனாதிபதி வழங்கமுயலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா வெளிப்படையான இணைப்பினை பேணவிரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

40 வருடகால அரசியல் அனுபவமுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முதலீடுகள் குறித்து நன்கு தெரிந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கை மூலம் 480 மில்லியன் டொலர்களை அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் கடனாக வழங்கவில்லை எனவும் அலைனா டெப்பிளிட்ஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/61374

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா என்று பொதுவாகவோ அல்லது அமெரிக்க அரசு என்றோ குறிப்பிட்டு இலங்கையரசுக்கு நன்கொடை வழங்குகிறது என்று சொல்வதை மாற்றி விடையத்தை செய்திரீதியாக மென்மைப்படுத்தி உடன்படிக்கையின் நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் இலங்கைமக்கள் நல்ல கண்ணோட்டத்துடன் நோக்கவேண்டும் என்பதற்காகவே செய்தியில் "அமெரிக்க மக்கள்" இலங்கைக்கு நன்கொடை வழங்குகிறார்கள் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இலங்கைக்கு வில்லங்கமான ஒன்றாகவே இருந்தாலும்கூட வழங்கப்படும் தொகை  குறிப்பிடப்படியாக பெரிய தொகையுமல்ல. வழங்கப்படும் தொகை ஏன் வழங்கப்படுகிறது - இதை அமெரிக்க மக்களின் திட்டமாக காட்டிக்கொள்வதற்கு அமெரிக்க அரசு ஏன் இந்தளவு பிரயத்தனம் எடுக்கிறது என்பது போன்ற பல தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

குறிப்பிட்ட உடன்படிக்கை மூலம் 480 மில்லியன் டொலர்களை அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் கடனாக வழங்கவில்லை எனவும் அலைனா டெப்பிளிட்ஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்கொடையாகவே சீனா சில பண உதவிகளை சொறி சிங்கள அன்றி ஆபிரிக்க நாடுகளிலும் செய்கிறது.

சீனாவின் நன்கொடையை மேற்கு ஊது குழல்கள், forbes, cnn, times, economists, லஞ்சம் என்றும், அந்ததந்த நாடுகளில் சீன ஊழலை ஊக்குவிக்கிறது என்றும், சீர்திருத்தங்களை தடுக்கிறது என்றும் கூக்குரல் எழுப்புகின்றன.

அமெரிக்கா தூதுவரின் குரலில் ஓர் பரிதாகாரமான தொனி, அமெரிக்க மக்களின் குரல் கேட்கிறதா எனும் பாணியில் தொனிக்கிறது.

அமெரிக்காவுக்கு வசதியாக தான் MCC உடன்படிக்கை உள்ளது. ஏப்ரல் 27 ஆம் திகதி கையெழுத்து போட்டு விட்டார்கள் என்றும் ஒரு கதை. அது பற்றி உறுதியாக தெரியவில்லை.

MCC உடன்படிக்கை பற்றி முன்னர் கூறப்பட்ட சில விடயங்கள்.

The MCC Sri Lanka Compact is designed to expand economic opportunities and reduce poverty through economic growth. 

The compact aims to promote an environment that supports equity and freedom for the Sri Lankan people as the Government of Sri Lanka maintains its commitment to democratic institutions, pursues sound economic policies, and invests in the welfare and health of its people.

The Compact seeks to assist the Sri Lanka Government in addressing two of the country's binding constraints to economic growth: (1) inadequate transport logistics infrastructure and planning; and (2) lack of access to land for agriculture, the services sector, and industrial investors. 

The Compact will be composed of two projects: a Transport Project and a Land Project. 

The Transport Project aims to increase the relative efficiency and capacity of the road network and bus system in the Colombo Metropolitan Region and to reduce the cost of transporting passengers and goods between the central region of the country and ports and markets in the rest of the country.

The goal of the Land Project is to increase the availability of information on private land and underutilized state lands or all land in Sri Lanka to which the Government is lawfully entitled or which may be disposed of by the Government ("State Lands") in order to increase land market activity. The Land Project would increase tenure security and tradability of land for smallholders, women, and firms through policy and legal reforms.

http://www.colombopage.com/archive_19A/Apr26_1556286277CH.php

  • தொடங்கியவர்

இந்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இலங்கை அதிருப்தி

இந்திய பட்ஜெட்டில் ஏனைய நெருங்கிய அயல் நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட நிதயுதவி மிகவும் சிறியதாக இருப்பது குறித்து அரசாங்கம் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளதாக இந்தோ – ஏசியன் செய்திச்சேவை அறிவித்திருக்கிறது.

இலங்கை இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு மிக நெருக்கமாக இருக்கின்ற நாடு என்பதுடன் பல நூற்றாண்டுகால நெருங்கிய உறவுகளையும் கொண்டுள்ள நாடு என்கிற அதேவேளை, மொரீசியஸ் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகுளை விடவும் இலங்கைக்குக் குறைவான நிதியே இந்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருட பட்ஜெட்டில் இந்து சமுத்திர நாடுகள் என்று பார்க்கும் பொழுது மொரீசியஸும் மாலைதீவுமே கூடுதல் நிதியை இந்தியாவிடமிருந்து பெறுகின்றன.

கடந்த வருடம் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் இலங்கைக்கு 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மொரீசியஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகை இவ்வருடம் 1100 கோடி ரூபாவாகும். கடந்த வருடம் மொரீசியஸுக்கு 350 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது. மாலைதீவில் தற்போது இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைக் கொண்ட ஜனாதிபதி மொஹமட் சோலியின் அரசாங்கம் பதவியிலிருக்கும் நிலையில், 576 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் மாலைதீவுக்கு 125 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.

பூட்டானுக்கு அடுத்ததாக இந்தியாவின் கூடுதல் உதவியைப் பெறுகின்ற இரண்டாவது நாடு மொரீசியஸ் ஆகும். நேபாளத்திற்கு அடுத்ததாக மாலைதீவு நான்காம் இடத்திலேயே இருக்கிறது.

இலங்கை புவிசார் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நாடாக இருக்கின்ற போதிலும் கூட உதவி ஒதுக்கீட்டில் காணப்படுகின்ற இந்தக் குறிப்பிடத்தக்க வித்தியாசம் கொழும்பை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக அறியமுடிகிறது.

இந்தியா இத்தடவை பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி தமது தேவைக்குப் பொருத்தமானதாக இல்லை என்று கொழும்பு உணர்வதுடன், இந்தியா அந்தத் தொகை குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரியவருகிறது.

https://www.virakesari.lk/article/61481

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.