Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமக் கட்டுப்பாடு

Featured Replies

காமக் கட்டுப்பாடு

14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது.

காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திரிமார் முதலிய பெண்டிர் இருக்கின்றனர். அடிக்கடி அவரைச் சந்திக்கிறான், அவரோடு அளவளாவுகிறான் அவன். அவன் ஒழுங்கீனனாயிருந்தாலுங் கூட அவரைச் சிறிதுங் காமக்கண்கொண்டு பாரான். சாத்தியும் ஒரு குடும்பப்பெண். அவளும் தன் தமையன் தம்பியாதியோரை அக்கண்கொண்டு பார்ப்பதில்லை. காமம் பொல்லாதது, ஆயினுங் கட்டுக்கடங்குவதே என்பது அதனால் தெரிகிறது. காமம் இயற்கையுணர்ச்சி, அதனைக் கட்டுப்படுத்தக் கூடாது, முடியாது எனப் பேசித்திரிபவன் சம்சயத்துக் கிடமாவான்.

மண் பெண் பொன் என ஆசைகள் மூன்று. ஆண் எனவும் ஓராசை சொல்லப்படவில்லை. 'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு மொண்டொடிக் கண்ணே யுள' என்றார் திருவள்ளுவர். அவ்வனுபவம் பெண்டிர்க்கு ஆடவரிடம் உண்டு என அவர் பாடிலர். அதனால் பெண்டிர் கலியாணஞ் செய்து கொள்வதற்கு முன் காதலென்ற பேராலும், கலியாணம் ஆன பிறகு கணவன் ஆண்டுக்கணக்கில் வெளியூர் சென்று பிரிந்திருக்குங் காலத்தில் மறைந்த வெறியாலும், இள விதவையராய் விட்டால் அடங்காமையாலும் வரம்பழிந்து மானங்கெடமாட்டார் என்பது தெரிகிறது. கலியாண மாகாத பெண்கள் காதலை இலட்சியமாக வைத்து மகாநாடுகள் கூட்டிக் காதல்மண உரிமைத் தீர்மானம் போட்டனர், இளவிதவைகள் மகாநாடுகள் கூட்டி இரண்டாவது மூன்றாவது ஆடவரோடு வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொள்ளும் உரிமைத்தீர்மானம் போட்டனர் என்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றனவா? பொதுவாகப் பெண்டிருள்ளம் லஜ்ஜைக் கிடமானது. அ·தவர்பால் காமத்தைத் தலைதூக்க விடாது. 'இவ் விஷயத்தில் பெண்களை விட ஆடவரே பெரிய குற்றவாளிகள். காமத்தினால் கண்மண் தெரியாது போகும் ஆடவன் ---', 'ஆடவன் பெண்ணின் நன்மையைக் கோருவதானால் தன்னை அடக்கிக் கொள்ளட்டும். வலிய வந்து இழுப்பது அவளல்ல, அவனேயாகையால் உண்மையில் குற்றவாளி அவனே', 'ஆடவனைப் போல் பெண்ணுக்கு அவ்வளவு சிற்றின்பப் பைத்தியம் உண்டென்று நான் எண்ணவில்லை. புலன்களை அடக்குதல் அவனைவிட அவளுக்குச் சுலபம்', 'என்னிடமுள்ள ஆதாரங்க ளெல்லாம் பெண்ணைவிட ஆணுக்கே தன் ஆசைகளை அடக்கும் சக்தி குறைவு என்பதைக் காட்டுகின்றன' என்றார் காந்தியார். அத்தகைய பெண்ணுலகிற்குப் பரிந்து பேசச் சில ஆடவர் தலைப்பட்டிருக் கின்றனர். காதல் மணமே சிறந்தது. இள விதவைகளினுணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது அக்கிரமம் என்றெல்லாம் ஆர்ப்பரிக்கின்றாரவர். பல பெண்கள் தம் பெண்ணியலிலிருந்து நழுவுவதற்கு அதுவே காரணம். ஆயினும் கலியாணம் ஆகாத காலத்தும், கணவன் பிரிந்திருக்குங் காலத்தும், இளமையில் வைதவ்வியம் அடைந்த காலத்தும் தம் பிறப்புரிமையாகிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பெண்ணியல்பால் மேம்பட்டு உத்தமிகளாய் வாழ்ந்து வரும் பெண்ணரசிகள் இலட்சோப லட்சமாக இன்றும் உள்ளனர்.

'ஒருவன் தன் மிருக விச்சைகளை முழுதும் அடக்கியாகிவிட்டால் அவனுக்குத் தெரியாமலே வீரியம் போவதற்கு இடமில்லாமற் போய்விடவும், போகவிச்சையினால் கூடுதல் அறவே நின்று போகும். அப்பொழுதுபிள்ளை வேண்டுமென்ற ஆசை பிறக்கையில் மட்டுமே கலவி நடக்கும். இல்லற பிரமசரியம் எனப்படுவது இதுவே. அதாவது, இந்த விதியின்படி நடப்பவன் இல்லறத்தி லிருப்பினும் சுகபோகத்தில் சிறிது ஈடுபடாதவன் நிலையை எய்தி, அவனுக்குச் சிறிதும் குறையாத மகிமை பெற்றிருப்பான். ஏனெனில் இவன் பிள்ளையைக் கருதியின்றி வெறும் சிற்றின்பத்திற்காகக் கலவி புரியவே மாட்டான்' என்றார் காந்தியார். கணவன் மனைவியை மாத்திரங் காமக்கண்கொண்டு பார்க்கலாம். அதுவும் அவர் சொன்ன பிரமசரிய விரதத்துக்குப் பங்கமில்லாமலிருக்க வேண்டும். அதுவே குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, அக் குடும்பங்களே நாட்டில் மிக வேண்டும். மிகுவிப்பது காமக் கட்டுப்பாடொன்றே.

அவ் வாழ்க்கைக்குப் பிரதிகூலங்களே இப்போது அதிகங் காணப்படுகின்றன. வீசிய நடை, ஆடம்பர வுடை, மமதையைப் புலப்படுத்தும் பாவனை, சுவையும் மணமும் ஏற்பட்டால் எதனையுந் தின்னும் ஆசை, புகையை யுறிஞ்சி யூதி யுமிழ்தல், கலவி நிர்வாணப் படங்களைக் கண்டு களித்தல், ஆண் பெண் அணைப்புக் கேற்ற இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்தல், காமக்கதைப் புத்தகங்களைப் படித்துப்பூரித்தல், ஸினிமாக்களில் நடன்நடிகளின் அணைப்புக்களைக்கண்டு ஏங்குதல் முதலியன காமத்தைக் கட்டுப்படுத்த உதவாமல் காந்தியார் சொன்ன பிரமசரியத்தைச் சிதைக்கவே உதவுகின்றன. அவை நன்மக்கட்குத் தேவையா?

அவற்றுள் புலாலுணவு மாத்திரம் சில விலங்கு பறவைகளிடமுண்டு. மற்றவையெல்லாம் மனிதரிடமே யுள்ளன. அவை அவருக்கு எவ்வகையில் கெளரவம் அளிப்பன?

மிருகங்கள் காமத்தாற்கூடிக் குட்டி போடுகின்றன. அக்குட்டிகள் தாய்ப் பெட்டைகளின் பராமரிப்பில் வளர்கின்றன. அதுபோற் பெற்ற ஆண் இவனெனத் தெரியாமல் பிள்ளைகளைப் பெற்றுத் தோளி லொன்றும், இடுப்பி லொன்றும், கைப்பிடியி லொன்றுமாகச் சுமந்து திரியும் தாய்ப் பெண்கள் மனித வர்க்கத்திலுமுளர். மனித சமுகத்திற்கு அது மானக் கேடு. காமக் கட்டுப்பாடின்மையே அதற்குக் காரணம்.

காம மிகுதி மிருக வியல்பு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவற்றிடம் இயற்கைக் கட்டுப்பாடு உண்டு. 'மிருகங்கள் விதியை மீறுவதே இல்லை. மனிதனுக்கு மீறவோ, கட்டுப்படவோ - இடமிருப்பதால் மீரும் பெரும் பிழையைச் செய்து வந்திருக்கிறான்' என்றார் காந்தியார். ஆடவர் கட்டுப்பாட்டை மீறுவதே பெரும்பான்மை என்பது அதனால் தெரிகிறது. பெண்டிற் பெரும்பாலும் அடக்க முடையாரென்பதுந் தெரியலாயிற்று. அவர் பொருட்டாயின் கலியாணம் என்பதே வேண்டாம். ஆடவர் கட்டுக் கடங்காத காரணத்தால் அவர்பொருட்டே கலியாணம் மனிதவர்க்கத்துள் உளதாயிற்று. கலியாணத்தின் நோக்கமே காந்தியார் சொன்னபடி ஆடவன் காமத்தைக் கண்ட விடத்திற் செல்லவிடாமற் கட்டுப்படுத்தி மனைவியுடன் பிரமசரிய விரதத்தில் வாழ்வது என்பது தான் அவன் கலியாணத்தாற் கொண்ட மனைவியும் அவனுக்கு அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளும் அவன் பொறுப்பில், மேற் பார்வையில் இருந்து வருவர். கலியாணத்தின் அந்த நோக்கம் இப்போது போயிற்று. அதுவுங் காம விளையாட்டுக்கா மென்ப தாயிற்று.

காமக் கட்டுப்பாட்டுக்கு பிரதிகூலங்களாயுள்ளன சில சொல்லப்பட்டன. அவையும் அவை போன்றவையும் மாறவேண்டும். அனுகூலமான சூழ்நிலைகள் வேண்டுமட்டில் அமைய வேண்டும். 'கற்பவை', 'இலங்கு நூல்' எனத் திருவள்ளுவர் வரையறுத்த நூற் பயிற்சியே மிக வேண்டும் 'எல்லா மதங்களுமே காமத்தை மனிதனது பெரும் பகையென்று கருதுகின்றன; கோபமும் துவேஷமும் அடுத்தபடியில் இருப்பவையே. இவை காமத்திலிருந்தே விளைவதாக கீதை கூறுகிறது' என்றார் காந்தியார். அதன்படி சமய நெறி நிற்றல் என்ற அறம் பரவுதற்கு இடம் தரப்பட வேண்டும். 'இப் புலனடக்கம் கடவுள் அருள் இருந்தாலல்லது நமக்குக் கைவராது' என்றும் அவர் சொன்னார். அதில் இரட்டை எதிர்மறை யிருக்கின்றது. காமக்கட்டுப்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாதது ஈசுரோபாசனையால் அவனருளைப் பெறுதல் என்பது புலனாம்.

ஆறுமுகநாவலரே! ஒரு நல்ல பாலியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இதை உங்கள் மீது இருக்கும் அக்கறையில்தான் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்

  • தொடங்கியவர்

:(சபேசன் நம் அனைவருக்கும் நல்ல மருத்துவர் இவர் தான்

kamathakanar.jpg

பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வரும் போது மட்டும்தான் மனைவியுடன் உறவு கொள்ள வேண்டும் என்ற பேய்த்தனமான கருத்தை ஆறுமுக நாவலர் போன்றவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.

சைவசமயம் அப்படியா சொல்கிறது? ஆசையில் மட்டும் மனைவியுடன் உறவு கொண்டால் நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் நல்லது

தெரியாம வந்திட்டேன்..

ADULTS ONLY னு நினைச்சேன்..

ADULTS ALONLEY போல இருக்கு :(

இந்து மதத்தின் புராணங்களை எடுத்துக் கொண்டால், அனைத்துக் கடவுள்களும் ஆசை மேலிட்டுத்தான் கலவி கொள்கிறார்கள். இதில் மச்சான், மகள் முறை என்று எதையும் பார்க்காது மோகத்தில் கலவி கொண்டுள்ளார்கள்.

பின்பு அதில் ஒரு பிள்ளை பிறக்கும். ஆனால் கலவிக்கு காரணமாக காமம்தான் இருக்கும்.

ஆறுமுக நாவலர் வாழ்ந் காலத்தில் வாழாததாலும், அந்தக் காலப் பகுதி மக்கள் தமக்குரிய பெறுமதிகளாக எதை எதற்காக எந்தெந்த அக புற காரணிகளின் அடிப்படையில் கொண்டிருந்தார்கள் என்று தெரியாததாலும், இதர ஒளுங்குபடுத்தப்பட்ட சயமங்களில் உள்ளைதைப் போல் சைவ சயமயத்திற்கு எந்த மனிதரும் தலைவராக நியமிக்கப்பட்டு அவர்சொல்வதே சைவம் சொல்வது என்று ஏற்றுக் கொள்ளும் வழக்கோ மரபோ இல்லாததாலும், ஆறுமுக நாவலர் சொன்னதாகக் கூறப் படும் விடயங்கள் உண்மையிலேயே எந்த வித திரிபுபோ தவறான புரிதல்களோ அற்று அவர் சொன்னது போலவே இன்றும் சேமித்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதனைப் பிரத்தியேகமாக நிறுவதற்கான வழிகள் எதுவும் தென்படாமையினாலும், ஆறுமுக நாவலர் பற்றி விவாதிப்பதை நான் இங்கு தவிர்த்துக் கொள்கின்றேன். எனினும், யாழ் களத்தில் ஆறுமுக நாவலர் என்ற முகமூடியில் பதிவிடுபவரிடம், எனது தனிப்பட்ட ஆர்வமிகுதியினால் மாத்திரம் இரு சிறிய கேள்விகள்.

1) நீங்கள் பதிகின்ற பதிவுகளில் உள்ள விடயங்களை எழுத்திற்கு எழுத்து உங்கள் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ளது போலவே நீங்கள் எடுத்துக் கொள்வதோடு அப்படியே பின்பற்றியும் வருகிறீர்களா அல்லாது போனால் அவற்றில் இருந்து உங்களின் உணர்விற்கும் பக்குவத்திற்கும் ஏற்ப விடயங்களை உய்த்தறிந்து கொள்கின்றீர்களா?

2) உய்த்தறிந்து கொள்கின்றீர்கள் என்றால் அவை என்ன என்பதனை உங்கள் அளவிற்குப் பக்குவம் பெறாதவர்களிற்காக இங்கு உங்களது சுயமான மொழியில் இலகு தமிழில் தெளிவாகப் பதிவிட முடியுமா?

நன்றி

அவர் உய்த்தறிந்து ஏற்றுக் கொண்ட முக்கிய விடயங்களுக்கு வண்ணம் தீட்டி இருக்கிறார். நீங்கள் கவனிக்கவில்லையா?

அவர் உய்த்தறிந்து ஏற்றுக் கொண்ட முக்கிய விடயங்களுக்கு வண்ணம் தீட்டி இருக்கிறார். நீங்கள் கவனிக்கவில்லையா?

எனக்கு அவை தெளிவாகத் தெரியவில்லை. அப்படித் தெரியும் பட்சத்தில், அவை அவருடைய உய்த்தறிதல்கள் மட்டுமே என்பது தான் கோடிடப்படவேண்டியது.

சமூகம் சார் பொதுப்பட்ட கருத்துக்கள் கருதுகோள்களை நிறுவுதற்கு ஒரு சக மனிதருடைய உய்த்தறிதல்கள் போதுமானதா என்பது கேள்விக் குறியே.

மேலும் எத்தனை புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள,; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள,; திரைப்படங்கள் என்று எமக்கு எண்ணற்ற தெரிவுகள் இருப்பினும் நாம் எமது நேரத்தைச் செலவிட எது உகந்தது என்று நாம் தானே முடிவு செய்கின்றோம்?

Edited by Innumoruvan

:lol:

இதை வாசிப்பதற்கு நமக்கு அறிவு போதவில்லை...

எதிர்காலத்தில் முயற்சிக்கின்றோம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.