Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலூர் தொகுதியில்... வாக்குகளை எண்ணும் பணிகள்  ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-720x450.jpg

வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு இன்று!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள்  தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்‌படுகின்றன.

இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

மழைவருவதற்கான  வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

முதல் அடுக்கில் துணை இராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்புக் பொலிஸாரும், மூன்றாம் அடுக்கில் தமிழக பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் 500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ‌

வாக்கு எண்ணும் மையத்தில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் திகதி  தேர்தல் நடைபெற்றது.
இதில்  அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிட்டனர்.

அத்துடன் அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-4/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

veelor-720x450.jpg

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் – முதல் சுற்று நிலைவரத்தின் படி அ.தி.மு.க முன்னிலை!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் சுற்றின் நிலைவரம் வெளியாகியுள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார்.

குறிப்பாக ஆம்பூர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

அத்துடன் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

முதல் சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 25,544 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 24,064 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 400 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் ஏ.சி.சண்முகம் 1480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-5/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vellore Election Result: Naam Tamilar may decide the winner in a close margin fight

வேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது!

வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகள் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலெட்சுமி போட்டியிட்டு உள்ளார்.

Vellore Election Result: Naam Tamilar may decide the winner in a close margin fight

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 61798 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 58645 வாக்குகள் பெற்றுள்ளார்.அதிமுக 3153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை மூன்று சுற்று வாக்குகள்தான் எண்ணப்பட்டு இருக்கிறது என்பதால் என்னவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இதில் நாம் தமிழர் கட்சி 2308 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றில் வேகம் எடுத்து அதிகமான வாக்குகள் பெற்று வருகிறது.

இந்த தேர்தல் முடிவில், நாம் தமிழர் கட்சிதான் வெற்றியாளரை முடிவு செய்யும் சக்தியாக உருவெடுத்துள்ளது. திமுக அதிமுக இடையே 3000 வாக்குகள் வித்தியாசம்தான் இருந்து வருகிறது. இந்த வித்தியாசம் இனி குறைய கூட வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் நாம் தமிழர் பெறும் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் தமிழர் 3000+ வாக்குகள் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி யாருடைய வாக்குகளை பிரிக்கிறதோ அவர்கள்தான் பெரும்பாலும் தோல்வியை தழுவ வாய்ப்பு உள்ளது. இதனால் திமுக அல்லது அதிமுகவின் வெற்றிவாய்ப்பை பெரும்பாலும் நாம் தமிழர் கட்சி தீர்மானிக்கும்.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/vellore-election-result-naam-tamilar-may-decide-the-winner-in-a-close-margin-fight-359630.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sanmukam-720x442.jpg

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் : நான்காம் சுற்று நிலைவரம்!

வேலூர் மக்களவைத் தொகுதியின் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்துள்ளார்.

நான்காம் சுற்ற நிலைவரத்தின்படி ஏ.சி.சண்முகம் 72,370 வாக்குகளும் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 66,190 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீப லட்சுமி 2,791 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேவேளை தபால் வாக்குகளின் நிறைவிலும் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி சண்முகம் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-6/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dmk-1-720x450.jpg

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் : தற்போதைய நிலைவரம்!

வேலூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலைவரப்படி தி.மு.க சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந் 2,74,015 வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரான ஏ.சி சண்முகம் 2,64,132 வாக்குகளை பெற்றுள்ளார்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீப லட்சுமி 13,942 வாக்குகளை  பெற்றுள்ளார்.

இதேவேளை தபால் வாக்குகளின் நிறைவில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி சண்முகம் முதலிடம்  வகித்து வந்த  நிலையில் தற்போது தி.மு.க முன்னணியில் உள்ளது.

மேலும் வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த்,நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-7/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்பகல் 12:15 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,15,448 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,99, 368 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 16,080 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 16,454 வாக்குகள் பெற்றுள்ளார். 

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/vellore-lok-sabha-election-result-live-update-who-leading-359623.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®ªà®²à®à¯à®à¯à®®à®¿

10 பைசா தராமல்.. இரு பண மலைகளுக்கு நடுவில் ஜொலிக்கும் தீபலட்சுமி.. உண்மையிலேயே பெஸ்ட்!

அதிமுக, திமுக என்ற இரு பெரும் பண மலைகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஒளிர் விட்டு ஜொலித்தபடி ஸ்டெடியாக வாக்குகளை வாங்கி வருகிறார்.

போன 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடந்து, இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலைல ஓட்டு எண்ண ஆரம்பிச்சதில் இருந்தே திமுக, அதிமுக என மாறி மாறி முன்னிலைக்கு வந்து வந்து போய் வருகின்றன.

ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் இப்போது வரை நம்மால் வர முடியவில்லை.

இதற்கு நடுவில் நாம் தமிழர் உள்ளே புகுந்து டஃப் கொடுத்து, அதிமுக, திமுகவுக்கு கொஞ்ச நேரம் அள்ளு கிளப்பி வருவதுதான் சூப்பர்! அமமுக, மநீம போன்ற கட்சிகளே போட்டியிடாத நிலையில், இரு ஜாம்பவான்களுக்கு நடுவில் ஜிகுஜிகுவென ஒளிர்விட்டு ஜொலித்து கொண்டுள்ளார் 

வேலூரில், அதிமுக, திமுக இரு கட்சிகளின் மீதும் பணப்புகார் போன முறையும் வந்தது, இந்த முறையும் வந்தது. ஆனால் வெறும் கொள்கைகளை வைத்து வாக்கு கேட்டு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர்! அந்த வகையில் இப்போது, இதில் இவர் தோற்கிறாரோ, ஜெயிக்கிறாரோ.. அது வேறு விஷயம்.. அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நாம் தமிழர் வளர்ந்துள்ளதைதான் இது நமக்கு காட்டுகிறது.

நாம௠தமிழர௠à®à®à¯à®à®¿

திமுகவும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு பைசா கூட கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை வறள கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி. இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்து வருகின்றன. ஆரம்பத்திலிருந்தே மெதுவாக முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி தற்போது நகர்ப்புற வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கூடுதல் வாக்குகளை பெற்று வருகிறது.

à®à®à®¿à®© à®à®´à¯à®ªà¯à®ªà¯

அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சீமான் சொல்லுவார், "நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க?" என்பார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை.

இந்த வேலூர் தேர்தலில் நாம் தமிழர் தோற்றாலும் சரி, சீமானின் மதிப்பு மேலும் உயர்ந்துதான் தென்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி தொடர்ந்து, பத்து பைசா தராமல், அதே இடத்தைதான் தற்போதும் தக்க வைத்துள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது. இது அத்தனையும் சீமான் என்ற ஒற்றை மனிதனின் கடின முயற்சியே என்பதை தமிழக மக்கள் மறுக்கவே மாட்டார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-party-giving-tough-to-dmk-and-aiadmk-359647.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்பகல் 1:15 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,04,044 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,93,242 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 22,003 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை எட்டு லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இன்னும் சுமார் 2லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ண வேண்டியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/vellore-lok-sabha-election-result-live-update-who-leading-359623.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DMK.jpg

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றுகிறது தி.மு.க.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இன்னும்  1,757 வாக்குகளே எண்ணப்படவுள்ள நிலையில்,  7585 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந் முன்னிலையில் உள்ளார்.

அந்தவகையில் கதிர் ஆனந் 4 இலட்சத்து 83ஆயிரத்து 459 வாக்குகளை பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 874 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான தீபலட்சுமி 26,880 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 37 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இந்நிலையில் வேலூர் தொகுதியின் வெற்றியுடன் 38 இடங்கள் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-9/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vellore Lok Sabha election results getting late

கடைசி நேரத்தில் பரபரப்பு.. என்ன நடக்கிறது வாக்குப் பதிவு மையத்தில்.. ரிசல்ட் அறிவிப்பது ஒத்திவைப்பு

வேலூர் லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையிலும், தேர்தல் முடிவு அறிவிப்பு என்பது 4.30 மணிக்கு தான் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக கிடைத்த தகவல் படி வேலூர் லோக்சபா தொகுதியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 459 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்திருந்தது. அதிமுகவுக்கு 4,75,874 ஓட்டுகள் போடப்பட்டன.

திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் நடுவேயான வாக்கு வித்தியாசம் 7585 என்ற அளவில்தான் இருந்தது. தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகிவிடும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மாலை 4.30 மணிக்குதான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். வேலூர் லோக்சபா தொகுதியில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகிய இருவருமே மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்.

வாக்குகள் வித்தியாசம் என்பது மிக குறைவாக உள்ளது நிலையில், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், துல்லியமாக முடிவுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால்தான், தாமதமாக முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/vellore-lok-sabha-election-results-getting-late-359670.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது தி.மு.க.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியானது.

இதன்படி 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையே ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி இடம்பெற்று வருவதனால் இறுதி முடிவு மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந் 4 இலட்சத்து 85ஆயிரத்து 340 வாக்குகளை பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளதோடு நோட்டாவுக்கு 9417 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 37 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இந்நிலையில் வேலூர் தொகுதியின் வெற்றியுடன் 38 இடங்கள் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது.

http://athavannews.com/வேலூர்-நாடாளுமன்ற-தேர்த-9/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nota gets more vote than DMK and AIADMK vote margin in Vellore

வேலூரில் நோட்டா வைத்த வேட்டு.. திமுக வெற்றி வித்தியாசத்தைவிட அதிகம் ஓட்டு நோட்டாவுக்குதான்

வேலூர் லோக்சபா தொகுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வாக்கு வித்தியாசத்தைவிட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளது, அரசியல் பிரமுகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 46.51, திமுக பெற்றது 47.30 சதவீதம். இரு கட்சிகளும் முறையே, 4,77,199 மற்றும் 4,85,340 வாக்குகளை பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி பெற்ற ஓட்டுக்கள், 26,995. நோட்டா பெற்ற வாக்குகள், 9417 ஆகும். அதாவது, 0.92 சதவீதம். கிட்டத்தட்ட 1 சதவீத ஓட்டுக்கள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றுதான் நோட்டாவை தேடுகிறார்கள் வாக்காளர்கள். கடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலை விட நோட்டாவை நாடியோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதற்கு காரணம், திமுக, அதிமுக கூட்டணியை தவிர, டிடிவி தினகரனின் அமமுக கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற பல வாய்ப்புகள் வாக்காளர்களுக்கு இருந்தன.

வேலூரில், அதிமுக, திமுக, நாம் தமிழர் என மும்முனை போட்டி நிலவியது. இதுவும் நோட்டாவை நோக்கி அதிக வாக்காளர்கள் திரும்ப காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக இந்த வாக்குகளை பார்த்தால் அதிமுக தரப்புதான் அதிகம் டென்ஷன் ஆகக்கூடும். ஏனெனில், அதிமுக கூட்டணி வேட்பாளர் தோற்ற வாக்கு எண்ணிக்கையைவிட நோட்டாவுக்கு சென்ற ஓட்டு எண்ணிக்கை அதிகம் அல்லவா!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nota-gets-more-vote-than-dmk-and-aiadmk-vote-margin-in-vellore-359687.html

  • கருத்துக்கள உறவுகள்

68296979_2858127074249482_70661757669914

மது குடிப்போர் சங்கம்.. 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

68296979_2858127074249482_70661757669914

மது குடிப்போர் சங்கம்.. 😊

"மது குடிப்போர் சங்கம்" என்று பெயர் இருந்தால் ஓகே...
அதென்ன...  "மது குடிப்போர், விழிப்புணர்வு சங்கம்" 
இவர்கள்... தண்ணி அடிக்கும் கோஸ்ட்டிகளா, அல்லது  அதற்கு எதிரான கோஸ்ட்டிகளா ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"மது குடிப்போர் சங்கம்" என்று பெயர் இருந்தால் ஓகே...
அதென்ன...  "மது குடிப்போர், விழிப்புணர்வு சங்கம்" 
இவர்கள்... தண்ணி அடிக்கும் கோஸ்ட்டிகளா, அல்லது  அதற்கு எதிரான கோஸ்ட்டிகளா ? :grin:

உயர்தர பிராண்டு , சரியான அளவு , சரியான மிக்சிங் ,  உடலுக்கு தீங்கு விளைக்கா வண்ணம் குடிப்பது குறித்து விழிப்புணர்வு .. ☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உயர்தர பிராண்டு , சரியான அளவு , சரியான மிக்சிங் ,  உடலுக்கு தீங்கு விளைக்கா வண்ணம் குடிப்பது குறித்து விழிப்புணர்வு .. ☺️

 

மதà¯à®à¯à®à®à¯

என்னது.. ஏசிஎஸ் தோற்றதற்கு இவர்தான் காரணமா?.. லிஸ்ட்டுலேயே இல்லாத செம டிவிஸ்ட்!

"2530 வாக்குகள் தந்த வேலூர் மக்களுக்கு என் நன்றி" என்று "டாஸ்மாக்" செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் போட்டியிட்ட சுயேட்சைகளில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில தலைவர் செல்லப்பாண்டியனும் ஒருவர்.

அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போதே வித்தியாசமாக வந்தார். கழுத்தில் கொய்யா பழம் மாலை அணிந்து கொண்டே உள்ளே வந்த இவர், அப்படியே போய் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களிடமும் பேசினார்.

அப்போது, "மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அதனால்தான் அதை வலியுறுத்தி கொய்யா பழம் அணிந்து வந்தேன். நான் ஜெயித்து வந்தேன் என்றால், எல்லா டாஸ்மாக் கடைகளிலும் தரமான சரக்கு கிடைக்க செய்வேன், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்று பகீர் வாக்குறுதிகளை அசால்ட்டாக சொல்லி விட்டு போனவர்தான் இவர்.

à®à®à¯à®à®°à®¿à®¯à®®à¯

ஆச்சரியம்:   இப்படி குண்டக்க மண்டக்கவாக பேசிய செல்லபாண்டியன், நடந்து முடிந்த தேர்தலில் 2530 வாக்குகளை பெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதைவிட ஆச்சரியம் இவர் ஓட்டு போட்ட 2530 பேருக்கும் நன்றி சொல்லி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளதுதான்.

நனà¯à®±à®¿

அந்த அறிக்கையில், "2530 வாக்குகள் அள்ளித் தந்ததற்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை பாதங்களில் சமர்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி" என்று சொல்லி இதை இணையத்திலும் பதிவிட்டுள்ளார்.

அலப்பறை:   செல்லபாண்டியன் பிரித்த இந்த 2530 ஓட்டுக்கள் திமுகவின் வெற்றிக்கு உதவியது என்று எடுத்து கொள்வதா? அல்லது ஏசிஎஸ்-ன் படுநூலிழை தோல்விக்கு காரணம் என்று எடுத்து கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கத்தி கத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப்படி ஒருசங்கத்துக்கு, இவ்வளவு ஓட்டுக்கள் கிடைத்துள்ளதையும், இதை பெருமையாக நினைத்து செல்லபாண்டியன் நன்றி சொல்லி அலப்பறை கொடுத்துள்ளதையும் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-drunkers-awareness-association-got-2530-votes-in-vellore-359732.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-20190524154828.jpg

DMK.jpg

அடுத்த தேர்தலுக்கு... உங்க ஊருக்கு "ரீ " குடிக்க வாறம் 
 துறை முருகன், கதிர் ஆனந்து,  ஸ்ராலின்.... டாட்டா....   :107_hand_splayed:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-20190523173445.jpg

காஷ்மீர்  - லடாக்  தீர்ப்பை... ஒரு நாள் பிந்தி சொல்லியிருக்கலாமே...
இந்த... துரைமுருகன் மகனின், முகத்தை... பார்க்கவே... அருவருப்பாய் இருக்குது. 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.