Jump to content

யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டர்: ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Aug__205135524272919.jpg

யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற  குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் இதுபோன்று செய்து வரும் வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார். பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் யூ டியூப் சேனலில் ‘திரில்’ வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வந்துள்ளார்.

அதன்படி, கடந்த ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை 47 வீடியோக்களை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள் செயின்கள், காஸ் சிலிண்டர், பைக் போன்றவற்றை வைத்துவிட்டு, ரயில் வரும்போது அதனால் ஏற்படும் விளைவை உணராமல் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதன் மூலம் யூ டியூப்பில் பார்வையாளர்கள் அதிகரித்து பணம் சம்பாதிக்க இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமிரெட்டியை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரயில் வேகமாக இடிக்கும்போது சிலிண்டர் வெடித்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆபத்தை உணராமல் பணம் சம்பாதிக்க இதுபோன்ற தவறான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி இவ்வாறு யாராவது செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ் யூ டியுப் காரர் மட்டும் சும்மா ஆட்க்களோ ?

நாசவுக்கே தண்ணி காட்டும் திரு நள்ளாறு  தொடங்கி பிரமிட்டை கட்டினவன் தமிழன் என்று எந்த ஆதாரமும் இன்றி சகட்டுமேனிக்கு அடித்து விடுகினம்  பெருமை மிக்க தமிழ் இனத்தை இப்படி ஐஞ்சு காசுக்கு கூவி கூவி  வதந்தியை அடித்துவிடுவதன் மூலம் தமிழுக்குத்தான் இழுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் யூ டியூப் சேனலில் ‘திரில்’ வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வந்துள்ளார்.

Bildergebnis für gas cylinder explosion

படித்த.. முட்டாள் போலுள்ளது.
ஒரு காஸ் குவளை வெடித்தால்... ஏற்படும் பாதிப்பை, மேலுள்ள படத்தில் காணலாம்.
ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் இதனை வைக்கும் போது....
எத்தனை உயிர் இழப்புகள் ஏற்படும் என்பதை அறியாத... இவனெல்லாம், 
பட்டதாரி  படிப்பு படித்தும் பிரயோசனமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

எங்கடை தமிழ் யூ டியுப் காரர் மட்டும் சும்மா ஆட்க்களோ ?

நாசவுக்கே தண்ணி காட்டும் திரு நள்ளாறு  தொடங்கி பிரமிட்டை கட்டினவன் தமிழன் என்று எந்த ஆதாரமும் இன்றி சகட்டுமேனிக்கு அடித்து விடுகினம்  பெருமை மிக்க தமிழ் இனத்தை இப்படி ஐஞ்சு காசுக்கு கூவி கூவி  வதந்தியை அடித்துவிடுவதன் மூலம் தமிழுக்குத்தான் இழுக்கு .

பெருமாள்.... கீழ் உள்ள இணைப்பும்... கிட்டத்தட்ட  ஒரே மாதிரியானவையே. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.