Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Lara said:

பின் அதே நேரு பொதுவாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் காஷ்மீரை தன்னிச்சையாக இந்தியாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்டங்களையும் இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தார். 

20 minutes ago, Lara said:

நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதியவர்.

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

23 minutes ago, Lara said:

காஷ்மீரை இந்தியா உரிமை கோருவதற்கு காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல. பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது அப்போதே நடக்கவில்லை. வாக்கெடுப்பும், இரு பக்கமும் (இந்திய, பாக்) காஸ்மீர் இல் இல்லாமல் நடக்கவேண்டும் என்று. இப்போது இது சாத்தியமா?

35 minutes ago, Lara said:

இந்தியா காஷ்மீரை ஏமாற்றியது, காஷ்மீர் சட்டதிட்டங்களை மாற்றியது, காஷ்மீரில் பொம்மை அரசை நிறுவியது, இந்திய இராணுவத்தின் அடாவடி போன்றன காரணமாக தான் அங்கு ஆயுதக்குழுக்கள் உருவாகின.

இப்பொழுது 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக பிரித்து அவற்றை இந்தியாவின் பகுதிகளாக்கி காஷ்மீருக்கு இருந்த மிச்ச சொச்ச உரிமையும் நீக்கியுள்ளது.

காஷ்மீர் பண்டிட்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால் அவர்களை இது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. முஸ்லிம்களை இந்தியா தொடர்ந்து கொன்று குவிக்கும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

37 minutes ago, Lara said:

பிஜேபி ஆதரவு மனநிலையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் பல விடயங்கள் புரியும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இந்தியா என்பதையே ஏற்றுக்கொள்ளாத நான், எவ்வாறு பிஜேபி ஆதரவு இருக்கமுடியும்?

இதுவும், பாகிஸ்தானின் உண்மையான வரலாற்றை கிந்தியா மறைக்கும் முயதர்சியின் ஒரு பகுதியாகவே, 19ம் நூற்றாண்டு பாகிஸ்தானை கிந்தியா அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதை பற்றி நீங்களே தேடிப் பாருங்கள்.

எனது கருத்து, காஷ்மீர் ஓ, இலங்கை வடக்கு கிழக்கோ இருப்பதை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு, ஆங்காங்கு கிடைக்கும் சிறு இடைவெளிகள், வாய்ப்புகளை பயப்படுத்துவது.

இதற்கு, நான் அறிந்த  வரையிலும், பிஜிபி சொல்லும் இந்து, பௌத்த பிரதேசங்களாக இலங்கைத் தீவில் அமைவது, எமது நலன்களை பாதுகாக்க உதவும். இது கூட அவரவரின் நலனை அடிப்படையாக வைத்தே.

  • Replies 156
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

Syed Ahmed Khan பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் அல்ல, அதற்கு தூய்மையானவர்களின் இடம் என அர்த்தம் கொடுக்கவுமில்லை.

ரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தானுக்கு தான் பின்னர் PAK, STAN என்பவற்றுக்கு அர்த்தம் வழங்கி பாகிஸ்தானுக்கு தூய்மையானவர்களின் இடம் என இன்னொரு அர்த்தமும் வழங்கலாம் என கூறப்பட்டது.

அவ் அர்த்தத்தை ரஹ்மத் அலியே கூறியிருந்தார்.

1933, PAKSTAN ஐ நான் மறுக்கவில்லை.

சி.ர்.அலி இன் விளக்கம், தூய்மையின் தானம் அல்லது இடம்  என்பது அவரின் விளக்கம் என்றால், bengal எங்கே போனது (territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்?. bengal தான் முதலில் வந்திருக்க வேண்டும்.

நீங்கள் சொல்லியபடியே, அதுவும் ஓர் விளக்கம் என்று சி.ர்.அலி யே ஏற்பதால், ஏலவே அது இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

12 minutes ago, Kadancha said:

கடஞ்சா, 

அரைகுறையாக வாசிக்காமல் நான் என்ன எழுதியுள்ளேன் என ஒழுங்காக வாசியுங்கள். 

ரஹ்மத் அலி பாகிஸ்தான் பெயரை உருவாக்கிய போது அதில் வங்காளத்தை உள்ளடக்கவில்லை. அதை PAKSTAN என்ற பெயரில் உள்ளடக்கப்பட்ட பிரதேசங்களூடு காணலாம்.

PAK, STAN என்பதற்கு தனி தனி அர்த்தம் கொடுத்து அதற்கு தூய்மையானவர்களின் இடம் என்ற இன்னொரு விளக்கத்தையும் கொடுக்க முடியும் என பின்னைய காலங்களில் குறிப்பிட்டார். அது பின்னர் உருவாக்கப்பட்ட விளக்கம்.

பாகிஸ்தான் என்ற பெயரை ரஹ்மத் அலி உருவாக்காத வரை பாகிஸ்தான் என்ற பெயரும் இல்லை, பாகிஸ்தானுக்கு தூய்மையானவர்களின் இடம் என்ற விளக்கமும் இல்லை. அதை மறுத்து உங்களுக்கேற்ப வரலாறை திரிக்காதீர்கள்.

முஸ்லிம் லீக் ரஹ்மத் அலியின் பாகிஸ்தான் என்ற பெயரை முஸ்லிம்களின் தேசத்திற்கு வைத்தார்களே தவிர ரஹ்மத் அலி உள்ளடக்கிய பிரதேசங்களை கொண்டு தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கவில்லை. அதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். 

முஸ்லிம் லீக்கின் 1940 லாகூர் பிரகடனத்தில் “முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவின் வடமேற்கு, கிழக்கு பகுதிகள்” என குறிப்பிடும் போது அங்கு தான் வங்காளம் உள்ளடக்கப்பட்டது.

59 minutes ago, Kadancha said:

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

நேரு எதை செய்தாரோ அதையே பிஜேபி தனது ஆட்சியிலும் செய்தது, செய்கிறது. 

நேருவை விட ஒருபடி மேலே போய் அடாவடித்தனமாக தன்னிச்சையாக 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக்கி இந்தியாவுக்கு சொந்தமில்லாத பகுதியை இந்தியாவுக்கு சொந்தமாக்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Lara said:

ரஹ்மத் அலி பாகிஸ்தான் பெயரை உருவாக்கிய போது அதில் வங்காளத்தை உள்ளடக்கவில்லை. அதை PAKSTAN என்ற பெயரில் உள்ளடக்கப்பட்ட பிரதேசங்களூடு காணலாம்.

24 minutes ago, Lara said:

(territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்

அதன் படி Bengal வந்திருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா,

1. வரலாறு எப்போதும் வெற்றியாளர்களால் உருவாக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்கு உண்மை போலியான வரலாறு கட்டுகதை சொல்பவர்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதும். வரலாற்றை பற்றி இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் வருவது இயல்பு. அப்படி வரும் போது, எந்த பக்கம் அதிகம் சாட்சிகள் வைக்கப்பசுகிறன என்பதை வைத்தே நடுநிலையாளர் தம் முடிவை எடுப்பர். பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன். பாகிஸ்தானியர்கள் மத்தியில் இப்படி பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் உங்கள் subjective நம்பிக்கைக்கு உரமாகலாம் ஆனால் objective ஆக எடுபடாது. 

2. கஸ்மீரின் வரலாறு என்ன.

அ. இந்திய துணைக்கண்ட பிரிவினையின் போது தனிநாடு. தனிக்கொடி, தனி பிரதமர்.

ஆ. பாகிஸ்தான் பதான் ராணுவகுழு எனும் பெயரில் கஸ்மீரை ஆக்கிரமிக்க முனைந்தது.

இ. இந்த நாடு தனது இறைமையை இந்தியாவோடு பகிர்ந்து ஏற்படுத்தபட்ட ஒப்பந்தமே கஸ்மீர்-இந்திய ஒப்பந்தம் (shared  sovereignty)  . இந்த ஒப்பந்தம் நிச்சயமாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் போலல்லாது கஸ்மீர் சிறப்பு அந்தஸ்து  பகுதி என்பதை ஏற்று, அதை இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் ஏற்றியது. இவை எல்லாம் அந்த நேரத்தில் இந்தியாவுடன் சேர்ந்தாலும் உங்கள் தனித்துவம் பேணப்படும் என்பதை உறுதி செய்ய கஸ்மீரிகளுக்கு வழங்கப்பட்ட guarantees. அந்த நேரத்தில் தனிநாடாக கஸ்மீர் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்திருக்க முடியும். கஸ்மீரை தன்பக்கம் இழுக்க இந்தியா விரித்த வலையே சிறப்பு அந்தஸ்து. இந்த வலையில் கஸ்மீர் விழுந்த பின், மேலே லாரா சொன்னதுபோல் படிப்படியாக பிரதமரை நீக்கி, ஜனாதிபதியை நீக்கி, கஸ்மீரின் அந்தஸ்தை குறைத்து. ஈற்றில் இந்தியா, கஸ்மீரை லடாக், கஸ்மீர் எனத் துண்டாடி இப்போ, மாநில அந்தஸ்து கூட இலாத இரெண்டு யூனின் பகுதிகளாக்கி உள்ளது. இவ்வளவுத்துக்கும் காரணம் கஸ்மீரை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அவாவும், கஸ்மீரை 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்து பெரும்பான்மை நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற இந்துதுவ கொள்கையும்தான். இதில் நேரு, சங்பரிவார் எல்லாரும் ஒரே மாதிரியான நரிகள்தான்.

ஈ. பாகிஸ்தான் மட்டும் என்ன திறமா? என்றால் இல்லை என்பதே பதில். இப்போ இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இந்தியா செய்வதை எப்போதோ பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் பாகிஸ்தான் செய்துவிட்டது. ஆக மொத்தம் - ஆங்கிலேயர் போனபின், தனிநாடாக வாழத் தலைப்பட்ட கஸ்மீரை, இந்தியாவும் பாகிஸ்தானும் கொள்ளை அடித்துள்ளார்கள். இதுதான் வரலாறு.

உ. இந்த சங்கிகளை நம்பி நாம் இலங்கையில் ஏதும் நன்மை அடையலாம் என்பது என்னை பொறுத்தவரை, ஒருவித முகாந்திரமும், நண்பகத்தன்மையும் அற்ற மனப்பால். இவர்களை எங்கே, எப்படி வெட்டி ஆடவேண்டும் என்பது சிங்கள-பெளத்ததுக்கு அத்துப்படி.

6 hours ago, Kadancha said:

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

இது அப்போதே நடக்கவில்லை. வாக்கெடுப்பும், இரு பக்கமும் (இந்திய, பாக்) காஸ்மீர் இல் இல்லாமல் நடக்கவேண்டும் என்று. இப்போது இது சாத்தியமா?

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இந்தியா என்பதையே ஏற்றுக்கொள்ளாத நான், எவ்வாறு பிஜேபி ஆதரவு இருக்கமுடியும்?

இதுவும், பாகிஸ்தானின் உண்மையான வரலாற்றை கிந்தியா மறைக்கும் முயதர்சியின் ஒரு பகுதியாகவே, 19ம் நூற்றாண்டு பாகிஸ்தானை கிந்தியா அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதை பற்றி நீங்களே தேடிப் பாருங்கள்.

எனது கருத்து, காஷ்மீர் ஓ, இலங்கை வடக்கு கிழக்கோ இருப்பதை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு, ஆங்காங்கு கிடைக்கும் சிறு இடைவெளிகள், வாய்ப்புகளை பயப்படுத்துவது.

இதற்கு, நான் அறிந்த  வரையிலும், பிஜிபி சொல்லும் இந்து, பௌத்த பிரதேசங்களாக இலங்கைத் தீவில் அமைவது, எமது நலன்களை பாதுகாக்க உதவும். இது கூட அவரவரின் நலனை அடிப்படையாக வைத்தே.

On 9/19/2019 at 4:09 PM, Kadancha said:

bengal எங்கே போனது (territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்?. bengal தான் முதலில் வந்திருக்க வேண்டும்.

On 9/19/2019 at 5:15 PM, Kadancha said:

அதன் படி Bengal வந்திருக்க வேண்டும்?

நீங்கள் எங்கே எதை வாசித்து விட்டு எழுதுகிறீர்கள் என தெரியாது. 

ரஹ்மத் அலி இந்தியாவில் அந்நேரம் 80 மில்லியன் முஸ்லிம்கள் இருந்தும் வடபகுதியிலுள்ள 30 மில்லியன் முஸ்லிம்களை உள்ளடக்கிய 5 பகுதிகளை குறிப்பிட்டே பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கினார். 

“we address this appeal to you, in the name of our common heritage, and on behalf of our thirty million Muslim brethern who live in PAKSTAN by which we mean the five Northern units of India viz: Punjab, North-West Frontier Province (Afghan Province), Kashmir, Sind, and Baluchistan.”

வங்காளம் என்பது கிழக்கு பகுதியில் இருந்தது. அதனால் பாகிஸ்தான் கோரிக்கையில் அதை அந்நேரம் அவர் சேர்க்கவில்லை. 

அவர் மட்டுமல்ல, முகமது இக்பாலும் கூட்டாட்சி முறை பற்றி கூறும் போது அதில் இந்தியாவின் வடமேற்கு பகுதியை உள்ளடக்கியிருந்தாரே தவிர கிழக்கிலிருந்த வங்காளத்தை உள்ளடக்கவில்லை. 

“Personally, I would go farther than the demands embodied in it. I would like to see the Punjab, North-West Frontier Province, Sind and Baluchistan amalgamated into a single State. Self-government within the British Empire, or without the British Empire, the formation of a consolidated North-West Indian Muslim State appears to me to be the final destiny of the Muslims, at least of North-West India.”

முஸ்லிம் லீக் 1940 லாகூர் பிரகடனத்தில் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் என அதில் கிழக்கை உள்ளடக்கியிருந்தது.

அத்துடன் ரஹ்மத் அலி வங்காளமும் அசாமும் இணைந்து தனி நாடாக உருவாக வேண்டும் என விரும்பியிருந்தார். பின்னைய காலத்தில் அதற்கு “Bangistan” எனவும் பெயர் சூட்டியிருந்தார்.

பாகிஸ்தான் கோரிக்கை வலுவடைந்த நேரம், பஞ்சாப் மற்றும் வங்காளத்திலுள்ள இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ், இந்துமகாசபை நின்ற போது வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்தியோர் வங்காளம் United Bengal (வங்காளம் + அன்றைய அசாம் மாகாணம்) ஆக இருக்க வேண்டும் எனவும் தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.

அது பற்றிய விபரங்களை இதில் history என்பதில் சென்று வாசிக்கலாம்.

https://en.m.wikipedia.org/wiki/United_Bengal

அதன்படி கிழக்கில் தனி நாடு உருவாகியிருந்தால் அதற்கு “Bangistan“ என்ற பெயரையே வைத்திருந்தாலும் வைத்திருப்பார்கள். யாருக்கு தெரியும். 😀

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.