Jump to content

"விரைவில் தனியார் மயம் ஆகிறது ஏர் இந்தியா" - மத்திய அரசு தீவிரம்


Recommended Posts

ஏர் இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வலுவான தனியார் துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும்" என்று குறிப்பிட்டார். ஏர் இந்தியாவை நாங்கள் தனியார் மயமாக்கினாலும், அது இந்தியர்களின் கைகளில்தான் இருக்கும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-49520020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

எனது தனிப்பட்ட அனுபவத்தின் படி, air india ஐ தனியார் மயமாக்கல் சரியான முடிவு. அண்மையில் பயணித்த எவராவது, ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவையின் தரம் பற்றி வேறு கருத்துக்கள் இருக்கலாம்.

அரச சேவை என்பதால், வாடிக்கையாளர் சேவை மிகவும் நலிந்து, கவனிக்கப்படாமல், தரம் கேட்டு விட்டது.

உண்மையில், தனியார் விமான போக்குவரத்துக்கு சேவையாயின், ஏர் இந்தியா எப்போதோ வங்குரோத்தில், விமான போக்குவரத்துக்கு சேவை எனும் சேவைப் பொருளாதாரத்தில் இருந்து  நீக்கி எறியப் ட்டிருக்கும்.

விமான போக்குவரத்துக்கு சேவை நுகர்வு கட்டுப்பாடு வாரியத்தை அரசாங்கதின் பொறுப்பில் வைத்துக்கொண்டு, விமான போக்குவரத்துக்கு சேவை வர்த்தகத்தை தனியார் மயமாக்கலே சரியான முடிவாகும்.

ஏர் இந்தியா இ யார் நடத்தினாலும்,  வாடிக்கையாளர் நிறைந்த திருப்தியில், இலாபம் சம்பாதிப்பது தானே. அத்துடன், விமான போக்குவரத்துக்கு என்பது ஆடம்பர நுகர்வு, அரசாங்கம் இதை ஒரு போதுமே இலாபத்தில் நடத்த முடியாது.

Link to comment
Share on other sites

உலக நாடுகள் பலவும் தமக்கென அரச விமான சேவையை ஆரம்பத்தில் கொண்டிருந்தாலும் பின்னர் தனியார் மயப்படுத்தித்தான் உள்ளனர்.

பொதுவாகவே அரசுகளால் இலாபகரமான சேவையை வழங்குவது கடினம். ஆனால், கல்வி, பாதுகாப்பு  மற்றும் சுகாதாரம் மட்டுமே அரசுகளால் இலாபம் கருதாமல் ( நட்டத்தில்) நடாத்தப்படும் சேவைகள்.

சில பலம் கொண்ட நாடுகள் விமான சேவையை நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பு பட்டதாக பார்த்து ஒரு 'கவனத்தை'  கொண்டிருப்பார்கள். தேவையானால், அரச பண உதவிகளையும் செய்வார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.