Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா.

Featured Replies

கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா.

சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது.

வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெ பகலிலை பாராளு மன்றத்தையும் மூடிபோட்டு அவரவர் தங்கடை வேலைய பாக்கலாமே :D

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகள் செய்த சாதனை... என்றே இதைக் கூற வேண்டும்.

சிறீலங்காவின் பொருளாதாரத்தில் உல்லாச பயணத்துறை முதல் 3 துறைகளுள் அடங்கி இருந்தது. அது மிக மோசமான அடியை வாங்கி இருப்பதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு தூர விலத்தி விட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர் மலேசியா இந்தியா போன்ற நாடுகள் நல்ல பொருளாதார நன்மையை ஈட்டும்..!

எனியாவது யுத்தத்தின் கொடுமையில் இருந்து சிங்கள தேசம் தப்ப முடியாது என்பதை உணர்வதோடு தமிழர்களை கிள்ளுக் கீரையாகப் பாவிக்க முடியும் என்ற நினைப்பை எனியாவது தவிர்க்க முனைய வேண்டும்..!

Colombo airport in night closure

Officials at Sri Lanka's only international airport have ordered it to be closed at night time following a series of Tamil Tiger air strikes.

They say that closure will come into effect from next week.

The Bandaranaike International Airport, which shares a runway with an adjoining military base, will close between 2230 and 0430 from 10 May.

Meanwhile Britain has decided to withdraw some of its debt relief payments to Sri Lanka, officials say.

It had earlier agreed to give $5.9m to help the country pay debts to the World Bank, but has now suspended the programme after making only half the payments, a spokesman for the British High Commission in Colombo said on Thursday.

He said that the payments will resume only if a series of conditions are met, including no unjustified increases in military spending and no instigations of hostility by the government.

There was no immediate response from ministers to the news.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6620185.stm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பெரும்பலான விமானசேவைகள் இரவு நேரத்தில் நடப்பது வழமை. இவ்வறான இடை நிறுத்தம் காரணமாகப் பெருமளவு பொருளாதார நெருக்கடியை மகிந்தர் எதிர்கொள்ளப் போகின்றார். ஆனால் மறுபக்கம், இடைத்தங்கல் விமான நிலையங்களாக, சென்னையோ, திருச்சி, திருவனந்தபுர விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் செல்லக் கூடும். இதனால் அவர்களின் பொருளாதாரம் பலமடையும்

சிங்களவன் பொருளாதர வளர்ச்சி பெறுவதைப் பார்க்க, தமிழகம், கேரளம் பெறுவதில் எமக்குச் சந்தோசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விமான நிலையத்தை

3 மாதங்களுக்கு இரவில் மூட முடிவு

மே 04, 2007

கொழும்பு: விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு இதுவரை மூன்று முறை விமானத் தாக்குதலை நடத்தியுள்து. இதை சமாளிக்க முடியாமல் இளங்கை படைகள் தவித்து வருகின்றன.

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பல விமான நிறுவனங்கள், இரவு நேரத்தில் தங்களது சேவையை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 10 ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு இரவு நேரத்தில் கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.

அதேபோல கட்டுநாயகே விமானப்படைத் தளமும் இரவு நேரத்தில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் மனித உரிமை மீறல் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கான நிதியுதவியை இங்கிலாந்து அரசு நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

அப்பாவிகள் பலியாவது, ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, தமிழர் பகுதியில் நடத்தப்படும் சரமாரித் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களைத் தடுக்க இலங்கை அரசு உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. எனவே இலங்கைக்கான கடன்உதவியை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாமஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கு ரூ. 28 கோடி நிதியுதவியை அளிக்க இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. அதில் பாதித் ெதாகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதத் ெதாகையைத்தான் தற்ேபாது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

http://thatstamil.oneindia.in/news/2007/05/04/lanka.html

  • தொடங்கியவர்

ஏயர்லைன்ஸ் நிர்வாகிகளுடன் மகிந்த அவசர ஆலோசனை.

சிறிலங்காவுக்கான வானூர்தி சேவைகளை இயக்கும் ஏயர்லைன்ஸ் நிர்வாகிகளுடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று ஆலோசனை நடத்தினார்.

மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை இரவு நேரங்களில் மூடுவதாக மகிந்த அரசாங்கம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து புதிய ஒழுங்குமுறைகள் குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, வானூர்தித் துறை பிரதி அமைச்சர் சரத் குணரட்ண, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நிதித்துறைச் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

-Puthinam-

  • தொடங்கியவர்

இரவு வானூர்தி சேவையை இரத்து செய்தது சிறிலங்கா ஏயர்லைன்ஸ்.

சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் தனது இரவு நேர வானூர்தி சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் துறைமுகம் மற்றும் வானூர்தி துறை அமைச்சு, இராணுவத்தினருடனான ஆலோசனைக்குப் பின்னர் இதனை சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.

"மாற்றியமைக்கப்பட்ட நேரப்படியான வானூர்தி சேவைகளின் முழுமையான விவரம் விரைவில் வெளியிடப்படும். முன்பதிவு செய்துள்ள பயணிகளுடன் எமது நிர்வாகம் தொடர்பு கொண்டு பயண மாற்றம் குறித்து தெரிவிக்கும்" ஏயர்லைன்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை மட்டுமே சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் இனி இயங்கும்.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு விமான நிலையத்தை

3 மாதங்களுக்கு இரவில் மூட முடிவு

அங்கை வேலைசெய்யிற ஆக்களுக்கு மாலைக்கண் வருத்தமாயிருக்குமோ? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.