Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்

September 12, 2019

 

canada.jpg?resize=740%2C417

கனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்துள்ளார்.

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறைவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.  #கனடா  #பாராளுமன்றம் #கலைப்பு #ஆளுனர்

 

http://globaltamilnews.net/2019/130339/

 

 

கனடாவானது, அவுஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற இங்கிலாந்து மாகாராணிக்கு கீழே உள்ள நாடு என்பது வெளிப்படையான கொள்கை. 

கனடாவானது, அமெரிக்காவின் ஒரு மாநிலம் என்பது குறிப்பிடப்படாத உண்மை.  

 

கனடாவின் பத்து மாநிலங்கள் மற்றும் மூன்று புதுச்சேரி போன்று அதிகாரம் கொண்ட பிரதேசங்களையும் கொண்டது. 

கிட்ட்டத்தட்ட 25% பிரெஞ்சு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உள்ளனர். குறிப்பாக கியூபெக் மாநிலம் பிரெஞ்சு மொழியை அரச மொழியாக கொண்ட மாநிலம். இன்னொரு மாநிலமான நியூஸ்ப்ரூஸ்விக்  பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் என இரண்டையும் அரச கருமை மொழியாக கொண்டது. 

ஆனால், நாடு முழுவதுமாக இரண்டு மொழியும் அரச கரும மொழியாக உள்ளது, வெறும் பேச்சளவில் மட்டுமல்ல. செயலளவிலும் தான்,  

இந்த பிரெஞ்சு மாநிலந்தை வெல்ல முடியாமல் எந்த கட்சியும் அறுதிபெரும்பான்மையை வெல்ல முடியாது. 


அதேவேளை, கியூபெக் மாநிலம் உட்பட யாரும் சுயநிர்ணய உரிமையையும் கொண்டவை. 

கனேடிய பிரதமர் 29வயதில் தான் படிப்பித்த கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வின் கலந்து கொண்ட படத்தினால் சர்ச்சையில் மாட்டியுள்ளார். 

இது நடந்தது 2001 ஆம் ஆண்டில். அதற்கு தான் மன்னிப்பு கேட்பதாயும் கூறினார்.  

இந்த  படத்தில் இவர் ஒரு சீக்கியர் போன்றும் முகத்தை மண்ணிறத்திலும் பூசியுள்ளார்.  

justin-trudeau-brownface.jpg

 

ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இளமை காலத்தில் இனவெறியை வெளிப்படுத்தினாரா?

தனியார் பள்ளி கொண்டாட்டம் ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிகழ்வும் இப்போது நடந்தது இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது.

அந்த சமயத்தில் ஜஸ்டின் கல்வி நிலையம் ஒன்றின் பயிற்றுநராக இருந்தார். இந்த புகைப்படமானது'டைம்' இதழில் வெளியானது.

இதனை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அவர், "அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன்" என்றார்.

தேசிய கனடிய முஸ்லிம் மன்றம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் முஸ்தஃபா ஃபரூக், "பிரதமரின் இந்த செயல் கவலை தருகிறது. இது போன்ற பழுப்பு / கருப்பு வண்ண நிற முகமூடிகளை அணிவது நிந்திக்கும் செயல்," என்றார்.

புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், இந்த புகைப்படமானது பிறரை அவமதிப்பது போல உள்ளதென தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21ஆம் தேதி அங்குத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த புகைப்படம் பெரும் விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலானது ஜஸ்டினுக்கு கடினமான ஒன்றாக இருக்குமென்றே தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-49750315

 

தான் ஒரு சிறப்பிமிக்க குடும்பத்தில் பிறந்தமையால் முகத்தை கறுப்பாக்கியது தவறு என தெரியவில்லை என்று கூறியதுடன் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். அத்துடன் இன்று இன்னும் ஒரு படம் வெளிவந்துள்ளது, மூன்றாவது. 

கனடாவின் தற்போதைய பிரதமரின் தந்தை ஒரு முன்னாள் பிரதமர். 

கனேடிய பொதுவுடமை கட்சியின் (NDP)  தலைவரான ஜக்மீத் சிங் இந்த சந்தர்ப்பத்தினால் மக்களின் ஆதரவை பெறும் கருத்துக்களை பெற்று வருகின்றார். தானும் பல இனவாத கருத்துக்களுக்கு சிறுவயதில் முகம் கொடுத்து அதற்கு எதிராக போராடியதாயும், ஆனால் தன் நண்பன் உட்பட பலராலும் இவ்வாறு போராட முடியவில்லை எனவும் கூறினார்.   

  • 2 weeks later...

இனவாத வெள்ளையரும் தேசிய பொதுவுடைமை கட்சியின் சீக்கிய தலைவரின் அருமையான பதிலும்  

 

பிரெஞ்சு மாநிலமான கியூபெக்கில் ஒரு சட்டமூலம் உள்ளது. அதன்படி அரச வேளைகளில் உள்ளவர்கள் மத அடையாளங்களை குறிக்கும் உடைகளை வேலை தளத்தில் அணிய முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2019 at 6:31 AM, ampanai said:

 

 

கனடாவானது, அவுஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற இங்கிலாந்து மாகாராணிக்கு கீழே உள்ள நாடு என்பது வெளிப்படையான கொள்கை. 

கனடாவானது, அமெரிக்காவின் ஒரு மாநிலம் என்பது குறிப்பிடப்படாத உண்மை.  

இது எப்பவில இருந்து? 

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு :

கனடிய தேர்தல் (Oct 21) நெருங்கும் வேளையில், கட்சிகளின் மக்கள் நலத்திட்டங்களை சரிவர அறிந்து வாக்களிப்பது இன்றியமையாததாகும்.

கார்பன் வரி (Carbon Tax)

Liberal
இந்த வருடத்துக்கான குறைந்தபட்ச காபன் விலை $20/tonne. இந்த விலை, 2022 வரை ஒவ்வொரு வருடமும் $10 வீதம் அதிகரிக்கும்.
இதனால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கார்பன் விலைத் திட்டம் இல்லாத மாகாணங்களில் உள்ள தனியாரும், வணிக நிலையங்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும். பதிலாக மக்கள் அதிகமாக செலவு செய்யக்கூடிய பணம், Carbon Tax Rebate ஆக மீள வழங்கப்படுகிறது.

Conservative
கார்பன் வரியை நீக்கவே விரும்புகிறது. ஆனால், மாகாணங்களின் தெரிவுக்கே விட்டுவிடுகிறது. பதிலாக, புதிய தரங்களை பூர்த்தி செய்யத் தவறும் மாசு வெளியிடுபவர்களால் நிதியளிக்கப்பட்ட பசுமை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உறுதி. ஆனால் இது, கார்பன் வரி விதிப்பிலும் எவ்வளவு திறன்மிக்கது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

NDP
கார்பன் வரியைத் தொடர்ந்து பேண விருப்பம். சில மாற்றங்களை செய்து கூடுதலாக கார்பன் வெளியேற்றுபவர்களுக்கு கூடுதல் வரி விதித்தல்.

குழந்தைப் பராமரிப்பு (Child Care)

Liberal
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை உள்ள குடும்பத்துக்கான கொடுப்பனவு 15% அதிகரிப்பு.
பெற்றோருக்கான கொடுப்பனவுகளுக்கு வரி இல்லை.
பள்ளிக்கு முன்னும், பின்னும் 250,000 புதிய குழந்தை பராமரிப்பு இடங்கள். இதற்கான கட்டணத்தில் 10 % குறைப்பு.
ஊதிய விடுப்புக்கு தகுதி இல்லாத பெற்றோருக்கு வருமான உத்தரவாதம்.

Conservative
முன்னைய அரசின் Canada Child Benefit தொடர்ந்து பேணப்படும்.
சமூக பரிமாற்ற கொடுப்பனவுகள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று % அதிகரிக்கும்.
புதிய பெற்றோருக்கு வேலை காப்புறுதிக்கு வரி விலக்கு.

NDP
2020க்குள் குறைந்த செலவில், லாப நோக்கற்ற குழந்தை பராமரிப்புக்காக $1 billion. இந்தப் பணம் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும்.
அடுத்த 4 வருடங்களில் 500,000 புதிய குழந்தை பராமரிப்பு நிலையங்கள்.
தேசிய ரீதியாக பாடசாலை சத்துணவு திட்டத்தை கொண்டுவருதல். (லிபெரல் கட்சியிடமும் இந்த திட்டமுண்டு.)

காலநிலை மாற்றம் (Climate change)

Liberal
Paris உடன்படிக்கை இலக்கை அடைய, 2030க்குள் நிலக்கரி ஆலைகளை மூடுதல்.
2050க்குள் மாசு அளவு பூச்சியம் என்ற அளவை அடைதல்.
திறனற்ற புதை படிம எரிபொருளுக்கான மானியங்களை முடிவுக்கு கொண்டுவருதல்.
2025க்குள் கனடாவின் கால்ப்பகுதி இயற்கை நிலங்களையும், கடல் வாழ்விடங்களையும் பாதுகாத்தல்.
சுத்தமான தண்ணீருக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கல்.
ஒருமுறை மட்டும் பாவிக்கப்படும் plastic பையைத் தடை செய்தல்.
10 வருடங்களில் $2 billion மரங்களை நாட்டுதல்.

Conservative
Paris உடன்படிக்கை இலக்கை அடைய உறுதியளித்தாலும், Carbon வரியை இல்லாதொழித்தல்.
அதிக மாசு வெளியிடுபவர்கள் தூய சக்தி மூலங்கள், ஆய்வுகளில் முதலிட கொள்கைகளை வகுத்தல்.
சர்வதேச அளவில் மாசுக்களைக் குறைப்பதற்கு உதவுவதற்காக, கடன் பெற அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடல்.
வணிக நிலையங்களுக்கு பசுமை தொழிநுட்ப காப்புரிமை வரி மீளளிப்பை தொடங்குதல்.

NDP
2030க்குள் 450 megatonne மாசைக் கட்டுப்படுத்த விருப்பம். இதற்காக மறுசீரமைப்புக் கட்டடங்களிலும், புதுப்பிக்கத்தக்க சக்தி, தூய தொழில்நுட்பங்களில் முதலிட காலநிலை வங்கியை உருவாக்க $15 billion செலவழித்தல்.
இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு உதவிகளை அதிகரித்தல்.

பற்றாக்குறை (Deficit)

Liberal
$10 billionக்குக் குறைவாக பற்றாக்குறையைப் பேண உறுதி.
2020-21 இல் $9.3 billion புதிய செலவுகள். அதனால், அந்த வருடத்தில் பற்றாக்குறை $27.4 billion வரை அதிகரிக்கிறது. 2040வரை சமப்படுத்த சாத்தியமில்லை.

Conservative
வரிகளை நீக்கிக்கொண்டு, பற்றாக்குறையையும் இல்லாமல் செய்யும். அது எவ்வாறு என்பது பற்றிக் கூறப்படவில்லை.
வெளிநாடுகளுக்கான உதவித்தொகை 25% குறைக்கப்படும்.
பெரு நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளும் மானியங்களும் $1.5 billion வரையாவது நிறுத்தப்படும்.
5 வருடங்களுக்குள் சமப்படுத்த முயற்சி

NDP
எப்போது சாத்தியமோ அப்போது சமப்படுத்தப்படும்.

கல்வி (Eduction)

Liberal
பட்டப்படிப்பு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மாணவர் கடன்களுக்கு வட்டியில்லை.
பட்டதாரிகள் ஆண்டுக்கு $35,000க்கு மேல் சம்பாதிக்கும் வரை பணம் செலுத்த வேண்டியதில்லை.
பெற்றோர்கள் தங்கள் இளைய குழந்தை 5 வயதாகும் வரை, வட்டி அறவிடப்படாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடை நிறுத்த முடியும்.
முழுநேர மாணவர்களுக்கான அதிகபட்ச மானியங்களை $3,000இல் இருந்து $4,200 வரை உயர்த்தல்.

Conservative
RESPக்கு ஆண்டுக்கு $2,500 டாலர் வரை முதலீடு செய்யும் ஒவ்வொரு டொலருக்கும் 20% முதல் 30% வரை பங்களிப்புகளை உயர்த்துவது, அதிகபட்சமாக ஆண்டுக்கு $750.

NDP
இலவச பல்கலைக்கழக, கல்லூரி கல்விக்கான இலக்கு. இதனை அடைய மாகாணங்களுடன் பேசி tuition feeஐ குறைப்பது. மாணவர்களுக்கான கடன்களுக்கு சமஷ்டி வட்டி வீதத்தைக் குறைத்து, மானியங்களுக்கு பணத்தை கொடுத்தல்.
தேசிய பள்ளி ஊட்டச்சத்து திட்டத்தை செயல்படுத்துதல்.

துப்பாக்கி (Guns)

Liberals
Bill C-71 அறிமுகம் - சுடுகலன்களுக்கான அனுமதியை வழங்குமுன், விரிவாக பின்புலங்களை ஆராய்தல்.
துப்பாக்கி தொடர்பான மேலதிக கொள்கைகள் - semi-automatic assault-style rifles ban.
சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட சுடுகலங்களை திரும்ப வாங்கும் திட்டம்.
கைத்துப்பாக்கியைக் கட்டுப்படுத்த அல்லது தடைசெய்ய மாகாணங்களுக்கு அதிக உரிமை

Conservative
துப்பாக்கி தடை செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு. இதனால் சட்டபூர்வமாக வைத்திருப்பவர்கள் பாதிப்படைவதாகத் தெரிவிப்பு.
வன்முறை, Gang நடவடிக்கைகளில் தண்டனை பெற்றவர்களுக்கும், துப்பாக்கிகளை மொத்தமாக வாங்கி கறுப்புச் சந்தையில் மறுவிற்பனை செய்பவர்களுக்கும் வாழ்நாள் தடை.
இவற்றுக்கு எதிராக போராடுவதற்கு காவல்துறையினருக்கு அதிக பணம் அளிப்பதாக உறுதி.

NDP
கைத்துப்பாக்கிகளைத் தடை செய்யும் உரிமை ஒவ்வொரு நகரத்துக்கும் வழங்கப்படும்.
சட்டவிரோத துப்பாக்கிகள், கடத்தலை முறையடித்தல்.
இளைஞர்கள் வன்முறையில் சிக்குவதைத் தடுக்க, பள்ளிக்குப் பின்பான விளையாட்டு மற்றும் திட்டங்களுக்காக 5 ஆண்டுகளில் $100 million வழங்க உறுதி.

சுகாதாரம் (Health Care)

Liberal
தேசிய மருந்தக திட்டதை ஆரம்பிக்க (National Pharma Care) உத்தேசம்.
வருடாந்தம் சுகாதார பரிமாற்ற கொடுப்பனவுகளை 3% அதிகரித்தல்.
மனநலம், அடிமையாதல், வீட்டு பராமரிப்பு திட்டங்களுக்கு அதிக நிதி.
பெண்களின் சுகாதாரத்துக்கு போதுமான நிதி.
உடல் வலுகுறைந்தோருக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்குதல்.

Conservative
வருடாந்தம் சுகாதார பரிமாற்ற கொடுப்பனவுகளை 3% அதிகரித்தல்.
தேசிய மருந்தக திட்டத்துக்கு எதிர்ப்பு. பதிலாக, மாகாணம் மூலமாகவோ, வேலை மூலமாகவோ சுகாதார நிதிப் பாதுகாப்பு அற்றவர்களுக்கு மட்டுமான உதவி.
MRI, CT Scan வாங்க $1.5billion நிதி.
உடல் வலுகுறைந்தோருக்கான நிதி உதவியைப் பெறுவதற்கான தகுதி நிலையை விரிவாக்கல்.

NDP
நடைமுறையில் உள்ள திட்டத்துடன் மன நலன், பல், கண், காது என்பவற்றையும் சேர்த்தல்.
எல்லோருக்குமான தேசிய மருந்தக திட்டம்.
தனியார் மயப்படுத்துவதுக்கு எதிர்ப்பு.

வீடமைப்பு (Housing)

Liberal
நியாய விலையில் 10 வருடங்களில் 100,000 வீடுகள்
முதல் முறை வீடு வாங்கும் போது, சில கட்டுப்பாடுகளின் கீழ் புதிய வீடுகளுக்கு 10%மும், மீள்விற்பனை வீடுகளுக்கு 5%மும் மானியம்.
விலையுயர்ந்த வீட்டு சந்தைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல்.
உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு முதலீடுகளுக்கு மேலதிக வரி விதிப்பு.
சக்தி விரயமாகாத வகையில் 1.5 மில்லியன் வீடுகளை மறுசீரமைத்தல்.
காலநிலையை தாங்கும் வகையிலாக வீடுகளை மாற்ற $40,000வரை வட்டி இல்லாத கடன்.

Conservative
புதிய வீடுகளைக் கட்டுவதற்கான விதிமுறைகளை எளிதாக்குதல்.
CMHC அடமானங்களுக்கான கடன்தொகை வரம்புகளை 30 ஆண்டுகளாக உயர்த்துதல்.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அடமான “அழுத்த சோதனை”ஐ மதிப்பாய்வு செய்தல்.
2 ஆண்டுகளில் சக்தியை சேமிக்கும் வகையில் புனரமைப்புக்காக செலவழித்த $20,000 வரையான பணத்தின் 20 % ஐ மீள வழங்குதல்.

NDP
10 ஆண்டுகளில் 500,000 நியாய விலை வீடுகளை அமைத்தல். அதுவரை, வாடகை மானியங்களை வழங்குதல்.
புதிய நியாய விலை வீடுகளை நிர்மாணிப்பவர்களுக்கு GST/HSTஇல்லை.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு CMHC அடமானங்களுக்கு 30 ஆண்டுகள் விதி.
சக்தியை சேமிக்கும் வகையிலான வீடுகளுக்கு குறைந்த வட்டி கடன்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 15% வீத மேலதிக வரி.

குடிவரவு (Immigration)

Liberal
ஏற்கனவே குடியேற்றம் அதிகரித்துள்ளது; 2018இல் குடிவரவாளர்கள் எண்ணிக்கை 321,045 இது முதலாம் உலகப் போருக்குப் பின்பான அதிக எண்ணிக்கையாகும் .
2021க்குள் அந்த எண்ணிக்கையை 350,000 ஆக உயர்த்துதல்.
அதே நேரத்தில், புகலிடம் கோரும் வழிமுறைகளையும், குடிவரவு ஆலோசகர்கள் போன்றோரையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை.

Conservative
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை குடிவரவாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படவில்லை.
ஆனால், பொருளாதார குடியேற்றத்தின் முக்கியத்துவத்தையும், உண்மையான துன்புறுத்தலை எதிர்கொள்பவர்களுக்கும் முன்னுரிமை.
சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுத்தல். பதிலாக, அகதிகளுக்கான தனியார் நிதியுதவியை ஊக்குவித்தல். அகதிகள் பார்வையிடலை அதிகரித்தல்.

NDP
எத்தனை குடிவரவாளர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவுபடுத்தல். குடும்ப மீளிணைவுக்கு முன்னுரிமை.
குடியேற்ற ஆலோசகர் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தல்.
பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்திலிருந்து விடுபடுதல் இது, அமெரிக்காவில் உரிமைகோரல்களைச் சமர்பித்தவர்கள், மீளவும் கனடாவில் உரிமை கோருவதைத் தடுக்கும்.

Image may contain: 3 people, people smiling, beard
7 hours ago, Justin said:

இது எப்பவில இருந்து? 

எப்பொழுது இரு நாடுகளுக்குமான தொலைபேசி நாட்டு இலக்கம் 1 ஆக வரையறை செய்யப்பட்டதோ அன்றில் இருந்து 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

எப்பொழுது இரு நாடுகளுக்குமான தொலைபேசி நாட்டு இலக்கம் 1 ஆக வரையறை செய்யப்பட்டதோ அன்றில் இருந்து 🙂 

பகிடிக்கு எழுதியிருக்கிறீர்கள், சரி! 

ஆனால் கனடாவை அமெரிக்காவின் பகுதி என்று சொல்வது கனேடியர்களை அவமானப் படுத்துவது போன்றது! மக்கள் நலன், பல்லினத்தன்மையின் வெற்றி, வரவேற்கும் பண்பு, மருத்துவக் காப்புறுதி, கல்வி வசதிகள், இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களில் கனடா அமெரிக்காவை விட பலமடங்கு சிறப்பானது! 

11 minutes ago, Justin said:

ஆனால் கனடாவை அமெரிக்காவின் பகுதி என்று சொல்வது கனேடியர்களை அவமானப் படுத்துவது போன்றது! மக்கள் நலன், பல்லினத்தன்மையின் வெற்றி, வரவேற்கும் பண்பு, மருத்துவக் காப்புறுதி, கல்வி வசதிகள், இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களில் கனடா அமெரிக்காவை விட பலமடங்கு சிறப்பானது! 

கனடாவும் அமெரிக்காவும் தான் இரு நாடுகள் ஒரு நாட்டு தொலைபேசி குறி இலக்கத்தை கொண்டவை. இது பகிடி இல்லை 🙂 

மக்கள் நலன் - கனடா அமெரிக்காவை விட அதிக சமூக நல கொள்கைகளை கொண்டது என்பது உண்மையே. 

பல்லினத்தன்மையின் வெற்றி - ஒப்பீட்டளவில் வெற்றியே. ஆனால், சில மாநிலங்கள் குடிவரவாளர்களை வரவேற்பதில்லை. 

வரவேற்கும் பண்பு - அமெரிக்காவில் நேர்முகம் கொண்ட இனத்துவேசம், ஆனால் கனடாவில் மறைமுக இனத்துவேசம் உண்டு. 

மருத்துவக் காப்புறுதி - உண்மை. ஆனாலும், சிறந்த சேவைகளுக்கு தாமாக பணம் செலுத்தி அமெரிக்கா செல்வதும் சில தேவைகளுக்கு அரசே பணம் செலுத்தி அமெரிக்கா அனுப்பவதும் உண்டு 

கல்வி வசதிகள் - பெரிதாக வசதிகள் என்றில்லை. கடன் எடுத்து படிப்பவர்கள் அமெரிக்கா போன்று கடனை சுமக்கின்றனர். வேலை வாய்ப்புக்களில் பலரும் அமெரிக்க நிறுவனங்களுக்கே வேலை செய்கின்றனர்.  

இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களில் -

நோராட் உட்பட சகல பாதுகாப்பு, உளவு துறைகளிலும் அமெரிக்காவையே கனடா நம்பி உள்ளது. நம்பவும் வேண்டும். 

அமெரிக்க நாடு கேட்டதால்  சீன ஹாவேவாய் நிறுவன அதிகாரியை தடுத்து வைத்துள்ளது. 

சீமானையும் கனடாவில் காலடி வைக்காமல் திருப்பி அனுப்பியது. 

As of 2016, about 783,000 Canadians lived in the United States, accounting for less than 2 percent of the roughly 44 million U.S. immigrant

https://www.migrationpolicy.org/article/canadian-immigrants-united-states

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ampanai said:

கனடாவும் அமெரிக்காவும் தான் இரு நாடுகள் ஒரு நாட்டு தொலைபேசி குறி இலக்கத்தை கொண்டவை. இது பகிடி இல்லை 🙂 

மக்கள் நலன் - கனடா அமெரிக்காவை விட அதிக சமூக நல கொள்கைகளை கொண்டது என்பது உண்மையே. 

பல்லினத்தன்மையின் வெற்றி - ஒப்பீட்டளவில் வெற்றியே. ஆனால், சில மாநிலங்கள் குடிவரவாளர்களை வரவேற்பதில்லை. 

வரவேற்கும் பண்பு - அமெரிக்காவில் நேர்முகம் கொண்ட இனத்துவேசம், ஆனால் கனடாவில் மறைமுக இனத்துவேசம் உண்டு. 

மருத்துவக் காப்புறுதி - உண்மை. ஆனாலும், சிறந்த சேவைகளுக்கு தாமாக பணம் செலுத்தி அமெரிக்கா செல்வதும் சில தேவைகளுக்கு அரசே பணம் செலுத்தி அமெரிக்கா அனுப்பவதும் உண்டு 

கல்வி வசதிகள் - பெரிதாக வசதிகள் என்றில்லை. கடன் எடுத்து படிப்பவர்கள் அமெரிக்கா போன்று கடனை சுமக்கின்றனர். வேலை வாய்ப்புக்களில் பலரும் அமெரிக்க நிறுவனங்களுக்கே வேலை செய்கின்றனர்.  

இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களில் -

நோராட் உட்பட சகல பாதுகாப்பு, உளவு துறைகளிலும் அமெரிக்காவையே கனடா நம்பி உள்ளது. நம்பவும் வேண்டும். 

அமெரிக்க நாடு கேட்டதால்  சீன ஹாவேவாய் நிறுவன அதிகாரியை தடுத்து வைத்துள்ளது. 

சீமானையும் கனடாவில் காலடி வைக்காமல் திருப்பி அனுப்பியது. 

As of 2016, about 783,000 Canadians lived in the United States, accounting for less than 2 percent of the roughly 44 million U.S. immigrant

https://www.migrationpolicy.org/article/canadian-immigrants-united-states

ஓ..அப்படியென்றால் இந்தியாவும் அமெரிக்காவின் ஒரு மாநிலம் தான் போல! ஏனெனில் 6% இற்கு மேற்பட்ட குடியேறிகள் இந்தியர்கள் தானாம்! ஆனால், போன் கோட் ஒன்றில்லாத படியால இருக்காதென நினைக்கிறேன்! 

 கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு


 - ஜனகன் முத்துக்குமார்

கனடாவின் நாடாளுமன்ற  தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தது என அறியப்படுகின்றமை போல, கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு, உள்நாட்டு அரசியல் மற்றும் கட்சி கொள்கைகள் மற்றும் அரசியலுள் உட்புகுந்து தவறான - அல்லது முறையற்ற வகையில் ஆனால், தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இணையத்தள தகவல் தாக்குதல்களை மேற்கொள்ளல் தொடர்பில் கனேடிய மக்களும், ஊடகங்களும், கட்சிகளும், கனேடிய பாதுகாப்பு துறையும் மிகவும் கவனமாக இருக்கின்றமை, ஜனநாயகத்தை பிரதிபலிப்பதற்கான தேர்தல் தொடர்பில் மக்கள் ஏற்கெனவே விழிப்புடன் இருப்பதை காட்டுகின்றது.

கனடா, ஒப்பீட்டளவில் ஒரு 'சமாதானத்துக்கான நாடு' என கூறப்பட்டாலும், அந்நிலை முற்றுமுழுதாகவே வெளிநாட்டு தவறான தகவல் தாக்குதல்களின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்கவில்லை. இந்நிலையை சமாளிப்பதற்கு கனேடிய அரசாங்கம் மட்டுமன்றி, அதனுடன் சர்வதேசத் தொடர்புகளை பேணும் ஏனைய நாடுகளும் - குறிப்பாக இலத்தீவியா போன்ற நாடுகள் மிகவும் சுதாகரித்து இருக்கின்றமை, மேலும், குறித்த விடயம் தொடர்பில் கனேடிய அரசாங்கமும், தகவல் பரிமாற்ற ஊடகங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியனவும் இத்தாக்குதல்களில் விழிப்பாக இருக்கின்றமை, கனேடிய அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள்,  ஐக்கிய அமெரிக்க தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்களிப்பு போன்றவற்றில் இருந்து வெகுவாகவே பாடங்களை கற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

கனேடிய வெளிநாட்டமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் கனடாவின் உளவு நிறுவனங்களில் ஒன்றான தொடர்பாடல் பாதுகாப்பு விரிவாக்க அமைப்பு ஆகியன அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கமுடியும் எனவும் அத்தலையீடுகளுக்கு எதிராக சமீபத்தில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக, இலத்தீவியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஆர்ட்டிஸ் பாப்ரிக்ஸ் கனடாவின் தேர்தல் நிலைமைகளில் வெளிநாட்டு தலையீட்டை முற்றாகவே தடுக்க தனது நாடு எப்போதுமே உதவியாக இருக்கும் என  அறிவித்திருக்கின்றமை இலத்தீவியா எவ்வாறு ரஷ்யா தனது உள்நாட்டு தேர்தல்களில் தலையிட்டதோ – அல்லது ஐக்கிய அமெரிக்க வாக்கெடுப்புக்களில் முறைதவறிய செல்வாக்கை செலுத்தியிருந்ததோ அவ்வாறான தலையீடு இனியும் இடம்பெறக்கூடாது என்பது தொடர்பில் தனித்து ஒரு நாடாக அல்லாது - பாதுகாப்புக்கான கூட்டான நேட்டோவின்  மூலோபாய தகவல்தொடர்பு மையத்தின் தளத்தை பயன்படுத்துவது மூலம் தலையீடுகளை தடுத்தல் உத்தமமானது என கருதுவது, மேற்கத்தேய தேர்தல்கள் தொடர்பில் நேட்டோ புதிய பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகின்றது.

கனேடிய மற்றும் இலத்தீவிய அதிகாரிகள் ஏற்கெனவே, மேற்கத்தேய நாடுகளின் தேர்தலின் போது தவறான தகவல்களை ஊக்குவிப்பதிலும், சிவில் சமூகத்தை சிதைத்தலிலும், நேட்டோ நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் ஆளுகைக்கு அழிவை ஏற்படுத்தும் இறுதி இலக்கை அடைய ரஷ்யா செயல்படுகின்றது என அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய முறை தவறிய வகையில் தவறான தகவல்களை ஊக்குவித்ததன் மூலம் இன்னொரு உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியமைக்கான மிகவும் பிரபலமான சமீபத்திய உதாரணம், 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலாகும். அங்கு ரஷ்ய ஹக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதற்கும் அவரது அரசியல் எதிரியான ஹிலாரி கிளின்டனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் பல்வேறு வகையான ஊடுருவல்களைப் பயன்படுத்தினர். சர்வதேச வலைப்பின்னல்களில் போலியான- மேற்குறித்த தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை மேற்கொள்ளல், போலி சுயவிவரங்களை உள்ளடக்கிய கணக்குகளை உருவாக்குதல் மற்றும் போலியான அரசியல் பேரணிகளை ஒழுங்கமைத்தல் ஆகியவை நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கப் பயன்படுத்தப்படும் சில நடைமுறைகளாக அமைந்திருந்தது.

வெளிநாட்டு குறுக்கீடு தொடர்ந்து இருப்பதால், எந்தவொரு இணையத் தாக்குதல்களையும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான கவனம் மற்றும் தகவமைப்புத் திறன் தேவைப்பாடு இருக்கின்றமையை கனேடிய அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை. கனேடிய அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை என்னவென்றால், போலியான கருத்துப்பரிமாற்றம் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண உள்நாட்டு மற்றும் இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும், என்பதும் இவை தொடர்பாக தொடர்ச்சியாகவே கனேடிய மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படவேண்டும் என்பதே ஆகும். இருக்க வேண்டும். இது தொடர்பில் கனேடிய ஊடகங்கள் மற்றும் அரசு சாரா சிவில் அமைப்புகளும் கனேடிய மக்களுக்கு தேவையான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்பதுமே அக்கொள்கையில் இரண்டாம் நிலை எதிர்பார்ப்பாகும்.

இவற்றின் அடிப்படையிலேயே கனேடிய அரசாங்கம் Critical Election Incident Public Protocol (CEIPP) என்னும் சட்டக் கட்டுப்பாட்டை அண்மையில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த CEIPP இன் நடைமுறைக்குழுவில் சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் 5 பேர் கடமையாற்றுவார்கள் என்றும் அவர்கள் குறித்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த நிலைமைகளை கண்காணிக்க மற்றும் ஒரு வெளிநாட்டின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும் என கண்டறியும் போது, அவர்கள் பின்வரும் நெறிமுறைகள் பேணவேண்டும் எனவும் அச்சட்ட கட்டுப்பாடுகள் அமைகின்றன. அதன்படி,

1. தேசிய பாதுகாப்பு துறைகள் தொடர்ச்சியாவவே வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் தேர்தலின் ஒருமைப்பாட்டிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கமான விளக்கங்களை CEIPP குழுவுக்கு வழங்கும் என்றும்,

2. ஒரு தேசிய பாதுகாப்பு துறையின் தலைமையகம் (அதாவது, Communications Security Establishment, the Canadian Security Intelligence Service, the Royal Canadian Mounted Police அல்லது  Global Affairs Canada) 2019 பொதுத் தேர்தலில் வெளிநாடு தலையிடுவதை அறிந்தால், அவர்கள் குறித்த விடயத்தை தமது தலைமையக்கங்களுக்கு இடையில் கலந்தாலோசிப்பார்கள் வேண்டும் எனவும் , குறுக்கீட்டை திறம்பட தீர்க்க அனைத்து முறைமைகளையும் அவர்கள் கையாளவேண்டும் எனவும். எந்தவொரு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு காரணங்களை தவிர்ந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், குறித்த பாதுகாப்பு துறைகள் பாதிக்கப்பட்ட கட்சிக்கு (ஒரு வேட்பாளர்; ஒரு அரசியல் கட்சி; மற்றும் தேர்தல் கனடா) குறித்த சம்பவத்தை நேரடியாக தெரிவிக்கும் எனவும்,

3. குறித்த விடயத்தை பொதுமக்களுக்கு அறிவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் CEIPP குழு மதிப்பீடு செய்யும் எனவும்,

4. அம்மதிப்பீட்டின் பிரகாரம் பொதுமக்களுக்கு அறிவிக்க முனைப்படின், அது தொடர்பாக பிரதமர் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்து, அதன்பிறகே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும்

கொள்கையினை வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் தாண்டி வெளிநாடு ஒன்று மீண்டும் ஒரு உள்நாட்டு தேர்தலில் தலையீடு செய்யுமாயின் அது எவ்வாறான விளைவுகளை சந்திக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கனடாவின் பொதுவுடைமை வாத கட்சியின் தலைவரான சியர் அமெரிக்க இரட்டை குடியுரிமை கொண்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது. கோத்தா போன்று இவரும் அதை இரத்து செய்யவுள்ளார். 

 

தலைவர்கள் நேரடி விவாதம் - களத்தில் மாற்றங்களை பிரதிபலிக்குமா?

நான்கு வாரப்பரப்புரைகள் பெரிதாக கனடியத் தேர்தல்களத்தில் வெற்றிவாய்ப்புகளில் மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை என்ற நிலையில், இவ்வாரம் நடைபெறவுள்ள தலைவர்கள் இடையிலான தொலைக்காட்சி விவாதங்கள் மாற்றங்களை ஏற்ப்படுத்துமா? என்பதே தற்போது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடந்த பிரென்ஞ் மொழியிலான விவாதம் வெறும் கியூபெக் மாநிலத்திற்கு மட்டுமானதே. அதேபோன்று ஆங்கில மொழியில் நடந்த சில விவாதங்களும் தேசிய அளவில் அமையாதது மட்டுமன்றி அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளவும் தவறியிருந்தனர். ஆனால் இன்று ஒக்டோபர் 7ஆம் நாள் திங்கட்கிழமை ஆங்கில மொழியிலான விவாதம் தேசிய அளவில் மாலை 7 மணிமுதல் 9 மணிவரை நடைபெறவுள்ளது. அதேபோன்று ஒக்டோபர் 10ஆம் நாள் வியாழக்கிழமை பிரென்ஞ் மொழியிலான விவாதம் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை அவ்வாறே நடைபெறவுள்ளது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் அன்ரூ செயர், என்.டி.பி தலைவர் ஜக்மீட் சிங், பசுமைக்கட்சித் தலைவர் எலிசபெத் மே, புளொக் கியூபெக் கட்சித்தலைவர் தலைவர் பிராங்கோசிஸ் பிளஞ்செட், கனடா மக்கள் கட்சித்தலைவர் மக்சி பேனியர் என, வரும் தேர்தலில் ஒரு தொகுதியையாவது வெல்வர் எனக் கருதப்படும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டாவா நதிக்கு அடுத்த பக்கம் கியூபெக் மாநிலத்தின் கட்டுனு பகுதியில் அமைந்துள்ள, கனடிய வரலாற்று அரும்பொருட்காட்சியகத்தில் இவ்விரு விவாதங்களும் அடைபெறவுள்ளன. இவ்வாறான ஒரு அனைத்து ஊடகங்களினாலும் கனடா தழுவிக்காவிச் செல்லப்பட்ட கட்சித் தலைவர்கள் விவாதம் 2011 தேர்தலின் போதே நடைபெற்றுள்ளது. அப்போது அதை 11 மில்லியன் கனடிய மக்கள் பார்வையிட்டார்கள் அல்லது செவிமடுத்தார்கள். அதிலும் 4 மில்லியன் மக்கள் அதனை முழுமையாக பார்வையிட்டார்கள். இம்முறை இவ்விவாதம் கனடிய பூர்வீக குடிகளிற்கு அவர்களின் ஊடகங்களினூடாக காவிச் செல்லப்படுவது மட்டுமன்றி, அரபிக், கன்டனீஸ், மன்டறின், இத்தாலியன் மற்றும் பஞ்ஞாபி மொழிகளிலும் எக காலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அம் மொழிவாரி மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளும் சில ஊடகங்களால் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய ஆங்கில மொழி விவாதம் 2 மணித்தியாளங்கள் நடைபெறவுள்ளது. அதில் ஜந்து முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அவையாவன:
வாழ்க்கைத் தரத்தைத் தாங்கிக்கொள்ளல் (Affordability),
சுற்றுச் சூழல்ப்பாதுகாப்பு மற்றும் சக்தி விவகாரம் (Environment and energy)
பூர்வீககுடிகள் விவகாரம்; (Indigenous issues)
தலைமைத்துவம் மற்றும் உலக அரங்கில் கனடா-வெளிவிவகாரம் (Leadership and Canada on the world stage)
பன்முகத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் குடிவரவு (Polarization, human rights and immigration)

இவ்வாறான விவாதத்தில் ஆறு தலைவர்கள் கலந்து கொள்வதுவும் வரலாற்றில் இம்முறையே நடந்தேறுகிறது. ஜந்து விடயங்களில் ஒவ்வொன்றிற்கும் 20 நிமிடங்கள், தலைவர்களிற்கு தமது கட்சி விளக்கங்களிற்காக மொத்தமாக 20 நிமிடங்கள் என விவாத அரங்கு அமையவுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் கனடிய மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு கேள்வி, பின்னர் கண்காணிப்பாளர்களாக கலந்து கொள்ளும் ஜவரில் ஒருவரிடம் இருந்தான ஒரு கேள்வி, பின்னர் தலைவர்களிடையேயான பொது விவாதம் என அமையவுள்ளது. ஆகவே தலைவர்களுக்கு தனித்துவமாக கிடைக்கவுள்ள நேரம் மிகவும் குறைந்ததாகவே அமையவுள்ளது. ஒருவருக்கு 20 நிமிடங்கள் கிடைப்பதே அரிது என்ற நிலையில் அத்தகைய குறுகிய நேரத்தில், மக்களை கவரும் வகையில் சுருக்கமாகவும், அதேவேளை விளங்கும் வகையிலும் தனது கட்சியின் நிலையை முன்வைக்கிறாறோ அவரால் தாக்கம் செலுத்தும் நிலையை எய்தமுடியும்.

இன்றைய விவாதத்தில் பிரதான தாக்குதலுக்கு ஆட்சியில் இருந்த லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோவும், எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சித்தலைவர் அன்ரூ செயரும் நிச்சயம் உள்ளாவார்கள். இதில் இவர்களின் சிறந்த வகிபாகமே தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்துபவையாக அமையும். குறிப்பாக கடந்த பாராளுமன்றத்தில் 44 ஆசனங்களைக் கொண்டிருந்து தற்போது 12 ஆசனங்களைப் பெற்றாவது கட்சி அஸ்தஸ்தை தக்க வைக்க கடுமையாகப் போராடும் புதிய சனநாயகக்கட்சியின் தலைவர் ஜஸ்மீட் சிங், தனது வாக்குகளைக் குறிவைக்கும் ரூடோவுடன் கடுமையாக போராடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேபோன்ற நிலையே பசுமைக்கட்சித் தலைவர் எலிசபெத் மேக்கும் உண்டு. விவாதத்தில் இடதுசாரிக் கட்சித்தலைவர்களான ஜஸ்மீட் சிங் மற்றும் எலிசபெத் மே ஆகிய இருவருக்குமிடையிலான மோதலை ஏற்படுத்துவது அல்லது ஏற்ப்படுவது லிபரல்க் கட்சிக்கு சாதகமாக அமையும். மறுபுறத்தில் இவ்விவாதத்தில் எவ்வித பாதிப்புமின்றி வெளிவருவது அல்லது கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் அன்ரூ செயர் சிறப்பாக செய்யமல் பார்த்துக் கொள்வதே ரூடோவின் பணியாக இருக்கப்போகிறது. அதை அவர் செய்தாலே பெரும்பான்மை தொகுதிகளை வென்ற கட்சி என்ற நிலையை தக்கவைப்பது மட்டுமன்றி பெரும்பான்மை வெற்றியை நோக்கி லிபரல்க் கட்சியால் நகர முடியும்.

அதேவேளை சிறப்பாக செய்து ரூடோ அவர்களை தடுமாற வைப்பது அல்லது பலவீனமானவராக காட்ட முனைந்தால், கன்சவேட்டிவ் கட்சியை தொடர்ந்தும் முன்னகர்த்தி லிபரல் கட்சி மீண்டும் பெரும்பான்மை ஆட்சியமைப்பதை அன்ரூ செயரால் தடுக்க முடியும். ஆனால் அதனை எட்டுவதற்கு ரூடோவை மட்டுமல்ல கன்சவேட்டிவ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று கனடிய மக்கள் கட்சியை உருவாக்கிக் களம் காணும் மக்சி பேனியரையும் அன்ரூ செயர் எதிர்கொண்டாக வேண்டும். இவர்கள் அனைவரும் கனடிய தேசிய அளவில் வெற்றி வாய்ப்புகளுக்காக போராட, கியூபெக் மாநிலத்தில் மட்டும் போட்டியிடும் பிரிவினைவாதக்கட்சியான புளொக் கியூபெக் தலைவர் தனியாக தனக்கான களத்தை கியூபெக்கை நோக்கி நகர்த்தி, தன் கட்சி நிலையை இலகுவாக முன்நகர்த்த முடியும். அவர் செயற்பாடு எவ்வாறு அமைகிறது என்பதையும் பார்க்கப் போகிறோம்.

அனைத்துத் தலைவர்களிலும் ஒருமுறையாவது அவ்வாறான பரீச்சயம் கொண்டவராக ஜஸ்ரின் ரூடோவே அமைந்தாலும், அது அவருக்கான வலுநிலை எனச் சொல்லிவிடமுடியாது. ஆனால் இவ்வாறான விவாதங்களில் நொக்கவுட் பஞ் எனச் சொல்லப்படும், மோசமாக தவறிய நிலையை யாரும் எட்டினால் அது அவர்கள் கட்சி சார்ந்த பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திவிடும். 2011இல் அன்றைய புதிய சனநாயகக்கட்சித் தலைவர் ஜக் லேட்டன் அன்றைய லிபரல்க் கட்சித் தலைவர் மைக்கல் இன்நாட்டியஸ்சின் பாராளுமன்றப் பிரசன்னம் குறித்து எழுப்பிய கேள்வியின் ஊடாக வழங்கிய பெரும் பாதிப்பு, தேர்தலில் புதிய சனநாயகக்கட்சி வரலாறாக 103 தொகுதிகளில் வெற்றி பெறவும், லிபரல்க்கட்சி வரலாறாக 34 தொகுதிகளையே வெல்லும் நிலைக்கும் கீழ்த்தள்ளப்படவும் வழிகோலியது. அதேபோன்று 1984 தேர்தலில் லிபரல்க்கட்சித் தலைவரும் அப்போது பிரதமராக இருந்தவருமான ரேனர் மீது, கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மல்ரூனி அவர்கள் விவாதத்தின் போது தொடுத்த அதிரடித் தாக்குதல்கள், 50 சதவீத வாக்குகளைப் பெற்று 75 சதவீத தொகுதிகளை வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை மல்ரூனிக்கு ஏற்ப்படுத்தியது.

அவ்வாறான நிலையை ஏற்ப்படுத்தக்கூடிய வகையில் இவ்வார விவாதங்கள் அமையுமா? இறுதி வாரத்தில் ஏற்படக்கூடிய களநிலை மாற்றங்களுக்கான கட்டியம் கூறுபவையாக அமையுமா?. இன்றைய நிலையில் லிபரல்க் கட்சித் தலைமையிலான சிறுபான்மை அரசே அமையலாம் என்ற நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? பெரும்பான்மை அரசு அமையவில்லையானால் லிபரல்க் கடசியைக் கடந்து அதிக ஆசனங்களை வென்ற கட்சி என்ற நிலையை எய்த கன்சவேட்டிவ் கட்சியால் முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக அமையவுள்ள இவ்விவாதங்களின் பின்னர் களநிலைகள் குறித்தும் விவாதத்தின் பிரதிபலிப்புகள் குறித்தும் தொடர்ந்தும் பார்ப்போம்.

முகநூல் 

நேற்றைய கட்சித்தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதத்தில் பல விடயங்கள் பேசப்பட்டன. எனினும் மக்கள் மனங்களில் எவ்விடயங்கள் முக்கிய விடயங்களாக இருக்கின்றன என்பதுவும் அவற்றைப் பற்றியே தொடர்ந்தும் அதிகமாக பேசுவதுமே அவர்கள் மனங்களிலான இடத்தை பதவுசெய்யும் வகையில் அமையும். அந்த வகையில் எவ்விடயங்கள் அதிக கரிசனையைக் கொண்டிருக்கின்றன என்பதை கீழ்வரும் தரவில் பார்க்கவும். இதைக் கருத்தில் கொண்டு பேசுவதில் நேற்று பல தலைவர்களும் தவறிவிட்டனர்.

இதைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஜஸ்மிட் சிங்கே அதிகம் பேசினார். அதனால் தான் அவர் தனித்து மிளிர்ந்தார். 35 சதவீத மக்களின் கரிசனையாக முதலிடத்தில் அதிகரித்துவரும் விலைவாசியில் வாழ்க்கைத் தரத்தை பேணுவதே பெரும் கரிசனையாக பார்க்கப்படுகிறது. அடுத்து 34 சதவீத மக்களின் கரிசனையாக சுகாதாரம் இடம் பிடிக்கிறது. மூன்றாவது இடத்தில் 29 சதவீதத்தில் காலநிலை மாற்றம் கரிசனையுடன் நோக்கப்படுகிறது.

இவையே முதல் மூன்று முக்கிய விடயங்களாக மக்கள் மனங்களில் உள்ளன. இவற்றைக் கடந்து வரிகள்இ வீட்டுமனையைக் கொண்டிருப்பதிலான சவால்கள்இ நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கள் என மக்கள் கரிசனை செல்கிறது. ஏனைய விடயங்கள் மிகவும் பின்தங்கியே மக்கள் மனதில் உண்டு.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

முகநூல் 

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.