Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்

பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள  பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

18796166-7492231-image-a-9_1569186434957

உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என  டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும்  பிரிட்டனில்  9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

thomas-cook-manchester-airport-2.jpg

தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை  பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://www.virakesari.lk/article/65344

  • கருத்துக்கள உறவுகள்

தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் முடங்கியது: 178 வயது கம்பெனியின் 22,000 ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலை

 
தாமஸ் குக்படத்தின் காப்புரிமை Getty Images Image caption மான்செஸ்டர் விமான நிலையத்தில் தாமஸ் குக் பயணிகளுக்கான அறிவிப்பு துண்டறிக்கைகளுடன் விமான நிலையப் பணியாளர்.

உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனமான 'தாமஸ் குக்'கின் சேவையை தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசிநேர முயற்சிகள் பலனளிக்காததால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளது.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு சென்றுள்ள சுமார் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த நிறுவனத்தின் உதவியோடு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் மிகப் பெரிய பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது நேர்ந்துள்ள அசாதாரணமான சூழ்நிலை 'ஆழ்ந்த வருத்தத்தை' தருவதாக தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீட்டர் ஃபாங்க்ஹௌசர் தெரிவித்துள்ளார்.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தனது நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல சுற்றுலா சேவை நிறுவனத்தின் முடக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள அதன் 22,000 ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தாமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சிறப்பு சேவைகள்

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை AFP

திட்டமிட்டபடி தாமஸ் குக் நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலா சென்றுள்ள 16,000 பயணிகள் இன்று பிரிட்டனுக்கு திரும்ப வேண்டும். அவர்களது பயணத் திட்டத்தில் இந்த சேவை முடக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் டாம் புரிட்ஜ் கூறுகிறார்.

64 வழித்தடங்களில் சிக்குண்டுள்ள சுமார் 14,000 பயணிகளை மீட்பதற்கு 45 விமானங்களை இயக்குவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஈஸிஜெட், விர்ஜின் ஆகிய விமான சேவை நிறுவனங்களின் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தாமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

தாமஸ் குக் நிறுவனம் தங்களது வீழ்ச்சியை தடுப்பதற்கு பிரிட்டன் அரசிடம் 250 மில்லியன் பவுண்டுகள் நிதியை கேட்டதாகவும், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தாமஸ் குக் நிறுவனத்திற்கு இந்த நிதி தரப்பட்டிருந்தாலும், அதனால் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குபிடித்திருக்க முடியும் என்றும், அதன் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே வந்திருக்கும் என்றும் தான் அஞ்சுவதாக அவர் கூறினார்.

மிகப் பெரிய அளவிலான கடன்களும், தவறான வணிக கொள்கைகளுமே தாமஸ் குக் நிறுவனத்தின் முடக்க நிலைக்கான காரணமாக உள்ளதாக க்ராண்ட் கூறினார்.

இந்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதா?

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தாமஸ் குக் நிறுவனத்தின் இந்திய, சீன, ஜெர்மானிய மற்றும் நார்டிக் துணை நிறுவனங்களின் வர்த்தகம் வழக்கம் போல தொடரும்.

மேற்குறிப்பிட்டுள்ள துணை நிறுவனங்களுக்கும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அதன் தாய் நிறுவனத்திற்கும் சட்டரீதியாக நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவற்றின் வர்த்தக செயல்பாடு உடனடியக பாதிக்கப்படவில்லை.

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள தாமஸ் குக்கின் துணை நிறுவனங்கள் தங்களது விமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தாய் நிறுவனத்தையே சார்ந்துள்ளதால், அவற்றின் வர்த்தக நடவடிக்கை பாதிப்படையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை அந்த முயற்சி பலனளிக்காதபட்சத்தில் கூடுதலாக மூன்றரை முதல் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும்.

https://www.bbc.com/tamil/global-49797083

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.