Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழிடம் இரந்த மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாய் இருந்த போதும் காலாதிகாலமாக தமிழ் பல மொழிகளிடம் இருந்து சொற்களை வாங்கி தன்னை வளப்படுத்தியே வந்திருக்கிறது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் பண்டைத் தமிழரின் பரந்த மனோநிலையும் இதற்கு ஒரு காரணம்.

வடமொழி முதல், மலாய், டச்சு, போர்த்துகீசு, ஆங்கிலம் என பல மொழிகளிடம் இருந்து சொற்களை சுவீகரித்து அவற்றை “திசைச் சொற்கள்” என இலக்கணப்படுத்தியும் வைத்துள்ளது தமிழ்.

ஆனால் இந்த போக்குவரத்து ஒன்றும் ஒரு வழிப்பாதை அல்ல. ஏனைய மொழிகளும் தமிழிடம் பல சொற்களை இரவல் வாங்கியுள்ளன என்பது மறுக்கவியலாத உண்மை.

சொற்களை மட்டுமல்ல, இன்று மலாய், பாசா இந்தோனேசியா என இரு சிறு மொழிகளாய் பிரிந்து கிடக்கும் மலாய் மொழி, ஒரு காலத்தில் தமிழ் பல்லவ எழுத்துருக்களை கொண்டே எழுதப்பட்டது( இப்போ பாசா இந்தோனேசியா டச்சு மொழி எழுத்துருவிலும், மலாய் ஆங்கில எழுத்துருவிலும் எழுதப்படுகிறது). 

இந்த திரியில் வேற்று மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை எல்லாரும் இணைந்து பட்டியல் இடலாமே?

1. Annicut - கல்லணை கட்டிய தமிழர்கள், ஆற்றின் வெள்ளத்தை அணைக்கும் முகமாக கட்டிய கட்டு என்ற அர்த்ததில் உருவாக்கிய தமிழ் காரணப் பெயர் - அணைக்கட்டு, ஆங்கிலத்தில் அதே அர்தத்தில் இடுகுறி பெயராக இருகிறது.

2. Manga - போர்துகீசிய, துருக்கிய, இன்னும் பல ஐரோப்பிய மொழிகளில் மாம்பழத்தின் பெயர். ஆங்கிலத்திலும் திரிபாக mango. மா மரத்தின் காய் என்ற தமிழ் காரணப் பெயர். 

3. Catamaran - மரங்களை இணைத்துக் கட்டி, கடல் கடந்த தமிழர்கள் கட்டிய கட்டுமரம். தமிழில் காரணப் பெயர். அதே அர்தத்தில் ஆங்கிலத்தில் இடுகுறிப் பெயர்.

4. Mulligatawny - மிளகுச் சுவையூட்டிய ஊன் இரசம். மிளகு+தண்ணி, தமிழில் காரணப் பெயர். ஆங்கிலத்தில் அதே அர்த்ததில் இடுகுறிப் பெயர்.

5. Pariah - பறையர் - சாதிய அடக்குமுறையால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு தமிழ் சாதி. ஆங்கிலத்தில், எந்த ஒரு கட்டமைப்பில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டவரை குறிக்கப் பயன்படுகிறது.

இங்கே பல மொழி பேசுபவர்கள் இணைகிறோம். இப்படியாக உங்களுக்குத் தெரிந்த, மற்றைய மொழிகள் தமிழில் இருந்து இரவல் வாங்கிய  சொற்களை இங்கே பகிரலாமே?

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு  -  Coir 

பேச்சு  -  Speech   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சாவி - போர்த்துகீசியம்

பிரோ - பிரெஞ்சு

துட்டு - டச்சு

கோணி - இந்தி

பாப்பாளி - மலாய்

சப்போட்டா - இசுப்பானியம்

கொய்யா - பிரேசிலியன்

சுமார் - பெர்சியன்

வயது - சமற்கிருதம்

கில்லாடி - மராத்தி

ஆட்டோ - கிரேக்கம்

ரிக்ஷா - சப்பானியம்

தகவல் - அரபி

போலீஸ் - இலத்தீன்

ஏட்டு - ஆங்கிலம்

துப்பாக்கி - துருக்கி

தோட்டா - உருது

 

 

( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )

நன்றி நுணாவிலான் .... பழைய  யாழ் பதிவில் இருந்தது July 24, 2008 in தமிழும் நயமும்

 

 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

கயிறு  -  Coir 

பேச்சு  -  Speech   

நன்றி அண்ணா.

கயிறு சரி. ஆனால் speech சரியா? 

பழைய ஸக்ஸன் மொழியில் இருந்து வந்தது என்கிறது இந்தக்குறிப்பு.

https://www.lexico.com/en/definition/speech 

1 hour ago, நிலாமதி said:

சாவி - போர்த்துகீசியம்

பிரோ - பிரெஞ்சு

துட்டு - டச்சு

கோணி - இந்தி

பாப்பாளி - மலாய்

சப்போட்டா - இசுப்பானியம்

கொய்யா - பிரேசிலியன்

சுமார் - பெர்சியன்

வயது - சமற்கிருதம்

கில்லாடி - மராத்தி

ஆட்டோ - கிரேக்கம்

ரிக்ஷா - சப்பானியம்

தகவல் - அரபி

போலீஸ் - இலத்தீன்

ஏட்டு - ஆங்கிலம்

துப்பாக்கி - துருக்கி

தோட்டா - உருது

 

 

( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )

நன்றி நுணாவிலான் .... பழைய  யாழ் பதிவில் இருந்தது July 24, 2008 in தமிழும் நயமும்

 

 

நன்றி நிலாமதி அக்கா,

இதில் பல புதிய திசை சொற்களை அறிந்து கொண்டேன்.

ஆனால்,

இவை வேற்று மொழிகளிடத்தில் இருந்து தமிழ் இரவல் வாங்கிய சொற்கள் அல்லவா?

இந்த திரி, வேற்று மொழிகள் தமிழிடம் இருந்து இரவல் வாங்கிய சொற்களை பற்றியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு சொல்,

கறி curry

விக்கிபீடியா பின்வரும் சொற்களை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்ததாக வகைப்படுத்துகிறது.

பந்தல் (Pandal)

காசு (cash)

சுருட்டு cheroot 

கல்வெட்டு culvert

குருந்தம் corundum 

பச்சையிலை pachouli 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/30/2019 at 1:02 AM, தமிழ் சிறி said:

கயிறு  -  Coir 

பேச்சு  -  Speech   

"பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது" அருளியது எங்கள் சீமான்! 😎ஆனால் சரியான தகவல் அல்ல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_other_languages

இந்த திரியில் மேலும் பல தகவல்கள் இருக்கிறன. நேரம் கிடைக்கும் போது முழுவதையும் இணைக்கிரேன். இப்போதைக்கு மலாய் மொழி சொற்கள் மட்டும்.

* சிங்களம் என்ற இணைப்பை தட்டிப்பாருங்கள். பாவி மக்கா, பாதி மொழிய எம்மகிட்ட இருந்தும், மற்றப்பாதிய பாளி/சமஸ்கிருததில் இருந்தும் உருவி இருப்பாங்க போல 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Malay                word  Tamil        word   Transliteration Original Sanskrit word Meaning in English
apam அப்பம். apam   kind of cake or Hoppers
bendi வெண்டி vendi   okra/lady's finger
harta அர்த்தம் arttam artham (अर्थ) wealth/material
kapal கப்பல் kappal   boat
kedai கடை kadai   foodstall
kuil கோயில் koyil   temple/shrine
kolam குளம் kulam   Pool of water
kota கோட்டை Kottai kOTa (कोट), kuTa, kOTTa fort
mangga மாங்காய் mangkai   mango
peta படம் Paṭaṁ pata (पट) map
roti ரொட்டி rotti rOTika (रोटिका) bread
sama சமம் sama/samam samam (equal) same
singa சிங்கம் singam simham (सिंह) lion
topi தொப்பி toppi

ஆனால் இதில் தொப்பி, சிங்கம், சமம், கோட்டை, அர்த்தம் என்பன தூய தமிழ் சொற்கள் இல்லை என நினைக்கிறேன். ரொட்டி என்பதும் கூட தமிழில் ரொட்டி என்பதல்ல மலாயில் ரொட்டி. அவர்கள் ரொட்டி என்பது நம் பாணை.

ஆனால் கடை, குவில் என்பன அன்றாடம் பழக்கத்தில் உள்ள மலாய் சொற்கள் தூய தமிழ் சொற்கள் என்றே நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.