புரட்சிகர தமிழ்தேசியன்

தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்குக - காங்கிரஸ் ஆவேசம்.!

Recommended Posts

தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்.!

seeman11-1570969946.jpg

சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோரின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து, ட்வீட் வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதை பாருங்கள்:இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர்#ராஜீவ்காந்தி.

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜிவ்காந்தி.

இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த 2000 இந்திய வீரர்களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள் புலிகள்.

ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல வெளியான வீடியோக்கள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற ட்வீட்டை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/congress-wants-ntk-chief-seeman-s-arrest-over-rajiv-gandhi-and-ltte-remark-365532.html

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் கான் குடும்பமே ஒரு ஈரானிய பார்சிக்கூட்டம்.

Share this post


Link to post
Share on other sites

”காந்தியைக் கொலை செய்தது கோட்ஸே, அவரை கொலை செய்தது சரிதான் என ஒரு கூட்டத்தினர் பேசுவது போன்றதுதான், விடுதலைப்புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தியை கொலை செய்த விவகாரமும்” என்று சர்ச்சைக்குரிய விதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதால், அவர் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திய சீமான், ''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். காந்தியை சுட்டது கோட்ஸே, அவர் செய்தது சரி என ஒருகூட்டம் பேசுகிறது. இணையத்தில் அந்த தகவல் இருக்கிறது. அதேபோலத்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததும்,'' எனப் பேசினார்.

சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போடவேண்டும் என்றும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதியிடம் சீமானை கைது செய்யவேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி காவல்நிலைய அதிகாரிகள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

https://www.bbc.com/tamil/india-50038777

 

ஏழு பேரும் விடுதலைசெய்யப்படவேண்டும்

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரும் விடுதலைசெய்யப்படவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிந்துள்ளார்.

''ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது. பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன? என்பதைப் பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்,'' என ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

 

Share this post


Link to post
Share on other sites

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா? காங்-க்கு சீமான் பதிலடி.!

seeman433--1571045055.jpg

சென்னை: ராஜீவ் காந்தி கொலை குறித்த தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி தந்துள்ளார்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசினார் என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இதற்காக காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டதால் போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராஜீவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாக பேசிக் கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். வாழ வழியின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் போது கையில் உள்ளா குழந்தை வரை பயங்கரவாதியாக பார்க்கின்றனர்.

இந்த தடையால் சர்வதேச அமைப்பிடம் சென்று நீதி கேட்கும் போது தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகளாக பார்க்கின்ற போக்காக உள்ளது. 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள். காந்தியை நாங்கள் தான் கொன்றோம். கோட்சே தாமதமாக கொன்றுவிட்டதாக கூறும் போது ஏன் கோபப்படவில்லை. காந்தி உருவப்படத்தை சுட்டு போதும் ஏன் கோபப்படவில்லை. இதை எவ்வளவு காலத்திற்கு பேச போகிறார்கள் என்பதை பார்க்கலாம். 

ஒருமைப்பாடு எங்கே கெட்டு போகும் ?

தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. காவிரி நதி நீரில் நிலைப்பாடு என்ன? ஆட்சியில் இருந்தபோது நதி நீரை பெற்று தர முடிந்ததா. மக்களை அடித்து விரட்டி கால்நடையாக தமிழகத்திற்கு வந்தபோது எங்கே சென்றார்கள். பேசுவதால் ஒருமைப்பாடு என்ன கெட்டுபோய் விட்டது. அமைதிப்படை குறித்து விவாதிக்கலாமா? ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா?

இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படத்தை பச்சை குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலமும் வரும். ராஜீவ் கொலைக்காக லட்சம் பேர் படுகொலை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்றால் நம்பிவிட்டார்களா. ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறி தான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள்.

போர் நடத்திய காங். திமுக இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசு தான். காங்கிரசுடன் திமுக நின்றதை யாராவது மறுக்க முடியுமா. சத்தியத்தின் பக்கம் தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலசந்திரன் ராணுவ பிடியில் இருப்பதாக தகவல் சொன்னபோது பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்க கூடாது என்று சொன்னது யார்? அதே காயமும் வன்மமும் கொந்தளித்து கொண்டு இருக்கிறது. 10 ஆண்டுகளாக அநீதிக்கான நீதியை பெற கூட முடியவில்லை . அவ்வளவு தடை, இடையூறு. ஒரு மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர். என் மீது இதுபோன்ற லட்சக்கணக்கான வழக்குகள் இருக்கிறது.

அதற்காக ராஜீவ் காந்தி குறித்து பேசியதை வாபஸ் பெறமாட்டேன். பாஜக, காங்கிரஸ் ஒன்றுதான் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாக தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்து கொடுத்தது தான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அணு அலை எதிர்த்து போராடினால் தேச துரோகி என 2 கட்சிகளும் சொல்கிறது. நீட் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பா.ஜ.க.

ஜிஎஸ்டியே காரணம்

நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது தான் காரணம். எல்லா திட்டங்களையும் இரண்டு கட்சிகள் தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜ.க. காவி கட்டிய காங்கிரஸ். இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. கொள்கையில் என்ன வேறுபாடு உள்ளது. ராமர் கோவிலை காங்கிரஸ் வந்து தான் கட்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறுகிறார். இரு கட்சிகளுக்கும் கல்வி, பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் ஒன்று தான். தனியார் மையம் கொள்கையில் இரு கட்சிகளுக்கும் என்ன மாற்று கருத்து உள்ளது.

ரயில்வே துறையையும் தனியார் மையம் ஆக்கப்பட்டு வருகிறது. சீன அதிபர் வந்தபோது பிரதமர் தமிழகத்தில் நடப்பதால் வேட்டி கட்டியிருப்பார். தமிழன் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சி தான். இவ்வாறு சீமான் கூறினார்

https://tamil.oneindia.com/news/chennai/i-am-not-withdraw-remarks-against-rajiv-gandhi-says-seeman-365589.html

 

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் காந்தி குறித்து சீமான், சீமானின் பேச்சால் சர்ச்சை, சீமானுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்.!

seeman457-1571067272.jpg

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பேசிய சீமான், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும என்றார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீமான் மீது போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஆனால் தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை; வழக்கை சந்திக்க தயார்; அமைதிப்படையின் அட்டூழியங்கள் பற்றி காங்கிரஸார் விவாதிக்க தயாரா? என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் சீமான்.தற்போது சீமானுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு தற்போது அது ட்விட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/wesupportseeman-hashtag-trending-in-twitter-365630.html

டிஸ்கி:

என்னை கேட்டால் சரி /தவறுக்கு அப்பால் எழுவரின் கருணை அடிப்படையிலான விடுதலை ஊசலில் இருக்கும் போது இப்படி பேசி இருக்க வேண்டியது இல்லை. அப்படியே இருந்தாலும் காங்குரஸ்  போட்டியிடும் நாங்குநேரியில் பேசி இருக்கலாம் ..👍

--- என்னுடைய தனிப்பட்ட கருத்து ---

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள கடுகளவு நியாயமும்

 
சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்”.
 
ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவான நோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்படை நிகழ்த்தியது; அயல் நாட்டுனான உங்களது ராஜதந்திர நகர்வுகளை பொதுமக்களை பகடையாக்கி செய்யக் கூடாது. ஆனால் இதை எல்லா வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அமைதிப்படை (பயங்கரவாதிகளையே கொல்கிறோம் எனும் தோரணையில், அதுவரை நட்புப் படையினராக இருந்தவர்களை தாக்குகிறோம் எனும் முரணுடன்) ஈழத்தில் பொதுமக்களை தாக்கியது, பெண்களை பலாத்காரம் பண்ணியது, ஆனால் அது குறித்த சர்வதேச விசாரணையை இன்னமும் யாரும் நடத்தவில்லை. இந்த பின்னணியில் சீமான் பேசியதில் நிச்சயம் நியாயமுள்ளது - அதாவது நீதி வழங்கப்படவில்லை, ராஜீவின் குடும்பமும் இதற்கு மன்னிப்பு கோரவில்லை எனும் பொருளில். நமது அரசுகள் காஷ்மீரியரை இதே போல் கொன்றும் கண்ணில் பெல்லெட் குண்டுகளால் சுட்டும் பெண்களை பலாத்காரம் பண்ணியும் அழித்ததற்கும், இந்திரா படுகொலையை ஒட்டி பஞ்சாபியரை கொத்துக்கொத்தாய் கொன்றொழித்ததற்கும், பல பழங்குடிகளையும் போராடும் மக்களை சுட்டுக் கொன்றதற்கும், மதக்கலவரங்கள் எனும் பெயரில் பல்வேறு சிறுபான்மையினரை குண்டர்களால் தாக்கியும் வீட்டுக்குள்ளும் கடைக்குள்ளும் வாகனங்களுக்குள்ளும் வைத்து கொளுத்தி கொன்றதற்கும் இதுவரை மன்னிப்புக் கோரியதில்லை. இது தொடர்ந்து இறையாண்மை பொருந்திய நமது அரசுகள் நிகழ்த்தும் கொடுங்குற்றங்களின் கரும்பக்கம். ராஜீவின் அரசு இதையே மற்றொரு நாட்டில் நிகழ்த்தியது. இதற்கு பல அதிகாரிகளும் துணை போயினர்
 
இந்த நோக்கில் தான் சீமானின் பேச்சில் கடுகளவாவது நியாயமுண்டு என நினைக்கிறேன். அதாவது இத்தகைய உணர்ச்சிகர அறிக்கைகளால் தான் ஓரளவாவது இவர்களை சற்று நெளிய வைக்க முடியும்.
 
ஆனால் எந்த ஜனநாயக அரசமைப்புக்குள்ளும் பழிக்குப் பழி வாங்குவதை நியாயப்படுத்த முடியாது. அப்படி செய்தால் இந்த அரச பயங்கரவாதங்களை, வெளியுறவுத் துறையின் மீறல்களை, இனப்படுகொலைகளை கேள்வி கேட்கும் தகுதியை நாம் இழந்து விடுவோம். சீமானின் பேச்சின் பிரச்சனை அது சட்டென தமிழ்க் குரலை ஒரு காட்டுமிராண்டிக் குரலாக திரித்துக் காட்டுகிறது என்பது
 
அதே நேரம் சீமான் முன்வைத்ததை சற்று நாகரிகமான நிதானமான மொழியில் நாம் தேசிய, சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும். ராணுவம், காவல்துறை, வெளியுறவுத்துறை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மட்டற்ற அதிகாரத்தை கண்டித்து, அந்த அதிகாரத்தை மட்டுப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் நமது காவல்துறையும் ராணுவமும் நம் மண்ணிலும் வெளிமண்ணிலும் நடத்திய அத்தனை படுகொலைகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தம் ஆட்சியில் நடந்த குற்றங்களுக்காக செய்ய வேண்டும்; எவ்வளவு பெரிய போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட மாட்டோம் என உறுதிமொழியை இந்த ராணுவமும், காவலர்களும் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும் எடுக்க வேண்டும். சாலையை சுத்தமாக வைப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை விட இதுவே முக்கியம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.