Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Featured Replies

On 11/22/2019 at 3:47 AM, Kadancha said:

இவையெல்லாம் பழையவை, கம்பெனிகளுக்கும், சொறி சிங்கள அரசுக்கும் இடையேயான பிரச்சனைகள். தீர்வுகளும் உண்டு.

மைத்திரியின் 10 வருடம், 2.4 பில்லியன் கதையை, அப்படியே black-and-white ஆகவே உள்வாங்கி விட்டீர்கள்.

சுருக்கமாக, சீன அரசு இப்பொது நேரடியாக தலை இட்டு, கடனையும்  ரத்து செய்து விட்டு, சிங்களத்துக்கு தாமரை கோபுரத்தை கையளிப்பதை தடுத்து இருக்கிறது.

இழப்பீடும்  ஒப்பந்தப்படி சிங்களம் செலுத்த வேண்டும்

அது தான், சிங்கள அரசு அறிக்கை, இந்த  10 வருடம், 2.4 பில்லியன். ஆயினும் நம்ப முடியாது.

ஏனெனில், கடன் ரத்து என்பது, உடனடியாக முதலும், முழுவட்டியும் கட்டப்பட வேண்டும், அத்துடன் இழப்பீடும் அதன் வட்டியும் .

அத்துடன், தாமரை கோபுரம், சீனாவின் signal  intelligence post. எனவே, அதை forefeit பண்ணுவது சீனாவின் கைகளில். தாமரை கோரத்தை பொறுத்தவரையில், சிங்கள அரசின் கைகளில் ஒன்றுமே இல்லை.

இவை பழையவை அல்ல. தாமரைக்கோபுரம் திறந்து வைக்கப்பட்ட போது முன்னைய சம்பவங்கள் என மைத்திரி கூறியதும் அதற்கு ALIT, TRC, மகிந்த கூறியவையும்.

மைத்திரி ஜனாதிபதியானதும் பல சீன அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்தி வைத்தார். அதில் தாமரைக்கோபுர திட்டமும் ஒன்று. அத்துடன் ALIT பிரச்சினையும்.

அதன் பின் 16 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கவிருந்த சீன EXIM வங்கி அதை 12 பில்லியனாக குறைத்தது என மைத்திரி கூறியிருந்தார். மற்றும்படி ரத்து செய்யவில்லை.

ஆனால் 16 பில்லியனுக்கு கணக்கு பார்த்து தான் இலங்கை வட்டியுடன் சேர்த்து முன்பு பணத்தை செலுத்தி வந்தது. அத்துடன் 49.61 மில்லியன் ரூபாய் தண்டனை பணமாக கட்ட வேண்டியிருந்தது. அது பற்றிய விடயங்கள் தான் அண்மையில் வெளியாகியிருந்தது. மைத்திரிக்கு அவை முன்பே தெரியும். தெரிந்து தான் மைத்திரி 2.4 பில்லியன் ரூபாய் படி இன்னும் 10 வருடங்களுக்கு பணம் செலுத்துவது பற்றி கூறியிருந்தார்.

தாமரைக்கோபுரம் சீனாவின் கையில் இல்லை, அதை சீனா இலங்கையிடம் கையளிப்பதை தடுத்து வைத்திருக்க. அது இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது. (எதிர் காலத்தில் குத்தகைக்கு கொடுக்கப்பட்டால் அது வேறு).

நீங்கள் உங்கள் கற்பனைகளை வைத்து black and white ஆக விளக்கமளிக்காதீர்கள்.

  • Replies 133
  • Views 11.6k
  • Created
  • Last Reply

அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த உருசிய 7000 tonne கப்பல் 

On 11/22/2019 at 5:31 AM, Kadancha said:

ஏற்கனவே சொல்லிவிட்டேன், கோத்தா, நலன்களின் அடிப்படையில் இயங்குவார். mcc  அவருக்கு ஏற்றதாயின், அதாய் ஏற்றுக் கொள்வார்.  

இப்போதைய நிலையில் mcc, அவர்களின் நலன்களில்   கைவைக்கிறது.

சீன செய்யக் கூடியதை , அமெரிக்கா செய்யும் என்றால், கோத்தாவின் தெரிவு அமெரிக்கா.

மற்றது, கோத்தாவின் விஞ்ஞாபனத்தில், வெளியுறவு பற்றி இருப்பது எல்லாமே பகுதியாக அல்லது முழுமையமாக  செய்யக் (அல்லது அதே நேரத்தில் மறுக்கக் கூடியது கூட) கூடிய nuance உம், நெகிழ்வு தன்மையும்  கொண்டது.

எனவே, கோத்தாவின் விஞ்ஞாபனத்தை face value ஆகவோ, black-and-white ஆகவோ எடுக்க முடியாது.

சீனா செய்யக்கூடியதை அமெரிக்கா செய்யாது. 480 மில்லியன் டொலரை 5 வருடங்களில் தருவதற்காக வேறு ஒரு அபிவிருத்தியையும் கோத்தா செய்யாமல் விடப்போவதில்லை.

சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உதவிகளை பெறுவார், அமெரிக்க விருப்பங்கள் சிலவற்றையும் நிறைவு செய்வார்.

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியுறவு பற்றி நான் ஏதும் கருத்து கூறியிருக்கவில்லையே. MCC ஐ ஒத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறினேன்.

நீங்கள் அளவுக்கு மிஞ்சி black and white படங்கள் பார்க்கிறீர்களோ தெரியவில்லை. 😀

Edited by Lara

சீன கப்பல் இலங்கையில் நங்கூரம் - என்ன குறியீடு? R K Radhakrishan Interview

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

நீங்கள் உங்கள் கற்பனைகளை வைத்து black and white ஆக விளக்கமளிக்காதீர்கள்.

நீங்கள் கூறியது எல்லாமே, கம்பெனிகளுக்கும், சிங்களத்துக்குமுள்ள பிரச்னை, முன்பே தெரிந்தவை, திறந்து வைக்கப்பட்ட பொது மைத்திரி கூறினாலும்.

கடன் ரத்தும், கோபுரத்தை கையளிப்பதை நிறுத்தியதும் செய்தது சீன அரசு, மைத்திரியால் திறக்கப்பட பின், இதுவே ஆகப் பிந்திய நிலைமை.

சிங்களம் இழப்பீடும் செலுத்த வேண்டும், ஒப்பந்தத்தால்.  

கோபுரம் சீனாவிடம்.

கோத்தா வந்ததால், சீன மாற்று நடவடிக்கைக்கு உடன்படலாம்.

அறிந்தந்தில் இருந்து உங்களுக்கு ஏற்றவறான விளக்கங்கள், கற்பனை உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியுறவு பற்றி நான் ஏதும் கருத்து கூறியிருக்கவில்லையே.

"அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது பற்றி கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது,

“Hambantota port is a national asset and was defined as a strategic asset by us previously, and the intention was never to sell or lease the port for 99 years. We will make it a priority to revisit the already signed agreement with the Chinese government and explore ways as to how best we could bring about a win-win for the two countries.”

இது தேர்தலுக்காக கூறப்பட்டதா அல்லது இது பற்றி ஏதும் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்."

5 hours ago, Lara said:

MCC ஐ ஒத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறினேன்.

On 11/21/2019 at 6:51 PM, Lara said:

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் MCC ஐ ஒத்த திட்டம் பற்றி உள்ளது.

எனவே கோத்தா MCC இல் கையொப்பமிடுவார்.

யாவும் கற்பனை அல்லது யதார்தத்துக்கு மீட்சியா, வாசகர்களிடம் விடுகிறேன்.  

5 hours ago, Lara said:

சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உதவிகளை பெறுவார், அமெரிக்க விருப்பங்கள் சிலவற்றையும் நிறைவு செய்வார்.

அவர்கள் எல்லோருமே, கோத்த உட்பட  யதார்த்தத்தில் தான் இருக்கிறார்கள்.       

12 hours ago, Kadancha said:

நீங்கள் கூறியது எல்லாமே, கம்பெனிகளுக்கும், சிங்களத்துக்குமுள்ள பிரச்னை, முன்பே தெரிந்தவை, திறந்து வைக்கப்பட்ட பொது மைத்திரி கூறினாலும்.

கடன் ரத்தும், கோபுரத்தை கையளிப்பதை நிறுத்தியதும் செய்தது சீன அரசு, மைத்திரியால் திறக்கப்பட பின், இதுவே ஆகப் பிந்திய நிலைமை.

சிங்களம் இழப்பீடும் செலுத்த வேண்டும், ஒப்பந்தத்தால்.  

கோபுரம் சீனாவிடம்.

கோத்தா வந்ததால், சீன மாற்று நடவடிக்கைக்கு உடன்படலாம்.

அறிந்தந்தில் இருந்து உங்களுக்கு ஏற்றவறான விளக்கங்கள், கற்பனை உட்பட.

தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட போது மைத்திரி கூறியவையும் அதன் பின் ALIT, TRC, மகிந்த கூறிய பதில்கள் பற்றியும் கூறியிருந்தேன்.

அத்துடன் கடன் ரத்து நடைபெறவில்லை. முன்னைய கடன் குறைப்பு விடயமும் அதை தொடர்ந்து நடந்த விடயங்களும் தான் 2018 annual report இப்பொழுது வெளியிடப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் விவாதப்பொருளாகின.

தாமரை கோபுரம் சீனாவின் கையில் இல்லை. இலங்கையின் கையில் தான் உள்ளது. உங்கள் கற்பனைகளை இங்கு கொட்டி எனது நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Edited by Lara

4 hours ago, Kadancha said:

"அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது பற்றி கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது,

“Hambantota port is a national asset and was defined as a strategic asset by us previously, and the intention was never to sell or lease the port for 99 years. We will make it a priority to revisit the already signed agreement with the Chinese government and explore ways as to how best we could bring about a win-win for the two countries.”

இது தேர்தலுக்காக கூறப்பட்டதா அல்லது இது பற்றி ஏதும் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்."

யாவும் கற்பனை அல்லது யதார்தத்துக்கு மீட்சியா, வாசகர்களிடம் விடுகிறேன். 

MCC பற்றிய எனது கருத்தை Quote செய்து கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியுறவு பற்றி எழுதி விட்டு இப்பொழுது அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான கருத்தை இடையில் புகுத்துகிறீர்கள்.

MCC ஐ ஒத்த திட்டம் கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது. அத்திட்டம் மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது 2011-2013 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. அதை செயற்படுத்துவோம் என கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே கோத்தா MCC இல் கையொப்பமிடுவார் என்பது எனது சொந்த கருத்து, இரண்டும் ஒத்த திட்டம் என்பதால்.

நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு வைத்துள்ளீர்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

அத்துடன் கடன் ரத்து நடைபெறவில்லை.

திறக்கபட்ட பின், சீன அரசின் நேரடி தலையீடும், கடன் ரத்தும்.

 வாய்வழியாகவும் மைத்திரி, மகிந்த சொல்லியதை, சீன தூதரகதிடம், அது பதிவு செய்ததை,  முழுமையாக மொழிபெயர்த்து அனுப்புமாறும், அதை ஸீனத் தூதரகம் செய்த பின், சீன அரசின் நேரடி தலையீடு.     

உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.

காத்திருங்கள், அறிக்கையாக, சிங்களம் வெளியிடாவிட்டாலும், சீன வெளியிடும் என்று.

6 hours ago, Lara said:

தாமரை கோபுரம் சீனாவின் கையில் இல்லை. இலங்கையின் கையில் தான் உள்ளது.

சில வேளைகளில், நீங்கள் காற்றில் கடன் கொடுக்கலாம், ஓர் பிடியும்  இல்லாமல்.

சொறி சிங்களம் Sovereign debt பெற்றது, பெறக்கூடிய தகமை உள்ளது, என்று நீங்கள் சொன்னாலும்  அதுவும் ஓர் கோபுரத்திற்கு, ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.   

ஆனால், சீனா யதார்த்தம் புரிந்தே கடன் கொடுக்கிறது.

Edited by Kadancha
coorection.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ampanai said:

சீன கப்பல் இலங்கையில் நங்கூரம் - என்ன குறியீடு? R K Radhakrishan Interview

ஜெயஷங்கரின் திட்டமிடாத வருகை திரியில் இது பற்றி சொன்னேன்.

இது ஓர் வழமையான நங்கூரமிடுதல் என்பது, geopolitics இன் symbolism ஐயும் subtance ஐயும் தனியாகவும், அவற்றுக்கிடையே உள்ள பின்னிப்பிணைந்த தன்மையையும் கவனத்தில் எடுக்கவில்லை, அல்லது விளங்கவில்லை என்றே எண்ணவேண்டி இருக்கிறது.

மாறாக, ஏன் US Career Srike  Group escorts (cruiser , destroyer etc. இது வந்தால் அயலில் Strike Group உலவுகிறது என்கிற  அர்த்தம்), அல்லது ஜப்பானின் நாசகாரி, UK அல்லது France in aircraft career வரவில்லை?

அத்துடன், கோத்தாவின் வெற்றியை அரசு மட்டத்தில் வாழ்த்திய ஓர் நாடு ஈரான். ஈரானின் போதைவஸ்து கப்பல் ஒன்று மே 2019 பிடிபட்டதாக சொறி சிங்களம் அறிவித்து இருந்தது.

அமெரிக்காவின் ஈரான் புலத்தர தடையை மீறி, இரானிடம் இருந்து என்னை வாங்கும் ஓர் நாடு சீனா.

அமெரிக்கா, uk அரசு மட்டத்தில் இருந்து வாழ்த்தை நான் காணவில்லை. மனித உரிமை நினைவுபடுதலை கண்டேன்.

இலவசமாக ஒன்றுமே இல்லை (no free lunch), எல்லோருக்கும் பொருந்தும்.

On 11/24/2019 at 12:46 PM, Kadancha said:

திறக்கபட்ட பின், சீன அரசின் நேரடி தலையீடும், கடன் ரத்தும்.

வாய்வழியாகவும் மைத்திரி, மகிந்த சொல்லியதை, சீன தூதரகதிடம், அது பதிவு செய்ததை,  முழுமையாக மொழிபெயர்த்து அனுப்புமாறும், அதை ஸீனத் தூதரகம் செய்த பின், சீன அரசின் நேரடி தலையீடு.     

உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.

காத்திருங்கள், அறிக்கையாக, சிங்களம் வெளியிடாவிட்டாலும், சீன வெளியிடும் என்று.

*****

சீன அரசு EXIM வங்கியினூடாக 16 பில்லியன் ரூபாயை வழங்குவதாக இருந்து பின் 12 பில்லியன் ரூபாயை வழங்கியிருந்தது. தாமரை கோபுரம் திறக்கப்பட்ட பின் பின் சீன அரசு தான் வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை. தாமரை கோபுரமும் சீனாவின் கையில் இல்லை. இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது.

EXIM வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி 14 வருடங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். EXIM வங்கி கடனை வழங்கி முடிக்கும் கால எல்லை ஒப்பந்தப்படி 2016 வரை.

இலங்கை இவ்வருடத்துடன் 4 வருடங்களுக்கான பணத்தை செலுத்தி விடும். இன்னும் 10 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும்.

அடுத்த வருடம் தாமரை கோபுர அபிவிருத்தி நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

23 hours ago, Kadancha said:

சில வேளைகளில், நீங்கள் காற்றில் கடன் கொடுக்கலாம், ஓர் பிடியும்  இல்லாமல்.

சொறி சிங்களம் Sovereign debt பெற்றது, பெறக்கூடிய தகமை உள்ளது, என்று நீங்கள் சொன்னாலும்  அதுவும் ஓர் கோபுரத்திற்கு, ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.   

ஆனால், சீனா யதார்த்தம் புரிந்தே கடன் கொடுக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் 1.4 பில்லியன் டொலர் திட்டம். கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் 1.4 பில்லியன் டொலர் திட்டம்.

தாமரை கோபுர அபிவிருத்தி திட்டம் அப்படியல்ல. அது 104.3 மில்லியன் டொலர் (18.8 பில்லியன் ரூபாய்) திட்டம். அதில் EXIM வங்கி 16 பில்லியன் ரூபாய் வழங்குவதாக இருந்து பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 12 பில்லியன் ரூபாய் வழங்கியது. மிகுதி இலங்கையின் TRC வழங்கியது.

எதிர்காலத்தில் குத்தகைக்கு கொடுக்கப்படாவிட்டால் தாமரைக் கோபுரம் இலங்கையின் கையில் இருக்கும்.

Edited by Lara

Hambantota port deal will be renegotiated – President Gotabaya Rajapaksa

President Gotabaya Rajapaksa in an interview with Strategic News International states that the agreement to lease the Hambantota Port was a mistake.

President Rajapaksa speaking on foreign policy stated that Sri Lanka should remain neutral, as the country cannot survive if it gets into a balancing act between superpowers. The president reiterated that Sri Lanka should not get in between the power struggles of superpowers, adding that Sri Lanka wants to work with all countries. He also noted that Sri Lanka does not want to do anything to harm any other country.

Addressing the issue of China’s involvement in Sri Lanka, President Gotabaya Rajapaksa stated that the involvement which took place under the tenure of his brother, President Mahinda Rajapaksa, was purely “commercial.” He went onto state that even though China saw the Hambantota port as part of its “String of Pearls,” the then Government looked at it as a requirement. He also stated that Sri Lanka should have never given “control of the Port to China,” adding that it was a mistake.

The President stated that he is not afraid to say that it was a mistake even though China is a good friend of the country and even though Sri Lanka requires China’s assistance for development. President Rajapaksa added that he would request China to renegotiate the 99-year lease of the Hambantota port to come up with a better deal for Sri Lanka, as the people of the country are not happy with the existing agreement.

“The strategically important, economically important harbor, giving that is not acceptable. That we should have control. We have to renegotiate. Giving a terminal for an operation is a different thing, giving some location to build a hotel is different, not the control over a very important place, it is not acceptable. So that is my position.” – President Gotabaya Rajapaksa.

https://www.newsfirst.lk/2019/11/25/hambantota-port-deal-was-a-mistake-president-gotabaya-rajapaksa/

’ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கியமை தவறு’

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் சீனாவுடன் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கூறியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஹமபநதடட-தறமகதத-99-வரடஙகள-கததககக-வழஙகயம-தவற/150-241509

'MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது'

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-கசசததடபபடத/175-241510

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

சீன அரசு EXIM வங்கியினூடாக 16 பில்லியன் ரூபாயை வழங்குவதாக இருந்து பின் 12 பில்லியன் ரூபாயை வழங்கியிருந்தது. தாமரை கோபுரம் திறக்கப்பட்ட பின் பின் சீன அரசு தான் வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை. தாமரை கோபுரமும் சீனாவின் கையில் இல்லை. இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது.

EXIM வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி 14 வருடங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். EXIM வங்கி கடனை வழங்கி முடிக்கும் கால எல்லை ஒப்பந்தப்படி 2016 வரை.

இலங்கை இவ்வருடத்துடன் 4 வருடங்களுக்கான பணத்தை செலுத்தி விடும். இன்னும் 10 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும்.

இவை எல்லாமே நடந்தவை. சொல்லிய கடன் எல்லாமே booked loans. 

கடன் நிறுவனத்தின் அரசை (சீன) குற்றம் சாட்டியதால், திறந்த பின், நடந்தது, சமீபத்தில், சீன தூதரகம் வழியாக வாயால் சொன்னதையும் மொழிபெயர்த்து தருமாறு சீன அரசு கேட்டமையால்.

சீன அரசு forefeit எனும் நிலைக்கு இன்னும் வரவில்லை.

காட்டிக் கொள்ள வேண்டிய அவசிய மோ, விருப்பமோ  எனக்கு இல்லை.

எதுவாயினும்,   சிங்களத்தின் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பது இப்போது நிர்ணயிக்கப்பட முடியாது.   

அது நீங்களே சொன்னதில் இருந்து 

2 hours ago, Lara said:

அடுத்த வருடம் தாமரை கோபுர அபிவிருத்தி நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின் படி, தாமதமானால், சொறி சிங்களமே penalty கட்டவேண்டும், எவர் மற்றும் எது காரணமாயினும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் 1.4 பில்லியன் டொலர் திட்டம். கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் 1.4 பில்லியன் டொலர் திட்டம்.

அப்போது, 83% debt to GDP எதனால்? இது அமைந்தோட்டையை கொடுத்த பின். 

GDP 80 billion USD , 2017 மிக்க குறைந்த மதிப்பீடு.   
 
சிங்களம் சொல்வதை இன்னும் நம் புகிறீர்களா?

Edited by Kadancha

20 minutes ago, Kadancha said:

இவை எல்லாமே நடந்தவை. சொல்லிய கடன் எல்லாமே booked loans. 

கடன் நிறுவனத்தின் அரசை (சீன) குற்றம் சாட்டியதால், திறந்த பின், நடந்தது, சமீபத்தில், சீன தூதரகம் வழியாக வாயால் சொன்னதையும் மொழிபெயர்த்து தருமாறு சீன அரசு கேட்டமையால்.

சீன அரசு forefeit எனும் நிலைக்கு இன்னும் வரவில்லை.

காட்டிக் கொள்ள வேண்டிய அவசிய மோ, விருப்பமோ  எனக்கு இல்லை.

எதுவாயினும்,   சிங்களத்தின் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பது இப்போது நிர்ணயிக்கப்பட முடியாது.   

அது நீங்களே சொன்னதில் இருந்து 

ALIT ஐ குற்றம் சாட்டிய பின்னும் சீன தூதரகம் தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீன-இலங்கை உறவுப்பாலம் பற்றியே கருத்து தெரிவித்தது.

EIBomoVUUAAHdY_?format=jpg&name=large

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

Hambantota port deal will be renegotiated – President Gotabaya Rajapaksa

கோத்தபாய தன் கற்பனையை சொல்கிறார் போலவே இருக்கிறது.

project நடக்கும்  போது, சீன அரசும், நிறுவனங்களும் மாற்றத்திற்கு மசிந்து வருவதை, வேறு நாடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது. 

முடிந்த பின், அதுவும் சர்வதேச ஊடகங்களின் கணிப்பீட்டில் 85% உபயோகத்தின் பங்கை கொடுத்த பின்.

அது தவிர, அம்பாந்தோட்டை, சீனாவின் வருங்கால தெற்காசிய  விடு தளம்.

20 minutes ago, Kadancha said:

ஒப்பந்தத்தின் படி, தாமதமானால், சொறி சிங்களமே penalty கட்டவேண்டும், எவர் மற்றும் எது காரணமாயினும்.

Penalty கட்டுவது பற்றி எனது முன்னைய கருத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன். வாசிக்கவில்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

Penalty கட்டுவது பற்றி எனது முன்னைய கருத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன். வாசிக்கவில்லை போல.

இன்னும் முடியவில்லை என்பதும் நீங்களே சொன்னது. penalty இன் தொகை முவதையும் போது தெரிய வரும் என்பது.

7 minutes ago, Lara said:

ALIT ஐ குற்றம் சாட்டிய பின்னும் சீன தூதரகம் தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீன-இலங்கை உறவுப்பாலம் பற்றியே கருத்து தெரிவித்தது.

நிறுவனங்களை பற்றி குற்றம் சாட்டியது ஒன்றுமே இல்லை. சீன அரசு எவ்வாறு இந்த திட்டங்களை  பெறுகிறது என்பது பற்றிய குற்றச்சாட்டே பிரச்னைக்கு காரணம் என்பதே. அது எழுத்து அறிக்கையில் வராது. அதுவே, வாய்வழியாக சொன்னதை கூட சீன அரசு மொழிபெயர்ப்பு கேட்டதாக.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

'MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது'

mcc, தற்போதைய திட்டம், காணிச் சந்தை ஆக்குதல் என்பது ராஜபக்சக்களின் நலன்களை குழி தோண்டி புதைக்கும் திட்டம்.

 mcc சொல்வதான கானிச் சந்தை இருந்தால், காணி (கடல்) சம்பந்தமான வெளிநாட்டு முதலீடுகளில் ராஜபக்சக்கள் வெட்டு துண்டு பெறுவது முடியாத காரியம். 

அல்லது, mcc திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும், அல்லது ராஜபக்சக்கள் ஆசா பாசங்களை திறந்து விட்டு ஆட்சி செய்ய வேண்டும்.

இதில் எது சாத்தியமானது?
 
.  

Edited by Kadancha
add info.

12 minutes ago, Kadancha said:

அல்லது, mcc திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும், அல்லது ராஜபக்சக்கள் ஆசா பாசங்களை திறந்து விட்டு ஆட்சி செய்ய வேண்டும்.

இதில் எது சாத்தியமானது?

எம்.சி.இனை மாற்றி  சிங்களம் உதவிப்பணத்தை பெறும். காரணம், பண தேவை, பொருளாதாரா வளர்ச்சி. பெறாவிட்டால், சீனாவை சாரவேண்டி வரும். டெல்லிக்கான பயணத்தின் பின்னரான கோத்தாவின் பேச்சுக்கள் சில குறியீடுகளை தரக்கூடும். அதன்பின்னர், அவர் சீனா பயணித்தால், அவர் இந்தியாவை, அமெரிக்காவை மீறலாம் என்றவாறு பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

எம்.சி.இனை மாற்றி  சிங்களம் உதவிப்பணத்தை பெறும்.

mcc திட்டங்கள் , தற்போதைய நிலையில், சீன ஊன்றுவதை தடுப்பது, படிப்படியாக வெளியேற்றுவது, sofa இற்கு உகந்த பொருளாதார, சட்ட, அரசியல், சமூக, கலாசார ஏ துக்களை  அடைவது. இது அமெரிக்காவின் asian pivot, மற்றும் free and  open indo  pacific இன் மிகவும் முக்கியமான உதிரித் திட்டம்.  

எல்லாமே, எதிராகவே உள்ளது.

1 hour ago, Kadancha said:

அப்போது, 83% debt to GDP எதனால்? இது அமைந்தோட்டையை கொடுத்த பின். 

GDP 80 billion USD , 2017 மிக்க குறைந்த மதிப்பீடு.   

சிங்களம் சொல்வதை இன்னும் நம் புகிறீர்களா?

நான் எதையோ சொல்ல வர நீங்கள் எதையோ கேட்கிறீர்கள். நான் கூற வந்தது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் போல் தாமரை கோபுர அபிவிருத்தி திட்டம் பெரிய திட்டம் இல்லை. அதற்கான பணத்தை இலங்கை திருப்பி செலுத்த நினைத்தால் செலுத்த முடியும் என்பதே.

மத்தல விமான நிலையம் 209 மில்லியன் டொலர் செலவழித்து அமைக்கப்பட்டது. அது சீனாவின் கைகளுக்கு செல்லவில்லை. பின் அது நட்டத்தில் இயங்கியதால் 70% ஐ இந்தியாவுக்கு 40 வருட குத்தகைக்கு கொடுக்க கதைக்கப்பட்டது. ஆனால் கையெழுத்திடப்படவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது அரசு மாறி விட்டதால் அதை என்ன செய்வார்கள் என தெரியாது.

மற்றும் படி கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் உட்பட வேறு பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அத்துடன் இலங்கை சீனாவிடம் மட்டும் கடன் பெறுவதில்லை.

இது முன்னர் இன்னொரு திரியில் மருதங்கேணிக்கு பதிலாக இணைத்திருந்தேன்.

EG6T3tLXYAMWfTE?format=png&name=medium

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

நான் எதையோ சொல்ல வர நீங்கள் எதையோ கேட்கிறீர்கள். நான் கூற வந்தது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம், கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் போல் தாமரை கோபுர திட்டம் பெரிய திட்டம் இல்லை. அதற்கான பணத்தை இலங்கை திருப்பி செலுத்த நினைத்தால் செலுத்த முடியும் என்பதே.

மத்தல விமான நிலையம் 209 மில்லியன் டொலர் செலவழித்து அமைக்கப்பட்டது. அது சீனாவின் கைகளுக்கு செல்லவில்லை.

பின் அது நட்டத்தில் இயங்கியதால் 70% ஐ இந்தியாவுக்கு 40 வருட குத்தகைக்கு கொடுக்க கதைக்கப்பட்டது. ஆனால் கையெழுத்திடப்படவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது அரசு மாறி விட்டதால் அதை என்ன செய்வார்கள் என தெரியாது.

மற்றும் படி கொழும்பு துறைமுக அபிவிருத்தி உட்பட வேறு பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அத்துடன் இலங்கை சீனாவிடம் மட்டும் கடன் பெறுவதில்லை.

இது முன்னர் இன்னொரு திரியில் மருதங்கேணிக்கு பதிலாக இணைத்திருந்தேன்.

EG6T3tLXYAMWfTE?format=png&name=medium

கடன் ரத்தாகும் போது, கடன் கொடுத்தவரே தீர்மானிப்பது அதை எவ்வாறு வசூலிக்கப்படலாம் என்பது, சிங்களம் (வேறு யாரோ) கொடுக்க கூடிய நிலையில் இருந்தாலும். 

நீங்கள் சொல்லவது படியும் சாத்தியம் இருக்கிறது, சிங்களம் (வேறு யாரோ) கொடுக்க கூடிய நிலையில்,  சீன உடன்படுமாயின்.

அதனால் தான் land security, sovereign security இலும் கூடிய பெறுமதி உள்ளது, இலகுவில் எடுக்கலாம் என்பதால்.  
 
பொதுவாக வங்கிகள் உழைக்கும் முறை.
 
Edited by Kadancha
add info

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.