Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லாட்சி அரசின் ஊழல்கள் குறித்­து ­வி­சா­ரித்து நட­வ­டிக்கை எடுக்கப்படும் - விமல்

Featured Replies

(செ.தேன்­மொழி)

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோச­டிகள் இன்றி நாட்டை முன்­னேற்­றுவார் என்றும் கூறி­யுள்ளார்.

vimal.jpg

பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள பொது­ஜன பெரமுனவின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

நாட்டில் இது­வ­ரை­யிலும் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­களை விட இவர் மிகவும் மாறு­பட்ட பண்­பு­களை கொண்­ட­வ­ராக காணப்­ப­டு­கின்றார். வழ­மை­யாக புதிய ஜனா­தி­ப­திக்­கான வர­வேற்பு நிகழ்­வுகள் இடம்­பெறும் போது மூடப்­படும் காலி­மு­கத்­திடல் இந்தத் ­த­டவை மூடப்­ப­ட­வில்லை. நிகழ்­வுகள் இடம்­பெ­ற்றதுடன் போக்­கு­வ­ரத்தும் வழ­மையைப் போன்று  காணப்­பட்­டது.

சிறந்த தலை­மைத்­துவ பண்­பு­களைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ ஊழல் மோச­டி­க­ளின்றி நாட்டை சிறப்­பாக ஆட்­சி­ செய்வார்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததை அடுத்து அதற்கு முன்­னைய அர­சாங்­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வழக்­கு­க­ளையும் தொடுத்­தி­ருந்­தது. ஆனால் அந்த குற்­றச்­சாட்­டுகள் ஏதா­வது தற்­போது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதா? இல்லை தானே.

இந்த அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மோச­டிகள் தொடர்பில் எதிர்­வரும் காலங்­களில் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து குற்­ற­வா­ளிகள் அனை­வ­ருக்கும் தண்­டனை வழங்­கு­வ­துடன், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை வகித்த சில­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­க­ள் முன்­னெ­டுக்­கப்­படும்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பிலும் இத­னுடன் சம்­பந்­தப்­பட்டு வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்று வாழ்­ப­வர்கள் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும். நல்­லாட்சி அர­சாங்­கத்தால் உரு­வாக்­கப்­பட்ட ஊழல் தடுப்பு பிரிவு தொடர்­பிலும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.எப்­போதும் போன்று இலங்­கையை கறுப்பு கண்­ணாடி அணிந்து பார்க்­காமல்,  இலங்கை தொடர்­பான நம்­ப­கத்­தன்­மையை மதிக்கும் வகை­யி­லான செய்­தி­களை மாத்­திரம் வெளி­யி­டு­மாறும் பீ.பீ.சி க்கு தெரி­விக்­கின்றோம்.

இட­து­சாரி ஜன­நா­யக முன்­னணியின் தலைவர் வாசு­தேவ நாணயக்­கார  குறிப்­பி­டு­கையில்,  

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து மக்கள் விடு­தலை முன்­னணி செய்து கொண்ட ஒப்­பந்­தத்­துக்கு மக்கள் அவர்­களின் முடி­வு­களை வழங்­கி­யுள்­ளனர்.

அனைத்து தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்துக் கொண்டு சிங்­க­ள­வர்கள் அனை­வரும் ஒரு­மித்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

எதிர்த்­த­ரப்­பினர் சட்­டத்தை மீறி சுவ­ரொட்­டி­களை ஒட்டும் போது எமது ஆத­ர­வா­ளர்­களும் அதனை செயற்­ப­டுத்த முயற்­சித்­தனர். ஆனால் எமது வேட்­பாளர் நாம் அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க கூடாது என்று  ஒவ்­வொ­ரு­வ­ரையும் அறி­வு­றுத்­தினார்.

நாங்கள் முன்­மா­தி­ரி­யாக எமது பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். எனது குர­லைப்­போன்று குரலை பதிவு செய்து மோச­டியில் ஈடு­பட்­டனர். தற்­போது தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­துள்ள நிலையில் மக்­களால் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை அவர்­களால் உணரக் கூடி­ய­தாக இருக்கும்.

ஏகா­தி­­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாச போன்ற ஒரு தலைவர் தேவைப்­பட்டார். அவ­ரிடம் தமது ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­தி­டு­வதே அவர்­களின் திட்­ட­மாக இருந்­தது.

இந்த நிலை­மையில் மாற்­றத்தை உணர்ந்­த­வுடன் நாட்டில் பிரிவினையை ஏற்­ப­டுத்தி வாக்­கு­களை பெற முயற்­சித்­தனர். சில தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வேட்பாளரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர்.

உண்மையாகவே தேசத்தின் மீது பற்றுள்ளவர்களே இவ்வாறு வாக்களித்துள்ளனர். இவர்களை நாம் நினைவில் கொள்வதுடன், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக நாம் எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/69415

SLPP to continue FCID and bond scam investigations

Defends FCID, says SLPP will depoliticise division 

  • Pledges to focus on corruption issues of UNP administration, including Presidential Commission on fraud at State institutions from 2015-2018 
  • Says will bring up new corruption investigations committed after 2015 
  • Promises to protect impartiality of Judiciary and law enforcement agencies

http://www.ft.lk/front-page/SLPP-to-continue-FCID-and-bond-scam-investigations/44-690060

முன்னால் ஆட்சியாளர்கள் செய்த ஊழலை பின்னால் வந்த ஆட்சியாளர்கள் எவரும் நிரூபித்ததாகவோ அல்லது சட்டத்தின் மூலம் தண்டித்ததாக இலங்கை / இந்திய வரலாற்றில் ஒரு போதும் நடந்ததில்லை. நல்லாட்சி என்று வந்த ரணில் அரசும், மகிந்த சகோதரர்கள் செய்த பல பெரும் ஊழல்களை / குற்றங்களை கணக்கில் எடுக்காமல் மிக இலகுவாக தப்பித்துக் கொள்ளக் கூடிய விடயங்களை மட்டுமே கையில் எடுத்து இருந்தனர். இதுவும் நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றிய ஒரு விடயமாகவும் பின்னாளில் அதுவே மகிந்த சகோதரர்களுகான வெற்றி வாய்ப்புகளையும் கொடுத்தது.

கோத்தா அரசு ஒரு போதுமே ரணில் அரசு செய்த மத்திய வங்கி ஊழலை காத்திரமாக விசாரிக்கப் போவதில்லை. ஒரு சில கண் துடைப்புகள் நடக்கும்.

3 hours ago, ampanai said:

நாட்டில் இது­வ­ரை­யிலும் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­களை விட இவர் மிகவும் மாறு­பட்ட பண்­பு­களை கொண்­ட­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

அதுல ஒருத்தருக்கும் சந்தேகம் இல்லை!

இவர் அளவுக்கு படுகொலைகளை செய்தவர்கள், இவர் அளவுக்கு கொள்ளை அடித்தவர்கள் உலகில் எங்கையுமே ஜனாதிபதியா மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.