Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன்.

இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா?  இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா?  திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?”

இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருவரின் பாதுகாப்பை வலியுறுத்த வேண்டுமானால் உண்மையான காரணங்களையல்லவா முன் வைக்க வேண்டும். 2009ல் மவுனித்த விடுதலைப்புலிகளை கோர்த்து விடுவதன்மூலம் அனைத்து ஈழத் தமிழர்கள் முகத்திலும் ஏன் காறி உமிழ்கிறீர்கள்?  

 மீண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஈழத் தமிழருக்கு எதிராக தூண்டும் இந்த கூற்றை திமுக வாபஸ் பெற்று டி.ஆர் பாலுவை கண்டிக்குமா?

இது ஈழத்தில் வாழும் தமிழரை கொலையாளிகளிடம் கையளிப்பதுபோன்ற செயலாகும். யாழ்கழ தோழ தோழியர்கள் திமுக தலைமையை சமூக ஊடகங்கள் மூலமும் ருவீட்டர் மூலமும் செய்திகள் மூலமும் பதில் சொல்லவும் டி.ஆர்.பாலுமீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த வேண்டும்.

.

http://www.theweekendleader.com/Headlines/43577/congress-dmk-stage-walkout-from-ls-over-gandhis-spg-cover-.html

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மகிந்த பாலு.

கவிஞர்  ஜெயபாலன் அவர்களே...
பாலு  என்ற அரசியல் வாதிக்காகவா?  இவ்வளவு கேள்விகள்?
இவற்றை... வைத்து,  அவர் சேர்த்த... சொத்தின் கணக்கு உங்களுக்கு, தெரியுமா?

சோனியாவுக்கு...... செம்படிப்பது, 
இந்தியாவின் மருமகளே.... வருக..

போன்ற வசனங்களை... சொல்லி, நவீன முறையில் கொள்ளை அடிப்பது,  
கறுப்புக் கண்ணாடி,   கருணாவின்  கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, poet said:

இது ஈழத்தில் வாழும் தமிழரை கொலையாளிகளிடம் கையளிப்பதுபோன்ற செயலாகும். யாழ்கழ தோழ தோழியர்கள் திமுக தலைமையை சமூக ஊடகங்கள் மூலமும் ருவீட்டர் மூலமும் செய்திகள் மூலமும் பதில் சொல்லவும் டி.ஆர்.பாலுமீது நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்த வேண்டும்.

 

ஐயா புலவரே , அவர் அந்த அர்த்ததில் சொல்லவில்லை.. ரி.ஆர் பாலுவின் கருத்து அவரிண்ட "தனிப்பட்ட கருத்து"  திமுகவின்ர கருத்து அல்ல;  என்டு அறிக்கை வரும் பாருங்கள் ;

1-11.jpg

போக தங்களது தனிப்பட்ட சுய லாபங்களுக்காக ஈழத்தை அவ்வப்போது ஊறுகாய் போன்று தொட்டு கொள்வது (உதா: வைகோ வெளியேற்றம் முதல் ) திமுகவிற்கு ஒண்டும் புதியது அல்லவே. இது எதிர்பார்த்த ஒன்றுதான் .. கடந்து செல்க;

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் குறித்து தவறான பேச்சா..? பதறியடித்து விளக்கமளித்த முரசொலி..!

Velupillai-Prabhakaran.gif

அண்மையில் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய அரசின் அறிக்கை படி சோனியா காந்தியின் உயிருக்கு விடுதலைப்புலிகளாலால் ஆபத்து இருப்பதாகவும் அதனால் பழைய பாதுகாப்பையே மீண்டும் வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இலங்கையில் ராஜபக்சே குடும்பம் மீண்டும் பதவியேற்றிருக்கும் நிலையில் தமிழக எம்பி ஒருவரின் இந்த பேச்சு ஈழத்தமிழர்களுக்கு மேலும் ஆபத்தை உண்டாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டிருந்தனர். இந்தநிலையில் டி.ஆர்.பாலுவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக முரசொலி நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி விடுதலைப்புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அந்த அமைப்பின் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடித்தது. இந்தநிலையில் தற்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறி சோனியாகாந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளதையே பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாக முரசொலி நாளிதழில் கூறப்பட்டிருக்கிறது.

https://tamil.asianetnews.com/politics/murasoli-explains-about-t-r-balu-speech-q1f6jd

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 4:59 AM, poet said:

இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா?  இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா?  திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?”

8-CF03379-0-EFB-4-CCD-8-CEE-E6-B8-BDA043

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.