Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு ; வெளியானது விசேட வர்த்தமானி

Featured Replies

பாராளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

78396620_977839305923615_251851128269753

அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

.இதையடுத்து 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/70253

  • தொடங்கியவர்

Parliament prorogued

The Government Printer had confirmed that they have received instructions to publish the gazette notification to prorogue Parliament from tomorrow.

President Gotabaya Rajapaksa has decided to prorogue Parliament for one month till January 3 from tomorrow.

http://www.dailymirror.lk/top_story/Parliament-prorogued/155-178878

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தமானி  அறிவித்தலில் கருத்துருவாக்கத் தவறுகள் இருப்பினும். 

"சனாதிபதி, கோத்தபாய ராஜபக்சே ஆகிய நான்" என்ற விளிப்பில் ஆரம்பித்தமையால், "கோத்தபாய ராஜபக்சே, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சனாதிபதி" 

என்று கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

"அதியுத்தமனாரின் ஆணைப்படி, பீ . பி ஜயசுந்தர, சனாதிபதியின் செயலாளர்" என்று கையொமிடுவதற்கு,    "இலங்கை சனநாயக சோசலிச குடியரசு 70 ஆவது உறுப்புரையினால்  கோத்தபாய ராஜபக்சே ஆகிய சனாதிபதி பீடத்திடம் உரிதாக்கப்பட்டுள்ள தத்துவங்களால் எழும் அதிகாரங்களின் பயனைக் கொண்டு, இப்பிரகடனத்தின்  மூலம் ..."     

என்று வசன நடை இருக்க வேண்டும்.

சொறி சிங்களம் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்(??) தவறை விட்டுள்ளது. 
 

 

 

 

 

Edited by Kadancha
add info

போர்க்குற்றவாளிகளின் ஜனநாயகப் படுகொலை ஆரம்பம்.

  • தொடங்கியவர்

பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்ததில் பாரிய சந்தேகம் :   எஸ்.எம். மரிக்கார்

(இராஜதுரை ஹஷான்)

உரிய காரணிகள் ஏதுமின்றி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமையானது இடைக்கால அரசாங்கத்தின் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

marikkar.jpg

மக்களுக்கு  சேவையாற்றும் விடயங்களுக்கு பாராளுமன்றத்தினுள் இடைக்கால அரசாங்கத்திற்கு  முழுமையான ஒத்துழைப்பு  வழங்க தயார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.  எழுந்துள்ள சவால்கள் குறித்து  கட்சியின் தலைவரும், சிரேஷ்ட உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எட்டாவது பாராளுமன்றத்தின்  மூன்றாவது சபை அமர்வுகளை நிறைவுக்கு கொண்டு வந்து பாராளுமன்ற அமர்வினை  அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு  ஒத்திவைத்து  வர்த்தமானி வெளியிட்டுள்ளமைக்கு  எவ்விதமான உரிய காரணிகளும் கிடையாது.

 ஜனாதிபதி தேர்தல் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு இணங்க சிம்மாசன பிரசங்ம் உள்ளிட்ட இதர விடயதானங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் அவர்  மாறுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளமை   பின்வரும் விடயங்களை மையப்படுத்திய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளன என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70314

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.