Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னையர் தின வாழ்த்துகள்

Featured Replies

உலகத்தில் இருக்கும் எல்லா அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்

mothers1sw7.jpg

  • தொடங்கியவர்
mothersdaydu4.jpg

எல்லோருக்கும் இனிமையான அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
mothersday12otherdp9.gif

எனது அம்மா, உங்கள் அம்மா, மற்றும் எல்லாருடைய அம்மாவிற்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

எனக்கு அம்மாவையும், அப்பாவையும் பிரித்து பார்க்கமுடியாது... அம்மா எனது வலது பக்க சுவாசப்பை என்றால், அப்பா எனது இடது பக்க சுவாசப்பை, அம்மா வலது புற சிறுநீரகம் என்றால், அப்பா எனது இடதுபுற சிறுநீரகம்... எனவே அன்னையர் தினத்தில் அம்மாவப்பா என இதை எழுதியுள்ளேன்....

அம்மாவப்பா!

அம்மாவப்பா ஓங்காரப் பொருளாய் ஒருமித்து எம்முடன் வந்தாரே!

அன்புடன் அணைத்து இப்புவிதனிலே அழகிய வாழ்வினை தந்தாரே!

நாம் எங்கிருந்து வந்தோம் தெரியாது!

நாம் எங்கே போகின்றோம் தெரியாது!

எனினும்....

அம்மாவப்பா

அன்பின் துணைகொண்டு...

முடிவிலி யுலகை

தரிசிக் கின்றோம்...

லப்-டப் நாடி ஒலியில் வருஞ்சப்தம் அம்மாவப்பா!

பக்கென அடிக்கும் இதயம் பறையும் வார்த்தை அம்மாவப்பா!

புலன்களை அடக்கி தியானஞ் செய்தால் இதயத்தில் சுடர்விடும் அம்மாவப்பா!

மும்மலங்களை விலத்தி மகிழ்வுகண்டால் பரம்பொருளாக வருவது அம்மாவப்பா!

உடலணுவைப் பிளந்து உயிரில் கலந்தால் உணர்வாய் இருப்பது அம்மாவப்பா!

கடலெனும் பிறப்பில் முத்துக்குளித்தால் முடிவாய்க் கிடைப்பது அம்மாவப்பா!

பார்ப்பதும் கேட்பதும் மணப்பதும் நுகர்வதும் பரிசமும் அனைத்தும் அம்மாவப்பா!

அம்மாவப்பா ஓங்காரப் பொருளாய் ஒருமித்து எம்முடன் வந்தாரே!

அன்புடன் அணைத்து இப்புவிதனிலே அழகிய வாழ்வினை தந்தாரே!

நாம் எங்கிருந்து வந்தோம் தெரியாது!

நாம் எங்கே போகின்றோம் தெரியாது!

எனினும்....

அம்மாவப்பா

அன்பின் துணைகொண்டு...

முடிவிலி யுலகை

தரிசிக் கின்றோம்...

அன்னையர் தின வாழ்த்துக்கள்! :mellow:

  • தொடங்கியவர்

மப்பி கவிதை அழககாக இருக்கு

:mellow:

  • தொடங்கியவர்
motherszm1.jpg

தன் சேய்க்காக தன்னுயிரில்

பங்கு கொடுத்து தன் உடலில்

உருவம் கொடுத்து

ஈரைந்து மாதம் தன்

வயிற்றில் சுமந்து

வாழ்க்கை முழுவதும்

மனதில் சுமந்து

எமக்காக உயிர் வாழும்

தாய்க்கு வருடம் முழுவதும்

வாழ்த்து சொன்னால் கூட

நம் கடன் தீராது

ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?

இன்று போல் என்றும்

நம் தாயை கடவுளாக

போற்றி வணங்குவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் சேய்க்காக தன்னுயிரில்

பங்கு கொடுத்து தன் உடலில்

உருவம் கொடுத்து

ஈரைந்து மாதம் தன்

வயிற்றில் சுமந்து

வாழ்க்கை முழுவதும்

மனதில் சுமந்து

எமக்காக உயிர் வாழும்

தாய்க்கு வருடம் முழுவதும்

வாழ்த்து சொன்னால் கூட

நம் கடன் தீராது

ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?

இன்று போல் என்றும்

நம் தாயை கடவுளாக

போற்றி வணங்குவோம்

உங்க கவிதை நன்னாயிருக்கு வான்வில் :rolleyes:

அன்னையர் தினம்

தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. .இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா?

எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.

"அனா ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா?ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அனா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மக்ழிச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியன்றை விற்று காசு. ...ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் "செண்டிமெண்ட்" நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மாக்களுக்கும்..ஆணாகினும் மனதளவில் அன்னையாக இருக்கும் நல்ல ஆண்களுக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.

வானவில் கவிதை நல்லா இருக்கு.

  • தொடங்கியவர்

அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.

வானவில் கவிதை நல்லா இருக்கு.

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

:P

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் எங்கே எங்கே என்று அலைபவர்கள்

கண்முன்னால் இருக்கும் கடவுளான அம்மாவை வணங்குங்கள்.

அன்னையர் தினவாழ்த்துகள்! :rolleyes:

நான் வீட்டுகதவை திறந்து ஒவ்வொருமுறை வெளியில் போகும்போதும் எனது அம்மாவிற்கும், அப்பாவிற்கும் முத்தம் கொடுத்துவிட்டுத்தான் செல்வேன்...

இதை நான் இங்கு சொல்லக் காரணம் நீங்களும் இவ்வாறு செய்துபார்க்கலாம் என்பதற்காகவே... இதன்மூலம் உங்கள் பெற்றோருக்கு உங்கள்மீது, மற்றும்தங்கள் வாழ்க்கைமீது நம்பிக்கை, ஆர்வம் ஏற்படும்...

யாராவது விருந்தினர்கள் வீட்டில் இருந்தாலும் நான் பெற்றோரை முத்தமிட்டபின்பே வெளியில் செல்ல்வேன். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை...

  • தொடங்கியவர்

மாப்பி நான் வெட்கபடாம பக்கத்து வீட்டு பொண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு போனா என்ன?

:P :rolleyes:

மாப்பி நான் வெட்கபடாம பக்கத்து வீட்டு பொண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு போனா என்ன?

:P :rolleyes:

புருஷன் இருக்கிற நேரத்தில கொடுத்து அடி வாங்கிப்போடாதீயும்

  • தொடங்கியவர்

புருஷன் இருக்கிற நேரத்தில கொடுத்து அடி வாங்கிப்போடாதீயும்

பக்கத்து வீட்டு குழந்தையை சொன்னான்

:angry: :angry:

பக்கத்து வீட்டு குழந்தையை சொன்னான்

:angry: :angry:

நான் சொன்னது அந்த குழந்தைட அம்மாட புருஷன் சண்டைக்கு வராமக முத்தம் கொடுக்க சொல்லி :angry: :angry:

  • தொடங்கியவர்

குழந்தைக்கு முத்தம் கொடுத்தா ஏன அவர் சண்டைக்கு வாறீனம்

:angry:

பிரான்ஸில் அடுத்தமாதம் 3ஆன் திகதிதான் அன்னையர் தினம்.

இருந்தாலும் எல்லா அன்னையருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மாப்பி என்னுடைய கேள்விக்கு என்ன பதில்

:angry:

மாப்பி என்னுடைய கேள்விக்கு என்ன பதில்

:angry:

ஏதோ child abuseனு கேள்விப்பட்டது இதையே :rolleyes:

  • தொடங்கியவர்

ஏதோ child abuseனு கேள்விப்பட்டது இதையே :rolleyes:

என்ன நக்கலா சும்மா கேட்டதை போய் யம்முக்கு ஏன் சொல்லுறீங்க ஜம்மு நல்ல பிள்ளையாக்கும்

:P :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.