Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

Featured Replies

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.

பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூலலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.

ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகடத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார்.

தாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர்,தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டகன்று ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், அவரது நினைவுகளும் ஆளுமைகளும் எம்மை விட்டு என்றும் அகலா.ஒரு பத்திரிகையாளனாக, பொதுவுடைமைச் சித்ததாந்தவாதியாக, தத்துவாசிரியராக, விடுதலைப் புலிகளின் ஆலோசகராக, தலைமைப் பேச்சாளராக பல பரிமாணங்களை எடுத்தவர் எங்கள் பாலா அண்ணா.எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களினுடைய தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து, அதன் நியாயப்பாடுகளை சர்வதேச அரங்கில், எடுத்துச் சென்று வாதிட்ட, தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளி அவர்.கொடிய நோய் தன்னைத் தாக்கியிருந்ததையும் பொருட்படுத்தாமல், தன் இறுதி மூச்சு அடங்கும் வரை, எங்கள் தேசத்தின் குரலாக அவர் ஒலித்தார். எங்கள் மக்களின் விடுதலைக்காக அவர் இறுதிவரை உழைத்தார்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், பாலா அண்ணாவின் வாழ்க்கை ஒரு பாடம்.படித்தவர்கள், அறிவுஜீவிகள், உயர்பதவி வகிப்போர், புலம்பெயர்ந்த தேசங்களில் கல்விகற்கும் இளையோர், உயர்நிலைகளை நோக்கி முன்னேறும் இளம் சமூகத்தினர் என எல்லோருக்கும் பாடமாக தன் வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியிருக்கின்றார் பாலா அண்ணா.1979ம் ஆண்டு, தமிழகத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்த நாள் தொடக்கம், தேசியத் தலைவரின் கருத்தோடு ஒன்றிக் கலந்து, இறுவரை தேசியத் தலைவருக்கு ஆதரவாக, அன்புகொண்ட அண்ணனாக, உடன் இருந்து தேசியத்தலைவரின் பணிச் சுமையைத் தானும் பங்கிட்டுக்கொண்டவர்.தான் மட்டுமன்றி, தன் வாழ்க்கைத் துணையாக வந்திணைந்த, அவுஸ்திரேலியப் பெண்மணியான அடேல் அம்மையாரையும், எமது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பெண்மணியாக பங்குவப்படுத்தி, எமக்காக, தம்பதியினராக, அனைத்து இன்ப துன்பங்களையும் எமக்காகப் பங்கிட்டு வாழ்ந்தார்.மேல்நாட்டு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, தாய்நாட்டு விடுதலைக்காக உயிர்கொடுத்துப் போராடும் போராளிகளோடு போராளிகளாக மோசமான ஆபத்துகள் நிறைந்த நெருக்கடியான தாயக வாழ்க்கையை, பாலா அண்ணாவும் அடேல் அம்மையாரும் விருப்புடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை உண்மையில், எமக்கான பெரும் பாடம்.எளிமையாக வாழ்ந்தார். உயர்ந்த சிக்கல் நிறைந்த, விளங்கிக்கொள்ள சிரமமான தந்துவங்களை, சித்தாந்தங்களை எளியதமிழில் எமக்கு பரிச்சயப்படுத்தினார்.உலகத்தின் ஆதரவை எமது பக்கம் திருப்ப அதிகளவில் பாடுபட்டார். போராடினார்.

இன்று அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்தமண்ணில் வாழும் இளைய சமூகத்தினருக்கான அழைப்பை பாலா அண்ணாவின் வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கின்றது.எமது தாயக விடுதலையை நேசிக்கவும், அதற்காக அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழவும் பாலா அண்ணாவின் வாழ்க்கை கற்றுத்தருகின்றது. தேசியத்தலைவரின் வேண்டுகோள் புலம்பெயர்ந்த இளைய சமூகத்தை நோக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பாலா அண்ணாவின் வாழ்க்கையை ஒரு அரும்பெரும் பாடமாக ஏற்றுக்கொண்டு, கர்வமற்ற, தன்னடக்கமான, சுயநலமற்ற அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் தேசப்பணியாற்ற புலம்பெயர் இளைய சமூகம் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.பாலா அண்ணாவின் நினைவு நாளில், இந்த நிலையை எட்ட எம்மைத் தயார்படுத்துவோமாக.

மூலம் - முகநூல்  Solidarity for Tamil Eelam 

 
  • தொடங்கியவர்

பாலா அண்ணா ஒரு பத்திரிகையாளனாகவே தடம் பதித்தவர். "பிரம்மஞானி" எனப் புனைபெயரில் வலம் வந்தவர். பின்னர் விடுதலைப்பணி காலத்தில் கலை, இலக்கிய ஏடாக வெளிவந்த "வெளிச்சம்" இதழ்களிலும் பல கட்டுரைகளை வரைந்தார்.

அதில் அர்த்தமும் அபத்தமும் என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் சில பகுதிகள் அவர் நினைவு தாங்கி உங்களுடன். 

மனிதன் விடைதேடி அலைகிறான். தெளிவுபெற விழைகிறான் ஆனால் மனிதனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிய, அறிய அறியாமை மேலோங்குகிறது. அபத்தத்தின் அலங்கோலம் தெரிகிறது. புரியப், புரிய உலகம் புதிராக மாறுகிறது. தத்துவத் தேடல்களும், விஞ்ஞான விசாரணைகளும் மனிதனுக்கு உண்மையைக் காட்டவில்லை. வாழ்வின் அர்த்தத்தை விளக்கவில்லை. பொய்மையின் சிதைவுகளாக, எங்கும், எல்லாம் அபத்தத்தின் அசிங்கங்கமான முகம் தான் தெரிகிறது.

நான் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்த உலகம் எனக்குப் பரீட்சயமானது. இந்த மலையும், மரமும், கடலும் அலையும், நீலவானமும், நிலவும் நான் சதா சந்தித்துக் கொள்பவை. இந்தப் பூமி என்னை தோள் மீது சுமந்து திரிகிறது. நான் இந்த உலகத்தின் கனிகளைப் புசித்து வாழ்பவன். கணத்திற்குக் கணம் நான் விழுங்கும் இந்தக் காற்றில் எனது உயிர் தொங்கி நிற்கிறது. இந்த உலகம் தான் எனது இருப்பிற்கு ஆதாரம். நான் இருப்பாக உயிர்த்து நிற்கிறேன். வாழ்வின் தீயாக எரிந்து கொண்டு, இந்த உலகத்தின் மீது இச்சை கொண்டு நிற்கும் என்னை, இந்த உலகம் ஒதுக்கி விடுகிறது. எனக்குப் பாராமுகம் காட்டுகிறது. பற்றற்றதாக நிற்கிறது. என்னிலிருந்து அந்நியப்பட்டதாக, மௌனமாக நிற்கிறது. நான் வேர் அறுபட்டவனாக விழுந்து கிடக்கிறேன். எனது தேடுதல் பற்றியும், தடம் தெரியாது நான் எழுப்பும் அவல ஓலம் பற்றியும், இந்த உலகம் எவ்வித அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை.

உணர்வற்ற, இலக்கற்ற, அர்த்தமற்ற உலகமும், உணர்வுள்ள, அறிவுள்ள, அர்த்தம் தேடும் மனிதனும், இரு துருவங்களாக, உறவு முறிந்து, ஒத்திசைவு இழந்து, முரண்பட்டு நிற்கும் இந்த வாழ்வு அர்த்தமற்றது.

விடிகிறது. நாளும் விடிகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்று மாறி, மாறி, தொடச்சியாக விடிகிறது. விடியலுடன், நானும் விழித்துக் கொள்கிறேன். நாளும் தூங்குவதுவம், விழிப்பதுவும், வேலைக்கு ஓடுவதாக முடிவில்லாமல் நானும் விரைகின்றேன். அதே வேலை, பழக்கப்பட்ட், வழக்கமான அதே வேலை. சலிப்புத் தட்டத்தட்ட, இயந்திரமாக இயங்கி, இயங்கி அதேவேலை. என்னோடு சேர்ந்து மற்றவனும் என்னைப் போல உழல்கிறான். அதே காலை, அதே பாதை, அதே வேலை. திரும்பத் திரும்ப பார்த்து அலுத்துப் போன அதே முகங்கள். நாட்கள் ஓடுகின்றன. நானும் ஓடுகிறேன். அர்த்தமில்லாமல், மீண்டும், மீண்டும், அதே வினையில், அதே விளைச்சலில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

இயந்திர உலகில் வாழும் நவயுக் மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும், அவசர வாழ்வும் அபத்தமானது. மனித வாழ்வு அபத்தமானது. துன்பம் நிறைந்தது. நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தளர்ந்து போய்விழுந்து விடாமல் எழுந்து நின்று வாழவேண்டும். மனித வாழ்விற்கு மனிதனே அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுக்கு எட்டிய பார்வையுடன், தனக்கு கிட்டிய வாழ்க்கையை ஏற்று அதில் திருப்தி கொண்டு, எட்டமுடியாத எதிலும் இச்சை கொள்ளாது வாழ முடியுமாயின் அந்த வாழ்வு அவனுக்கு அர்த்தமுடையதாக அமையும்.

 

  • 2 weeks later...

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் ஐயாவுக்கு, அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் அண்ணாவுக்கு அஞ்சலிகள்...கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை.....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.