Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு; ரூமி மொஹமட் கைது

Featured Replies

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

வெள்ளை வேன் சம்பந்தமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான விசாரணையில் ரூமி மொஹமட் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.thinakaran.lk/2019/12/31/உள்நாடு/46164/வெள்ளை-வேன்-ஊடகவியலாளர்-சந்திப்பு-ரூமி-மொஹமட்-கைது

Former State Pharmaceutical Corporation (SPC) Chairman Dr.Rumy Mohamed, who was absconding over white Van press conference case, has been arrested when he surrendered to the CID this morning, AG's CO said.

He was charged with fabricating evidence and allegedly giving two million rupees to two persons, who spoke about alleged white Van abductions at a press conference prior to the last presidential election.

http://www.dailymirror.lk/breaking_news/Fmr-SPC-chairman-arrested/108-180436

  • தொடங்கியவர்

ரூமி மொஹமட் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் செயலாளர் என்று கூறப்படும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (31) காலை சரணடைந்ததை அடுத்து,  ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (30) தடை விதித்திருந்தது.

வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமைய, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரூமி-மொஹமட்-விளக்கமறியலில்/175-243274

  • கருத்துக்கள உறவுகள்

இனி  இவரோடு சாப்பிட்டவர், கதைத்தவர், வேலை செய்தவர் அனைவரும் வரிசையாய்  நீதிமன்றத்தில் சரணடைந்து விடுங்கள். நாட்டில் இந்த மோசடிக்கும்பல் மட்டுந்தான் இருக்கவேண்டும். மற்ற யாவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். நாட்டில் யாரும்  இவர்களுக்கு எதிராய் கிளம்பவோ, கேள்வி கேட்கவோ கூடாது. நாடுமன்றத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இவர்கள்தான்.    அதுமட்டுமல்ல  தான் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் வர  போகிறது. அதிலிருந்து  தப்புவதற்கு பிக்குகளை தூண்டிவிட்டு ஒரு இனக் கலவரத்தை ஏற்படுத்தி, தான் எதையாவது செய்யப்போனால் இன நல்லிணக்கம் கெட்டு, நாட்டில் பிரச்சினை ஏற்படும் என்று தப்பிக்கலாம் என்று நினைக்கிறார் மாத்தையா. அண்ணனின் போதனையை நம்பி. இவர்களின் பேராசைக்கு நாடே இரையாகப்போகுது.  யாராவது இவருக்கு   முஷாரப்பின் தற்போதைய  நிலையையும், இடி அமீனின் கடைசிக் காலத்தையும் பற்றி  கொஞ்சம் சொல்லி வைய்யுங்கப்பா.

இவன் ரூமி மொஹமட் ஒரு  பிராடு. ஒரு அதிகாரியுடன் கடந்த வாரம் கதைத்த போது அவர் கூறினார் இவனும் ரிச்சர்டை போல ஒரு கள்ளன் எண்டு. இந்த அதிகாரி கிழக்கு மாகாணத்துக்கு திடட பணிப்பாளராக இருந்த காலத்தில் நிறைய திட்ட்ங்களை கூடுதலாக செயல் படுத்தி இருந்தாராம்.

இவர் அங்கு வந்து சில திட்ட்ங்களை கொடுத்து முஸ்லீம் பகுதிகளுக்கு இன்னும் பணம் ஒதுக்கும்படி அவரை தொந்தரவு பண்ணி இருக்கிறார். அந்த அதிகாரி இதேட்கெல்லாம் சம்மதிக்கவில்லையாம். அப்போது ரஜாபகசக்களின் ஆட்சிக்காலம். சோனிகள் தொப்பி பிரட்டுவதால் இவனும் அந்த ஆட்சியில் அரச செல்வாக்குடன் இருந்த ஒருவன்.

இந்த அதிகாரி சம்மதிக்காததால் பசில் ராஜபக்சவிடம் கூறி உம்மை ஒரு கை பார்க்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். இருந்தாலும் அந்த அதிகாரி யாரிடமும் போய் கூறலாம் நான் இதட்கு சம்மதிக்கப்போவதில்லை என்று கூறினாராம். இருந்தாலும் அந்த அதிகாரிக்கு எந்த அரசியல் வாதியிடமும் இருந்து எந்த நெருக்குவரமும் வரவில்லை என்று கூறினார் அந்த நேர்மையான அதிகாரி. இவனை உள்ளே தள்ளி இவன் செய்த அடா விரோத நடவடிக்கைகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

ரூமி மொஹமட் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 31ஆம் திகதி காலை சரணடைந்ததை அடுத்து,  ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமைய, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்தார்.

முன்னதாக, அவருக்கு பிணை வழங்குவதற்காக காரணங்களை முன்வைக்க அவரது சட்டத்தரணிகள்  முன்வைத்த கோரிக்கை மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த 02 ஆம் திகதி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரம-மஹமட-உளளடட-மவர-பணயல-வடவபப/175-243564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.