Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’

image_a1963ae278.jpgநாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையின் ஊடாக, அண்மைக்கால அரசியலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் இல்லாமலாக்கப்படுவதே நடைபெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளின்றி  ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையை தோல்வியடைய செய்ய நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/21-22ஆவத-தரததம-ஜனநயகதத-ஒழககம-நடவடகக/175-243478

அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தத்தை மேற்­கொண்டு சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வழி­வ­குக்க முயற்சி: ஜே.வி.பி

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­டன உரையில் நாட்­டுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பல விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று தெரி­விப்­ப­தா­னது சர்­வா­தி­கார போக்­குக்கு வழி­வ­குக்கும் கார­ணியைப் போன்­றுள்­ளது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­னா­யக்க தெரி­வித்தார்.

pimal.jpg

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வில் முன்­வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­ட­ன­உரை தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போது இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது:

பாரா­ளு­மன்ற சுதந்­தி­ரத்தை வரை­ய­றுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­னோ­டி­யா­கவே ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­டன உரை அமைந்­துள்­ளது.

நிறை­வேற்­ற­தி­கார முறையை மேலும் ஸ்திர­மு­டை­ய­தாக்கி சர்­வா­தி­கார ஆட்­சிக்கு செல்­லவே முயற்­சிக்­கின்­றனர். இந்த முயற்­சி­க­ளுக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் இட­ம­ளிக்­காது.

அதேவேளை அர­சாங்கம் நாட்­டுக்கு நன்மை தரும் வகையில் ஏதேனும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தால் அதற்கு எமது முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­குவோம். அதேபோன்று நாட்­டுக்கு பாத­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்டால் அவற்­றுக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யி­டுவோம்.

நாட்­டுக்­காக ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்கை பிர­க­ட­னத்தை ஏற்றுக் கொள்­கின்றோம். எனினும் அதில் கூறப்­பட்­டுள்ள சில விட­யங்­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அவ்­வா­றான விடயங்கள் தொடர்பில் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் எமக்கும் வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்டும்.

எவ்­வா­றி­ருப்­பினும் கட்சி மற்றும் இன,மத பேத­மின்றி அனை­வரும் ஒன்றிணைந்து நாட்டுக்கான சேவையை தொடர்ச்சியாக முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். இந்த பயணத்தின் போது அரசாங்கத்தின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை நல்ல விடயங்களை ஊக்குவிப்பதற்கும் முன்வருவோம் என்றார். 

https://www.virakesari.lk/article/72537

அரசியலமைப்பை உடனடியாக மாற்றுங்கள் கண்டி மல்வத்துவ பீடம்

நாட்டின் நலனுக்காக அரசியலமைப்பு திருத்தம் அவசியம் என்று தான் நம்புவதாக கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷ நேற்று முன்தினம் பாராளு மன்றத்தில் உரையாற்றிய
அரசியலமைப்பு திருத்தத்தின் அவசியத்தை வரவேற்று இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நாட்டின் கட்டமைப்பை ஜனாதி பதி முழுமையாக ஆராய்ந்ததாக திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற் கான ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித் தார்.        

http://valampurii.lk/valampurii/content.php?id=20281&ctype=news 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக
இலங்கையில் சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், சிறுகட்சிகளும், சிறுபான்மை சமூகங்களும் நாடளுமன்ற உறுப்பினர்களை பெறுவதில் பாரிய தடை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக இந்த திருத்தத்தினால் தமிழர் மற்றும் முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் என்றும், அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் சிறுபான்மை சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியலமைப்பு கூறுவதென்ன?

எவ்வாறாயினும் தேர்தலின்போது மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைப் பெறுவதற்கான வெட்டுப் புள்ளி 12.5 சதவீதமாகவே இருத்தல் வேண்டும் என்று, 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் 99ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 99(5)(அ) உறுப்புரை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: "ஏதேனும் தேர்தல் மாவட்டத்தில் நடைபெறும் ஏதேனும் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டிலொன்றுக்குக் குறைவான வாக்குகளைப் பெறும் ஒவ்வோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியும், சுயேட்சைக் குழுவும் அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கு அதனது வேட்பாளர் எவரையும் தேர்ந்தனுப்பத் தகைமையிழத்தல் வேண்டும்".

இலங்கையில் சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது அந்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 12.5 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் தரப்பினரே, உறுப்பினர்களைப் பெறுவதற்கான தகைமையைப் பெறுவர் என்று, அரசியலமைப்பின் மேற்படி உறுப்புரை கூறுகின்றது.

ஆனால் 1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 15வது திருத்தத்தின் மூலமாக, தேர்தல் மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான மேற்படி வெட்டுப் புள்ளி 12.5 எனும் வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்கப்பட்டது.

அஷ்ரப் கோரிய 5 வீதம்

1988ம் அண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய பிரதம மந்திரி ரணசிங்க பிரேமதாஸவின் முயற்சியினால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு ரணசிங்க பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இடம் கேட்டபோது, அதற்குப் பகரமாக சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என, அஷ்ரப் கூறினார்.

அதில் ஒன்றுதான்; தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில் உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைக்க வேண்டும் என்பதாகும்.

அந்தக் கோரிக்கையை ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்றிக் கொடுத்ததை அடுத்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலேயே, தற்போது - நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை மீண்டும் 12.5 வீதமாக அதிகரிப்பதற்கான தனிநபர் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

சட்டத்தரணி பஹீஜ் கருத்து

குறித்த சட்டத்திருத்தம் அமலாக்கப்பட்டால் எல்லா சமூகங்களினதும், சிறு குழுக்களினதும் - பிரதிநிதித்துவத்துக்கும் பங்குபற்றுதலுக்குமான உரிமை (Right to representation and participation) பாதிக்கப்படும் என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்.

பஹீஜ்படத்தின் காப்புரிமைBAHEEJ Image captionபஹீஜ்

"நாடாளுமன்றில் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறமுடியாத நிலை இருப்பதற்கான காரணம், நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தேர்தலொன்றில் தெரிவு செய்வதற்கான வாக்குகளின் வெட்டுப்புள்ளி 5 வீதமாக இருப்பதுதான் காரணமாகும்.

5 வீதம் எனும் வெட்டுப்புள்ளி 12.5 வீதமாக்கப்பட்டால் சிறிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியாது போகும். அப்போது பெரிய கட்சிகள் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால்தான் இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக நம்புகிறேன்.

இன்னுமொரு வகையில் சொன்னால் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு சிறிய மற்றும் சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை, பெரிய கட்சிகள் நம்பியிருக்கும் நிலையை இல்லாமல் செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.

இலங்கையென்பது தனி பௌத்த ராஜியம் என்கிற கோட்டைக் கொண்டவர்கள், தாங்கள் ஆட்சியமைக்கும் போது சிறுபான்மையினரின் உதவியில் தங்கியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அந்த நிலையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்க முடிகிறது" என்றும் சட்டத்தரணி பஹீஜ் விவரித்தார்.

"இந்ந சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. ஆனாலும் பெரிய கட்சிகள் அனைத்தும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் இதனை ஆதரிக்கும் என்றே நம்புகிறேன். 12.5 எனும் வெட்டுப் புள்ளியை அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்தியவர்களே ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள சிறிய கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளினால் ஐக்கிய தேகியக் கட்சிதான் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் திருமண சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைக்கவுள்ளார். அதேபோன்று திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயதை 18ஆக மாற்றுவதற்கான சட்டமூலமொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் துஷித விஜேமன்ன கொண்டுவரவுள்ளார். இதன் தொடர்சியாகவே, தேர்தலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை 12.5 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தினையும் பார்க்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவையாகவே உள்ளன.

தேர்தலொன்றில் உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளி 12.5 வீதமாக அதிகரிக்கப்பட்டால், தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

அதனால்தான், 12.5 வீதமாக இருந்த வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கோரிக்கையினை முன்வைத்து, பிரேமதாஸவிடம் அதனை வென்றெடுத்தார்" என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50994455

17 hours ago, ampanai said:

அரசியலமைப்பை உடனடியாக மாற்றுங்கள் கண்டி மல்வத்துவ பீடம்

நாட்டின் நலனுக்காக அரசியலமைப்பு திருத்தம் அவசியம் என்று தான் நம்புவதாக கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷ நேற்று முன்தினம் பாராளு மன்றத்தில் உரையாற்றிய
அரசியலமைப்பு திருத்தத்தின் அவசியத்தை வரவேற்று இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நாட்டின் கட்டமைப்பை ஜனாதி பதி முழுமையாக ஆராய்ந்ததாக திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற் கான ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித் தார்.        

http://valampurii.lk/valampurii/content.php?id=20281&ctype=news 

 

எதிர்க்கட்சி அரசை ஆதரிப்பது என்பது வேறு , சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் என்பது வேறு. எனவே அந்த பிரதிநிதித்துவத்தை குறைக்க முயட்சிக்க கூடாது. இதை இந்த மகாநாயக்க தேரர் விளங்கிக்கொண்டால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.