Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'இரானின் தாக்குதல் அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை' : ஆயதுல்லா அலி காமேனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அதி உயர் தலைவர், இரானின் பாதுகாப்பு படைகளை ஆதரித்து பேசியுள்ளார்.

உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, இரானின் புரட்சிகர பாதுகாப்பு படை பொறுப்பேற்றுள்ளதாக கூறிய அவர் அந்தப் படை இரானின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார்.

2012க்கு பிறகு, எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார்.

வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நட்த்திய அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி, தொழுகைக்கு பிறகான உரையில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா விதித்த தடைகளால் இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தனது உரையில் அலி காமேனி முக்கியமாக என்ன பேசினார்?

•டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஒரு ''தீய'' அரசு என விமர்சித்தார்.

•இரான் மக்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தும்போதெல்லாம் பொய் கூறுவதாக தெரிவித்த அவர், இரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும் என கூறினார்.

•இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ''அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை'' என அவர் தெரிவித்தார்.

•அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ள இரானின் உயரடுக்கு பாதுகாப்பு படை பற்றி பேசிய அவர், ''அது மனித மதிப்புகளை கொண்டிருக்கும் ஒரு மனிதநேய அமைப்பு" என குறிப்பிட்டார்.

•காசெம் சுலேமானீயின் இறுதிச் சடங்கு மற்றும் இரானின் பதிலடி ஆகியவை வரலாற்றில் ஏற்பட்ட திருப்புமுனை என அவர் கூறினார்.

இரான் தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்கள் யார் ?படத்தின் காப்புரிமை Getty Images Image caption இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார். இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

புதன்கிழமையன்று, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என ஆயதுல்லா அலி காமேனி தெரிவித்திருந்தார்.

விமானம் சுடப்பட்டது குறித்து இரான் ராணுவத்திடம் விளக்கம் கேட்டிருந்தார் ஆயதுல்லா அலி காமேனி. இதன்மூலம் மிக அரிதாக இரான் அரசுடன் அவருக்கு உரசல் ஏற்படும் போக்கு காணப்படுவதாக கூறப்பட்டது.

விமான விபத்துக்குள்ளான மூன்று நாட்கள்வரை இரான் அதிகாரிகள் தங்களுக்கு அதில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். ஆனால், சர்வதேச அழுத்தத்தால் இரானின் கடும்போக்கு புரட்சிப்படை, அது "போர் ஏவுகணை" என்று தவறுதலாக எண்ணி அதை சுட்டு வீழ்த்திவிட்டோம் என ஒப்புக் கொண்டது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த சர்வதேச விமான சேவையின் போயிங் 737 - 800 விமானம் ஜனவரி 8ஆம் தேதி இரானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை இலக்கு வைத்து இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது.

அந்த தாக்குதல் அமெரிக்க இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி காசெம் சுலமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது.

என்ன நடக்கிறது இரானில்?

இரான்படத்தின் காப்புரிமை Getty Images

இரானின் செய்தி முகமையான மெர்ரில், டெஹ்ரானில் உள்ள மொசல்லா மசூதியில் 80 வயதான ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போதைய சூழலுக்கும் இந்த தொழுகைக்கும் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை.

இரான் அதிகாரிகள், இரான் தனது ஒற்றுமையையும் சிறப்பையும் மீண்டும் வெளிப்படுத்தும் நேரமிது என தெரிவித்துள்ளதாக செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் 33ஆவது ஆண்டுவிழாவின் போது, டெஹ்ரானில் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-51145156

  • கருத்துக்கள உறவுகள்

அயதுல்லா அலி  கொமெனி ட்ரம்மை  கோமாளி (Clown)  என கூறியுள்ளார்.  அத்தோடு மேற்கு நாடுகள் பலவீனமாக இருப்பதால் ஈரானை தங்களுக்கு பணிய வைக்க(kneel down) முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Russia: Iran was spooked by reports of U.S. F-35s when it downed airliner

Russia's acting Foreign Minister Sergei Lavrov speaks during his annual news conference in Moscow, Russia, January 17, 2020. REUTERS/Shamil Zhumatov

MOSCOW (Reuters) - Russian Foreign Minister Sergei Lavrov said on Friday that Iran’s accidental shooting down of a Ukrainian airliner last week occurred at a time when Tehran was spooked by reports of advanced U.S. stealth fighters in the area.

“There were at least six (U.S.) F-35 fighters in the air in the Iranian border area (at the time). This information has yet to be verified, but I’d like to underline the edginess that always accompanies such situations,” Lavrov said.

Iran’s downing of Ukraine International Airlines flight 752, which killed all 176 people aboard, has created a crisis for the Islamic Republic’s clerical rulers who have faced days of protests after the Iranian military admitted it had shot down the plane accidentally.

Lavrov, speaking at his annual news conference in Moscow, called the incident a human error and said he was not trying to excuse anyone for what happened.

 

But he said it was important to understand the context and that the incident had occurred hours after an Iranian missile attack on U.S. bases in Iraq, when Iranian forces were braced for some kind of U.S. military retaliation.

“There is information that the Iranians were expecting another attack from the United States after the strike but did not know what form it might take,” said Lavrov.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.